தலைப்புகள் பட்டியல்

தடை அதை உடை புது சரித்திரம் படை
தடை அதை உடை புது சரித்திரம் படை

வகை: தன்னம்பிக்கை

தடை அதை உடை. தட்டிப்பார் முட்டிப்பார் மோதிப்பார் முயன்று பார் திறக்கவில்லை எனில் உடைத்து விடு தடைகளை. கட்டி இழுத்து வந்து விடு வெற்றியை என்பதுதான் நம் வாழ்வில் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தடைகள் இல்லாத பாதை இந்த மண்ணில் இல்லை. தடைகளால் பிறக்கும் தைரியம் தவத்தால் கூட பிறப்பதில்லை என்று சொல்வார்கள். எனவே தடைகளைக் கண்டு முடங்கி விடாமல், துவண்டு விடாமல் துணிவுடன் தகர்த்தெறிந்து முன்னேறி செல்ல வாழ்வில் வெற்றி நிச்சயம். தடைகளைக் கண்டு தயங்காமல் முன்னேற முயன்றால் யாராலும் நம் வளர்ச்சியை தடுக்க முடியாது. நாம் பெறும் வெற்றி என்பது உலகமே நமக்கு ஆதரவாக இருக்கும்போது சுலபமாக பெறுவது அல்ல. அனைத்துமே நமக்கு எதிராக செயல்படும்பொழுது தனித்து நின்று போராடி தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெறுவதுதான். தடைக் கற்களை படிக்கற்களாக எண்ணி முன்னேறி மாபெரும் சக்தியாக நம்மை யாராலும் நிகராகரிக்க முடியாத இடத்தில் வளர்ந்து நிற்பதுதான் வெற்றி. வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகளைக் கடந்தால் தான் சாதனைகள் பிறக்கும். சாதிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு நிறைய தடை கற்களை உடைத்து வெளியே வரவேண்டும். தடைகளை உடைத்து வெளியே வரும்பொழுது நம்மை காயப்படுத்தியவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. சுதந்திரமாக சிறகை விரித்து பறக்க வாய்ப்பு கிடைத்ததே என்றெண்ணி மகிழ்ச்சியுடன் முன்னேற பார்க்க வேண்டும். தடைகளை எதிர்த்து வெளிவரும் சமயம் காதுகளை கெட்டியாக மூடிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம் காதில் விழும் வார்த்தைகளால் பலவீனப்பட்டு துவண்டுபோய் முன்னேறாமல் போய்விட வாய்ப்புகள் அதிகம். தடைகளை எதிர்த்து நிற்க இமயமலையும் வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறைபிடிக்கும் என்பார்கள். எனவே தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்ல தயக்கம் வேண்டாம். தடைகளை உடைத்தெறிய ஓயாது முயற்சி செய்து லட்சியத்தை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால் நம் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. சோம்பலை விடுத்து, அறியாமையை போக்கி, தடைகளை எதிர்த்து முன்னேற்ற பாதையில் செல்ல செல்ல நம்மால் சரித்திரம் படைக்க முடியும். அப்படி மோதி போராடி, வரும் தோல்வியைக் கண்டு துவளாமல் முன்னேறி சரித்திரம் படைப்பதற்கு வயது ஒரு தடையே அல்ல.

உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்
உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம் 2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம் 3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம் 4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து 5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து 6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து 7. சூரிய ஒளியும் ஒரு மருந்து 8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம் 9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம் 10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம் 11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம் 12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம் 13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்

சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியதெல்லாம்  இப்போது போரடிக்கிறது.. ஏன் இந்த மாற்றம்
சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியதெல்லாம் இப்போது போரடிக்கிறது.. ஏன் இந்த மாற்றம்

