வகை: சிந்தனை சிறு கதைகள்
இராமனுக்கு முடிசூட்டுவதற்கு நாள் குறித்தார்கள். நாட்டு மக்கள் யாவரும் செய்தியறிந்து மகிழ்ந்தார்கள். நாட்டை அலங்காரம் செய்தார்கள்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
தற்போது விதவிதமான நோய்கள் நம்மை பயமுறுத்தி வருகின்றன. சாதாரணக் காய்ச்சல், சளி என்றாலே மருத்துவமனையில் சில ஆயிரங்களை எடுத்து வைக்கும் காலம் இது. இதற்கு தீர்வே இல்லையா? ஏன் இல்லை? காசு தராமலேயே ஆரோக்கியம் பெற எளிதான வழி ஒன்று இருக்கிறது. எப்படி தெரியுமா? தினமும் பத்து நிமிடம் சூரிய ஒளியில் நின்று பயிற்சி எடுப்பதுதான். உடலில் சூரிய ஒளி படும் பட்சத்தில் நமது உடலின் சருமத்துக்கு அடியில் உள்ள செல்கள் தாமாகவே வைட்டமின் டியை உருவாக்கிக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. முன்பு மக்கள் விடியற்காலையில் எழுந்து சிறிது நேரம் வெயிலில் வேலை செய்வார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைத்தது. ஆனால், தற்போதைய பணி சூழலில் பெரும்பாலும் ஏசி அறைகளுக்குள்ளும், வெளியே வராமல் வீட்டுக்குள் இருப்பதுமே இதன் காரணம். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி கிடைக்காததால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய செக்கோஸ்டிராய்ட் குழுவின் ஒரு பகுதியாகும். இது குடலில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு அவசியமாகிறது. இது சூரிய ஒளியிலிருந்து மற்றும் அச்சத்து அடங்கிய உணவில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நமது சருமம் நேரடியாக சூரிய ஒளியில் படும்போது இந்த வைட்டமின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் வைட்டமின் டி ஆய்வில் 40 முதல் 99 சதவீதம் வரை குறைபாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது விட்டமின் டி.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது. 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்... 3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வித்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்... 4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப் படவில்லை... 5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்... 6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது... 7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்... 8. நம்உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன... 9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது...
வகை: ஆன்மீக குறிப்புகள்
பொறிக்கப்பட்ட பெரிய உலோக விளக்கு. உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர் காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கின. தினமும் காமாட்சி அம்மனை வழிபட்டாலே ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. தினமும் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, கோலத்தின் மேல் ஆரத்தி தட்டை வைத்து அந்தத் தட்டில் கொஞ்சமாக பச்சரிசி கொட்டி அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும். விளக்கில் நெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு ஏற்ற வேண்டும்
வகை: பழங்கள் - பலன்கள்
மருத்துவகுணம் வாய்ந்ததாக கருதப்படும் உலர் பழங்களில் பேரீச்சம்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பழம் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும் . ஆயுர்வேத , யுனானி , சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது . சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம்பழம் . இந்த பழத்தில் இரும்புச்சத்து , கால்சியம், வைட்டமின் ஏ , பி , பி 2 , பி 5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன . வைட்டமின் ‘ ஏ ‘ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதை குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலை கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும் . இதனால் பார்வைக் கோளாறுகள் நீங்கும் . பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும் , இரும்புச்சத்தும் தேவை . மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன . இதை நிவர்த்தி செய்யவும் , ஒழுங்கற்ற மாத விலக்கை சீராக்கவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது . மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலக்கட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை , கால் மூட்டுகளில் வலி உண்டாகும் . இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும் . ஆண்மையை அதிகரிக்கவும் தேனுடன் கலந்த பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது . பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு , பாலையும் பருகி வந்தால் சளி , இருமல் குணமாகும் .
