வகை: சமையல் குறிப்புகள்
கடலைப் பருப்பையும் உளுந்தையும் தனித்தனியே ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பவுலில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், மிளகாய்த்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பெருங்காயம், ஊறவைத்த கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
வகை: மஹாலட்சுமி தேவி வழிபாடு
உங்களின் வீட்டின் பூஜையறையில் உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை வெள்ளிக்கிழமை அன்று தாமரைபூவை வைத்து வணங்குங்கள். உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம் இருக்கும். பூக்களுள் சிறந்த பூ: பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல். வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வ தில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. உங்களின் தெய்வத்தை வணங்கினால் போதும் ,அதாவது உங்களின் தெய்வமுமே லட்சுமியாக இருந்து உங்களுக்கு நல்லதை செய்துக்கொடுக்கும்.
வகை: வாழ்க்கை பயணம்
பெரியவர் சொன்ன ரகசியம்... ஒரு மனிதன்.... எந்தக் குறையும் இல்லை அவனுக்கு… ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை... சிரமப்பட்டான்... அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்!" ஆசிரமத்துக்குப் போனான்...பெரியவரைப் பார்த்தான். ஐயா.... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே!" அவர் நிமிர்ந்து பார்த்தார்... தம்பி... உன் நிலைமை எனக்குப் புரியுது... இப்படி வந்து உட்கார்!" பிறகு அவர் சொன்னார்: உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது… தெரிந்தா உன் நிம்மதி போயிடும்! அது எப்படிங்க? சொல்றேன்... அது மட்டுமல்ல... மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்! ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே! புரியவைக்கிறேன்.... அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு. வயிறு நிறையச் சாப்பிட்டான். பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, இதில் படுத்துக்கொள் என்றார். படுத்துக் கொண்டான்... பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்... கதை இது தான்: ரயில் புறப்படப் போகிறது... அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை... ஓர் இடம் பிடித்து உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது...தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கீழே இறக்கி வைக்கவில்லை... எதிரே இருந்தவர் கேட்கிறார்: "ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?இறக்கி வையேன். அவன் சொல்கிறான்: "வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'
வகை: ஆன்மீக குறிப்புகள்
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவோரும் வீடுவாசல் என பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க முடியவில்லை என்று கலங்குவோரும் காஞ்சி காமாட்சித் தாயை மனதில் நினைத்தபடி, மனதார இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால், வீட்டில் கடன் தொல்லை நீங்கும். பொருள்சேர்க்கை நிகழும். விரைவில், சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் வாழ்வார்கள் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள். மூக பஞ்ச சதியில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது. ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம் ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது. திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்! பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த நாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
உங்கள் குருவை நினைத்து இப்படி பூஜை செய்தால், அறியாமல் செய்த பாவத்திற்கு கூட விமோசனம் பெறலாம். உங்களுடைய குரு என்று நீங்கள் யாரை நினைக்கிறார்களோ, கட்டாயம் அவரது திருவுருவப் படம் உங்கள் வீட்டில் இருக்கும். அந்தப் படம் உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு சிறியதாக இருந்தால் கூட போதும். எடுத்துக்காட்டாக சில பேர், சில சித்தர்களை தங்களது குருவாக நினைத்து, அந்த சித்தரின் திருவுருவப்படத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருவார்கள். சில பேர் ராகவேந்திரா, சாய்பாபா, சுவாமி விவேகானந்தர் இப்படிப்பட்ட மகான்களை தங்களுடைய குருவாக நினைத்து வழிபடுவார்கள். உங்களது குரு யாராக இருந்தாலும் பரவாயில்லை. வியாழக்கிழமை அன்று, உங்கள் குருவுடைய திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து, உங்கள் குருவின் திரு உருவப் படத்தை பார்த்தவாறு, 2 மண் அகல்களில், நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்பு உங்களது குருவிற்கு மனதார நன்றியை தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த வழிபாட்டின் போது உங்களது மனது எக்காரணத்தைக் கொண்டும் அலைபாய கூடாது. மனதை ஒரு நிலைப்படுத்தி குருவை வணங்கும் போது நீங்கள் வைக்கும் வேண்டுதலானது கட்டாயம் உங்களது குருவின் ஆன்மாவின் செவிகளில் விழும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தீபங்கள் ஏற்றி வைத்த பின்பு, உங்கள் மனதார ‘ஓம் குருவே சரணம்’ என்ற மந்திரத்தை ஐந்து முறை உச்சரிக்க வேண்டும். ஜீவசமாதி அடைந்த அவர்களிடம், நாம் வைக்கும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அதன் பின்பு நீங்கள் செய்த பாவத்திற்கான மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும். ‘என்னுடைய வாழ்க்கையில், நான் கடந்து செல்லும் பாதையில், அறிந்தோ அறியாமலோ, மற்ற உயிர்களுக்கு நான் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட வேண்டும்’ என்றவாறு சொல்லி மன்னிப்பு கேட்கலாம்.’ அடுத்தபடியாக உங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக தேவைப்படக் கூடிய வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 11 வாரம் வியாழக்கிழமை உங்களது குருவை வழிபட்டால் நல்ல பலன் உண்டு.