வகை: இன்றைய சிந்தனை

திருவிழாக்கள், புதுத்துணிகள், பண்டிகைகள், சில நேரங்களில் சினிமா கூட.. கடந்து வந்த கடினமான தருணங்களா, நிராசையாகிப் போன பேராசைகளா, நிறைவேறாமல் போன சிறு சிறு கனவுகளா, வேலை இல்லாமல் பசியுடன் சுற்றித் திரிந்த நாட்களா, அவமானங்களின் போது அழுகையை அடக்கியதன் விளைவுகளா, செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வாழ்வா?! எதுவென சரியாய் சொல்லி விட முடியவில்லை.. மாறாக, தனிமை கொஞ்சம் ஆறுதல் தருகிறது.. தலைகோதி தேற்றுகிறது, இசை கொஞ்சம் இளைப்பாறுதல் தருகிறது.. பயணங்கள் உயிரோடிருப்பதை அவ்வப்போது நினைவூட்டுகிறது.. சினிமா எப்போதும் கட்டி அணைத்துக் கொள்கிறது..

பணம் உங்களை மாற்றாமல் இருக்க கவனம் அவசியம்
பணம் உங்களை மாற்றாமல் இருக்க கவனம் அவசியம்

வகை: பணம்

மீபத்தில் பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு: 'பணம் தான் எல்லாம் என்பதே' வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக் கொடுக்கும் பாடம். பணத்தை சிலர் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர். சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்; சிலர் வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப்படுகின்றனர். முதல் மில்லியனை சம்பாதிப்பது கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம். இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை... எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது. பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும் போது, அதை எடுத்துப் போக முடியாது. என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்... தினமும், 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, 'பெக்' விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை; ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க, ஓர் எல்லை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.

தொழில் வரி என்றால் என்ன யாரெல்லாம் கட்ட வேண்டும்
தொழில் வரி என்றால் என்ன யாரெல்லாம் கட்ட வேண்டும்

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

தொழில்வரி யார் கட்ட வேண்டும்? மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் சம்பளப் பட்டுவாடா செய்யும் அலுவலர்கள், மத்திய, மாநில அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள், நிறுவனங்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் விளம்பர நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழில் புரிவோர், தமிழ்நாடு அரசுக்கு விற்பனை வரி செலுத்தும் நபர்கள், மற்றும் சொந்தமாக தொழில் புரிவோர் இந்தத் தொழில் வரி கட்ட வேண்டும். தொழில்புரிபவர் அல்லது பணியாளரின் அரையாண்டு வருமானம் / சம்பளம் 21,001 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர் தொழில்வரி செலுத்த வேண்டும். ஆறு மாத சம்பளம் 20,000 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் வருமானம் இருப்பவர்கள் இந்தத் தொழில் வரி கட்டத் தேவையில்லை. மேலும், தற்காலிக பணியில் இருப்பவர்கள் இந்த வரி கட்டத் தேவையில்லை. இந்தத் தொழில்வரி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. உரிய காலத்திற்குள் தொழில்வரியினை செலுத்தத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதத் தொகையுடன் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.

கர்மவினை
கர்மவினை

வகை: கர்மா

கிருஷ்ணதாசன்: கண்ணா, ஏன் எனக்கு இந்த நிலை? உன்னை என்றுமே வணங்கும் எனக்கே இந்த நிலையா? கிருஷ்ணன் :- சிரித்து கொண்டே. எனக்கே என்று கேட்கிறாய். நீ என்ன அந்த கடவுளோ ? மீண்டும் அதே சிரிப்பு. கிருஷ்ணதாசன் :- ஏன் இந்த சிரிப்பு கண்ணா? கிருஷ்ணன் :- பூமியில் பிறந்த ஒவ்வொரு அவரது கர்ம வினையை அனுபவிக்க வேண்டும். கடவுளாக பிறந்த எனக்கு நடக்காத துன்பமா? பிறந்த உடன் தாய் தந்தையை பிரிந்தேன், என் மாமனை கொன்றேன், பல அரக்கர்களால் தொல்லைக்கு ஆள் ஆளேன், என் சொந்த ஊரை விட்டு வேறு நகரத்தத்து குடி போனேன், காதலித்த பெண்னை மணக்க முடியவில்லை, என் மகன் தர்மத்தை மீறுபவன், என் இனம் என் கண் முன்னாலே அழிந்து வி

