தலைப்புகள் பட்டியல்

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு தாய் கூறும் அறிவுரைகள்.
திருமணமாகப் போகும் தன் மகளுக்கு தாய் கூறும் அறிவுரைகள்.

வகை: அம்மா

உன் விருப்பம் போலவே உனக்கொரு வரன் வந்திருக்கிறதை கண்டு அப்பாவும் நானும் மிகவும் மகிழ்ச்சியுற்றோம். வெகுவிரைவில் உன் திருமணத்தை காண ஆவலாக உள்ளோம். நீ பக்குவப்பட்டிருப்பாய் என தெரிந்தும் சில குறிப்புகளை சொல்கிறேன். மனதில் வைத்துக்கொள். • வருடம் முழுவதும் மீனை எதிர் பார்க்காதே. சோற்றில் சாமபாரை பார்த்ததும் என்னிடம் சண்டையிடுவது போல் சண்டையிடாதே. இனியாவது தட்டில் வைக்கும் அத்தனையையும் சாப்பிட கற்றுக்கொள். • 25 வருட உணவு சுவையில் பெரும் மாற்றம் வரும். அது சரி, நீ காபியே அடுத்தவர் வீட்டில் குடிக்க மாட்டாய் சுவை மாறும் என்று. என் அன்பு மகளே, எல்லா சுவையும் சுவையே என்று ஏற்றுக்கொள். • இது வரை நீ ஓடி ஆடிய வீதி போன்று இருக்குமா? இதுவரை நீ பழகிய மனிதர்கள் போன்று இருப்பார்களா? புது மனிதர்கள் என்று அச்சம் கொள்ளாதே. அன்பு அகில உலகத்திற்கும் பொதுவானது தானே? அவர்களும் மனிதர்கள் தானே? அன்புடன் எவரையும் எதிர்கொள்.அன்பினால் உலகையே ஆளலாம் ஒரு குடும்பத்தை ஆண்டுவிட முடியாதா உன்னால் ? • அடிக்கடி எனக்கு போன் செய்து உன் புகுந்தகத்தில் நடப்பதை என்னுடன் பகிர்ந்துகொள்ளாதே. அது உன் கணவனுக்கு சலிப்பை தரும். புகுந்தகத்தில் நடப்பதை பிறந்தகத்திற்குள் கொண்டு வராதே. • உனக்காக ஒட்டு மொத்த குடும்பமும் அனுசரிக்க வேண்டும் என்பதை விட அவர்களுக்காக நீ ஒருத்தி அனுசரித்து செல்லலாம். தவறில்லை.

சாமர்த்தியமான இளைஞன் பற்றிய ஒரு கதை
சாமர்த்தியமான இளைஞன் பற்றிய ஒரு கதை

வகை: ஒரு குட்டிக்கதை

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார். "சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?" இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்". அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்" வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."

வாழ்க்கையில் எந்த மாதிரியான பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்
வாழ்க்கையில் எந்த மாதிரியான பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்

வகை: தன்னம்பிக்கை

பிடிவாதம் பிடிக்காமல் இருப்பது, பெரியவர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது, உணவுப் பொருளோ, விளையாட்டுப் பொருளோ பகிரும் பழக்கம், பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பது, வயதிற்கேற்ப பெற்றோருக்கு உதவி செய்வது, தவறு செய்தால் யாராயிருந்தாலும் மன்னிப்பு கேட்பது, மற்றவர் பொருளுக்கு ஆசைப் படாதது, வேண்டிய இடத்தில் தயவுசெய்து, மன்னியுங்கள், நன்றி ஆகிய சொற்களைப் பயன்படுத்துவது,

