தலைப்புகள் பட்டியல்

நாகலிங்க பூவின் அதிசயம் பற்றி தெரிந்து கொள்வோமா
நாகலிங்க பூவின் அதிசயம் பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்டவேண்டும். அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழும். சோழமன்னர் ஒருமுறை ஒரு சிவாலயத்தை கட்டினார்; அப்போது அவருக்கு ஒரு அச்சம்தோன்றியது. நம் காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றுவார்களோ இல்லையோ என்ற அச்சம்தான் அது. உடனே ஒரு யோசனைத் தோன்றியது, சந்திரகாந்த கற்கலால் கருவரையின் மேற்கூறையை அமைத்து மையத்தில் ஒரு கமலத்தை அமைத்தார். என்ன "அதிசயம்" 24 வினாடிக்கு ஒரு முறை காற்றின் ஈரத்தை . சந்திரகாந்தக்கல் உறிஞ்சி சிவலிங்கத்தில் தண்ணீராகச் சொட்டியது. கோயில் இருக்கும் ஊர் திட்டை அதுபோல் இந்த நாகலிங்க மலரின் மேற்கூறையில், சின்னச் சின்ன ஆட்டணா இருக்கும் அந்தத் தும்பித் தாரையில் இருந்து 24 வினாடுக்கு ஒருமுறை ஒரு பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும். 1. "நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். 2. நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். 3. பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை. 4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் உபதேசங்களை பெற்று வா என்பதன் காரணக்களை அறிவோமா
ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் உபதேசங்களை பெற்று வா என்பதன் காரணக்களை அறிவோமா

வகை: இராமாயணம்: குறிப்புகள்

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது. 1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும். 2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு. 3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள். 4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள்
உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள்

வகை: விழிப்புணர்வு சிந்தனை

ஒரு மனிதர் மரணமடைந்து விடுகின்றார் நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது. அந்த நேரம் திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது அந்த உடலை ஒரு பிளாஸ்டிக்கால் மூடி விட்டு மழையில் நனையாமல் இருக்க எல்லோரும் விரைவாக ஒரு வராண்டாவிற்குள் சென்று நின்று விடுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மரணமடைந்த பிறகு உங்கள் மீதான உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் இறந்தால் உங்களை விட்டும் மக்கள் விரைவாக நகர்வார்கள். உங்கள் உடல் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள். உங்களுக்கா கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம். ஆனால் யாராவது ஒரு நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்து விட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான வேதனையாக இருக்கும். இப்போது சொல்லுங்கள்.

கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்க்கை சொர்க்கம்
கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்க்கை சொர்க்கம்

வகை: கணவன் மனைவி உறவு

ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கணவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார்! என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள். மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கனவன் மனைவி உறவு. தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது. அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான். இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள். இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கணவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.

பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்
பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்

வகை: பெண்கள்

அப்படி என்ன தான் இன்பம் பெண்ணிடத்தில்? என்ன இல்லை அவளிடம்? கேட்குறேன். இறைவன் மிச்சமே வைக்காமல் படைத்த அழகிய படைப்பு. அவளுக்கென்று தனி அழகு இருக்கு அவளுக்கென்று தனி தாய்மை இருக்கு அவளுக்கென்று தனி நேசம் இருக்கு...,, அவளுக்கென்று தனி பாசம் இருக்கு. அவளுக்கென்று தனி கற்பனை இருக்கு. அவளுக்கென்று தனி மனம் இருக்கு. அவளுக்கென்று தனி குழந்தைதனம் இருக்கு அவளுக்கென்று தனி ஆண்மை இருக்கு அவளுக்கென்று தனி பெண்மை இருக்கு அவளுக்கென்று தனி நளினம் இருக்கு அவளுக்கென்று தனி வெட்கம் இருக்கு அவளுக்கென்று தனி நாணம் இருக்கு அவளுக்கென்று தனி திமிர் இருக்கு அவளுக்கென்று தனி இதயம் இருக்கு அவளுக்கென்று தனி உள்ளம் இருக்கு அவளுக்கென்று தனி காதல் இருக்கு. அவளுக்கென்று தனி உலகம் இருக்கு. அவ்வளவு இருக்குங்க. அவளிடம்..., அவளிடம் மட்டும்...., அவள் ஒரு நூலகம்னு சொன்னா ரொம்ப சின்னதாகிடும்... கடல்னு சொன்னா கூட..., கடலில்கூடகரையேறி விடலாம். ஆனால் ஒரு முறை, அவள் அன்பிற்குள், அவள் அரவணைப்பிற்குள், அவளின் கரிசனைக்குள் சிக்கிக்கொண்டால், கரையேறவே ஆசை படாது மனது. அங்கேயே சிக்கி தவிக்கும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம் வாழ்வில் வளம் பெறுவோம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம் வாழ்வில் வளம் பெறுவோம்.

