தலைப்புகள் பட்டியல்

அப்பா ஏன் எப்போதும் பின் தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை
அப்பா ஏன் எப்போதும் பின் தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை

வகை: அப்பா

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.. 5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே                 செய்யும்
அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்

வகை: சமையல் குறிப்புகள்

1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்! பற்றி தெரிந்து கொள்வோமா
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்! பற்றி தெரிந்து கொள்வோமா

உடலைப் போலவே மனமும் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் நாம் அழுக்குபோக தேய்த்து குளிக்கின்றோம். மன ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்கிறோம்? மனமும் உடலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை. ஆரோக்கியத்தில் இரண்டு பக்கங்கள் அவை. உடல் வலியால் துடிக்கும்போது மனம் சந்தோசமாய் இருப்பதில்லை. மனம் வேதனையில் மாறும் பொழுது உடல் உல்லாசத்தை அனுபவிப்பது இல்லை. உடல் நோய்களில் பெரும்பான்மை மனநோயால் உண்டாகுபவையே. ஆகையினால் உடலை பரிசோதிக்கும் மருத்துவர்கள் நம் மனநிலையையும் கண்டறியும் முயற்சிக்கிறார்கள். நம்முடைய மனதில் நிறைய குப்பை கூழங்கள், அழுக்குகள் நிரம்பி இருக்கின்றன. அவற்றை அகற்றி மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் 'இன்று எந்த ஒரு கவலையும் கோபம், பொறாமை, எரிச்சல் போன்ற உணர்வுகள் என் மனதில் தோன்றாமல் பார்த்துக் கொள்வேன்" என உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். சிலருடைய நடவடிக்கைகள் சில சம்பவங்கள் மனதில் கலக்கத்தையும் கசப்பையும் தருவது இயற்கை. ஆனால் அந்த கலக்கமும் கசப்பும் நாள் முழுவதும் மனதில் தங்கி இருக்க அனுமதிக்காதீர்கள். 'இதுதான் உலகம். மனிதர்கள் பலர் இப்படிப்பட்டவர்கள்தான்" என்று உணர்ந்து உங்களை சமாதானப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை ஏமாற்றியவர் உங்களை தூற்றியவர் தான் செய்த அநியாயத்தை மறந்துவிட்டு உல்லாசமாக இருக்கும்பொழுது நீங்கள் மட்டும் ஏன் மனதில் வேதனையால் துடிக்க வேண்டும்.

செயல் திறனை சிறப்பாக்கும் தந்திரம்!
செயல் திறனை சிறப்பாக்கும் தந்திரம்!

வகை: A trick to improve efficiency!

நவீன உலகில் கவனச் சிதறல்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. செல்போன் அழைப்புகள், சோசியல் மீடியா அறிவிப்புகள், மின்னஞ்சல் மற்றும் பிற தொந்தரவுகள் நம் கவனத்தை சிதறடித்து நமது வேலைகளை செய்யவிடாமல் தடுக்கின்றன. இந்த சூழ்நிலையில் Deep Work என்னும் கருத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நீங்கள் அதிகமாக கோபப்படுகிறீர்களா? அப்போ இந்த கதை உங்களுக்குத்தான்!
நீங்கள் அதிகமாக கோபப்படுகிறீர்களா? அப்போ இந்த கதை உங்களுக்குத்தான்!

வகை: வாழ்க வளமுடன்

எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் சிலருக்கு உண்டு. அவர்களால் மற்றவர்கள் செய்யக்கூடிய ஒரு சின்ன தவறைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிக்கவும் முடியாது. கோபம் தலைக்கு ஏறி பட்டாசு போல படபடவென்று வெடித்து தள்ளி விடுவார்கள். பிறகு சற்று நேரம் கழித்து அமைதியான பிறகு, கோபப்பட்டதை நினைத்து வருத்தப்படுவார்கள். இதுபோன்று நீங்களும் இருக்கிறீர்களா? அப்போ இந்த கதையை படியுங்கள்.

சினிமா விளம்பரம் ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது?
சினிமா விளம்பரம் ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது?

வகை: விளம்பரம்: சினிமா தியேட்டர்

1. பார்வையாளர்கள் நிம்மதியான மனநிலையில் இருப்பார்கள் 2. ஒருபோதும் அவசரப்படுவதில்லை. அவர்கள் தனியாக மற்றும் குடும்பம் அல்லது நண்பர்களுடன் பார்க்க தயாராக இருக்கிறார்கள் 3. திரையில் அவர்களுக்கான நேரத்தில் பத்து நிமிட விளம்பரம் அதிக கவனத்தில் சென்று மறைமுகமாக அவர்களின் மூளையில் எங்கோ ஒரு பகுதியில் சேமிக்கப்படுகிறது. மேலும், ஆடியோவும் ஒட்டுமொத்த சூழலும் பிடிக்கும்.

ADDWING - ஐ சினிமா (தியேட்டர்) விளம்பரம் பண்ணுவதற்கு ஏன் தேர்வு செய்கிறார்கள்?
ADDWING - ஐ சினிமா (தியேட்டர்) விளம்பரம் பண்ணுவதற்கு ஏன் தேர்வு செய்கிறார்கள்?