அதிர்ஷ்டம்   தலையெழுத்து என்பது என்ன
அதிர்ஷ்டம் தலையெழுத்து என்பது என்ன

வகை: வாழ்க்கை பயணம்

சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது. வாழ்வில் பசியை அனுபவித்தவனுக்கு.. பணிவைச் சொல்லித் தரத் தேவையிருக்காது!! தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு, இல்லையென்றால், இந்த உலகம் உன்னைப் புதைத்து விடும். தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்குத் தகுதியான இடத்திற்குச் சென்று சேர்வதே இல்லை. உங்கள் தகுதியை உயர்த்திக் கொண்டே இருங்கள். உங்களை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் முடிய வேண்டும். தோற்றுப் போய்விட்டோமே என உடைந்துப்போய் நிற்பதை விட, தோல்வி தானே என்று உறுதியுடன் திறம்பட தளராத தன்னம்பிக்கையோடு எழுந்து ஓரடி வையுங்கள். அடுத்த அடி தானாக வைத்து வெற்றிப் பயணத்தை தொடங்கியிருக்கும் மனமும் உடலும். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள். அந்தந்த நேரத்திற்கு மட்டுமே பயனளிக்கும். வாழ்க்கையில் பெரும்பாலானவை எதிர்பாராமல் நடப்பதுதான். அவற்றுக்கு நாம் தரும் பெயர்கள்தான் வெவ்வேறு. நடந்தது நம் மனதுக்கு பிடித்ததாக இருந்தால் அதற்கு நாம் தரும் பெயர் அதிர்ஷ்டம். பிடிக்காத விஷயமாக இருந்துவிட்டால் அதற்கு நாம் தரும் பெயர் தலையெழுத்து.

வாழ்க்கை பயணம் அன்பு நிறைந்தது
வாழ்க்கை பயணம் அன்பு நிறைந்தது

வகை: வாழ்க்கை பயணம்

வாழ்க்கையில் ஒருவரை நேசிக்கிறோம் என்றால் அது பலூனுக்குள் ஊதப்படுகின்ற காற்று போன்றது! எப்போது வேண்டுமென்றாலும் அது அதுவாகவே உடைந்துப் போகலாம். காற்றினை சேமித்து வைத்திருக்கும் வரை தான் பலூனின் வடிவமும் அழகாக இருக்கும். ஒருவர் மேல் அதிகமான அன்பை வெளிப்படுத்தியும் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் நெஞ்சு வெடித்து விடும், அது போலவே ... அளவுக்கு அதிகமான காற்றை உள்ளே செலுத்தும் போது பலூனும் வெடித்து விடும்! குறிப்பிட்ட அளவான காற்றை அதற்குள் செலுத்தி பலூனை நீங்கள் கையோடு வைத்திருக்கலாம்.

பணம்  என்பது என்ன பற்றி தெரிந்து கொள்வோமா
பணம் என்பது என்ன பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: பணம்

பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு’ என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம். ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். ப்ரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள். பாட்டிக்கு ஜனோ பகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச் சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவை யாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள். திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்தி லிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள். லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான். எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல. இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர், ஏகப் பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது. அதன்பின் வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம். அப்பாவுக்கு ஒரு டிரான் சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

மனிதர்களைப் புரிந்துக் கொள்ளும் கலை மிகக் கடினமானது
மனிதர்களைப் புரிந்துக் கொள்ளும் கலை மிகக் கடினமானது

வகை: இன்றைய சிந்தனை

மனிதர்களைப் புரிந்துக் கொள்ளும் கலை மிகக் கடினமானது.. அது எந்தக் கற்கை நெறியாலும் பூரணமடைய முடியாதது. பிறர் மீதான நம் அளவுகோல் என்பது நமது விழிகளால் நிச்சயம் தீர்மானிக்க முடியாததும் கூட.. வாழ்க்கை இறைநம்பிக்கை எனும் புள்ளியிலிருந்து ஆழமாகப் செப்பனிடப்பட வேண்டியது. பிறரின் வாழ்தல் என்பது நம் கோணத்திலிருந்து பார்க்கப்படுதலுக்கு அப்பாற்பட்டது.. அறிவுக்கும் நடைமுறைக்கும் முரண்பாடுகள் இருக்குமானால் நிச்சயம் அந்த நகர்வில் ஏதோ குறையிருக்கக் கூடும்.. நிஜங்களை விட கனவுகள் வீரியம் கூடியது.. எதிர்பார்ப்புக்களால் மட்டுமே எல்லை தாண்ட முடிகிறது.. அதனால் தான் நிஜங்களின் இழப்புக்களை இயல்பாய் ஏற்க முடிந்ததைப் போல் கனவுகள் கலைதலை அத்தனை இலகுவாய் கடக்க முடிவதில்லை.. நிச்சயம் இந்த உலகில் மனிதர்களைத் திருப்திப்படுத்தவே முடியாது.. நடத்தை மாற்றங்கள் சிந்தனைத் தெளிவிலிருந்து வரும் போதே சாத்தியமாகிறது..

