தலைப்புகள் பட்டியல்

ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றும் போது இதை கவனியுங்கள்
ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றும் போது இதை கவனியுங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஆடிப்பெருக்கு என்பது காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயத்தை செழிக்க செய்யும் அற்புதமான நாளாக ஆகும். இந்த ஆடிப்பெருக்கில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆடிப்பெருக்கில் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது சிறப்பான அம்சமாக இருக்கிறது. இத்தகைய சிறப்பான நாளாக இருக்கக்கூடிய இந்த ஆடிப்பெருக்கில் செய்ய மறக்கக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. கண்டிப்பாக அதை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அவை என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம். இந்த வருடத்தின்(2024) ஆடிப்பெருக்கு சனிக்கிழமை வருகிறது. அதாவது ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வருகிறது. அதனால் தவறாமல் ஆடிப்பெருக்கு அன்று இந்த முக்கியமான சில விஷயங்களை செய்துவிடுங்கள். 1. முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது. எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் பொழுது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு முதல் வழிபாட்டை முடித்துவிட்டு அதன் பிறகு பூஜையை துவங்குவது வெற்றியைத் தரும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு பின்பு அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபடுங்கள். 2. ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் எனவே தாலி சரடு அணிந்து இருந்தாலும், கயிறு அணிந்திருந்தாலும் சரட்டில் சிறு மஞ்சள் கயிறாவது இருப்பது நல்லது. 3. அப்படி கயிறு இருக்கும் பட்சத்தில் அதையும் நீங்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்ளலாம். புதிதாக சரடு அணிபவர்களும் இந்நாளில் சரடு மாற்றிக் கொள்ளலாம். 4. காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை நல்ல நேரமாக இருக்கிறது. இந்த நேரத்திற்குள் நீங்கள் தாலி கயிற்றை மாற்றி விட வேண்டும். நல்ல நேரம் பார்க்காமல் கயிறு மாற்றக்கூடாது.

கல்லீரல் பாதிப்பும்... அறிகுறிகளும்... பற்றி தெரிந்து கொள்வோமா
கல்லீரல் பாதிப்பும்... அறிகுறிகளும்... பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கால்களில் வீக்கம்ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.மஞ்சள் காமாலைஎப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம். வயிற்று உப்புசம் மற்றும் வலிகல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.வாந்தி, சோர்வு, காய்ச்சல்கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி.

பண்ணாரி மாரியம்மன் உருவான ஸ்தல வரலாறு
பண்ணாரி மாரியம்மன் உருவான ஸ்தல வரலாறு

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும். அப்பராசக்தியே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களிலும் குடிகொண்டுள்ளாள். அச்சக்தியே கொங்கு நாட்டின் வடமேற்கு எல்லை அருகில் மைசூர் செல்லும் பாதையில் பிரதானமாக வீற்றிருக்கும் பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகளும், காட்டுப்பன்றிகளும், மான்களும், நரிகளும், வண்ண மயில்களும், குரங்குகளும், முயல்களும், கரடிகளும் மற்றும் மிகக் கொடிய விஷ ஜந்துகளும் சர்வ சாதாரணமாக உலாவும். இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளாள்.சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும். இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம் மலையின் அடிவாரம் அன்னை பண்ணாரி அம்மனின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகிற்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இச்சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப் பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள். பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள்.

பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: அம்மன்: வரலாறு

* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள். * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும். * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல. * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது. * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது. * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.

பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: அம்மன்: வரலாறு

* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள். * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும். * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல. * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது. * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது. * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.

ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் இத்தனை பலன்களா
ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் இத்தனை பலன்களா

வகை: அம்மன்: வரலாறு

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இதில் தஷ்ணாயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு உடையவையாக கருதப்படுகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் இருக்கலாம். அன்று சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும், மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நிறைவேறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை வெள்ளியில் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து 10 வயதிற்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், கொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அம்மனை வழிபடும்போது 'லலிதாசகஸ்ர நாமம்' பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்க செய்ய வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு வளையல்சாற்றி அந்த வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, அருகம்புல்லால் பூஜிக்க வேண்டும். கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும். காரியத் தடை விலகும்.

