வகை: காய்கறிகள் - பலன்கள்
கேரட் போன்ற சில காய்கறிகள் பச்சையாக சாப்பிட ஏற்றவை. ஆனால், எல்லாக் காய்கறிகளையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது. அவை ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தும். எந்தக் காய்கறிகளை பச்சையாக சாப்பிடக் கூடாது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒருபோதும் பச்சையாக சாப்பிடக் கூடாது. அதில் செலனைன் என்கிற ஒரு நச்சுப் பொருள் உள்ளது. அதை பச்சையாக சாப்பிடும்போது வாந்தி, மயக்கம் தலைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் வரும். இதை சமைத்து உண்ணும்போது செலனைன் நச்சு மறைந்து சாப்பிட ஏற்றதாக மென்மையாக மாறுகிறது. சேனைக்கிழங்கு: உருளைக்கிழங்கைப் போலவே சேனைக்கிழங்கிலும் செலனைன் உள்ளது. பச்சையாக சாப்பிடும்போது வாய் முழுவதும் அரிப்பும் செரிமான கோளாறும் ஏற்படும். கிட்னி பீன்ஸ்: ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸை பச்சையாக சாப்பிடக்கூடாது. வாந்தி, மயக்கம் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். முறையாக சமைத்து சாப்பிட்டால் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியம் தரும். புரோக்கோலி: புரோக்கோலியை சமைக்காமல் சாப்பிடும்போது தைராய்டு சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் வரும். எனவே சமைத்து உண்டால் மட்டுமே ஆரோக்கியம். முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸ் இலைகளை லேசாக வறுத்து சாலட் மற்றும் சாண்ட்விச்களில் பயன்படுத்தலாம். ஆனால் இதை பச்சையாக உண்ணக்கூடாது. ஏனெனில் இது மிகவும் கெடுதல் செய்யும் பாக்டீரியாவான ஈ கோலி போன்றவற்றை உருவாக்கும். இதை சமைத்து உண்ணும்போது ஈ கோலி போன்ற பாக்டீரியா தாக்க வாய்ப்பு இல்லை. பசலைக்கீரை: இதுவும் முட்டைக்கோஸ் போன்றே நிறைய சத்துக்கள் நிறைந்திருந்தாலும், பச்சையாக உண்டால் பாக்டீரியாவை உற்பத்தி செய்து வயிற்று வலி, செரிமானக் கோளாறு போன்றவற்றை உருவாக்கும். எனவே. சமைத்து உண்ணும்போது இவை அழிந்துவிடும். குடைமிளகாய்: இவற்றின் விதைகளில் நாடாப்புழுக்களின் முட்டைகள் இருக்கலாம். எனவே இவற்றை சமைத்து சாப்பிட வேண்டும். கத்தரிக்காய்: கத்தரிக்காயில் உள்ள சில சேர்மங்கள் பச்சையாக சாப்பிடும்போது கசப்பான உணர்வை தோற்றுவிக்கும். மேலும், இது செரிமான பிரச்னையையும் நரம்பு சார்ந்த சிக்கல்களையும் கொண்டு வரும். எனவே, இவற்றின் முறையாக சமைத்து சாப்பிடுவதே நல்லது. பாதி வேக்காட்டில் எடுக்கக் கூடாது. முழுமையாக சமைத்து உண்பதே நல்லது.