வகை: சமையல் குறிப்புகள்
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதன் பிறகு அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு சிக்கன் சேர்த்து பிரட்டவும், அப்பொழுது அதிலேயே தண்ணீர் வரும்.
வகை: தன்னம்பிக்கை
1. அன்பு நிறைந்த இன்சொல் இரும்பு கதவைக் கூட திறக்கும் வல்லமை உடையது. 2. அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதருடன் நம்மால் அன்பு செலுத்த முடியாது. 3. அனுபவம் ஓர் உயர்ந்த நகை ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்க பட்டிருக்கிறது. 4. சமுதாயம் காலச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி தன்னை மாற்றி கொண்டால் அங்கே சமூக புரட்சி ஏற்படாது. மாறாக தொடர்ந்து சமூக வளர்ச்சி ஏற்படும். 5. லட்சியம், அடைய வேண்டிய குறிகோள், ஆகியவற்றை மறக்கக் கூடாது. 6. செய்யும் வேலையே உடலாகிய இறைவனுக்கு செலுத்தும் ஒப்பற்ற பிரார்த்தனை. 7. நல்ல எண்ணமும், நல்ல செயலும் ஒவ்வொருவருக்கும் முகத்தில் ஓர் அழகிய ஒளியை கொடுக்கிறது. 8. நட்பு நம் இன்பத்தைப் பெருக்கி துன்பத்தை குறைக்கின்றது. அது இன்பத்தை இரட்டிப்பாக்குகிறது. 9. ஒருவர் பார்க்கும் அழகின் ஒரு பகுதி அவரது பார்வையிலேயே இருக்கிறது. 10. நட்பும் உடைய கூடிய பொருளே அரிய பொருளை எப்படி கையாளுவோமோ அத்தகைய கவனத்துடன் நட்பையும் கையாள வேண்டும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
வாழ்வில் கஷ்டங்கள் நம்மை அழுத்தும்போது, ‘அந்தக் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்லையா?’ என்றெல்லாம் வருந்துவோம். இப்படி வருந்துவோரைக் காக்க கடவுள் வருவாரா? புத்திசாலியான வாடிக்கையாளர் ஒருவர் முடி திருத்த சலூன் கடைக்குப் சென்றார். அங்கு இருந்த முடி திருத்துபவரும் பல விஷயங்களில் ஆர்வமுள்ளவர் என்பதால் அவருடன் பேசியபடி முடியை சீராக்கும் பணியை செய்தார். இடையில் அவர்களின் பேச்சு, ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா’ எனும் கருத்தில் வந்து நின்றது. முடி திருத்துபவருக்கு எப்போதும் கடவுள் நம்பிக்கை என்பது குறைவு என்பதால் ‘கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை’ என்கிறார் உறுதியாக. ‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் இன்னும் கடவுள் தன்மையை உணரவில்லை போலும்’ இது அந்த புத்திசாலி வாடிக்கையாளர். ‘சரி, நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க அப்ப உங்களுக்கே தெரியும், கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இத்தனை பாகுபாடுகள்? ஏன் மனிதரிடையே பல வேதனைகளை அனுமதிக்க வேண்டும்?’ என்றார் சலூன்காரர். இதற்கு பதில் சொன்னால் இவர் புரிந்து கொள்ள மாட்டார். நம் சக்திதான் வீண்’ என்று உணர்ந்த புத்திசாலி பதில் எதுவும் தராமல் வெளியேறுகிறார். சலூன்காரர் முகத்தில் வெற்றிப் பெருமிதம். ‘கடவுளாவது ஒண்ணாவது’ என்ற முனகல் வேறு. புத்திசாலி கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவர் வருவதைப் பார்த்தார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தலையெழுத்தே காரணம் என்று சொல்லி புலம்புவோரை கண்டிருப்போம். ‘தலையில் எழுதியது தான் நடக்கும்’ என்று சொல்வதுண்டு. ஆனால் அத்தகைய தலையில் எழுதப்பட்ட விதியையே மாற்றக்கூடிய கோவில் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம். சென்னையிலிருந்து திருச்சி போகும் போது திருச்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் முன்பாகவே திருப்பட்டூர் என்ற கிராமம் உள்ளது. அங்கேதான் இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்வதற்கு விதியிருந்தால் மட்டுமே போக முடியுமாம். ஒருமுறை சென்றுவிட்டால் மறுபடி மறுபடி செல்ல வாய்ப்பு கிட்டுமாம். படைப்பு தொழிலை செய்து வந்த பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. மும்மூர்த்திகளில் ஒருவராக இருந்தவருக்கு கர்வம் வந்தது. பிரம்மனின் இந்த கர்வத்தை