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

கொத்தமல்லியோட விதைக்கு, 'தனியா'னும் ஒரு பேரு உண்டு. ரசம், துவையல், குருமா, சாம்பார்... இப்படி எதைச் செய்தாலும், அதுல நாலு கொத்தமல்லி தழையை கிள்ளிப் போடறதுதான் இப்ப வழக்கமா இருக்கு. இதுக்குக் காரணம்... அதன் மூலமா நமக்குக் கிடைக்கற பலவிதமான பலன்கள்தான். அதேபோல, கொத்தமல்லி விதைகள் மூலமாவும் ஏகப்பட்ட பலன்களை அடைய முடியும்! உடல் உஷ்ணத்தைக் குறைக்கறதோட... நாக்கு வறண்டு போய் இருந்தா, அதை சரிபண்ணுற தன்மை இந்த விதைகளுக்கு உண்டு. பித்த மயக்கம், நெஞ்செரிச்சல்னு நிறைய பிரச்னைகளை இது சரியாக்கும். ரெண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, ரெண்டு டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைக்கணும். அது ஒரு டம்ளரா ஆனதும் இறக்கி ஆற வெச்சு, தேன் இல்லைனா சர்க்கரை சேர்த்து குடிச்சு வந்தா... மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் சரியாகறதோட... தலைசுற்றல், வயித்துப்போக்குகூட சட்டுனு நின்னுரும். தூக்கமில்லாம தவிக்கறவங்களுக்கும் இது சரியான தீர்வைக் கொடுக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கண்ட மருந்துனு சொல்லலாம் இந்த கொத்தமல்லி விதைகளை! அட, ஆமாங்க... கொத்தமல்லி விதை 10 கிராம்... அதே அளவு வெந்தயம் எடுத்து, ரெண்டையும் லேசா பொன்வறுவலா வறுத்து தூளாக்குங்க. இதுல ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ரெண்டு டம்ளர் தண்ணிவிட்டு ஒரு டம்ளராகுற வரைக்கும் கொதிக்கவிடணும். பிறகு, காலையிலயும் (வெறும் வயித்துல), சாயங்காலமும் குடிச்சு வந்தா... சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள்ள வரும்.

முப்பத்து முக்கோடி தேவதைகள் யார் தெரியுமா
முப்பத்து முக்கோடி தேவதைகள் யார் தெரியுமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