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
ரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்க வேண்டும் என்பது நியதி. எப்படி தெரியுமா? சிவபெருமான் மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்க வேண்டும்? எத்தனை முறை சாப்பிட வேண்டும்? என்கிற கோட்பாட்டை சொல்லி வர சொல்லி நந்தி பகவானிடம் தூது அனுப்பினார். ஆனால் நந்தி பகவான் செய்தது என்ன தெரியுமா? அது என்ன? என்பதையும், மாலையில் குளித்து, துணி துவைப்பதனால் ஏதாவது தரித்திரம் ஏற்படுமா? இல்லையா? என்பதையும் சாஸ்திர ரீதியாக விடைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நந்தி பகவானுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம் தான். சிவபெருமான் என்ன கூறினார் என்பதை பூலோகத்திற்கு வரும் முன்பே அவருக்கு பாதி மறந்தாயிற்று! சிவபெருமான் மூன்று முறை ஒரு நாளைக்கு குளிக்க வேண்டும்! என்றும், ஒரு முறை சாப்பிட வேண்டும்! என்றும் கூறி அனுப்பினார். ஆனால் நந்தி பகவானோ ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட வேண்டும், ஒரு முறை குளிக்க வேண்டும் என்று அப்படியே தலைகீழாக மாற்றி தவறுதலாக கூறி விட்டு வந்து விட்டார். அன்றிலிருந்து இன்று வரை பூலோகத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் இதை தவறாமல் பின்பற்றி வருகிறோம். ஆனால் இதற்காக நந்தி பகவானுக்கு கிடைத்த தண்டனை தான் மிகவும் பரிதாபமானது. நான் சொன்னதை மாற்றிக் கூறி காலச்சக்கரத்தையே மாற்றிவிட்ட நீ! அதே மனிதர்களுக்கு உழைத்து கொட்டி கஷ்டப்படு என்று சாபம் அளித்து விட்டார். அதன் காரணமாக தான் நந்தி பகவான் ரூபத்தில் இருக்கும் காளை மாடுகள் மனிதர்களுக்கு வண்டி இழுந்து கொடுத்து கஷ்டப்பட்டு உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு புராணக்கதை இருக்க காலையில் குளிப்பது சரியா? மாலையில் குளிப்பது தவறா? என்று கேள்விகளும் உலவிக் கொண்டிருக்கின்றன.
வகை: இன்றைய சிந்தனை
மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாகத் தூங்கச் செல்லுகிறோம். வீட்டிற்கு நிச்சயமாய்த் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம். ஆக, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது.. அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார். பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்குத் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது. அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அதன்படி கொலம்பஸைக் கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள். ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா ?என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார். உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள். அச்சமயத்தில் கொலம்பஸ் மகிழ்ச்சியில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும், சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டு இருந்தன. அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது.
வகை: பழங்கள் - பலன்கள்
நீலகிரியில் விளையும் பிளம்ஸ் பழங்கள் இயற்கையாகவே அதிகச் சுவை கொண்டதாக இருப்பதால் மக்கள் அதை அதிகம் விரும்பி உண்கின்றனர். பழங்கள் பெரும்பாலும் உடலுக்கு நன்மை அளிப்பதாக இருந்தாலும் சீசனுக்கு மட்டும் கிடைக்கும் பழங்கள் அந்த பருவத்திற்கு ஏற்ற மிகவும் சிறந்த பழங்களாகத் திகழ்கின்றன. கோடைக்காலத்தில் நுங்கு, பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றை அதிகம் காண முடிவது போல பிளம்ஸ் பழங்களையும் கோடைக்கால சீசனில் தான் அதிகம் காண முடியும். சிவப்பு நிறத்தில் சிறிய ஆப்பிள் போன்று தோற்றமளிக்கும் பிளம்ஸ் பல மகத்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டதெனக் கூறப்படுகிறது. இனிப்பு, புளிப்புடன் லேசாக கசப்பு சுவையும் கொண்ட இந்த பழத்தில் விட்டமின் பி1, விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் பி 2, பி 3, பி 6, விட்டமின் E போன்ற பல சத்துக்கள் உள்ளது. பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் உடல் எடையை சீரமைக்க முடியும். இந்த பழம் கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது. மேலும் இந்த பழத்தில் விட்டமின் சி இருப்பதால் முகப்பொலிவை மேம்படுத்த உதவுகிறது. பிளம்ஸ் மரம் வளர்வதற்குக் குளிர்ச்சியான காலநிலை தேவைப்படுகிறது. நீலகிரியில் கோடைக்காலங்களில் மழைப்பொழிவு மற்றும் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் பிளம்ஸ் பழம் இயற்கையாகவே வளர்கிறது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் ஆங்காங்கே இந்த பிளம்ஸ் பழ மரங்களைக் காண முடிகிறது.
