தலைப்புகள் பட்டியல்

நம் வாழ்வை வடிவமைக்கும் சிற்பிகள்
நம் வாழ்வை வடிவமைக்கும் சிற்பிகள்

வகை: இன்றைய சிந்தனை

அது ஒரு யுத்த களம்.. எதிரிப்படை வீரர்கள் நெருங்கி வர ஆரம்பித்தனர். இரண்டு நண்பர்களுள் ஒருவன் முன்னேறிசென்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தான். திடீரென ஒரு சத்தம் முன்னேறிய ராணுவ நண்பன் மீது ஒரு குண்டு துளைத்து கீழே சரிந்து விழுந்தான். தொலைவிலிருந்து இதை கவனித்த அவன் நண்பன் நண்பனைக் காப்பாற்ற ஓட முனைந்தான். உடனே அவனது தலைமைக் கமாண்டர் தடுத்தார்." வேண்டாம்.அங்கு சென்றால் உன் மீதும் தாக்குதல் நடக்கும். நீ சென்றாலும் உள் நண்பனைக் காப்பற்ற முடியாது " என்றார். வீரன் கேட்கவில்லை. தனது உயிர் நண்பனைக் காப்பாற்ற ஓடினான். கடுமையான போராட்டம். அருகிலே சென்று நண்பனை தூக்கி கொண்டு வந்தான் தலைமை அதிகாரியிடம்.. நண்பன் இறந்திருந்தான். அதிகாரி மீண்டும்” நான்தான் அப்போதே கூறினேன் அல்லவா. நீதான் கேட்கவில்லை. உன் நண்பனைக் காப்பாற்ற முடியவில்லை அல்லவா... நல்லவேளை நீயாவது பிழைத்துக் கொண்டாய்' என்றான். அதற்கு அந்த வீரன் சொன்னதுதான் நம்பிக்கையின் உச்சம். அவன் இப்போதுதான் இறந்திருக்கிறான்.. நான் அருகிலே செல்லும் போது உயிர் துடித்துக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் என் நண்பன் கூறினான் 'நீ வருவேன்னு நெனச்சேன் டா' என்று. அப்போதுதான் எனக்கும் மகிழ்ச்சி பிறந்தது. அவனை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவன் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன். இது போதும் எனக்கு..' என்று பெருமிதம் பொங்க கூறினான். நவீனமயமான உலகிலே நமக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் தருவதிலே முதன்மையானவர்கள் நண்பர்கள் என்றால் அதுவே நிதர்சனமாகும்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கோயில்கள் கட்டப்பட்டுள்ளதா இது என்ன ஆச்சர்யம்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கோயில்கள் கட்டப்பட்டுள்ளதா இது என்ன ஆச்சர்யம்