பக்கத்து கோவிலில் பசுமாட்டுக்கு பூஜை செய்தபோது தீபாராதனை காட்டி பசுவை சேவியுங்கோ பசுவை சேவித்தால் பிரும்மா விஷ்ணு சிவன் அஷ்டலட்சுமி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிட்டும் என்றார் அப்படியானால் நம் இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனரா? நமது ஹிந்துமத்த்தில் நம்முடைய தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று கூறிவது உண்மைதான் முப்பத்து முக்கோடி என்பது 33 கோடி ஆகும். அப்படியானால் நமது ஹிந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்கள் இருக்கின்றனவா?.... இங்கே “கோடி” என்பதை எண்ணிக்கையைக் குறிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் “கோடி” என்ற சொல் சமஸ்க்ருதத்தில் “ பிரிவு அல்லது வகை” என்பதைக் குறிக்கும். ஆக மொத்தம் 33 வகையான தெய்வங்கள் ஹிந்து சனாதன தர்மத்தில் உள்ளன என்பதை சொல்லவே முப்பத்து முக்கோடி என்கின்றனர் கோடி என்றால் பிரிவு என்கிறீர்கள் அது (Number) நம்பராகாதா? கிராமங்களில் ஒருவர் அந்த தெரு கோடியிலுருந்து வரேன் என்றால் கோடி தெரு என்பதல்ல அர்தம் அதாவது அந்த தெருவின் பிரிவிலிருந்து வருகிறேன் என்பர் அது போல் கோடி வேஷ்டி என்றால் ஒரு கோடி வேஷ்டி எனபதல்ல அர்த்தம் அது வெண்மையும் அல்லாத மஞ்சளும் அல்லாத ஒரு கலர் வேஷ்டி ( வெள்ளாவியில் வண்ணார் வைத்தால் வெள்ளையாகி விடும் எனவே அதை கோடி வெளுப்பாக கொடு என்பர் ஊர்களில்) கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் "பிரிவு" என்பதே இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் வசு ருத்ர ஆதித்ய ரூபம் என்று மூன்றாகப் பிரிப்பர் நாங்களோ அல்லது உங்களை போன்றவர்களோ பொதுவாக அமாவாசை தர்பணத்தில் பித்ரு வசு ரூபமாகவும் பிதாமஹர் ருத்ர ரூபமாகவும் பிதுர்பிதாமஹர் ஆதிதய ரூபமாகவும் உள்ளதாக கூறி தர்பணம் செய்வோம் அதில் வசு கீழ் நிலை ருத்ரர் இரண்டாம் நிலை ஆதித்யர் மூன்றாம் நிலை இந்த மூன்று நிலையில் 31பிரிவுகள் அடங்கும் அந்த 31 பிரிவுகள் எவை பார்ப்போம்.

காய்ச்சல் வந்தால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!
காய்ச்சல் வந்தால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு அசவுகரியம், மந்தம், பலவீனம் போன்றவை ஏற்பட்டு அன்றாட செயல்பாடுகள் முடங்கிப்போய்விடும். அப்படி அடிக்கடி காய்ச்சல் வருவதோ, ஒருசில நாட்களை கடந்தும் நீடிப்பதோ ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.ஆனால் எப்போதாவது திடீரென்று காய்ச்சல் வந்தால் அது உடல் நலனுக்கு நன்மை செய்யும். உடலின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை 99.1 டிகிரி பாரன்ஹீட் முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரைக்குள் இருந்தால் சில ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அவை பற்றி தெரிந்து கொள்வோம். ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்காய்ச்சலின் போது, உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். இந்த செல்கள்தான் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முன்னணி வீரர்கள்போல் செயல்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளை கண்டறிந்து அவற்றின் மீது தாக்குதல் தொடுப்பது இவற்றின் பணியாகும். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது, எலும்பு மஜ்ஜையில் அதிக ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் என்பது ஆய்விலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின்போது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டு நோயின் தீவிரத்தையும் குறைக்கும். பாக்டீரியா - வைரஸ் வளர்ச்சி குறையும்பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி அவை குறைவான அளவுக்கு வளர்வதற்கு சாதகமான சூழலை காய்ச்சல் உருவாக்கும். நமது உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்). இந்த வெப்பநிலையை பல நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் விரும்புகின்றன. காய்ச்சல் காரணமாக உடலின் வெப்பநிலை உயரும்போது இவற்றின் செயல்பாடுகள் முடங்கும். அதிக உடல் வெப்பநிலை, இன்புளூயன்ஸா வைரஸ் போன்ற சில வைரஸ்களின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் தடுக்கும். அவற்றின் வளர்ச்சியை குறைப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். நோய்த்தொற்றுகளை அழிப்பதற்கு அதிக நேரத்தையும் அளிக்கும்.