வகை: தன்னம்பிக்கை
* நம்மைப் பற்றி எதுவுமே தெரியாமல் சிலர் பேசுவதை கேட்கும்போது மனதிற்கும், உடலுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மற்றவர்களின் பேச்சு, செயல் நம்மை பாதிப்பதற்கு நாம் அனுமதித்தால், ஸ்ட்ரெஸ், நம்முடைய மதிப்பை நாமே குறைத்து எடைப்போடுவது, வேலையில் தோய்வு போன்றவை ஏற்படும். இதை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். * மற்றவர்கள் நம்மை இகழ்ந்தோ அல்லது அலட்சியப் படுத்தி பேசுவதோ நம்முடைய குணத்தை காட்டவில்லை. அது அவ்வாறு பேசுபவர்களின் குணத்தையே பிரதிபலிக்கிறது என்பதை உணர வேண்டும். * ஒருவரின் பேச்சு அல்லது செயல் எது உங்களை வருத்தப்பட செய்தது. உதாரணத்திற்கு சிலர் நாம் புன்னகைத்தால் கூட திரும்பி புன்னகைக்காமல் செல்வதுண்டு. அதற்கு காரணம் அவர் இன்ட்ராவெர்ட்டாகக் கூட இருக்கலாம். எனவே சின்ன விஷயங்கள் கூட நம்மை பாதிக்கும் அளவிற்கு நம் மனதை பலவீனமாக வைத்துக்கொள்வதை நிறுத்துங்கள். * நம்மைப் பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு வருத்தப்படுவதை விட்டுவிட்டு அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்து திருத்தி கொள்வது நம்முடைய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். * எல்லோரையும் நம்மால் சந்தோஷப்படுத்த முடியாது. நம்முடைய செயல் சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது அவர்களுடைய பிரச்சனை. * நாம் செய்யும் தவறுகளை வைத்து நம்மை முழுமையாக வறையறுக்க முடியாது என்பது புரிந்து கொள்ள வேண்டும்.
வகை: அம்மன்: வரலாறு
1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும். 5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள். 6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும். 7. அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும். 8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். 9. மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. 10. அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில். 11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி 12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.
வகை: இன்றைய சிந்தனை
உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்சனை என்று வந்தால்.,அவர்களைப் பேச விட்டு அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள். மற்றவர்களின் துன்ப துயரங்களில் ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆம்.,அது மாதிரியான நிகழ்வுகள் நமக்கும் வரலாம்.அடுத்த முறை நம்முடையதாகவும் கூட இருக்கலாம். ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. வலையை விட்டுத் தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் பண்ணையாளரும். அவரது மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டு இருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக் கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது., "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது.. அதற்கு அந்தக் கோழி,'' உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய செய்தி தான்..''..நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது., உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே செய்தியை போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு ."நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது. மனம் நொந்த எலி அடுத்துப் பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே செய்தியைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது.. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை.., "எலிப்பொறியைப் பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது. அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு வீட்டுக்காராரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம். எலி மாட்டிக் கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
வகை: அம்மன்: வரலாறு
அம்பாள், முப்பெரும் தேவியராகக் காட்சி கொடுக்கும் தலம் திருவானைக்காவல். அகிலாண்டேஸ்வரி ஒரு நாளில் காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திருக்காட்சியளிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்மனை தரிசித்து வழிபட கல்வி,செல்வம்,வீரம் ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் அமர்ந்து அருள்கிறாள் காந்திமதி அம்மன். காந்திமதி அம்மனுக்குத் தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது வெண்ணிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளா பூஜை நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிறப் புடவையோடே காட்சி கொடுக்கிறாள். உலகின் ஊழிகாலத்தில் அனைத்தும் அன்னைக்குள்ளாகவே அடங்கும் என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது என்கின்றனர்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
பீட்ரூட் மற்றும் இஞ்சியைத் தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், தண்ணீர் விட்டு, மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதை வடிகட்டி, தேவையான அளவு தேன் சேர்த்து அருந்தலாம். பலன்கள்: ஹோமோசிஸ்டீன் (Homocysteine) எனும் அமினோஅமிலத்தின் அளவு அதிகரிக்கும்போது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பீட்ரூட்டில் உள்ள கிளைசின் பீட்டைன் (Glycine betaine) எனும் நுண்ணூட்டச்சத்து, இந்த ஹோமோசிஸ்டீன் அளவைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. அதேபோல, பீட்ரூட்டில் ஃபோலேட், வைட்டமின் ஏ, பி6, சி, இ, கே சத்துக்களும் நிறைவாக உள்ளன.