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

இந்தியா முழுக்க பல்வேறு வரலாற்று சிறப்புகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதில் மத்திய பிரதேசத்தில், அகர் மால்வாவில் உள்ள ஓர் ஆலயத்திற்குத் தனித்துவம் உள்ளது. அதைப்பற்றி தெரிந்துகொள்வோம். பிரிட்டிஷ் இணைப்பு இந்தியாவின் மையப் பகுதியில், மத்திய பிரதேசத்தில் உள்ள அகர் மால்வாவின் அழகான நிலப்பரப்புகளுக்கு மத்தியில், ‘பைஜ்நாத் மகாதேவ் கோயில்’ உள்ளது. இப்போது, ​​இந்தியாவில் உள்ள பல கோயில்கள் பண்டைய கால கட்டடக்கலையை நினைவுபடுத்தவும், சிக்கலான சிற்பங்களின் வடிவமைப்பையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கோயில் ஒரு தனித்துவமான சிறப்பு மற்றும் பந்தத்தைக் கொண்டுள்ளது. காரணம் இது ஆங்கிலேயர்களின் விருப்பத்தால் கட்டப்பட்ட ஒரு பொக்கிஷம். லெப்டினன்ட் கர்னல் மார்ட்டின்(Colonel Martin) இது 1880கள், பிரிட்டிஷ் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் மார்ட்டின், அகர் மால்வாவில் தன் ஆட்சியின் அடையாளமாக ஒன்றை நிலைநிறுத்த வேண்டும் என்று எண்ணினார். பொதுவாக பிரமாண்டமான தேவாலயங்கள் மற்றும் கதீட்ரல்களை (cathedrals) பிரிட்டிஷ் பேரரசுகள் இந்தியா முழுவதும் தங்களுடைய அடையாளத்திற்காக விட்டுச் சென்றார்கள். ஆனால் கர்னல் மார்ட்டினுக்கு (Colonel Martin) சற்று வித்தியாசமான விருப்பம் அவர் மனதுக்குள் இருந்தது போலும். தெய்வீக தலையீடு கர்னல் மார்ட்டினின் மனைவி, அகர் மால்வாவில் ஒரு நாள் பைஜ்நாத் மகாதேவ் கோயிலைக் கடந்து குதிரையில் சென்றபோது, ​​அவரின் இதயத்தில் ஒரு தாக்கத்தை உணர்ந்தார். அதற்கேற்றவாறு கோயில் மணிகள் ஒலிக்க, மந்திரங்கள் காற்றின் வாயிலாக தன் காதில் விழ, தன்னை மறந்து ஒரு மன ஆறுதலுக்காக ஆலயத்துக்குள் நுழைந்தார். பிராமணரின் அறிவுரை கோவில் பூசாரிகள் அவரின் சோகத்தைக் கண்டு விசாரித்தனர். அப்பெண்மணி தனது கணவரின் பாதுகாப்பு குறித்த தனது அச்சத்தைப் பகிர்ந்துகொண்டு தனது பயத்தை வெளிப்படுத்தினார். அங்கிருந்த பிராமணர் ஒருவர், “சிவபெருமான் உங்கள் அனைத்து நேர்மையான பிரார்த்தனைகளையும் கேட்பார்” என்று உறுதியளித்தார். “நீங்கள் நினைத்தது நிறைவேற ‘ஓம் நம சிவாய’ என்ற மந்திரத்தை 11 நாட்கள் உச்சரிக்கவும்“ என்றும் அறிவுறுத்தினார். ஒரு உறுதிமொழி திருமதி மார்ட்டின் ஒரு சபதம் செய்தார்; அவரது கணவர் போரில் இருந்து பாதுகாப்பாகத் திரும்பினால், அவர் இந்தக் கோயிலை மறுசீரமைப்பு செய்து காட்டுவார் என்று. அதேபோல் தன் வேண்டுதலுக்கு ஏற்றவாறு கர்னல் மார்ட்டினும் திரும்பி வந்தார். போரில் நடந்ததை தன் மனைவியிடம் விவரித்தார். போரின்போது ஒரு இந்திய யோகி - நீண்ட கூந்தலுடன், புலி - தோல் அணிந்தவாறு, திரிசூலத்துடன் அவர்களை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை விவரித்தார். இதைக் கேட்ட திருமதி மார்ட்டின் தன் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து சிவபெருமான் அனுப்பிய தூதுவர்தான் அவர் என்று கூறினார்.

தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு
தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு

வகை: அம்மன்: வரலாறு

வராஹி அம்மன் என்பது மஹாகாளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்றுலோகத்திலும் எதிரிகள் இல்லை. தன்பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 26நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹாவராஹி அருள்கிட்டும். மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜைமுறைகளையும் செய்ய வேண்டும். மூல மந்திரம் 'ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம்வர்ஷய ஸ்வாகா'

சுயம்புவாக உருவான 'வாராகி அம்மன்' எங்கிருக்கிறார் தெரியுமா
சுயம்புவாக உருவான 'வாராகி அம்மன்' எங்கிருக்கிறார் தெரியுமா