வாழ்வில் எதார்த்தமான சில நிஜங்கள்
வாழ்வில் எதார்த்தமான சில நிஜங்கள்

வகை: இன்றைய சிந்தனை

வாழ்வில் எதார்த்தமான சில நிஜங்கள் வாழ்வில் உயர்ந்த நிலை. தாழ்ந்த நிலை என்று எதுவும் இல்லை.. அது நமக்குத் தோன்றும் மயக்க நிலை மட்டுமே.. பணம் இன்று போகும். நாளை வரும்.. எனவே அது தரும் உயர்வு, தாழ்வு நிலையற்றது.....! அது போலியானதும் கூட பணத்தை வைத்துச் செய்யப்படும் மதிப்பீட்டை விட பண்பு, பாசம், இரக்கம், ஈகை முதலிய நற்குணங்கள் பெற்றுத்தரும் மதிப்பு மரியாதை தான் நிரந்தரமானது... நல்ல மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வீழ்ச்சியே கிடையாது மற்றவர்கள் முன் தோல்வியடைந்தவனாக காட்சியளித்தாலும்.. நல்ல உணர்வுகள் உள்ள மனிதன் வெற்றி பெற்றவனாவான்.. தெரிந்த அனைவரிடமும் புன்னகையை பகிரலாம். ஆனால்.... புரிந்த ஒருவரிடம் மட்டுமே கண்ணீரைப் பகிர முடியும்.. நம் வாழ்க்கை இறகாவதும் விறகாவதும்.. நம் கையில் தான்.. வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும்.. எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்தப் போவதில்லை..

அப்பா என்பவர் யார் என்னும் கவிதை
அப்பா என்பவர் யார் என்னும் கவிதை

வகை: அப்பா

கேட்க காதுகள் இருந்தால் போதும்... அப்பாவின் மிதிவண்டியும், அவரின் கழுத்து துண்டும் சொல்லும் ஓய்வில்லா கதைகளையும், ஓராயிரம் கவிதைகளையும்... அப்பா என்பவர் மகளுக்கு கொடைக்கானல், மகனுக்கு ஊட்டி, மனைவிக்கு சிரபுஞ்சி, உடன் பிறந்தவனுக்கு ஏற்காடு, உடன் பிறந்தவளுக்கு காஷ்மீர், பேரனுக்கு சாரல், பேத்திக்கு தூறல்,

மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான் நாம் என்னும் கவிதை
மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான் நாம் என்னும் கவிதை

வகை: அனுபவம் தத்துவம்

எனக்குக் கிடைக்காதவை அத்தனையும் என் மகளுக்கு கிடைக்கட்டுமென எனக்காய் யோசித்த தந்தையை எத்தனை முறை பார்த்தாயிற்று எனக்கில்லா விட்டாலும் பரவாயில்லை நீ அனுபவித்துக் கொள் என எத்தனை தடவை வலியிலும் வழி விட்ட தாயைப் பார்த்தாயிற்று எனக்கும் தேவை தான் இருந்தும் இப்போதைக்கு நீ உபயோகப்படுத்து எனச் சொல்லி என்னை முற்படுத்திய உடன் பிறப்பை எத்தனை முறை பார்த்தாயிற்று உனக்குப் பிடிக்குமென தெரிந்து தான் தேடிப் பார்த்து இதை வாங்கி வந்தேனென திடீர் வியப்பில் ஆழ்த்தும் உற்ற தோழியை எத்தனை முறை கண்டாயிற்று மனைவியின் உலகினுள் சருகெனக் கூட சோகம் அப்பி விடக் கூடாதென தன்னையே தியாகம் செய்யத் துணியும் எத்தனை கணவன்மாரை பார்த்தாயிற்று எல்லாம் நல்லதாகவே நடக்கட்டுமென முகம் மலர வாழ்த்துச் சொல்லும் எத்தனை புது முகங்களை இதுவரை பார்த்தாயிற்று