வேண்டுதல் நிறைவேற ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு
வேண்டுதல் நிறைவேற ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

வகை: ஆன்மீக குறிப்புகள்

வரத்தை ஒரு நொடி பொழுதில் கொடுக்கக்கூடிய வல்லமை கொண்டவள் தான் சக்தி தேவி. முழு நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நாளை ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய இரண்டாவது வெள்ளிக்கிழமை. வாய்ப்புள்ளவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ரொம்ப நாள் வேண்டிக்கிட்டே இருக்கின்றேன். இந்த வேண்டுதலுக்கு மட்டும் அம்பாள் எனக்கு செவி சாய்க்கவே மாட்டேங்கிறாங்க. நிறைவேறாத வேண்டுதல் அப்படின்னு நிச்சயம் கட்டாயம் ஒவ்வொரு பெண்களின் மனதிலும் ஒவ்வொரு கோரிக்கை இருக்கும் அல்லவா. அந்த வேண்டுதல் நாளைக்கு நிச்சயம் நிறைவேறும் கவலையே படாதீங்க. இந்த வழிபாட்டை அம்மன் கோவிலுக்கு சென்று செய்தால். வேண்டுதல் நிறைவேற அம்பாள் வழிபாடு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். கட்டாயம் காலையில் தான் இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். கோவிலுக்கு செல்லும்போது அம்மனுக்கு மாவிளக்கு தயார் செய்து எடுத்து செல்லவும். நாம எல்லாருக்குமே தெரியும். பச்சரிசியில் கொஞ்சமாக வெல்லம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து அதில் சுத்தமான நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு அம்பாளுக்கு மாவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். நிறைய அம்மன் கோவில்களில் இந்த மாவிளக்கை ஏற்றினால், அம்பாள் சன்னதிக்கு உள்ளே வைத்து மாவிளக்கை பிரசாதமாக மீண்டும் நமக்கு கொடுப்பார்கள். உங்க ஊர் அம்மன் கோவிலிலும் மாவிளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். முதல் வேலையாக கோவிலுக்கு போவீங்க. மாவிளக்கு ஏற்றி அம்பாள் பாதத்தில் வச்சாச்சு. பிறகு அம்பாளை 11 முறை வலம் வரவேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கையை அம்பாளிடம் வைத்து கோவிலை வலம் வர வேண்டும். ஒரு வேண்டுதலை கோரிக்கையாக வைக்கவும். நீங்கள் ஏற்றி வைத்திருக்கக்கூடிய மாவிளக்கு அம்பாளிடம் உங்கள் பிரச்சினையை சொல்லிவிடும். வேண்டுதல் வைத்த பிறகு அம்பாளின் முன்பாக அமர்ந்து அம்பாளை கண் குளிர பார்த்து தரிசனம் செய்யுங்கள். நீங்கள் ஏற்றி வைத்த மாவிளக்கை மீண்டும் வாங்கிக் கொள்ளுங்கள். கோவிலில் இருக்கும் பக்தர்களுக்கு அந்த மாவிளக்கை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பிரசாதமாக கொடுக்கலாம். கோவிலில் பசுமாடு இருந்தால் அந்த பசு மாட்டிற்கு கொஞ்சம் அந்த மாவிளக்கை வையுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது‌. நாளைய தினம் அம்பாளை மேல் சொன்ன முறைப்படி வேண்டுதல் வைத்தால் நீங்கள் வீடு திரும்புவதற்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நூறு சதவீத வாய்ப்புகள் இருக்கிறது.

ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது  தெரிந்துகொள்வோம் வாங்க!
ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது தெரிந்துகொள்வோம் வாங்க!

வகை: ஆன்மீக குறிப்புகள்

💫 தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்று மாதங்களும் இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். இவற்றில் மார்கழி பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. புரட்டாசி மாதத்தின் ஒரு பாதி பித்ரு வழிபாட்டுக்கும், மறுபாதி நவராத்திரி என்று அம்மன் வழிபாட்டுக்கும் உரியதாகும். ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்குரியது என்பர். 💫 ஆடி மாதத்தை கடக மாதம் என்றும் சொல்வார்கள். அதனால் தான் இந்த மாதத்தில் சக்தி வழிபாடு சிறப்புடையதாகும். 💫 இந்த மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமமான அதிர்வுகள் வெளிப்படும். அதனால் இந்த மாதத்தில் இறை வழிபாடு, மந்திர ஜபம் போன்றவை செய்வது மிகச் சிறப்பானதாகும். இந்த மாதத்தில் இறை வழிபாட்டினை செய்வதன் மூலம், அது பல மடங்கு பலனை தரும். 💫 ஆடி மாதத்தில் எந்தெந்த காரியங்களை செய்யலாம்? எந்தெந்த காரியங்களை செய்யக் கூடாது? என்பதை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க.. ஆடி மாதத்தில் செய்யக் கூடாதவை: 💫 திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. 💫 புது வீடு குடி புகுதல், வீடு இடமாற்றம் செய்வது, கிரகப்பிரவேசம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். 💫 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது. 💫 ஆடி மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும். ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை : 💫 நேர்த்திக்கடன், வழிபாடு ஆகியவற்றை செய்யலாம். 💫 திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம். தாலி பெருக்கிக் போடலாம். 💫 மந்திர ஜபம், யாகம், ஹோமம் ஆகியவற்றை செய்யலாம்.

குலதெய்வங்கள் என்றால் என்ன விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது? அவர்களின் பெருமை என்ன? அனைவரும் தெரிந்து கொள்வோம்
குலதெய்வங்கள் என்றால் என்ன விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது? அவர்களின் பெருமை என்ன? அனைவரும் தெரிந்து கொள்வோம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது? நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்… இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று… அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!… பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு குல தெய்வம். புகுந்த வீட்டில் ஒரு குல தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அவரவர் வசதிக்கேற்ப குலதெய்வத்தின் போட்டோவை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.! அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்.

