தலைப்புகள் பட்டியல்

கொஞ்சம் கொஞ்சமா சிரிங்க
கொஞ்சம் கொஞ்சமா சிரிங்க

வகை: நகைச்சுவை

1) ""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.'' ""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.'' 😃😃😃😃😃 2)"உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?'' ""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.'' 😃😃😃😃😃 3) ""காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?'' ""வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!'' 😃😃😃😃😃 4) "ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?'' ""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!'' 😃😃😃😃😃 5) கேள்வி: Love marriage’கும் arranged marriage’கும் என்ன வித்தியாசம்??? பதில்: நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage!, அப்படியில்லாம பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!! 😃😃😃😃😃☺ 6) ஒருவர்: என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..." இன்னொருவர்: யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?" ஒருவர்: நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!" 😃😃😃😃😃😃 7) ஒருவர்: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவிக் கொடுக்குறீங்க? இன்னொருவர்: டாக்டர் தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார். 😃😃😃😃😃

மற்றவரின் சொல்  கேட்டு.
மற்றவரின் சொல் கேட்டு.

வகை: இன்றைய சிந்தனை

வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஏதேதோ அர்த்தம் கற்பித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். நாம் நினைப்பது தான் சரி, நம் எண்ணம் தான் முக்கியம் என்ற இரண்டும் தான் நம்மை விலங்கிட்டு வைத்து இருக்கின்றன. அவற்றை முதலில் களைய வேண்டும்.. நல்லவன், கெட்டவன் என்று யாரைப் பற்றியும் தீர விசாரிக்காமல் நீங்களாகவே தீர்ப்பு எழுதி மற்றவர்களின் வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தக் கூடாது . ஆயிரம் கருத்துக்கள் சொல்லத் தெரிந்து விட்டதாலே எல்லாம் தெரிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடக்கூடாது. ஒருவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு குதிரைப் பந்தயத்தில் பத்து லட்சம் கிடைத்தது. அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்தார். மறுநாள் பணத்தைக் காணவில்லை, காலடித் தடங்களை வைத்து பணத்தைப் பின் வீட்டிலிருந்த அந்த வடநாட்டுப் பேர்வழி தான் எடுத்து இருப்பான் என்று அவர் நினைத்தார். அவனுக்குத் தமிழ் தெரியாது .அவன் பேசியது அவருக்குப் புரியவில்லை. கோபத்தில் துப்பாக்கியை எடுத்து விட்டார். இதைக் கவனித்து விட்டு இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்தார். அவசரப்படாதீர்கள் நான் விசாரிக்கிறேன்" என்றார்.

உழைத்து ஈட்டுகின்ற பணம் தான்
உழைத்து ஈட்டுகின்ற பணம் தான்

வகை: இன்றைய சிந்தனை

திருட்டுத்தனமாகப் பணத்தை ஈட்டுபவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது; அந்தப் பணத்தைப் பலர் அறிய நிம்மதியாக அனுபவிக்கவும் முடியாது. பணத்தை அனுபவிக்காமல், பிறருக்குக் கொடுக்காமலும் இருப்பவனுடைய செல்வம், வீதியில் செல்பவர்களுக்குத் தான் சொத்தாகப் போய்ச் சேரும்’ என்பது பழமொழி. நியாயமான வழிகளில் பணத்தைச் சேமிப்பவர்களே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உழைத்து ஈட்டுகின்ற பணம் தான் திருப்தியையும் பெருமையையும் தரும். அதில் நாம் வாங்குகிற பொருள்கள் ஒவ்வொன்றும் நம் வியர்வையின் நினைவுச் சின்னங்களாக நீடிக்கும். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. "காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?' "இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர். நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார். இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.