அவசர உலகை அவசியம் புரிந்து கொள்ளுங்கள்
அவசர உலகை அவசியம் புரிந்து கொள்ளுங்கள்

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

இந்த உலகில் சிறந்த படிப்பு படிக்க, உயர்ந்த சம்பளத்தில் வேலையில் அமர, உல்லாச வாழ்க்கைக்கு செல்வம் திரட்ட, பாதுகாப்பான வாழ்வுக்கு பக்கபலம் சேர்க்க, தற்கால மனிதர்கள் அனைவரும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகையால் இந்த போட்டியில் பங்கு கொண்டிருக்கும் எந்த மனிதனிடமும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள். மற்றவர்கள் உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு அவர்கள் நன்றியுணர்ச்சியுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். நம்மைப் பற்றி தவறான விமர்சனங்களுக்கு நாம் சிறிது கூட மதிப்பு தரக்கூடாது. மற்றவர்களின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில பேர் தங்களை பற்றி எவனாவது ஏதாவது தவறாக சொன்னான் என்று கேள்விப்பட்டால்" அப்படியா விஷயம்? அவன் 'ஐயோ, அப்பா, ஆளை விடு சாமி!' என்று என் காலில் விழுந்து கதறும்படி பண்ணுகிறேன் பார்!" என்று சவால் விட்டுவிட்டு அவனுக்கு எங்கே எப்படி யார் மூலம் கெடுதல் பண்ணலாம், தொல்லை கொடு நிம்மதியை கெடுக்கலாம் என்று மூளையை கசக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் இவர்கள் வாழ்நாள் தான் தேவையற்ற பயனற்ற வழியில் கழியுமே தவிர, வேறு ஒரு பயனும் இல்லை. இப்படி தங்களைப் பற்றி தவறான விமர்சனம் செய்த ஒவ்வொருவனையும் பழி வாங்குவதே வேலையாக இருந்தால் அப்புறம் நம் சொந்த வாழ்க்கையை எப்பொழுதுதான் வாழத் தொடங்குவது? யோசிக்க வேண்டாமா?

கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய எட்டு பொன்மொழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா?
கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய எட்டு பொன்மொழிகள்! பற்றி தெரிந்து கொள்வோமா?

வகை: கிருஷ்ணர்

குருஷேத்திரப் போர் நடக்கும் பொழுது இந்தப் போர் இப்போது தேவைதானா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் அர்ஜுனனிடம், கிருஷ்ணபரமாத்மா உரையாடிய உரையாடல்கள் தான் பின்னாளில் 'பகவத் கீதை' என்கிற சக்தி வாய்ந்த புனிதமாக நூல் உருவாக காரணமாக அமைந்தது. கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனரிடம் கூறிய ஒவ்வொரு உபதேசத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் கருத்துகள் இந்த கலியுகத்திலும் மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் உள்ளது ஆச்சரியப்படத் தக்கதாகும். அவை என்னவென்று பாருங்கள். பொன்மொழி1: இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்று அவர் கூறுகிறார். நிலையற்ற ஒன்றின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால் அதனால் கிடைக்கப் போவது என்னவோ ஏமாற்றம்தான். நித்திய ஜீவன் அதாவது நம் உடலுக்குள் இருக்கும் ஆத்மாவை தவிர இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை எனவே நிரந்தரமற்ற நம் உடலை கொண்டு எதையும் யோசிக்காமல் நிரந்தரமாக இருக்கும் உள்ளத்தினால் யோசிப்பது நன்மைகளை கொடுக்கும். பொன்மொழி 2: தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளிலிருந்து தட்டிக்கழித்து பயந்து ஓடுவதில் விடுதலை கிடைப்பது இல்லை. எதற்காக இந்த பூமிக்கு வந்தமோ, எதை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறோமோ அதை தயக்கமில்லாமல் தைரியமாக நிறைவேற்றுவதன் மூலமே நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கிறது. பொன்மொழி 3: ஒரு செயலை செய்ய நினைத்து விட்டால் அல்லது ஆரம்பித்து விட்டால் அதனால் கிடைக்கக்கூடிய விளைவுகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்த செயலை முழுமையாக ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் பொழுது அதில் தோல்வியுற்றால் கூட நமக்கு மன திருப்தி முழுதாக கிடைக்கிறது. வெற்றியையும், தோல்வியையும் சமமாக கருத வேண்டும். பொன்மொழி 4: புத்தர் கூறியது போல அன்றே கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார், 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்று. ஆசைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு உங்கள் ஆசைகளை குறைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு மகிழ்ச்சி என்னும் திறவு கோல் உங்களிடம் தானாகவே வந்து சேரும். பொன்மொழி 5: சுயநலம் என்னும் தூசியை அகற்றினால் தான் தெளிவு என்னும் கண்ணாடி நமக்கு தெரிய ஆரம்பிக்கும். கண்ணாடி போன்ற தெளிவான உள்ளத்தை அடைய சுயநலம் என்னும் தூசுகளை துடைத்து தெளிவையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்ய வேண்டும். பொன்மொழிகள் 6: நம் வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் ஏறக் குறைய இருக்கக்கூடாது, சமநிலையாக இருக்க வேண்டும். பசி, தூக்கம், துக்கம், உடல், இன்பம், துன்பம் எல்லாமே கூடவோ, குறையவோ இல்லாமல் சரிசமமான அளவில் நாம் வைத்திருக்க வேண்டும்.

அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும்
அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும்

வகை: பணம்

ஒரு யூத வியாபாரி மரணப்படுக்கையில் இருந்தார். அவர் தன் மனைவியிடம் மூத்தமகன் எங்கே என்று கேட்க, உங்கள் வலப்பக்கத்தில் நிற்கிறான் என்றாள். இரண்டாம் மகன் எங்கே என கேட்க, தலையருகே உள்ளான் என்றாள். மூச்சு வாங்க கடைசி மகன் எங்கே என கேட்க, காலடியில் இருக்கிறான். உடனே சாகக்கிடந்த மனிதர் பதற்றத்துடன் எழுந்து, எல்லோரும் கடையை மூடிவிட்டு வந்துவிட்டால் வியாபாரம் என்ன ஆகும் என்றபடி துவண்டு விழுந்தார். இறந்து கொண்டிருக்கும் இவர் மனம் கல்லாப் பெட்டியில்தான் உள்ளது. பலரது மனம் பணம், ஜாதி, புகழ், இப்படி ஏதோ ஒன்றில் மாட்டிக்கொண்டு வாழ்நாள் பூரா அவஸ்தைபடுகிறது. எப்போது பணத்தை மட்டுமே பிரதானமாக நினைப்பவர்கள் பிற மனிதர்களை மதிக்க மாட்டார்கள். ஒரு பண வெறியர் ஏரிக்குப் போனார். படகிலிருந்து ஏரியில் விழுந்து விட்டார். யாராவது காப்பாற்றினால் சொத்தையே கொடுப்பதாக அலறினார். அங்கே இருந்த காவலர் இவரைக் காப்பாற்றினார். ஒரு ரூபாயை அவரிடம் வீசினார். அந்தக் காவலர் ஒரு விளம்பரப் பலகையை காட்டினார். அதில் சிக்கிக் கொண்டவர் களைப் காப்பாற்றினால் அன்பளிப்பு 100 ரூபாய் என எழுதியிருந்தது. பண வெறியர் உடனே, ஓஹோ நீ ஏதோ சேவை மனப்பான்மை உடையவன் என நினைத்தேன். இருந்தாலும் உனக்கு இப்படி பணத்தாசை கூடாது என்றார். காவலர் சிரித்தபடியே ஐயா பணம்தான் முக்கியம் என்றால் உங்களை சாக விட்டிருப்பேன். அதோ அந்த பலகையைப் பாருங்கள் என்றார் அதில் ஏரியில் விழும் சடலங்களை உடனுக்குடன் அப்புறப் படுத்தினால் 500 ரூபாய் சன்மானம் என்று எழுதியிருந்தது. மனிதர்களில் சிலர் இப்படி எல்லா நிகழ்வுகளையும் பணத்தால் மட்டுமே அளக்கிறார்கள். அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும். அது நம் காவல்காரன். அளவற்ற பணம் வந்தால் நாம்தான் அதைக் காப்பாற்ற வேண்டும். சரியாகச் சொன்னால் பணம் கால் செருப்பு போல். செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும். கூடுதலாக இருந்தால் காலை வாரி விடும். பணம் பயன்படுத்தவே.கொண்டாடி குவித்து வைக்க அல்ல. பணம் சம்பாதிப்பது மூச்சு விடுவது போல் எவ்வளவு காற்றை நாம் இழுக்க முடியுமோ அவ்வளவு இழுக்க வேண்டும். ஆனால் இழுத்த காற்று முழுவதையும் அப்படியே உள்ளே வைத்திருக்க முடியுமா? வெளியே விட்டேயாக வேண்டும். இந்த இயக்கம்தான் முக்கியம். ஒருவர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார். கோவில் குளம் தானம் தர்மம் எதுவும் செய்வது கிடையாது. அவர் நண்பர் எரிச்சலுடன் இவரிடம் நீ செத்தா சொர்க்கம் செல்வாயா நரகம் செல்வாயா என்றதற்கு, வியாபாரம் எங்கு நல்லா நடக்குமோ அங்கு போகணும் என்றாராம். எப்படி உள்ளது அவர் மனம்!

