வகை: வாழ்க்கை பயணம்
பிரேஸில் நாட்டில் மக்களுக்கு ‘யார் அதிக நேரம் கைகளைத் தட்டிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என்று ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டனர்.
வகை: வாழ்க்கை பயணம்
நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம். உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..? இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்...
வகை: வாழ்க்கை பயணம்
எல்லாவற்றிலும் வெற்றி பெறுவது எப்படி: பயனுள்ள மற்றும் வேலை செய்யும் வழிகள். தாமஸ் ஹக்ஸ்லி கூறினார்: "அனுபவம் என்பது ஒரு நபருக்கு என்ன நடக்கிறது என்பதல்ல, ஆனால் என்ன நடக்கிறது என்பதை அவர் எவ்வாறு மதிப்பிடுகிறார்."
வகை: பெருமாள்
திருப்பதி என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில், பிரதானமான ஒன்று பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது. பெரும்பாலான பெருமாள் பக்தர்களின் குடும்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு. குழந்தை பிறந்ததும் முதல் முறையாக மொட்டை, திருப்பதிக்குத்தான் என்று சொல்லி மொட்டை அடிக்கும் வழக்கமும் உண்டு.
வகை: ஆன்மீக குறிப்புகள்
சூரிய கதிர்கள் நம்மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும் . அதுசரி எல்லோர் மேலும் தினம் தினம் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது எந்த கடாட்சமும் வாழ்வில் இல்லையே என கேட்கத் தோன்றும்.
வகை: மந்திரங்கள்
உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள் இவைதான்... இத சொன்னா எல்லாமே கிடைக்கும்..🌿🌺🌿
வகை: ஆன்மீக குறிப்புகள்
எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நீங்க இப்படி செய்யுங்கள்! நம்முடன் இருப்பவர்கள் அனைவரும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியதாக இன்றைய காலகட்டங்களில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
வகை: ஆன்மீக குறிப்புகள்
அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி கொடுக்கும், புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும். பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும்,தேவையை பூர்த்தி செய்யும்.
வகை: அம்மன்: வரலாறு
முன்னொரு காலத்தில் காசியில் ஒரு தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவருடைய மனைவியும் மஹா பதிவ்ரதை. கணவர் சொல் மீறாதவர். அந்த பக்தர் தினமும் கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு சிவத்யானம் செய்வார். அதே போல் ஒரு நாள் த்யானத்தில் அமர்ந்திருந்த போது பல மணிநேரம் நிஷ்ட்டை கலையாமல் சமாதி நிலையை அடைந்தார். அவர் மனைவி அவர் நேரத்தில் வராததால் வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்துகொண்டு கவலையுடன் இருந்தாள். இது இப்படி இருக்க கயிலாயத்தில் பரமசிவன் பார்வதி தேவியிடம் "தேவி பார்த்தாயா என் பக்தன் என்னை குறித்து நிஷ்டைகலையாமல் த்யானம் செய்வதை" என்றார். அதற்கு பார்வதி தேவி "போதுமே உங்கள் பகத்தனின் பெருமை. அங்கே வீட்டில் அவன் மனைவி மஹா பதிவ்ரதை இவனை காணோமே எனறு தவியாய் தவித்து கொண்டிருக்கிறாள் அவளுடைய கவலைக்கு என்ன பதில்" என்றாள். இதை கேட்டவுடன் பரமசிவன் கயிலாத்திருந்து மறைந்து அந்த பக்தன் வீட்டுக்கு அவன் போலவே உருவமெடுத்து சென்றார். பக்தனின் மனைவி சிவபெருமானை தன் கணவன் என்று நினைத்து கால் அலம்ப தண்ணீர் கொடுத்து இலை போட்டு சாப்பிட அழைத்தார்.
வகை: கடவுள்: பெருமாள்
விஷ்ணு, பெருமாள் என்று பல பெயர்களை கொண்டவர் தான் நாராயணன். இவர் பல அவதாரம் எடுத்துள்ளார். ஒவ்வொரு முறை அவதாரம் எடுக்கும் போதும் மக்களுக்கு ஒரு கருத்தை எடுத்துரைக்கின்றார் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிந்தன் என்று அழைக்கும் நாராயணனின் பெயரின் அர்த்தம் தான் என்ன? அவரின் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல இந்த பெயருக்கும் இரு காரணம் உள்ளது. அதை தெரிந்து கொள்வோம். நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாக தான். நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.