முன்னேற்றம் பெறுவதற்கு அவசியம் குறிக்கோள் தேவை
முன்னேற்றம் பெறுவதற்கு அவசியம் குறிக்கோள் தேவை

வகை: தன்னம்பிக்கை

வ்வொருவரும் அவரவர் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு குறிக்கோளுடன் வாழ் கிறார்கள். அதை அவர்கள் சரியாக நிறைவேற்றும்போது அவர்கள் வாழ்க்கை நிறைவடைகிறது. சமுதாயமும் அவர்களால் பயன்பெறுகிறது. நாமும் நம்முடைய வாழ்க்கை என்ற புத்தகத்தை நமக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அதில் உள்ள உண்மையான கருத்தை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். அதை உருவாக்க ஒரு குறிக்கோளை அமைத்துக் கொள்ள வேண்டும். சரியான குறிக்கோளும் அமைப்பும் இல்லாத இயற்கை சக்திகள் கூட மனிதனுக்கு பயன்படாமல் போய் விடுகின்றன .அதனால்தான் மனிதன் இயற்கை தரும் ஆற்றல்களை கூட ஒரு குறிக்கோளுடன் ஒரு அமைப்புக்குள் கட்டுப்படுத்தி வைத்து பயன்படுத்துகிறான். மழை வெள்ளமாக பெருகி, தனக்கென பாதை அமைத்துக் கொண்டு பள்ளம் நோக்கி பாய்கிறது. அதையே நாம் நதி என்கிறோம். இதை இயற்கையின் போக்கிலேயே மனிதன் விட்டு விட்டால் மழை பெய்து முடிந்த பத்து நாட்களுக்குள் கடலுக்குள் சென்று வீணாகி கலந்து விடுகிறது. பிறகு விவசாயம் செய்வது எப்படி? அதனால்தான் மன்னர்கள் காலத்திலேயே மலைப் பிரதேசங்களில் மழை அதிகமாக பொழியும் இடங்களில் காட்டாறாக பெருகிவரும் நீரை அணைக் கட்டி தடுத்து தேக்கி வைத்தார்கள். பிறகு விவசாயம் செய்ய வேண்டிய பருவ காலம் வரும்போது அணையிலிருந்து நீரை திறந்து விட்டு ஆற்றுப் பாசனம் மூலம் நீரை விவசாய நிலங்களுக்கு அனுப்பினார்கள். விவசாயி ஆற்று நீரை வாய்க்கால்கள் மூலம் தன் வயலுக்கு நீர் பாய்ச்சி, பயிர் விளைவித்து, தனக்கும் நாட்டுக்கும் பயன்படுமாறு செய்தான். ஆக இயற்கை பொழியும் மழை நீரைக் கூட, ஒரு குறிக்கோளோடு, ஒரு நோக்கத்தோடு, தேக்கி வைத்து பயன்படுத்தினால்தான் உலகம் பயன்பட முடியும். ஏரி குளங்கள் நிரம்பி ஊரும் உலகம் பெற முடியும்.

என்ன கற்றுக் கொண்டோம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்
என்ன கற்றுக் கொண்டோம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்

வகை: ஒரு குட்டிக்கதை

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். ரயில் வருகிற நேரம்... ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். பின் பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன். காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

உதவி செய்ய வேண்டும் என்று மனதார நினைப்பதே மிகப் பெரிய உதவி தான்
உதவி செய்ய வேண்டும் என்று மனதார நினைப்பதே மிகப் பெரிய உதவி தான்

வகை: மனம்

உதவி செய்ய வேண்டும் என்று மனதார நினைப்பதே மிகப் பெரிய உதவிதான். நான் மிதி வண்டியில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில், தெருவோரம் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரை தினமும் பார்ப்பேன். ஒரு காபியோ, சிற்றுண்டியோ என்னால் முடிந்த அளவு வாய்ப்பு கிட்டும் பொழுதெல்லாம் உதவி செய்வேன். ஒரு சமயம் அவர் அணிந்திருந்த ஆடை கிழிந்து போயிருந்ததை பார்க்க நேர்ந்தது. இரண்டு மூன்று நாட்களாகவே அந்த மனிதர் கிழிந்த துணிகளோடுதான் அலைந்து கொண்டிருந்தார். அவருக்கு புதுத் துணி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், ஆடை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு என்னிடமோ பணமில்லை. தினக் கூலி எனக்கு. சம்பளப் பணத்தை செலவு செய்தால் வீட்டில் ரணகளமாகி விடும். சரி முதலாளியிடம் கடனாகக் கேட்டுப் பார்க்கலாம் என்று முடிவு செய்து கொண்டு வேலைக்குப் போனேன். அன்றைய தினம் பார்த்து முதலாளி வரவேயில்லை. அன்றைக்கு முழுவதும் இதே சிந்தனைதான். கவலையோடு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் பொழுதுதான் பார்த்தேன், அந்த மனிதர் புதுத் துணிமணிகள் அணிந்திருந்தார். யாரோ புண்ணியவான் வாங்கிக் கொடுத்திருந்தார். இதுதான் நல்ல எண்ணங்களின் வலிமை.

