வகை: சிந்தனை சிறு கதைகள்
காட்டிலே வாழ்ந்த நரி ஒன்றுக்கு அங்கே போதிய உணவு கிடைக்கவில்லை. அதனால் பசியும் பட்டினியுமாக வாடியது.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். 4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். 6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். 7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். 8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். 9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும். 10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். 11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். 12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
கோடீஸ்வர யோகம் அமைய பெண்கள் தினமும் இதை செய்தால் போதும்..!!! கோடீஸ்வரராக ஆக வேண்டும், பணபற்றாக்குறை இல்லாத வசதியான வாழ்க்கை வாழ வேண்டும், வாழ்க்கையில் முன்னேறி வேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறுவது கிடையாது. சில குறிப்பிட்ட பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் பணம் நம்மை தேடி வந்து கொண்டே இருக்கும். வாழ்வில் எடுக்கும் காரியங்களில் வெற்றிகள் பெற்று, வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை பெற முடியும். நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் பெயர் சொல்லாதது என சொல்லப்படும் வசம்பினை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். வசம்பினை எப்போதும் பேரம் பேசி வாங்கக் கொள்ள வேண்டும். வசம்பிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
உடலில் நீர் சத்துபற்றாக்குறையை வாய்ப்புண்ணுக்கு முக்கிய காரணம் வாய்ப்புண்ணிற்கு முதன்மையான காரணம் வயிற்றிலும் அல்சர் இருப்பதே ஆகும். இரைப்பையில் உணவுக் குடல் வால்களில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் அல்லது நேரந்தவறிய உணவு முறைகளால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இது வாயிலும் வெளிப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தசோகை மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடும் வாய்ப்புண்ணுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது 🍯 வாய்ப்புண் இருக்கும் போது கொய்யா பழத்தை தொடர்ந்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். மேலும் கொய்யா இலைகளை வாய் ழுமுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. இதற்கு பதில் கொய்யா இலை இரண்டை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
வகை: சமையல் குறிப்புகள்
💥 புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். 💥 மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு ஓரளவுக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 💥 வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகை போட்டு தாளிக்கவும், அதன் பிறகு பெருங்காயத்தை போட்டு தாளிக்கவும். 💥 பின்பு அரைத்து வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். 💥 அதன் பிறகு வதக்கிய பிறகு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்ற வேண்டும். அதனுடன் ரசப் பொடியை போட்டு நுரைத்து வரும் போது கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி விடவும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
1.தினசரி பிரதோஷம் தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். 2. பட்சப் பிரதோஷம் அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும். 3. மாசப் பிரதோஷம் பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும். 4. நட்சத்திரப் பிரதோஷம் பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும். 5. பூரண பிரதோஷம் திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள். 6. திவ்யப் பிரதோஷம் பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும். 7. தீபப் பிரதோஷம் பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மல்லிகை செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும். மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும். அம்மான் பச்சரிசி செடியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து இரண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்துவிடும்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ரத்த உற்பத்தி அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணம் ஆகும். சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகள் ஆகும். பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாகும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
வகை: சமையல் குறிப்புகள்
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி, மெலிதாக நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு + இஞ்சி பூண்டு விழுது + எலுமிச்சை சாறு +உப்பு+ சோளமாவு போட்டு பிசையவும். ❤ சோளமாவு மசாலா உதிராமல் மீனுடன் ஒட்டி இருக்க உதவும். அதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும். பின்னர், அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாய் போடவும். தீயை சீராக எரிய விடவும். ❤ மீன் துண்டுகளை ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும் இல்லையென்றால் மீன் கருகி விடும். ❤ பின்மீனில் ஒட்டியுள்ள மசாலா சிவந்து ஒரு பக்கம் வெந்ததும், அவற்றை மிக மெதுவாக உடையாமல் அப்படியே புரட்டிப் போடவும். இரு பக்கமும் நன்கு வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும்.
வகை: தன்னம்பிக்கை
"முதலில் நன்கு தூங்கவேண்டும். நமக்கு பிடித்த வேலை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு சினிமா பார்த்தல். புக் படித்தல். தையல் தெரிந்தால் அந்த வேலை செய்தல். அதன்பின் எதனால் மன உளச்சல் ஏற்பட்டதோ அதை விட்டு முதலில் விலகி கொஞ்சம் தூரமாக இருக்க வேண்டும். மன உளச்சலுக்கு காரணமானவர்களை கூடிய மட்டும் நினைக்காமல் இருக்கவேண்டும். அவர்கள் செய்த நல்ல காரியங்களை திரும்ப திரும்ப ஞாபகத்தில் கொண்டு வந்து மன அழுத்தத்தை குறைக்கவும்
வகை: பெருமாள்
மகாவிஷ்ணுவின் இரண்டு திருவடிகளையும் கருடன் தன் கைகளால் தாங்கியபடி வரும் காட்சியே கருட சேவை. மகாவிஷ்ணு, கருடன் அருள் ஒரே நேரத்தில் கிடைப்பது சிறப்பு. திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வம் கூறுகிறது. கருடனின் மனைவிகள் ருத்ரா, சுகீர்த்தி. ஏகாதசி, திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும். கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று கருடனுக்கு பல பெயர்கள் உண்டு. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் உள்ள மூலைக் கருடன் சிறப்பு மிக்கவர். இவருக்கு சிதறுகாய் உடைத்தால் தீமை அகலும். தடை நீங்கும்.
வகை: சமையல் குறிப்புகள்
நார்த்தங்காயை மட்டும் எடுத்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 🍒 சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு முதலில் நறுக்கிய நார்த்தங்காய்களைப் போட்டு, அதன் மேல் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். 🍒 இப்படி கலந்த பின்பு, அதை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு மாற்றி மூடி போட்டு வைக்கவும். 🍒 பாட்டிலில் அடைக்கப்பட்ட நார்த்தங்காய்த்துண்டுகளைத் தினமும் இரண்டுமுறை, ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும். 🍒 சுமார் ஐந்து நாட்கள் நார்த்தங்காய்கள் உப்பில் நன்கு ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும். 🍒 பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகாய் வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும்.