வகை: சமையல் குறிப்புகள்
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய் நன்றாக சிவந்து மொறு மொறு வென்று வறுபட்ட பிறகு அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு மீதம் இருக்கும் எண்ணெயில் உரித்து சுத்தம் செய்து வைத்திருக்கும் பூண்டு பற்களை சேர்க்க வேண்டும். பூண்டை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் சீரகம், புளி, இஞ்சி இவற்றை சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பூண்டு நன்றாக பொன்னிறமாக சுருங்கி வரும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக சுருங்கி வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து நம் முதலில் வறுத்து வைத்திருந்த காய்ந்த மிளகாயை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம் பிறகு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயுடன் சேர்த்து வெல்லத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பூண்டு தொக்கு தயாராகி விட்டது. இதை தாளிப்பதற்கு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து இவை அனைத்தும் நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு தொக்கில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
இளமையில் குடும்பத்தின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய, வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் சிலருக்கு, சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைப்பது வயதான பின்பு தான். சுற்றுலா செல்லும் முதியோர்கள் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது. விடுமுறை நாள்களில் சுற்றுலா செல்வது என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. பலருக்கும் வயதான பிறகு தான் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அமைகிறது. முதியோர்கள் சுற்றுலாவிற்கு செல்லும் போது, சில அசௌகரியங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகையால் சரியாகத் திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமாகும். 1. முதியோர்கள் சுற்றுலா செல்லும் போது, அதிகளவில் பொருள்களை எடுத்துச் செல்லாமல, தங்களால் தூக்க முடிந்த அளவுக்கு முக்கியமான பொருள்களை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். 2. ஓய்வு காலத்தில் செலவுக்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால், குறைந்த செலவில் சுற்றுலா செல்லத் திட்டமிட வேண்டும். சீஸன் இல்லாத நேரங்களில் சுற்றுலா சென்றால், குறைந்த செலவில் அதிக அனுபவங்களைப் பெற முடியும். 3. முதியோர்களுக்கு பேக்கேஜ் சுற்றுலா போவது மிகவும் சிறந்ததாக இருக்கும். ஏனெனில், நம்முடன் நிறைய நபர்கள் வருவதால் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். தங்குமிடம் மற்றும் உணவுக்காக வயதான காலத்தில் அலைய வேண்டி இருக்காது. மேலும், தங்கும் விடுதிகளில் முடிந்தவரை தரைதளத்தில் இருக்கும் அறைகளைக் கேட்டு வாங்குங்கள். 4. சுற்றுலா செல்லும் இடங்களில் மூத்த குடிமக்களுக்கு என்று தனியாக இருக்கும் சலுகைகளைத் தெரிந்து கொண்டு, பயன்படுத்திக் கொள்ளுங்கள். 5. வயதான காலத்தில் தொடர்ச்சியான பயணத்தைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மனம் ஒத்துழைப்பு கொடுத்தாலும், உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. ஆகவே தேவையான அளவு ஓய்வெடுக்கும் படியாக சுற்றுலாவிற்கு திட்டமிடுவது நல்லது. 6. ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவில் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வந்திருப்பதால், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது தங்களின் வயதை கட்டாயம் பதிவிடுங்கள். 7. உணவுகளில் ஏதேனும் கட்டுப்பாடுகள் இருப்பின், சுற்றுலாவிலும் அதனைப் பின்பற்றுங்கள். 8. தொடர்ச்சியாக மருந்து ஏதேனும் சாப்பிடுபவர்கள், அம்மருந்துகளை மறக்காமல் உடன் எடுத்துச் செல்லுங்கள். 9. காலணிகளை மற்றும் உடைகளைப் பொருத்தமாக அணியுங்கள். பயண நேரத்தில் சங்கடங்களைத் தவிர்க்க இது உதவும்.