அப்பா - மகள் ஒரு அழகான கவிதை
அப்பா - மகள் ஒரு அழகான கவிதை

வகை: அப்பா

அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு. மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு. மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவின் கழுத்தில் தொங்கி விளையாடும் மகள்கள் ஒருவித அழகு. மகளின் கால்களில் கொஞ்சி விளையாடும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பா சொல்லும் அத்தனை உண்மைகளையும் ஆர்வமாய் கேட்கின்ற மகள்கள் ஒருவித அழகு. மகள் சொல்லும் அத்தனை பொய்களையும் சிரிக்காமல் ரசிக்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவைத் தேடவைத்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும் மகள்கள் ஒருவித அழகு. மகளைக் கண்டபிறகும் மரத்தையே கண்டுபிடிக்க முடியாதவர்களாய் தேடும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவை ஹீரோவாக பார்க்கும் மகள்கள் ஒருவித அழகு.

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்… தெரிந்து கொள்வோமா
நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்… தெரிந்து கொள்வோமா

வகை: நகைச்சுவை

1. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட. 2. சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. 3. சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும். 4. கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு. 5. உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…! 6. இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி. 7. என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது. 8. எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும். 9. பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது. 10. கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை. 11. ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே. 12. உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது. 13. போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே. 14. எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால். 15. நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்! 16. நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன். 17. வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு. 18. நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது. 19. உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.

திருவண்ணாமலை பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி சிறப்பு
திருவண்ணாமலை பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி சிறப்பு

வகை: திருவண்ணாமலை சிறப்புகள்

திருவண்ணாமலையில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்து இருக்கிறது பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி. இதன் சிறப்பு, ஞானத்தேடலுடன் வந்த ஸ்ரீரமண மகரிஷி, மற்றவர்கள் தியான நிலையில் அமரும் போது தன்னை துன்புறுத்துவதை தவிர்க்க, இந்த பாதாள சந்நிதியில் அடைக்கலம் அடைந்து தன்னை மறந்து தவம் இயற்றினார். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. கார்த்திகை மாதம் தீபத்திருவிழா நடப்பதும் இதன் தெய்வீக மேன்மையை வெளிப்படுத்தவே.

திறமைக்கு தனி மதிப்பு உண்டு! வெளிப்படுத்தினால் தானே தெரியும்
திறமைக்கு தனி மதிப்பு உண்டு! வெளிப்படுத்தினால் தானே தெரியும்

வகை: தன்னம்பிக்கை

குஜராத் கடற்கரை பகுதி. ஒரு கப்பல் பழுது அடைந்து நின்று விட்டது. அது ஒரு அயல் நாட்டு கப்பல். அந்த கப்பலில் பயணம் செய்த ஊழியர்களால், கப்பலை சரி செய்து மேலும் செலுத்த முடியவில்லை. அந்த சரக்கு கப்பலில், பல முக்கிய பொருட்கள் இருந்தன, டெலிவர் செய்ய. நாட்கள் நகர நகர கப்பல் நிறுவனத்திற்கு பல லட்சங்கள் இழப்பு. வியாபார ரீதியாகவும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த நிலையில் ஒரு குஜராத்தி தொழிலதிபரை அணுகினார். அவர் விவரம் கேட்டு அறிந்தார். தன்னிடம் வேலை செய்தவர்களில் திறமைசாலி மற்றும் அனுபவம் மிக்க நம்பிக்கையான தொழிலாளியை அனுப்பி வைத்தார். சென்ற அந்த நபர் இன்ஜின் ரூமிற்கு சென்றார். செக் செய்தார். குஜராத்தி மொழியில், அடுத்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு யாரும் அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டார். சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து சரியாகி விட்டது என்றார் அவர் மொழியில். அதை மொழி பெயர்த்து கேப்டனிடம் கூற, அவரும் கப்பலை செலுத்தி பார்த்து மகிழ்ந்தார். நேர்த்தியான, திறமை மிக்க வேலை செய்யப்பட்டது குறித்து பாராட்டினார். இந்த குறிப்பிட்ட தொழிலாளி சென்று அவருடைய முதலாளியிடம் கூறிவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.