தயக்கமே தோல்விக்குக் காரணம்
தயக்கமே தோல்விக்குக் காரணம்

வகை: தன்னம்பிக்கை

""தயக்கமே தோல்விக்குக் காரணம்; துணிவு இருந்தால் வெற்றி வசமாகும்.. முடியாது என்பது மூடத்தனம்; முடியும் என்பது தன்னம்பிக்கை; என்னால் மட்டுமே முடியும் என்பது கர்வம். கடின உழைப்பால் வருவது வெற்றி. மனத்துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால், ஒவ்வொருவரும் சாதிக்கலாம் ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டு இருந்தனர். கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது, குதிப்பது என்றும் ஆடிப் பாடிக் கொண்டு இருந்தார்கள் ,சிலர் பயத்தில் மரத்தில் ஏற மறுத்து விட்டனர்.பிறகு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள்.. அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையைக் கடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும் ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டு இருந்தது. ஓடையை சில சிறுவர்கள் அனாவசியமாக தாண்டிக் குதித்துச் சென்றனர்.

பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும் வெளிப்படையா பேச வைக்கிறது எப்படி
பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும் வெளிப்படையா பேச வைக்கிறது எப்படி

வகை: கணவன் மனைவி உறவு

இது அவ்ளோ சுலபமான விஷயம் இல்லை .. ஆனா நடந்துடா லைப் செம சூப்பரா போகும் , பொண்டாட்டியே பெஸ்ட் பிரெண்ட் மாதிரி ஆகிடுவா .. சரி விஷயத்துக்கு வரேன் பொதுவா பொண்ணுங்க செம உஷார் அதுவும் கல்யாணம் ஆகிட்டா , அவங்களுக்கு உஷாரா இருக்க ஐடியா குடுக்க அம்மா, அக்கா , பிரிஎண்ட்ஸ் ஒரு கூட்டமே இருக்கும், அதுனால தேவையில்லாம எதையும் பேசமாட்டாங்க முக்கியமா சொல்லனும்னா அவங்க உள்மனசுல இருந்து ஒன்னும் வெளிய வராது .. சுத்தி இருக்கவங்க இப்படி பேசுனா அப்படி நெனச்சிடுவான், அப்டி பண்ண இப்படி நெனச்சிடுவான் , இது மாதிரி நிறைய சொல்லிவைச்சிருப்பாங்க , இது எல்லாம் உடைச்சாதான் அவ பேசுவா .. எப்படி உடைக்கிறதுன்னு சொல்றேன் 1. முதல் விஷயம் பசங்க தான் முதல் பேசணும் .. பண்ண எல்லாத்தையும் சொல்லி சரண்டர் ஆகிடனும் நீ உன்ன பத்தி 10 விஷயம் சொன்னாதான் அவங்ககிட்ட இருந்து 1 விஷயம் வெளிய வரும் , ஏன் என்றால் , பொண்ணுங்க எப்போவுமே உஷார் , அப்படி இருக்குறது தான் அவங்களுக்கும் நல்லது , நீ எல்லாத்தையும் கேட்டுட்டு சண்டை வரும்போது அவளை எதுனா சொல்லிடுவன்னு பயப்புடுவா , அதுனால safty க்கு உன்ன பத்தி நெறய தெரிஞ்சிவச்சிகிட்டு தான் அவ பேசுவா 2. நீ என்னதான் உண்ணப்பத்தி எல்லாத்தையும் 100% சொன்னாலும் அவ உனக்கு 50-70 % தான் சொல்லுவா அதுக்குமேல நீ என்னபண்ணலும் பேசவைக்க முடியாது அதான் பொண்ணுங்க , சொன்னவரைக்கும் போதும்ன்னு சும்மா இருக்கனும் மீதி இருக்க 30% கேக்க நெனச்சா மொத்தமும் நாசமா போய்டும் .. ஏன்ன்ன அந்த 30% தெரிஞ்சா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு மறைப்பா .. நீ அத கேக்காம இருக்குறது உனக்கு நல்லது 3. எல்லாத்தையும் கேட்கக்கூடாது அவளுக்காக தனிப்பட்ட ரகசியம் , தனிப்பட்ட விஷயத்துல நீயா கேட்கக்கூடாது அவளா வந்து உங்கிட்ட சொன்ன தெரிஞ்சிக்கோ .. உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா .. உன் பொண்டாட்டி யாருகிட்டயோ சிரிச்சி பேசிட்டு உன்ன பாத்து போன் cut பண்ணா .. உடனே யாரு ? என்ன பேசுனீங்கன்னுல கேட்கக்கூடாது .. அவ போன் அவளை கேக்காம தொடக்கூடாது, ஆனா உன் போன் password அவளுக்கு தெரியணும் 3. அவ உன்ன friend நெனைச்சி பேசுற வரை நீ காத்துஇருக்கணும் , ஒண்ணா உக்காந்து பிட்டுப்படம் பாருங்க உனக்கு பிடிச்சதை நீ சொல்லு, வீடியோ share பண்ணி அத பத்தி பேசுங்க , பிட்டு கதை படிங்க , எத படிக்கும்போது பாக்கும்போது உங்களுக்கு ரொம்ப மூட் ஆகுதோ அது தான் உங்களுக்கு பிடிச்சது , இப்படி உங்களுக்கு பிடிச்சதை லிஸ்ட் போட்டு வைங்க .. உங்க கற்பனை பெருசா ஆகும் ஆசையும் அதிகம் ஆகும்