முயற்சி செய்து பாருங்கள் முத்தான பலன் உங்களை வந்து சேரும்
முயற்சி செய்து பாருங்கள் முத்தான பலன் உங்களை வந்து சேரும்

வகை: தன்னம்பிக்கை

உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னை வந்துவிட்டால், கடவுள் ஏன் நமக்கு உதவுவதில்லை? என்று கடவுளை குறை கூறிக்கொண்டு அவரை திட்டித்தீர்ப்பவரா நீங்கள்? அப்போ இந்த கதையை கண்டிப்பாக படியுங்கள். ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும்போது அவருடைய ஆட்டோ ஒரு பெரிய பள்ளத்தில் மாட்டிக்கொள்கிறது. ஆட்டோ ஓட்டுனர் வெளியிலே வந்து பார்க்கும்போது, ‘நம் ஒருவரால் மட்டுமே இந்த ஆட்டோவை வெளியிலே தூக்கிவிட முடியாது. யாராவது கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்’ என்று நினைக்கிறார். யாராவது அந்த வழியாக வந்து தனக்கு உதவ மாட்டார்களா? என்று நினைத்து ரொம்ப நேரம் அதே இடத்தில் நிற்கிறார். ஆனால், அந்த பக்கம் ஆள் நடமாட்டமேயில்லை. கடவுளிடம், 'எனக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்’ என்று வேண்டுகிறார். அப்போதும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. கடைசியாக, வேறு வழியேயில்லை. நாம்தான் இறங்கி நேரடியாக முயற்சி செய்யவேண்டும். யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை என்று நம்பிக்கையுடன் ஆட்டோவை கயிறுக்கட்டி வெளியே இழுக்க ஆரம்பிக்கிறார். சில நிமிடங்கள் கடுமையாக முயற்சி செய்கிறார். திடீரென்று அந்த ஆட்டோ பள்ளத்திலிருந்து மேலே வருகிறது. பின்னாடி பார்த்தால், ஒரு வயதானவர் இவருக்கு உதவி செய்திருக்கிறார். இதை பார்த்த அந்த ஆட்டோக்காரர் அந்த கடவுளே எனக்கு உதவி செய்யவில்லை. ஆனால், யாரென்று தெரியாத நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி என்று கூறுகிறார்.