வகை: அம்மன்: வரலாறு

உலகின் பழமையான சிவன் கோவிலான உத்திரகோசமங்கை கோவில் அருகிலே அமைந்துள்ள ஆதி சுயம்பு வாராகி அம்மனை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம். இந்தியாவிலே வாராகி அம்மனுக்கென்று தனி கோவில்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. காசியிலும், தஞ்சாவூரிலும், உத்திரகோசமங்கையிலும் அமைந்துள்ளன. அதிலும் இந்த உத்திரகோசமங்கை வாராகியே மிகவும் பழமையானது என்று கூறுகிறார்கள். இவரையே ஆதிவாராகியம்மன் என்றழைக்கப்படுகிறார். மாணிக்கவாசகர் தன் திருவெண்பாவையில் இந்த வாராகி அம்மனை பற்றி பதிவு செய்துள்ளார். இங்கிருக்கும் வாராகியை ‘மங்கல மஹாகாளியம்மன்’ என்றும் ஆதிவாராகி என்றும் அழைக்கிறார்கள். பன்றி முகத்துடன் சிங்க வாகனத்தில் காட்சித்தருபவர் வாராகி அம்மன். இவர் சப்தகன்னிகளுள் ஒருவர். இவர் திருமாலின் வராக அம்சமாக பார்க்கப்படும் அம்மன் ஆவார். இந்த கோவில் வளாகத்தில் நிறைய அம்மிக்கல் இருக்கிறது. அங்கிருக்கும் குளத்தில் நீர் எடுத்து வந்து அம்மிக்கல்லை சுத்தம் செய்துவிட்டு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு பூசிவிட்டு அவரிடம் இருக்கும் மஞ்சளை வாங்கி சாப்பிட்டு தங்கள் வேண்டுதலை வாராகி அம்மனிடம் வைக்கிறார்கள். நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் வாராகி அதை நிறைவேற்றுகிறார். இங்கிருக்கும் குளத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக சொல்லப்படுகிறது. ராமநாதபுரம் வறட்சியாக இருந்தாலும் இந்த குளம் மட்டும் வற்றாமல் காணப்படுகிறது. எல்லா நட்களிலும் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் கருப்பு ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். ஸ்ரீ வாராகி அம்மன் ஆதிபராசக்தியின் படைத்தலைவி. வாராகி அம்மன் துர்கை அல்லது ராஜராஜேஸ்வரியிடமிருந்து தோன்றியவர். இவர் போர்க்கடவுள் என்பதால், வராகி வழிபாடு வெற்றியை தருவதாக ஐதீகம். தோல்விகள்,அவமானம் போன்றவற்றிலிருந்து வராகி வழிப்பாடு காப்பாற்றும் என்பது ஐதீகம். சிலர் தாந்திரீக முறைப்படி வழிப்படுவதால் இவரை இரவு நேரங்களில் தான் வழிப்படுவர் என்கின்றனர். பல வாராகி கோவில்களில் அமாவாசை, பௌர்ணமியன்று தான் பூஜைகள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. கண் திருஷ்டி, பயம் போன்றவற்றை போக்கக்கூடியவர். ராஜராஜ சோழன் வாராகி அம்மனை வழிப்பட்ட பிறகே அனைத்து காரியமும் செய்வார். குறிப்பாக போருக்கு செல்லும் முன் வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்த பிறகே போருக்கு செல்வார்.

கிரகதோஷம், நோய்தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்! பற்றி தெரிந்து கொள்வோமா
கிரகதோஷம், நோய்தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்! பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் தீர்த்தங்கள் இருக்கிறது. இந்த தீர்த்தங்களில் நீராடினால் கிரக தோஷம், நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். சந்திரதீர்த்தம் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்‘ இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம். கௌண்டின்னிய தீர்த்தம் சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். கங்கை, கோதாவரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ‘’பாவகரி நதி’’ என்னும் பெயரும் உண்டு. சந்தன மகாலிங்கம் தீர்த்தம் இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்‘ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக..!!! எளிமையான 50 வழிகள்
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக..!!! எளிமையான 50 வழிகள்

வகை: மஹாலட்சுமி தேவி வழிபாடு

1. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும். 2. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். 3. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை. 4. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும். 5. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம். 6. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். 7. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். 8. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும். 9. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. 10. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும். 11. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.

மூகாம்பிகை அம்மன் உருவானது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா
மூகாம்பிகை அம்மன் உருவானது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: அம்மன்: வரலாறு

கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார். மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள். தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார். தேவியோ, ''நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ. ஆனால் ஒரு நிபந்தனை. நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்'' என்றாள். ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார். எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள். கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார். அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள். அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும். அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள். ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை. மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது. இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார். கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும். ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது. ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார். அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார். அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள். ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது. உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

சகல ஐஸ்வர்யங்களும் பெற இந்த பொருளாள் அபிஷேகம் செய்யுங்கள்
சகல ஐஸ்வர்யங்களும் பெற இந்த பொருளாள் அபிஷேகம் செய்யுங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும். கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.சுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும். சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும். எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும். இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும். பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும். மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும். பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

ஆலகால  விஷம் குடித்த கதை பற்றி அறிந்து கொள்வோமா
ஆலகால விஷம் குடித்த கதை பற்றி அறிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