வகை: விளம்பரம்: சினிமா தியேட்டர்

சினிமா விளம்பரம் என்பது திரையரங்குகளில் வாடிக்கையாளர்கள் பார்க்கும் ஆன்-ஸ்கிரீன் மற்றும் ஆஃப்-ஸ்கிரீன் பிராண்டிங்குடன் தொடர்புடையது; திரைப்படம் தொடங்கும் முன், திரையரங்குகளில் சுவரொட்டிகள் மற்றும் பலவற்றில் இது ஒரு குறுகிய ஆடியோ காட்சி விளம்பரமாக பார்க்கப்படுகிறது. இது எப்போதும் மிகவும் வெற்றிகரமான சந்தைப்படுத்தல் ஊடகமாக இருந்து வருகிறது.

சினிமா (தியேட்டர்) விளம்பரத்தின் நன்மைகள் என்ன?
சினிமா (தியேட்டர்) விளம்பரத்தின் நன்மைகள் என்ன?

வகை: விளம்பரம்: சினிமா தியேட்டர்

சினிமா விளம்பரம் அல்லது தியேட்டர் விளம்பரம் என்பது மல்டிபிளக்ஸ் சங்கிலிகள் மற்றும் ஒற்றைத் திரை அரங்குகளில் திரைப்படக் காட்சிகளை நடத்துவதை உள்ளடக்கியது. சினிமா விளம்பரம் என்பது ஸ்லைடுகளில் உள்ள விளம்பரங்களை உள்ளடக்கியது

தோற்றத்தை வைத்து..'' யாரையும் அசிங்கப்படுத்தக் கூடாது
தோற்றத்தை வைத்து..'' யாரையும் அசிங்கப்படுத்தக் கூடாது

வகை: இன்றைய சிந்தனை

முகத்தோற்றதை பார்த்து பழகுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. பெரும்பாலான அவமானங்களில் உருவம் சார்ந்தது ஒருவகை. அவமானங்கள் எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் அழகில் வெற்றியாளர்கள். அழகு என்பது புறம் சார்ந்ததா? அகம் சார்ந்ததா? என்று நடத்திய ஆய்வில் தொண்ணூறு சதவீதம் மக்கள் ‘அழகு அகம் சார்ந்ததே’ என்று சொன்னார்கள்.* நாம் நமது உடல் அழகுக்கு செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உள்ளத்தின் நல்ல பண்புகளை கடைப்பிடிக்க பயிற்சி செய்தால் நலமாக இருக்கும். ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்தது. அந்தக் குருவி பல வண்ணத்தில் ரொம்ப அழகாக இருந்தது.. தான் மட்டும் அழகு என எப்போதும் பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் கூட அழகைப் பார்த்தே முடிவு எடுக்கும் அந்தக் குருவி. ஒரு நாள், ஒரு காகம் ஒன்று வந்து அந்த குருவி கிட்ட ‘நாம நண்பர்களாக இருக்கலாமா?’ எனக் கேட்டது. அதற்கு அந்தக் குருவி, நான் எப்படி அழகாக இருக்கிறேன்.உன்னை நீயே கண்ணடியில் போய்ப் பாரு என்று அசிங்கமாகத் திட்டி அந்தக் காக்காவை விரட்டி விட்டது.

ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோவில்கள்.., பற்றி தெரிந்து கொள்வோமா
ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோவில்கள்.., பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர், 2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி 3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், 4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,

திரிபலா சூரணம், கடுக்காய் சூரணம், சகல வாயு சூரணம்
திரிபலா சூரணம், கடுக்காய் சூரணம், சகல வாயு சூரணம்

வகை: பாட்டி வைத்தியம்

திரிபலா சூரணம் 1- கடுக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும். 2 -நெல்லிக்காய் -விதை நீக்கி சதைப்பகுதி மட்டும். 3 -தான்றிக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும். இவைகள் மூன்றையும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து ஒன்று சேர்த்துக் கொள்ளவும்.இதுவே "திரிபலா சூரணம்" எனப்படும். இதனை இரவில் படுக்கும் போது அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும். இதனால் காலையில் மலம் இலகுவாக வெளியேறும். வாத,பித்த,கப நாடிகள் சமநிலைப்படும். உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும். இரத்தம் விருத்தியாகும். கடுக்காய் சூரணம் தேவையான பொருட்கள் கடுக்காய் - 35 கி.கிராம் சிவதை - 35 கிராம் இஞ்சி - 35 கிராம் மிளகு - 35 கிராம் ஓமம் - 35 கிராம் வாய்விடங்கம் - 35 கிராம் திப்பிலி - 35 கிராம் பசுவின் நெய் - 1.6 லி தேன் - 1 லி செய்முறை கடுக்காயை இடித்து எட்டு பங்கு நீர் கலந்து பின் 1 பங்காக வற்ற வைத்து சர்க்கரையுடன் சேர்த்து பாகுபதத்தில் 1 - 7 பொருட்களை பொடித்து சேர்த்து நெய்விட்டு கிண்டி மெழுகு பதத்தில் தேன் விட்டு கலந்து வைக்கவும். அளவு 2-6 கிராம் சாப்பிட்டு இளம் வெந்நீர் குடிக்கவும். இரண்டு வேளை. தீரும் நோய்கள் மாந்தம், சூலை, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, மூலவாய்வு, வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும். இது ஒரு மலமிளக்கி லேகியமாகும்.

தட்டை செய்வது எப்படி
தட்டை செய்வது எப்படி

வகை: சமையல் குறிப்புகள்

கடலைப் பருப்பையும் உளுந்தையும் தனித்தனியே ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பவுலில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், மிளகாய்த்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பெருங்காயம், ஊறவைத்த கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.