மனநிறைவு நீங்கள் மன நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறீர்களா
மனநிறைவு நீங்கள் மன நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறீர்களா

வகை: வாழ்க்கை பயணம்

நீங்கள் மன நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறீர்களா...?' இந்தக் கேள்வியை நீங்கள் எவரிடம் கேட்டாலும் அவர்கள் இல்லை என்று தான் பலரும் பதில் கூறுவார்கள்... பணக்காரர்களும், புகழுடன் வாழ்பவர்களும் கூட மன நிறைவின்றியே வாழ்கின்றனர் என்பதே மெய்... மன நிறைவு ஏன் யாருக்கும் வருவதில்லை...? எல்லோரும், பணமும், புகழும் மன நிறைவைத் தரும் என்று நம்பி அவைகளைத் துரத்துகின்றனர்... அவை கிடைத்த பின் அவர்கள் மனம் அதிக பணத்திற்கும் , அதிக புகழுக்கும் ஆசைப்படுகிறது. .. பணம் படைத்தவர்கள் பணத்தை பாதுகாப்பதற்காகவும், தக்கவைத்துக் கொள்வதற்காகவும்தான் அல்லல் படுகின்றனர்.. அன்பான குடும்பம், ஆரோக்கியமான உடல், நெருங்கிய நண்பர்கள், உளமார்ந்து நேசிக்கும் உறவினர்கள், என இவையாவும் உங்களுக்கு மன நிறைவைத் தரலாம்... உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொடுக்கும் பணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம்... ஆனால், இந்த மகிழ்ச்சி உண்மையும் அல்ல. நிரந்தரமும் அல்ல... சரி!, எது மன நிறைவான வாழ்க்கையை தரும்...? எந்தச் செயல் உங்களுக்கு ஆழ்ந்த, அமைதியான உறக்கத்தையையும், ஆரோக்கியமான உடம்பினேயும் தருகிறதோ அதுவே நிறைவான வாழ்வு... உங்களிடம் எந்த பண்பு மற்றவர்களை மகிழ்வுறச் செய்கிறதோ அதுவே உங்களுக்கு நிறைவான வாழ்வு... நிறைவு ஏன்பது ஒரு மன நிலை. ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும், அறுதி இட்டுக் கூற இயலாது... அவரவர்களே அவர்களுக்கு நிறைவை எந்தப் பண்பு கொடுக்கிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். இருப்பதைவிட்டு இல்லாததை தேடும் வாழ்க்கையாக நீங்கள் இருக்கக் கூடாது, உங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும்...

காசிக்கு சென்றுதான் செய்த பாவத்தை நீக்க வேண்டுமா (சற்குரு சுவாமிகள் சொன்ன நீதிக்கதை)
காசிக்கு சென்றுதான் செய்த பாவத்தை நீக்க வேண்டுமா (சற்குரு சுவாமிகள் சொன்ன நீதிக்கதை)

