சுவாரஸ்யமான வாழ்க்கை என்பது எப்பொழுது தெரியுமா

குறிப்புகள்

[ வாழ்க்கை பயணம் ]

You know when life is interesting - Notes in Tamil

சுவாரஸ்யமான வாழ்க்கை என்பது எப்பொழுது தெரியுமா | You know when life is interesting

நம்மில் சிலர் சில சமயங்களில் தெரியாமல் செய்த தவறுகளுக்காக குற்றவுணர்ச்சியில் குமைந்து போவதுண்டு. வெளியில் வர சங்கடப்பட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிக் கொள்வதும் உண்டு. அதை விட்டு வெளியில் வந்தால் சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி கிடைக்காது என்பதோடு, மேலும் மேலும் முன்னேறவும் முடியாது. குற்ற உணர்ச்சியை தகர்த்து எறிந்தால்தான் பல்வேறு சாதனைகளை சரமாரியாக செய்து முடிக்க முடியும்.

சுவாரஸ்யமான வாழ்க்கை என்பது எப்பொழுது தெரியுமா?

 

நம்மில் சிலர் சில சமயங்களில் தெரியாமல் செய்த தவறுகளுக்காக குற்றவுணர்ச்சியில் குமைந்து போவதுண்டு. வெளியில் வர சங்கடப்பட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிக் கொள்வதும் உண்டு. அதை விட்டு வெளியில் வந்தால் சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், நடந்ததையே நினைத்திருந்தால்  என்றும் அமைதி கிடைக்காது என்பதோடு, மேலும் மேலும் முன்னேறவும் முடியாது.  குற்ற உணர்ச்சியை தகர்த்து எறிந்தால்தான் பல்வேறு சாதனைகளை சரமாரியாக செய்து முடிக்க முடியும்.

 

வால்மீகி முனிவரும் ஒரு காலத்தில் குற்றம் செய்தவர்தான். பிறகு அதிலிருந்து வெளியில் வந்து இராமாயணம் படைத்ததால்தான் அவர் இன்றளவும் பேசப்படுகிறார்.

 

ஆல்ஃபிரட் நோபல் என்பவர் வெடிமருந்தை கண்டுபிடித்தார். அதனால் யுத்தத்தில் பல்வேறு உயிர்கள் பலியாயின. ஒரு பத்திரிக்கை தவறுதலாக அவர் இறந்து விட்டதாக ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் "கொலைகாரன் ஒழிந்தான்" என்று குறிப்பிடப் பட்டிருந்ததை படித்து குற்ற உணர்ச்சியில் இருந்தவர், மீண்டு ஒரு ட்ரெஸ்ட்டை ஆரம்பித்து அதில் சம்பாதித்த பணத்தை சேமித்து அறிவியல், ஆராய்ச்சி, சமாதானம் போன்றவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் என்ற அவர் பெயரில் நோபல் பரிசை கொடுக்குமாறு அறிவித்தார். அதன் பிறகு குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டார் என்று படித்தது உண்டு. இன்றும் அவர் பெயரால் நோபல் பரிசு பெறுபவர்களை கண்கூடாக கண்டு வருகிறோம்.

 

'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல' என்ற பழமொழியை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அதன் அர்த்தம் என்ன? ஒருவன் அடுத்த வீட்டு பூசணிக்காயை திருடிவிட்டான். ஆதலால் அவன் வீட்டைப் பார்ப்போர் எல்லாம் பூசணிக்காய் திருடிய வீடு என்று  அடையாளம் கூறி வந்தனர். அந்த அவப்பெயரை மாற்றுவதற்காக அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து மீள்வதற்காக தினசரி உணவு படைத்து வருவோர்,போவோர் பசியானவர் களுக்கெல்லாம்  உணவு பரிமாற ஆரம்பித்தார்கள் வீட்டினர். அதன் பிறகு பூசணிக்காய் திருடிய வீடு என்பது மறைந்து சாப்பாடு போடும் வீடு என்று பெயர் வர ஆரம்பித்தது. அதுதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்பது.

 

ஆதலால் தவறுவது மனித இயல்பு என்பதை புரிந்து கொண்டு குற்ற உணர்வை தூக்கி தூர எறிந்து விட்டு, திருந்தி நற்செயல்களில் ஈடுபட்டால் சாதனை, வெற்றி எல்லாம் ஒரு சேர வந்து சேரும் என்பது உறுதி. அது போன்றவர்கள் எழுதும் கதையும் செய்யும் செயல்களும் என்றென்றும் போற்றப்படுவையாக சுவாரஸ்யமான தகவல்களை தருவதாக இருக்கும் என்பதை மேற்கூறிய சம்பவங்களில் இருந்து உணரலாம்.

 

தொலைந்து போன நாட்களைத் தேட முயலாதீர்கள்...

 

வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள்...

 

சில பெறுதலும்

 

சில மறைதலும்

 

இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாகும்.!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

வாழ்க்கை பயணம் : சுவாரஸ்யமான வாழ்க்கை என்பது எப்பொழுது தெரியுமா - குறிப்புகள் [ ] | Life journey : You know when life is interesting - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்