வகை: அம்மன்: வரலாறு
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன. இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது. சக்தி பீடங்களுள் இத்தலம் காந்தி பீடமாகத் திகழ்கிறது. நெல்லையப்பர் லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இக்கோயிலில் காந்திமதி அம்பாள், தன் கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சந்நதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் வகைவகையான நைவேத்யங்களை சிவன் சந்நதிக்குக் கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம். இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.
வகை: இராமாயணம்: குறிப்புகள்
அவரவர் பார்வையில் அவரவர் ஒவ்வொரு காரணங்களைச் சொல்வர். ஆனால் ஒரு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிர்வாகி தன் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வித்தியாசமான காரணத்தைக் கூறினார். எந்த ஒரு பொருளையும் தயாரிக்கும் கம்பெனியாக அது தனியாராக இருந்தாலும் சரி, அரசு நிர்வாகமாக இருந்தாலும் அதன் தயாரிப்புகள் தரமானதாக இருந்தால்தான் அதன் சந்தை மதிப்பு கூடும். அதன் தரத்தை உயர்த்துவதில் அந்தநிர்வாகத்தின் தலைமையின் சாதுர்யத்தாலும் திறமையிலும்தான் உள்ளது. அதனால்தான் அவர்கள் தொழிலாளர்களை பேச்சாலும் செயலாலும் ஊக்குவிப்பார்கள் அந்த உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிர்வாகி தொழிலாளர்களின் நடுவே உரையாற்றினார். "உதிரி பாகங்கள் தரமானதாக இருக்க வேண்டும் இராமர் ஏன் காட்டுக்குப் போனார் தெரியுமா. இராமாயணத்தில் உதிரிபாகத் தரக் குறைபாட்டால் தான் என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். கவனமாக கேட்க தொடங்கினர். மீண்டும் பேசத் தொடங்கினார். இராமர் தன் தந்தை தசரதர் சொல்லுக்கு கட்டுப்பட்டு காட்டுக்குப் போனார். தசரதர் இராமரை காட்டுக்கு ஏன் அனுப்பினார்? கைகேயிக்கு கொடுத்த இரண்டு வரத்தைக் காப்பாற்ற. தசரதன் எப்போது இரண்டு வரம் கைகேயிக்கு கொடுத்தார்? சம்பாசுரனை எதிர்த்து தசரதர் போருக்குப் போனார். கைகேயி தேர் ஓட்டுவதில் கை தேர்ந்தவர். ஆகையால் தசரதருக்கு தேரோட்டியாக சென்றாள். அப்படி போர் நடக்கும் போது சக்கரத்தின் அச்சாணி ஒடிந்து விட்டது. அப்போது கைகேயி தன் சாதுர்யத்தால் தன் கை விரலையே அச்சாணியாக்கி தேரை ஓட்டியதால் சம்பாசுரனை தசரதனால் அழிக்க முடிந்தது. போருக்கு பிறகு தசரதர் கைகேயிடம் நான் வெல்வதற்கு காரணமாயிருந்த உனக்கு என்ன பரிசு வேண்டுமென்றார். அவளோ எனக்கு இரண்டு வரங்கள் வேண்டும். இதை எப்போது கேட்கிறேனோ அப்போது தாருங்கள் என்றார். அதைத் தான் இப்போது இராமர் காட்டுக்கு போக வேண்டும். பரதன் நாட்டை ஆள வேண்டும் என இரண்டு வரங்கள் கேட்டாள். என சொல்லி நிறுத்தினார். எல்லோரும் இதை ஏன் இப்போது சொல்கிறார் என நினைத்தார்கள்.