வகை: பிரபஞ்சம்
வீட்ல உள்ள பெரியவங்க கால்ல விழுந்து நீங்க ஆசீர்வாதம் வாங்கறது உண்டா..? சில வீடுகள்ல பொறந்த நாள், கல்யாண நாள், வெளியூர் வெளிநாடு போறப்ப, தீபாவளி அன்னிக்கு புது புடவை கட்டினப்ப இது மாதிரி சந்தர்ப்பங்கள்ல பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறது உண்டு. பெரியவங்க - வயசானவங்க - கால்ல விழுந்து ஆசி பெற்றால் நம்ம சக்தி அதிகப்படும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது. அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல.. ஆசிர்வாதம் செய்வதும் கூட உங்களுக்கு சக்தியை கொடுக்கும்.. நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விஷயம் இருக்கிறது.
வகை: பெருமாள்
ஆன்மா லயப்படும் இடமே ஆலயம். கோவில்களில் அதுவும் பழமையான கோவில்களில் ரசவாதம் போல் சில அறிவியல்களும். அதற்கு புலப்படாத பல அதிசய., அமானுஷ்யங்களும் உண்டு. கோவிலில் உள்ள இறைவனின் தெய்வீக அதிர்வலைகளை முழுமையாக வாங்கி அதை நமக்கு கொடுப்பதே கோவில்களில் உள்ள கொடிமரம். அதனால் தான் கொடிமரத்தின் முன் நாம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்காரம் செய்கிறோம். மேலும் நமஸ்காரம் செய்த பின். கொடிமரத்தின் முன் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்யும் பொழுது. வீட்டினில் நாம் தியானம் செய்யும் பொழுது நமக்கு அடங்காத மனம் கோவில்களில். அதுவும் புராதன கோவில்களில் அடங்கும். நீங்கள் உங்களது நியாயமான ஆசையை ஆழ்மனதில் நினைத்தவாறே கோவில் கொடி மரத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தல் இருக்கிறதே. அதை விட சிறந்த பரிகாரம் வேறு எதுவும் இல்லை. செலவே இல்லா பரிகாரம். அவ்வாறு தொடர்ந்து நீங்கள் கோவில் கொடி மரத்தின் முன் அமர்ந்து உங்களது ஆழ் மனதில் உள்ள ஆசையை நினைத்தவாறே , அந்த கோவிலில் இருக்கும் மூல மூர்த்தியை பிராத்தித்தவாறே தியானம் செய்து பாருங்கள். நிச்சயம் உங்களின் நியாயமான ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும். இவ்வாறு கொடிமரத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தல். சிவன் கோவில்களிலும் செய்யலாம். விஷ்ணு கோவில்களிலும் செய்யலாம். சிவன் கோவில்களில் உட்கார்ந்து வர வேண்டும். ஆனால் விஷ்ணு கோவில்களில் உட்கார கூடாது என்று யார்? சொன்னது.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும். நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள். ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள். பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம். வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.
வகை: கணவன் மனைவி உறவு
கணவன் - மனைவி உறவு என்பது இந்த உலகத்திலேயே ரொம்ப அற்புதமான, உன்னதமான ஒரு உறவு! அதில் நீயா - நானா என்ற போட்டி இருக்கக் கூடாது. நீயும் நானும் என்று இருக்க வேண்டும்.. குடும்பத்தில் சண்டை வந்தாலும் உங்களால் சமாதானமாக இருக்க முடியும். குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீசுமா, புயல் அடிக்குமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். எப்படி? இரண்டு பேரும் ஏட்டிக்குப்-போட்டி பேசிக்கொண்டே இருந்தால்தான் சண்டை வரும்; யாராவது ஒருவர் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். கோபத்தில் கத்தினால், யாருமே உங்களை மதிக்க மாட்டார்கள். அதனால், உங்கள் கோபத்தை கிளறினாலும் பதிலுக்கு பதில் பேசாதீர்கள். யார் பேசி ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, சண்டை இல்லாமல் சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம். ஒருவர் பேசும்போது குறுக்க குறுக்க பேசாதீர்கள்; பொறுமையாக கேளுங்கள். அப்படி செய்தால் சண்டையை மறந்து சீக்கிரமாக சமாதானம் ஆகிவிடலாம். எதையோ மனதில் வைத்துதான் இப்படி பேசுகிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். உண்மையிலேயே அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “ கோபம் வந்தால் அமைதியாக அந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள்.