போக்க நினைத்த சிவபெருமான் அவரின் ஐந்தாவது தலையை வெட்டி எடுத்தது மட்டுமில்லாமல் ‘படைக்கும் தொழிலையும் இழக்க கடவாய்’ என்று சபித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரம்மன் சிவனிடமே சாபவிமோஷனம் வேண்டினார். அதற்கு சிவனும் தேசம் முழுவதும் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று வழிப்பட்டு வரவும். தக்க நேரம் வரும்போது நானே சாப விமோஷனம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அப்படி தேசம் முழுவதும் சுற்றி வந்த பிரம்மன் கடைசியாக திருப்பட்டூர் வந்து சிவனை தரிசிக்க அவருக்கு சாபவிமோஷனம் கொடுத்து படைக்கும் தொழிலையும் திரும்ப வழங்கினார். இதனால் பிரம்மனால் வழிப்பட்டு சாப விமோர்ஷனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றது. படைக்கும் தொழில் மட்டுமில்லாமல் இங்கு வந்து வணங்கினால், அவரின் தகுதிக்கு ஏற்ப தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று சிவபெருமான் வரமளித்தார்.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
இளம் சூட்டில் உள்ள நீரில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து இரவு படுக்கச் செல்லும் சமயம் குடித்துவிட்டுச் செல்ல, காலையில் வயிறு சுத்தம் அடைவதுடன், தேவையில்லாத கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த விளக்கெண்ணையைதான் பயன்படுத்தினார்கள். இதனை மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்வது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகளையும், எண்ணெயில் பொரித்ததையும், எளிதில் செரிக்காத உணவுகளையும் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மோர்: தயிரை விட மோர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. தயிரைக் கடைந்து மோராக்கி சிறிது உப்பு, சுக்கு பொடி, பெருங்காயம் சேர்த்து பருக வயிற்றுப் பிரச்னைகள் எதுவும் வராது. மேலும் பசி உணர்வு ஏற்படாமல் இருப்பவர்கள் மோரில் வெந்தயத்தை கலந்து நன்பகல் வேளையில் பருகி வர பசி உணர்வு தூண்டப்பட்டு நன்கு சாப்பிட முடியும் கவுனி அரிசி: முழு தானிய உணவான கவுனி அரிசியில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன. இவை இரத்தத்தில் சேர்ந்துள்ள அசுத்தங்களை சுத்தம் செய்வதுடன், உடலுக்கு புத்துணர்ச்சியும் கொடுக்கிறது. பழங்கள்: பழங்களில் இயற்கையாகவே பல வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவை இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், இயற்கையான முறையில் வயிற்றையும் சுத்தம் செய்யும். எனவே, தினமும் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடுவது நல்லது. எலுமிச்சை: வைட்டமின் சி சத்து நிறைந்த இது டீடாக்ஸ் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீருடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க, இரவு சாப்பிட்ட உணவில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அகற்றுவதுடன் மலம் எளிதாகவும் வெளியேறவும் உதவுகிறது. இஞ்சி: இது அஜீரணக் கோளாறு, வாயு பிரச்னைகளை சரி செய்யும். இஞ்சியை தேநீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். தோல் நீக்கி துருவிய இஞ்சியுடன் சிறிது வெல்லம் சேர்த்து மென்று சாப்பிடுவதும் நல்லது. இஞ்சி சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து பருகலாம். கடுக்காய்: இது சிறந்த நச்சகற்றி. ஒரு ஸ்பூன் அளவு கடுக்காய் தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன் குடிக்க வயிற்று கழிவுகளை எளிதில் அகற்றி விடும். திரிபலா சூரணமும் சிறந்தது. இதனையும் வெந்நீரில் கலந்து இரவு படுக்கச் செல்லும் முன் பருக சிறந்த பலன் கிடைக்கும். வெள்ளைப் பூண்டு: இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை முழுவதுமாக வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனை நாம் அன்றாட உணவில் துவையலாகவோ, ரசத்திலோ, பாலில் வேக வைத்தோ சாப்பிட நல்லது. இவை தவிர, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளான காய்கறிகள், பீன்ஸ் வகைகள், முளைகட்டிய பயிர் வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
