எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா

நட்பு

[ நட்பு ]

You know when one gets a bigger circle of friends - friendship in Tamil

எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா | You know when one gets a bigger circle of friends

ஒருவரிடம் பணம், பதவி, ஏதோ ஒரு விதத்தில் வெற்றி இருந்தால் அவர்களைச் சுற்றி அதிகம் பேர் இருப்பார்கள் நிறைய நண்பர்கள் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் அவர்கள் விரும்புவது உங்களை அல்ல. உங்கள் பணத்தை. உங்கள் பதவியை. உங்கள் வெற்றியை. உங்களால் கிடைக்கும் ஆதாயத்தை. நீங்கள் நேரடியாகக் கூட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லை. உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் சில காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்.

எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா?

 

 

மிக எளிதான விஷயம்.

 

ஒருவரிடம் பணம், பதவி, ஏதோ ஒரு விதத்தில் வெற்றி இருந்தால் அவர்களைச் சுற்றி அதிகம் பேர் இருப்பார்கள் நிறைய நண்பர்கள் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் அவர்கள் விரும்புவது

உங்களை அல்ல.

 

உங்கள் பணத்தை. உங்கள் பதவியை. உங்கள் வெற்றியை. உங்களால் கிடைக்கும் ஆதாயத்தை.

 

நீங்கள் நேரடியாகக் கூட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லை.

 

உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் சில காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்.

 

இதில் என்ன குற்றம் என்று சொன்னால், இவர்கள் உங்களை விரும்புவதற்கு காரணமான, பணமோ, பதவியோ, இல்லாத நிலையில், அல்லது உங்கள் வெற்றியின் இறக்கத்தை கேள்விப்பட்ட நிலையில், சரசரவென்று உங்களை விட்டு அகன்று விடுவார்கள்.

 

நீங்களே அவர்களிடம் பேசினாலும் கூட, தெரியாதவர் போல் காட்டிக் கொள்வார்கள்

 

நீங்கள் சங்கடப்படாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால், இதைப் போன்ற நபர்களை, நீங்கள் தனியாக பிரித்து, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

 

இரண்டு விஷயங்களையும் சேர்த்தால் தீருவது இது தான்.

 

உன்னைப் புகழ்பவர்கள், உன்னோடு உறவு கொள்பவர்கள், உன்னை விரும்புபவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கலாம். அவர்கள் எல்லோரையும் நீ நம்பினால் மோசம் போய்விடுவாய். அதிலே இருந்து தேர்ந்தெடுத்து சிலரை நம்பு, அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவார்கள்.

 

இது புகழ்பெற்ற சேட்டன் பகத் சொல்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 

எப்படி உறவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். யார் உங்களுக்கு நிஜ உறவு? யார் உங்களுக்கு நிஜமாக நண்பர்கள்? ஒரு குளம்.அதில் நிறைய தண்ணீர்.

நிறைய பறவைகள் வாத்துக்கள் எல்லாம் இருந்தன. கூடவே ஆம்பலும் நெய்தலும் என சில செடிகளும் அந்த குளத்திலே இருந்தன..

 

ஆகா நமக்கு எவ்வளவு நண்பர்கள் உறவுகள்...என்று அந்த குளம் நினைத்தது..

 

கடுமையான கோடை காலம் ஆரம்பித்தது

 

கொஞ்சம் கொஞ்சமாக நீர் குறைய ஆரம்பித்தது. அதிலிருந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அகன்றனர்.

 

தண்ணீர் முழுவதும் இல்லாத நிலையில் ஒரு பறவையோ ஒரு கொக்கோ அங்கே இல்லை.

 

குளம் காய்ந்த நிலையில் அங்கே ஆம்பலும் நெய்தலும் வாடி கிடந்தன ..

 

இப்பொழுது அந்த குள த்துக்கு ஒரு உண்மை புரிந்தது.

 

இந்த பறவைகள் நம்மிடம் உள்ள தண்ணீருக்காகத்தான் நம்மிடம் இருந்தன போலிருக்கிறது. ஆனால் நம்முடைய கஷ்டத்திலும் இந்த செடிகள் நம்மை விட்டு அகலாமல் இருக்கின்றன. .நம்மை உண்மையில் நேசித்தது இந்த செடிகள்தான்.நம் துன்பத்தில் துணையிருந்தது இவைதான்.என்று நினைத்ததாம்

 

இது உருவகக் கதை தான். இதில் கூட நிறைய கேள்விகள் கேட்கப்படலாம்.

 

ஆனால் இது சொல்லும் ஒரு செய்தி மகத்தானது.

ஆனால் இது சொல்லும் ஒரு செய்தி மகத்தானது.

 

வாழ்ந்தபோது கூடியிருந்து வாழ்ந்துவிட்டு சாய்ந்த போது விட்டு உறவும் நட்பும் இல்லை என்றால்...நிஜ உறவு நட்பு எது?

 

.உதட்டளவில் இருக்கக்கூடிய அந்த உறவுகளால் ஒருவருக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. அதனால் முதலில் எத்தனை உறவுகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்..

 

நண்பர்கள் இருக்கட்டும் அது பேச்சில்லை. ஆனால் நமக்கென்று இருக்கக்கூடிய முக்கியமான ஒரு சில உறவுகளையும் நட்புகளையும் நீங்கள் விட்டுவிட வேண்டாம். மற்ற உறவுகளை நட்பில் இருப்பவர்களை முழுவதுமாக நம்பி விட வேண்டாம்...

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

நட்பு : எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா - நட்பு [ ] | friendship : You know when one gets a bigger circle of friends - friendship in Tamil [ ]