வாழ்க்கையில்-நாம் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான முடிவுகள்..என்ன
வாழ்க்கையில்-நாம் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான முடிவுகள்..என்ன

வகை: வாழ்க்கை பயணம்

வாழ்க்கை என்பது.. நாம் சரி என்று ஒன்றை நினைத்து, செய்யப் போனால்.. அது உன்னுடைய முதல் தவறு என்றும்,- இப்படித்தான் நீ மாற வேண்டும் என்று நம்மை கட்டாய வழியில் வேறு திசையில் இழுத்துச் செல்வதாகவும் இருக்கும்! காலம் இழுத்துச் செல்லும் திசையிலேயே பயணம் செல்வதுதான்.. மனித வாழ்க்கையின் நடைமுறை என்று பலர் வாழ்க்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கிறது! இது அடித்துச் செல்லும் வேகத்தில்.. மனம் வெகுண்டு, மிரண்டு, போனவர்களும் உண்டு. ஓரளவுக்கு தன்னை ஆசுவாசப்படுத்தி 'வருத்த' கடலில் இருந்து கரை சேர்ந்தவர்களும் உண்டு. உதாரணமாக.. தாம் விரும்பியது போல வாழ்க்கை இணை கிடைத்திருக்க மாட்டார். ஆனாலும் அவருடன் மகிழ்ச்சியாக 80 வயது வரை வாழ்ந்து கொண்டிருப்பார்! வாழ்க்கை என்பது இதுதான் இப்படித்தான்! ஆனாலும்.. நமது விருப்பம் போலவும், வாழ முடியும்! எப்படி? எந்த வாழ்க்கை போராட்டங்களையும், கஷ்ட நஷ்டங்களையும், நாம் துணிச்சலோடு எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல்.. எதிர்கொள்கிற சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக உருவாக்கிக் கொள்ளும் திறமையையும் வளர்த்துக் கொண்டால்… அப்போது முடியும்! அதாவது.. நம்மில் ஒவ்வொருவருக்கும்.. சாதிக்க வேண்டும் என்ற சபதம் வேண்டும் ! வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும். வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு வேண்டும்! அடைவதற்கு ஒரு லட்சியம் என்பது வேண்டும்! வாய்ப்பு? வாய்ப்பு? எங்கே? எங்கே? என்று தேடுகிற தாகம் வேண்டும்!