வகை: பெண்கள்
பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன்……. பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள். ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்…. உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்…. ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள். நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.
வகை: அம்மா
மனிதனின் உடலில் பஞ்சபூதம் இயங்கும் ஆனால் ஒரு தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நான்கு பூதம் தான் வேலை செய்யும் தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த பின்பு தான் 5வது பூதம் தன் வேலையை செய்யும். இதைத் தான் ஜோதிடத்தில் குழந்தை பிறந்த நேரம் லக்கனம் எடுத்துக் கொண்டும் அன்றயை சோச்சாரப்படியும் ஜாதகம் கணிப்பார்கள்.குழந்தை பிறந்த பின்புதான் நவகிரகங்கள் வேலை செய்யும், என்றால் இந்த கிரகங்கள் தாயின் கருவறையில் இருந்தே வேலை செய்யும். இதைத்தான் கர்பகாலம் சென்ற இருப்பு என ஜாதகத்தில் எழுதுவார்கள்.நவகிரகங்கள் கர்ப்பகாலத்தில் எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம். கர்ப்பம் 1. முதல் மாதம் சுக்கிரனின் ஆளுகை விந்து இன்னும் திரவ நிலையிலேயே இருக்கும். 2. இரண்டாம் மாதம் அதிபர் செவ்வாய் உருவம் பெற ஆரம்பிக்கிறது. 3. மூன்றாம் மாதத்திற்கு குரு அதிபதி ஆகிறார். அங்கங்கள் உருவாகின்றன. 4. நான்காம் மாதம் சூரியன் எலும்புகள் உருவாகின்றன. 5. ஐந்தாம் மாதம் சந்திரன் தோல் தோன்றுகிறது. 6. ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன. 7. ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன.
வகை: தன்னம்பிக்கை
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்கிறார் திருவள்ளுவர். ஒரு மனிதன் பிறரிடம் இருந்து ஒரு உதவியைப் பெற்றால் அதை தக்க தருணம் பார்த்து அவர்களே கேட்காத பொழுது நாமே நேரிடையாகச் சென்று உதவி, அவர்களின் துன்பங்களை போக்குவதுதான் சிறந்த அறம். ஒரு மாணவன் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் ஏழ்மையான நிலைதான் அப்பொழுது. இருந்தாலும் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டான். பாடங்களில் எந்தவித குழப்பமும் இல்லை. பரீட்சைக்கு பணம் கட்ட வேண்டும். ஆனால் வசதி இல்லை. என்ன செய்வது என்று யோசித்த பொழுது தான் படித்த புத்தகங்கள் அனைத்தையும் விற்று அதில் வரும் தொகையை கட்டுவதற்கு முடிவு செய்தான். ஆதலால் அந்த புத்தகங்களை எல்லாம் விற்றுவிட்டு ஒத்தையடி பாதை வழியாக வந்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் தாகம் அவனை வாட்டியது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தான். அங்கு ஒரு ஒத்தை வீடு தெரிந்தது. அந்த வீட்டை நெருங்கி அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். ஆனால் அவர்களோ இரண்டு குவளை நிறைய நன்றாக கடைந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார்கள். நீர் கேட்டவனுக்கு மோர் கொடுத்தால் எப்படி இருக்கும். அந்த தாகத்தில் அது அவனுக்கு அமிர்தம்போல் இருந்தது. அவன் மிகவும் மகிழ்ந்து அந்த மோரைப் பருகிவிட்டு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து ஊர் வந்து சேர்ந்தான். பிறகு சில வருடங்கள் கழித்து மருத்துவராகப் பணி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு முதியவர் வந்திருந்தார். அவரைப் பார்த்து மருத்துவமெல்லாம் செய்து, அவ்வப்பொழுது தன் தந்தையை