ஒரு காலத்துல தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துகிட்டே இருந்துச்சு. தேவர்கள் எல்லாரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர். பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து சாப்பிட்டால் இறப்பில்லாத இளமையான வாழ்வை பெறலாம். அப்புறம் அசுரர்களை சமாளிப்பது ரொம்ப ஈஸின்னு பிரம்மா வழி சொன்னார். திருமாலிடம் அனுமதி வாங்கிக்கிட்டு மந்திரமலையை மத்தாக்கினாங்க. சந்திரனை அசைத்தூணாக்கி வாசுகிங்கற பாம்பை கயிறாக அந்த மலையில் கட்டி தேவர்கள் ஒருபக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் இழுக்க தொடங்கினாங்க.மலை ஒருபக்கமா சரிய தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார். அப்புறம் ஒரே ஸ்பீடு தான். அமுதம் உண்ணப்போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தேவர்கள் வேக வேகமாக கடைஞ்சாங்க.வாசுகி களைத்து துடித்தது. அதன் உடல் இறுக்கமாக இருந்ததால் உடலில் இருந்த விஷத்தை கக்கியது. அதோடு பாற்கடலில் இருந்தும் நிறைய விஷம் வெளிப்பட்டது. இரண்டும் சேர்ந்து ஆலகால விஷம் எனும் கொடிய நஞ்சாக மாறிடுச்சு. விஷத்தோட வீரியம் தாங்காம அவர்கள் சிவன் கிட்ட ஓடிப்போய் முறையிட்டாங்க. நமசிவாய மந்திரம் உச்சரிச்சாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன். தேவர்களை காப்பதாக உறுதியளித்தான். சுந்தரரை விஷத்தை கொண்டு வரும்படி பணித்தான்.

மாத பவுர்ணமியில் சிவபூஜை செய்ய உகந்த பொருட்கள்
மாத பவுர்ணமியில் சிவபூஜை செய்ய உகந்த பொருட்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

சித்திரை -பலாசம், வைகாசி -புன்னை, ஆனி-வெள்ளெருக்கு, ஆடி-அரளி, ஆவணி- செண்பகம், புரட்டாசி -கொன்றை, ஐப்பசி -தும்பை, கார்த்திகை -கத்திரி, மார்கழி-பட்டி, தை-தாமரை, மாசி- நீலோத்பலம், பங்குனி- மல்லிகை.

சிவராத்திரி சிறப்பு தகவல்கள் பற்றி அறிந்து கொள்வோமா
சிவராத்திரி சிறப்பு தகவல்கள் பற்றி அறிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ரா¢த்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது. 2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும். 3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர். 4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெரு மானுக்கு மனதில் அபிஷே கம் செய்து சிவனை வழிபடலாம். 5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

நம்மை நம்புவோம்
நம்மை நம்புவோம்

வகை: இன்றைய சிந்தனை

நம்மைப்பற்றி நாமே தாழ்வாக நினைப்பது, நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்..* அப்போதுதான் நாம் எடுத்த செயலை வெற்றி யடைய வைக்க முடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்.* அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, நமது எதிரிகள் கூட நம்மை வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்.* இந்த எண்ணம்தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும்! உயர உயரப் பறந்து செல்லும் பறவையைப் போல, நாமும் வாழ்க்கை என்ற வான் வெளியில் உயர்ந்து கொண்டே செல்லலாம்..* மாவீரன் நெப்போலியனுக்கு, அவனுடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத் தட்டி இசைஎழுப்பி, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைச் சொல்லிகொண்டு இருந்தார்கள்.* இது முடிந்ததும் நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க வேண்டும்.* இந்த ஏற்பாடுகளைத் தளபதிகள் செய்து இருந்தார்கள். நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது. அனைவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிய பின்பு, குண்டு வெடித்தது தளபதிகளின் கைகளிலில் இருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கி விட்டன.* ஆனால் நெப்போலியன் கை மட்டும் சிறிதும் நடுங்க வில்லை. அவன் கையில் இருந்த கிண்ணத்தில் பழரசம் கூடத் ததும்பவில்லை.* இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்.* “பிரபுவே! இது நாங்கள் செய்த ஏற்பாடுதான்! இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக் கிண்ணங்களைத் தவற விட்டு விட்டோம்.* ஆனால் உங்களுடைய கை கொஞ்சம் கூட நடுங்கவில்லை. எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று பாராட்டினார்கள்.*