வகை: நீதிக் கதைகள்

ஒருவன் தன் அம்மாவை எட்டி உதைத்து அடித்து விட்டான். அவனது குருநாதர் பெற்ற தாயை அடிக்க கூடாது , நீ அடித்துவிட்டாய் அது பெரிய பாவம், அந்த பாவம் போக காசிக்குசென்று ஒன்பது முழுக்கு முழுக்கு போட்டால் தான் பாவம் போகும் என்றார். காசிக்கு போக காசு இல்லையே என்று அவன் கூற, குரு பிச்சை எடுத்தாவது போ என்றார். ஒரு நாள் சாப்பாடு ஏதும் கிடைக்கவில்லை .பசி மிகுதியால் ஒரு வீட்டில் களைப்பாறுகையில் அந்த வீட்டின் மாடத்தில் கொட்டை பாக்கு இருந்தது அதை எடுத்து வாயில் போட்டு மென்றான். கொட்டை பாக்கு மெல்லும் சத்தத்தை கேட்டு அவ் வீட்டு பெண்மணி நான் தீட்டு ஆன நேரத்தில் வீட்டிற்குள் பாக்கை எடுத்து செல்ல கூடாது என்று மாடத்தில் வைத்து விட்டு சென்றேன் அதைபோய் சாப்பிடீர்களே என்றாள். அதை கேட்டு அவன் தலையில் அடித்து கொண்டு ஒரு பாவத்தை போக்க காசிக்கு செல்கையில் இன்னொரு பாவம் வந்து ஒட்டி கொண்டதே என்று கவலைப்பட்டான். இனி எங்கு சென்றாலும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்தான் . மீண்டும் காசிநோக்கி பயணத்தை தொடர்ந்தான். அன்று இரவு ஒரு வீட்டிற்கு சென்று தங்கினான். அவ்வீட்டு பெண்மணி என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க, பசியின் கொடுமையினால் அவன் தனது முடிவை மாற்றிக்கொண்டு எந்த பாலாகஇருந்தாலும்(பசும்பால், எருமைப்பால்) பரவாயில்லை, கொஞ்சம் பால் மட்டும் கொடுங்கள் என்று கேட்டான் . அவளும் பக்கத்துக்கு வீட்டில் கிண்ணம் கடன் வாங்கி கிண்ணத்தில் பாலை ஊற்றி அவனுக்கு கொடுத்தாள். அவனும் குடித்து இன்று எந்த பாவமும் செய்யவில்லை என்று நினைத்து நிம்மதியாக தூங்கினான். மறுநாள் அதிகாலை பக்கத்துக்கு வீட்டுக்காரன் எனது சவரக்கின்னத்தை கொடுங்கள், நான் பக்கத்துக்கு ஊருக்கு சவரம் செய்ய செல்ல வேண்டும் என்று கேட்டான். நான் பால் குடித்த கிண்ணம் சவரக்கின்னம் என்றால் ,நான் குடித்த பால் என்ன பால் என்று கேட்க ? நீங்கள் இருக்கும் வீடு வண்ணான் வீடு, அந்த வீட்டு கழுதை கன்று ஈர்ந்து உள்ளது, தாங்கள் குடித்த பால் கழுதைப்பால், அவர்கள் வீட்டில் பாத்திரம் இல்லாததால் என்னிடம் வந்து கிண்ணத்தை கேட்க நான் சவரம் செய்யும் கிண்ணத்தை கொடுத்தேன் என்று நாவிதன் கூறினான். இதை கேட்டவுடன் தலையில் அடித்துக்கொண்டு ஒரு பாவத்தை போக்கலாம் என்று காசிநோக்கி வந்தால் வரிசையாக பாவங்கள் வருகிறதே என்று காசி நோக்கி அழுது கொண்டே சென்றான் . காசி செல்லும் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு நாவிதனின் தந்தை இறந்து போனார். அந்த நாவிதன்அங்குள்ள பிராமணர்களிடம், நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, எனது தந்தை உயிரோடு வரவேண்டும் என்றான். அங்குள்ள பிராமணர்களும் நாவிதனின் அறியாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்க்காக சவத்தை கொளுத்தி சாம்பலை வைத்து யாகம் செய்தார்கள். பின்னர் இந்த சாம்பலை ஒரு பெரிய பானையில் போட்டு அவன் தலை மேல் வைத்து காசிக்கு சென்று அங்குள்ள ஆற்றில் தொபுகடீர் என்று போட்டு உடைக்க உன் தந்தை உயிரோடு வருவார் என்றனர். நாவிதனும் தலையில் பானையை வைத்துகொண்டு காசிக்கு வந்தான். அம்மாவை எட்டி உதைத்தவன் ஆற்றில் மூக்கை பிடித்து மூழ்கி கொண்டு இருந்தான் . அப்போது நாவிதன் அவன் தலையில் இருந்த பானையை ஆற்றில் போட்டான்.