அப்பா மகளிடம் சொன்ன வாழ்க்கை பாடம்
அப்பா மகளிடம் சொன்ன வாழ்க்கை பாடம்

வகை: அப்பா

ஒரு இளம் பெண் தன் தந்தையிடம் சென்று, "அப்பா, எனக்கு ஒரு மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடத்தைக் சொல்லிக்கொடுங்கள். ஒரு இளம் பெண்ணாக, நான் என்னை நன்கு புரிந்துகொண்டு என் வாழ்க்கையில் வரும் சவால்களை சமாளிக்க கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தந்தை ஒரு கணம் யோசித்தார், பின்னர் தனது தொண்டையை செருமிவிட்டு, "ஒரு சோகமான இளவரசியைப் பற்றிய கதையைச் சொல்கிறேன். கதையை கவனமாகக் கேளு. மாயா என்ற அழகான இளம் வயது இளவரசி ஒருவள் இருந்தாள். அவள் மிக அழகாகவும், பிரகாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாள். அவளுடைய அன்பும், பிரகாசமான அழகும் அவளைச் சுற்றியுள்ள அனைத்தையும் பிரகாசமாக்கியது. 21 வயதில், இளவரசி மாயா தொலைதூர இராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார இளவரசனை மணந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, அவள் நினைத்த இனிமையான வாழ்க்கை அவளுக்கு அமையவில்லை. ஏனென்றால் அவளுடைய கணவர் அடிக்கடி அவளை அடித்து துன்புறுத்துவதும், வன்முறையில் ஈடுபடுவதுமாக இருந்தார். தினமும் கொடுமைகளை அனுபவித்தாள். அவள் மிகவும் தனிமையை உணர்ந்தாள், மற்றவர்களால் நேசிக்கப்படவில்லை, அனைவராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாள். ஒரு நாள், மாயா தனது தந்தையிடம் சென்று: அப்பா, என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. நான் இனிமேல் இந்த திருமண வாழ்க்கையில் இருக்க மாட்டேன். என தனது துயரங்களை விவரித்தாள். இருப்பினும், அவரது தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. திருமணமான பெண் கணவரை வேண்டாம் என்று விட்டுவிட்டு வருவது நம் சமுதாயத்திற்கே அவமானம். என்னால் வீட்டிற்கு உன்னை அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார். மாயா கண்ணீருடன் தனது தாயிடம் சென்று, "அம்மா, என் திருமண வாழ்க்கையை இனி என்னால் சமாளிக்க முடியாது. தயவுசெய்து என்னை வீட்டிற்கு வர விடுங்கள்! ".என்றாள். அம்மாவும் அதற்கு சம்மதிக்கவில்லை. திருமண வாழ்க்கை என்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். கவலைப்படாதே அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவார்... என்றார். மாயா, மிகுந்த வேதனையுடன் தனது நண்பர்களிடம் சென்று உதவி கேட்டாள். "என் கணவர் என்னை எப்போதும் அடிக்கிறார். நான் அவரை விட்டுவிட்டு வீட்டிற்கு வர விரும்புகிறேன்! ". என்னை காப்பாற்றுங்கள்... என்று அழுதாள். அவளுடைய நண்பர்கள் அவளை ஆறுதல்படுத்தி அறிவுரை கூறினர். "திருமணம் வாழ்க்கை எளிதானது அல்ல", இன்ப துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், போகப் போக அனைத்தும் சரியாகிவிடும். உன் கணவருடனே இரு என்று அறிவுரை கூறினர்.

எப்படிப்பட்ட மணமகன் அமைந்தால் ஒரு பெண் மிகக் கொடுத்து வைத்தவள்
எப்படிப்பட்ட மணமகன் அமைந்தால் ஒரு பெண் மிகக் கொடுத்து வைத்தவள்

வகை: பெண்கள்

காசு, பணமெல்லாம் அப்பறம் பாசம் தான் முதலில் என்று நினைப்பவன்(அதெல்லாம் எத்தனை கிலோன்னு இப்போலாம் கேக்கறாங்க!) அவளின் விருப்பத்திற்கு தடை சொல்லாத ஒருவன். அவள் சாதிக்க நினைப்பதை பின் நின்று ஊக்கப்படுத்தும் ஒருவன். டீ டோட்டலர்( அதெல்லாம் டைனோஸர் காலத்துலேயே அழிஞ்சிடுச்சுல. மறந்துட்டேன்.) நம்முடைய பெற்றோரையும் அவனுடைய பெற்றோர் போல மரியாதையாக நடத்துபவன். தன்னுடைய குடும்பத்தை முதன்மையாக கருதும் ஒருவன். மனைவியை இன்னொரு அம்மா போல பாவிப்பவன். காய்கறி வாங்க அனுப்பினால் கருவேப்பிலையும் சேர்த்து வாங்கி வருபவன். "வீட்டுக்கு பத்திரமா போய் சேர்ந்துட்டியாம்மா?" என்று அக்கறையாக விசாரிக்கும் ஒருவன். உடம்பு சரியில்லை என்று சொன்னால் அரவணைத்து பார்த்து கொள்ளும் ஒருவன். காலையில் அவன் முதலில் எழுந்தால் பெட் காபி போட்டு மனைவியை எழுப்பும் அளவிற்கு ஈகோ இல்லாத ஒருவன்.