வகை: ஜோதிடம்: அறிமுகம்
நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) எண்ணிக்கையின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார். அசுவினி: கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள். சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும். இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ., திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8. பரணி: கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் அம்மன்: சுந்தரநாயகி தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது. சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம். இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை. திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30. கார்த்திகை: கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது. சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும். இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ., திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5
வகை: ஆன்மீக குறிப்புகள்
யாருக்கு எப்போ அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லவே முடியாது. சில பேர் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாக மாறிவிடும். சில பேர் திருமணம் செய்யும் நேரம், அவர்களை வாழ்க்கையின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும். வீட்டுக்கு வந்தவளோட ராசி என்று கூட சொல்லுவார்கள்! சிலபேர் குடிபோகும் வீடு அதிர்ஷ்டத்தை தேடி தரும். இப்படி இருக்க, இந்த அதிர்ஷ்டமானது நமக்கு எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டே இருந்தால், வாழ்க்கையே அதற்குள் முடிந்து போய்விடும்! நம்மையும் அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமென்றால், என்ன செய்யலாம்? ஒருவருக்கு அதிர்ஷ்டம் உண்டாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதிர்ஷ்டம் ஏற்படாமல் இருக்க சில காரணங்களே உள்ளன. ஒருவருடைய ஜாதக கட்டத்தில் தீராத தோஷம் இருந்தால், அதிர்ஷ்டம் வராது. வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தால் அதிர்ஷ்டம் வராது. பூர்வஜென்ம வினை இருந்தால், அதிர்ஷ்டம் நம்மைத் தேடி கட்டாயம் வராது. அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்தாலும் அதிர்ஷ்டம் வராது. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை பட்டாலும் அதிர்ஷ்டம் வராது. மேற்குறிப்பிட்டுள்ள சில தவறுகளை பரிகாரங்கள் செய்து, பிராயச்சித்தத்தை தேடிக் கொள்ளலாம். சிலவற்றை திருத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. சரி. இப்போது நமக்கு அதிஷ்டத்தை தரப்போகும் அந்த ஒரு பொருள் என்ன என்பதைப் பற்றி பார்த்துவிடுவோம். ஒருவரை அதிர்ஷ்டசாலிகள் என்று எதை வைத்து கூறுவார்கள். முதலில் மன அமைதியான வாழ்க்கை, அடுத்தது செல்வந்தர்களாக வாழும் வாழ்க்கை. இவை இரண்டும் இருந்து விட்டால் நிச்சயம் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி மட்டும் இருந்தால், நல்ல வாழ்க்கை அமைந்து விடாது. பணம் மட்டும் இருந்தாலும் நல்ல வாழ்க்கை அமைந்து விடாது. இரண்டையும் ஒருசேர அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நல்ல வழியில் நாம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அந்த பணமானது, நம்முடைய பணப் பெட்டியில் இருந்து வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். பண வரவு அதிகமாக இருந்தால், மன நிம்மதி, தானாக வரும் என்று கூட சொல்லலாம். தவறில்லை. இப்படி உங்களுடைய பணப்பெட்டியில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?