ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா

பழங்கள்

[ பழங்கள் - பலன்கள் ]

You should eat guava more than apple Do you know why - Fruits in Tamil

ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா | You should eat guava more than apple   Do you know why

உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு #கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம். நாட்டு கொய்யாப்பழம் தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆப்பிளை விட கொய்யாவிற்குதான் முதல் மரியாதை தருவீர்கள். அதன் சத்துக்களையும் , தீர்க்கும் நோய்களையும் பற்றி தெரிந்தால் நிச்சயம் உங்கள் மார்க்கெட் பட்ஜெட்டில் கொய்யாவிற்கும் இடமிருக்கும். சத்துக்கள் : கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் 'சி' சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது. வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது :

ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும்!! ஏன் தெரியுமா?

 

உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு #கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம். நாட்டு கொய்யாப்பழம் தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆப்பிளை விட கொய்யாவிற்குதான் முதல் மரியாதை தருவீர்கள். அதன் சத்துக்களையும் , தீர்க்கும் நோய்களையும் பற்றி தெரிந்தால் நிச்சயம் உங்கள் மார்க்கெட் பட்ஜெட்டில் கொய்யாவிற்கும் இடமிருக்கும்.

 

சத்துக்கள் :

 

கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் 'சி' சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது.

 

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது :

 

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். கொய்யாவில் ஆப்பிளைவிட கூடுதலான சத்துகள் உள்ளன.

 

கர்ப்பிணி பெண்கள் :

 

இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண அறிவுறுத்தப்படுகின்றது.

 

ரத்தம் சுத்தமாக :

 

நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்

 

ஒற்றை தலைவலி :

 

கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.

 

அஜீரணம் :

 

மதிய உணவுக்கு பிறகு கொய்யாபழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி,அரிப்பு, மூலநோய், சீறுநீரக கோளாறு உள்பட பல நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.

 

சர்க்கரை நோயாளிகள் :

 

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரைநோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

பழங்கள் - பலன்கள் : ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா - பழங்கள் [ ] | Fruits - Benefits : You should eat guava more than apple Do you know why - Fruits in Tamil [ ]