பசியின்மைக்கான அறிகுறிகள், காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
பசியின்மைக்கான அறிகுறிகள், காரணங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:- 1) நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது 2) மனச்சோர்வு ஏற்படும் போது மூளையைத் தூண்டி ஒரு ஹார்மோனை சுரக்கச் செய்யும். இது பசியைக் குறைத்துவிடும். 3)விபத்துகளில் மூளையில் பாதிப்பு, காயம் ஏற்பட்டால், உணவு மேல் நாட்டம் இருக்காது. 4) ஜலதோஷத்தின் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பசிக்காது. 5) ஒற்றைத் தலைவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு காரணமாக சாப்பிட தோன்றாது. 6) கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்தில் மசக்கை வாந்தியினால் உணவைப் பார்த்தாலே ஓடத்தோன்றும். 7) ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பசி குறைவாக இருக்கும். 8) வயிற்றுப் பிரச்சினை, வாந்தி, பேதி, வயிறு உப்புசம் போன்றவை இருந்தால் பசி சரியாக இருக்காது 9) புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி குறையும்.

மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி அளிக்க உதவும் உணவுகள், பழக்கவழக்கங்கள்
மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி அளிக்க உதவும் உணவுகள், பழக்கவழக்கங்கள்

வகை: மனம்

டோபமைன் என்பது மூளையில் உற்பத்தியாகும் ஒரு ரசாயனம். இது நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உடல் இயக்கம், நினைவாற்றல், மகிழ்ச்சிகரமான மனநிலை, ஊக்கம், நடத்தை, அறிவாற்றல், தூக்கம், உற்சாகம் மற்றும் கற்றல் ஆகிய மனநிலைகளுக்கு உதவுகிறது. ஒருவருக்கு டோபமைன் அளவு குறைவாக இருந்தால் அவர் சோர்வாக, ஊக்கமில்லாத மனதுடன், மகிழ்ச்சியற்றவராக, மனம் உறுதியான முடிவெடுக்கும் தன்மை இல்லாதவராக இருப்பார். தூக்கமின்மை பிரச்சனைகளும் இருக்கும்.உடலில் இயற்கையாக டோபமைனை அதிகரிக்கும் உணவு முறைகள்: 1) டோபமைனை உருவாக்க நமது உடலுக்கு டைரோசின் என்கிற அமிலோ அமிலம் தேவைப்படுகிறது. அது பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, தானியங்கள், பால், பீன்ஸ், சோயா போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் காபின் அதிகம் உள்ள காபி மற்றும் சாக்லேட் போன்றவை டோபமைன் சுரப்பை அதிகரிக்கும். பாதாம், வால்நட், ஆப்பிள், வெண்ணெய், அவகோடா, வாழைப்பழம், சாக்லேட், பச்சை இலைக் காய்கறிகள், பச்சை தேயிலை, பீன்ஸ், ஓட்ஸ், ஆரஞ்சு, பட்டாணி, எள் மற்றும் பூசணி விதைகள், தக்காளி, மஞ்சள், தர்பூசணி மற்றும் கோதுமை ஆகியவை டோபமைனை அதிகரிக்கும் உணவுகள் ஆகும். 2) ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக உழைத்து அதில் வெற்றி காணும்போது நமது உடல் அதிக டோபமைனை வெளியிடுகிறது. புதிய விஷயங்களை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும் போதும் டோபமைன் அதிகரிக்கிறது. 3) மிதமான சூரிய ஒளியில் 20 நிமிடம் தினமும் செலவிடும்போது டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது.

ஒரு கப் டீ தலைவலியை குணப்படுத்துமா
ஒரு கப் டீ தலைவலியை குணப்படுத்துமா

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

டீ....உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ.உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக கருதப்படும் டீயில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒன்றாக கருதப்படும் டீயில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் சில வகையான தேநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவிலும் அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள். இதைப்போல தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வருகிறது என சிலர் கூறுவதையும் காணமுடிகிறது. தேநீருக்கும், தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என நிபுணர்கள் கூறியதாவது:- டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம். ஆனால் இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது.தலைவலி பிரச்சனைக்கும், தேநீர் அருந்துவதற்கும் இடையே நேரடி ஆதாரம் இல்லை. ஆனால் நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால், நீரேற்றத்திற்கு தேநீர் உதவும் என்று நினைப்பதில் பயன் உள்ளது.தேநீர் நாசி சைனசை குறைக்கும். மேலும் சைனசிடிசால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதே போல சிலவகையான தேநீரில் காபின் உள்ளது. இது தலைவலிக்கு தீர்வாக அமையும். காபின் ரத்த நாளங்களை சுருக்கி தலைவலி அறிகுறிகளை குறைக்கும். தேநீர் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் நபருக்கு, நபர் மாறுபடும். இஞ்சி டீ ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் சில வகையான தேநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்தியாவிலும் அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள். இதைப்போல தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வருகிறது என சிலர் கூறுவதையும் காணமுடிகிறது. தேநீருக்கும், தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என நிபுணர்கள் கூறியதாவது:- டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம். ஆனால் இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது.தலைவலி பிரச்சனைக்கும், தேநீர் அருந்துவதற்கும் இடையே நேரடி ஆதாரம் இல்லை. ஆனால் நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால், நீரேற்றத்திற்கு தேநீர் உதவும் என்று நினைப்பதில் பயன் உள்ளது.தேநீர் நாசி சைனசை குறைக்கும். மேலும் சைனசிடிசால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

