உங்களை காப்பாற்ற ஆயிரம் தெய்வங்கள் இருக்கலாம். உங்களுக்கு பிடித்த தெய்வங்கள் பட்டியல் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறக்கக்கூடாத ஒரு தெய்வம் குலதெய்வம்.
காலையில் எழுந்தவுடன் உங்கள் கண் முன்னே தெரிய வேண்டிய படம் எது தெரியுமா?
உங்களை காப்பாற்ற ஆயிரம்
தெய்வங்கள் இருக்கலாம். உங்களுக்கு பிடித்த தெய்வங்கள் பட்டியல் ஏராளமாக இருக்கலாம்.
ஆனால் நீங்கள் மறக்கக்கூடாத ஒரு தெய்வம் குலதெய்வம்.*
*🔯 காலையில் எழுந்தவுடன்
கண் விழித்து,
குலதெய்வத்தை முதன்
முதலில் பார்க்க வேண்டும். அன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாளாக அமைய வேண்டும் என்று
முதலில் குலதெய்வத்திடம் தான் நீங்கள் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். பிறகுதான்
உங்களுடைய காலடி இந்த பூமியில் பட வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் குலதெய்வத்தின்
முகத்தில் கண் விழிப்பவர்களுடைய வாழ்வு சிறப்பாகும்.
காலையில் எழுந்து பூஜை
அறையை வந்து திறந்தால் தானே குலதெய்வத்தை பார்க்க முடியும். படுக்கைஅறை, பூஜை அறையை விட்டு தள்ளி
இருந்தால் என்ன செய்வது. காலை பூமியில் வைப்பதற்கு முன்பு குலதெய்வத்தை எப்படி
தரிசனம் செய்வது. உங்களுடைய கைபேசியில் குலதெய்வத்தின் திருவுருவப்படத்தை வைத்துக்
கொள்ளுங்கள். எப்படியும் எழுந்தவுடன் நீங்கள் முதலில் கைபேசியை தானே முதலில்
பார்க்கப் போகிறீர்கள். கூடவே குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தத்தையும் பெற்றது போல இருக்கும்.*
*🔯 ஒவ்வொருவர் வீட்டிலும்
பூஜை அறையில் கட்டாயம் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருக்க வேண்டும். தினமும்
காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு குலதெய்வத்தின் முன்பு விளக்கு
ஏற்றி வைத்துவிட்டு, அந்த நாள் இனிய நாளாக வேண்டும் என்று குலதெய்வத்திடம் ஆசீர்வாதத்தை
பெற்று ஒரு நாளை தொடங்கி பாருங்கள். அந்த நாள் முழுவதும் உங்களுக்கு சந்தோஷமாக
இருக்கும்.
அதேபோல ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கனவு,
ஒவ்வொரு ஆசை என்று
இருக்கிறது. சில பேருக்கு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும். சில பேருக்கு
நன்றாக படித்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்படி ஏதாவது ஒரு ஆசையை
மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆசை நிறைவேற, இதை செய்யுங்கள். தினம் தினம்
காலையில் கண்விழித்த உடன் நம்முடைய மனது புதிதாக பூத்த பூ போல இருக்கும். அந்த
சமயம் குலதெய்வத்தை பார்த்து குறிப்பிட்ட வேண்டுதலை குலதெய்வத்திடம் சொல்லி அந்த
வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று தினம் பிரார்த்தனை வைக்க வேண்டும்.*
*🔯 உங்களுடைய குறிக்கோளை
அடைவதற்கு தினமும் அந்த குலதெய்வத்தின் ஆசிர்வாதம் காலையில் கிடைக்கும். பிறகு
நீங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி
குவியும். உங்களுடைய கனவுகள் ஆசைகள் எல்லாம் சீக்கிரம் நினைவாகும். குலதெய்வ
வழிபாட்டை மறக்கவே மறக்காதீங்க. குலதெய்வ வழிபாடு செய்யும் பொழுது கூடவே சேர்த்து, முன்னோர்களின்
ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும். இதனால் நம்முடைய குலமும் தழைக்கும் என்பது
நம்பிக்கை. மேல் சொன்ன வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
குலதெய்வம்: வரலாறு : காலையில் எழுந்தவுடன் உங்கள் கண் முன்னே தெரிய வேண்டிய படம் எது தெரியுமா? - குலதெய்வப் படம் [ ] | Ancestry: History : You know what picture you want to see when you wake up in the morning? - An heirloom image in Tamil [ ]