கவனிப்பதுபோல் கவனித்துக் கொண்டார். பிறகு உடல் நலம் தேறி அந்த முதியவர் ஊர் திரும்பும் பொழுது, எவ்வளவு பணம் கட்ட வேண்டும். பில் கொடுங்கள். நான் கட்டுகிறேன் என்று கூறினார். அதற்கு அந்த மருத்துவர் நீங்கள் பணம் எதுவும் கட்ட வேண்டாம். உங்கள் மருத்துவ செலவுகளை நானே கவனித்துக் கொள்கிறேன் என்று அன்புடன் கூறினார். அந்த முதியவருக்கு சந்தேகம் மேலிட எதற்கு டாக்டர் என்னுடைய செலவை நீங்கள் கட்ட வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த மருத்துவர் நான் மிகவும் தாகத்தில் தவித்த பொழுது, எனக்கு மோர் கொடுத்து என் தாகத்தை தீர்த்தீர்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஆதலால் அந்த நன்றிக் கடனை அடைக்க எனக்கு இது ஒரு வாய்ப்பு. ஆதலால் நீங்கள் வீட்டுக்கு கிளம்புகள் என்று கூறினார். அந்த மருத்துவரின் நன்றி மறவாத தன்மையை நினைத்து முதியவரும் கையெடுத்து வணங்கி அவருக்கு நன்றியையும் தன் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு விடை பெற்றார். இன்றும் கிராமத்தில் இருக்கும் பழக்கம் இதுதான். வீட்டிற்கு தெரிந்தவர் தெரியாதவர் என்று யாராவது வந்துவிட்டால் முதலில் அவர்கள் கொண்டு வந்து கொடுப்பது மோரைத்தான்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
குறிப்பு 1 கோவில் பிரகாரத்திற்கு நான்கு வழிகள் இருந்தாலும், பிரதான வழி எதுவோ அதன் வழியாக உள்ளே நுழைந்து தான் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். பின் வாசல் வழியாக சென்றால் தூரம் குறைவு என்பதற்காக, குறுக்குப் பாதையில் இறைவனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் நுழையக் கூடாது. குறிப்பு 2 முடிந்தவரை கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து விட்டு, கோவிலுக்குள் செல்லுங்கள். ஒரு மனநிறைவு கிடைக்கும். அந்த மன நிறைவே உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றியும் வைக்கும். குறிப்பு 3 தினமும் குலதெய்வ நாமத்தைச் சொல்லி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுடைய குடும்பத்திற்கு, வரப்போகும் கஷ்டத்தை, முன்கூட்டியே குலதெய்வம் கனவின் மூலமாக வலியுறுத்தும். முன்கூட்டியே உனக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை கனவில் வந்து குலதெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் சொல்லும். பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இதுவும் ஒரு வழி. குலதெய்வம் மட்டும்தான் இதை செய்ய முடியும். குறிப்பு 4 ஏதாவது முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசும் போது இன்டர்வியூக்கு செல்லும் போது வாயில் ஒரு ஏலக்காயை போட்டு செல்லுங்கள். உங்கள் வார்த்தைகள் பலிதமாகும். பேச்சில் தெளிவு பிறக்கும். குறிப்பு 5 குலதெய்வத்திற்கு மாங்கல்யம் வாங்கி சாத்துவதாக பிரார்த்தனை வைத்துக் கொண்டால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். சுபகாரிய தடை விளக்கும். குறிப்பு 6 ஒரு வீட்டு பூஜை அறையில் எப்போதுமே ஏதாவது ஒரு கோயிலின் தீர்த்தம் இருக்க வேண்டும். கங்கா தீர்த்தமாக இருக்கலாம், ராமேஸ்வர தீர்த்தமாக இருக்கலாம், திருச்செந்தூர் கடலின் தீர்த்தமாக இருக்கலாம். இப்படி எந்த தீர்த்தமோ ஒரு தீர்த்தம் வீட்டில் இருந்தால் அது நல்லது. ஏதாவது தீட்டு வீட்டிற்கு சென்று வந்த பிறகு இந்த தீர்த்தத்தை கொஞ்சம் தண்ணீரில் கலந்து உங்கள் தலையிலும் தெளித்துக் கொள்ளலாம். வீடு முழுவதும் தெளித்துக் கொள்ளலாம் நன்மை நடக்கும்.