உணவு உண்ட பின் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்
உணவு உண்ட பின் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி. தினமும் 5,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பது மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. இதற்கிடையே சாப்பிட்ட பிறகு உட்காருவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஒவ்வொரு உணவிற்கும் பிறகு நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நோய்களைத் தடுக்க ஒரு நாளைக்கு 100 நடைகள் (steps) நடக்க வேண்டும். சரியாக சாப்பிடுவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

விடாமல் முயலுங்கள், முடியும் என்று முயலுங்கள்.
விடாமல் முயலுங்கள், முடியும் என்று முயலுங்கள்.

வகை: இன்றைய சிந்தனை

விடாமல் முயலுங்கள், முடியும் என்று முயலுங்கள். என்னால் முடியும் என நம்பாமல் நீங்கள் எந்தக் காரியத்திலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை, நாம் தொடங்குகின்ற காரியம் நல்லவிதமாக முடியும் என்கிற நம்பிக்கை, அந்தக் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும். இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம், அசைக்க முடியாத உறுதியான எண்ணத்தைத் தான் நம்பிக்கை என்று சொல்லுகிறோம். நம்பிக்கை தொடர்ந்து செயல்படுகின்ற பொழுது மாற்றங்கள் ஏற்படுகின்றன, ஒரு வருடம் என்பது முன்னூற்றி அறுபத்தைந்து வாய்ப்புகள் கொண்டது, பயன்படுத்துங்கள். தோல்விகள் எவ்வளவு ஏற்பட்டாலும் மனம் உறுதியாக இருந்தால் அவையே வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன. விடாமல் முயலுங்கள், முடியும் என்று முயலுங்கள். உருகினாலும் உறைந்தாலும் தன் தன்மை மாறாதிருக்கும் நீரைப் போல, எச்சூழலிலும் உன் தன்மையை மாற்றிக் கொள்ளாதே,

கவலையை விடுங்கள் வெற்றி நிச்சயம்
கவலையை விடுங்கள் வெற்றி நிச்சயம்

வகை: இன்றைய சிந்தனை

🌿கவலையை விடுங்கள் வெற்றி நிச்சயம்🌿 🌿எதிர்க்க முடியாத சூழலில் எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில் கூட உங்களுக்கு கடும் அவமானம் ஏற்படும்🌿 🌿அப்போது அவமானத்தை நன்கு அனுபவியுங்கள். அவமானப்படுத்துதலை புரிந்து கொண்டு அதற்கு அழாது கண்ணீர் விட்டுக் கதறாது உள்ளே இறுக்கிக் கொள்ளுங்கள்🌿 🌿உங்களை அவமானப்படுத்தியவரை ஒரு போதும் மறக்காதீர்கள்🌿 🌿அவருக்கு எதிரே வெற்றி பெற்று சிரித்து சிலாகித்து நில்லுங்கள். அவர் தானாகக் குன்றிப் போவார்🌿 🌿அதாவது ஏமாற்றங்கள் என்றுமே உன்னை பலவீனப்படுத்துவதற்காக அல்ல🌿 🌿நீ செய்த தவறுகளை சுட்டிக் காட்டி உனக்கான வாழும் வழிமுறைகளை கற்றுத் தந்து உன்னைப் பலப்படுத்தும் ஒரு சிறந்த ஆசான்🌿 🌿இவ்வுலகில் குறைகளே இல்லாத குடும்பத்தில் பிறந்து தவறே செய்யாத மனிதன் இன்னும் இதுவரை பிறக்கவே இல்லை🌿