தலைப்புகள் பட்டியல்

நன்றே..!! நன்றே..!! நன்றே..!! நடப்பது யாவும் நன்றே...!!
நன்றே..!! நன்றே..!! நன்றே..!! நடப்பது யாவும் நன்றே...!!

வகை: தன்னம்பிக்கை

விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம் தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் அமைதியாகத் திரும்பினார். சில நாட்கள் ஆகின. விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய எண்ணினார் வசிஷ்டர். நல்லவர்களின் நல்ல தீர்மானம் அல்லவா? உடனடியாகச் செயல் பாட்டிற்கு வந்தது. ஆம்! வசிஷ்டர் யாகம் செய்தார், யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், ‘‘வசிஷ்டர் தானம் கொடுக்கிறார் என்றால், அது விசேஷம்தான். நாமும் போய் அதைப்பெற வேண்டும்” என்று புறப்பட்டு வந்தார். ஆனால், விஸ்வாமித்திரர் வருவதற்குள்ளாக வசிஷ்டர், தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் கொடுத்து முடித்து விட்டார். அதை அறிந்ததும் விஸ்வாமித்திரர் கொதித்தார். “ஆ! வசிஷ்டரே! நீர் என்னை அவமானப்படுத்திவிட்டீர். தானம் வாங்கவந்த என்னை வெறுங்கையுடன் அனுப்ப எண்ணிவிட்டீர் போலிருக்கிறது” என்றார். அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், “விஸ்வாமித்திரரே! கோபம் வேண்டாம்! பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்ந்திருந்த சத்சங்க சாவகாசப்பலன், ஒரு நாழிகை (24 - நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அதைக்கேட்டதும் விஸ்வாமித்திரர் மேலும் கோபப்பட்டார். அப்போதும் வசிஷ்டர் கோபப்படவில்லை. “சரி! விஸ்வாமித்திரரே! நீங்கள் போய், உலகுக்கெல்லாம் ஔி கொடுக்கும் சூரியனையும், பூமியைத் தாங்கும் ஆதிசேஷனையும் நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்து வாருங்கள்!” என்றார். சற்று யோசித்த விஸ்வாமித்திரர், “சரி! போய்த்தான் பார்ப்போமே!” என்று எண்ணிப் புறப்பட்டார். போனவர், ஆதிசேஷனிடம் தகவலைச்சொல்லி அழைத்தார். ஆதிசேஷன், “சுவாமி! நான் வந்துவிட்டால், என் வேலையை யார் செய்வது?’’ எனக்கேட்க, விஸ்வாமித்திரர் சூரியனிடம் போய்த் தகவலைச் சொல்லி அழைத்தார். சூரியபகவானோ, “சுவாமி! உங்களுடன் நான் வந்தால், என் வேலையை யார் செய்வார்கள்? உலகம் இருண்டுபோய்விடாதா?” எனச் சொல்லி மறுத்தார்.

மிகப்பெரிதாக ஆசைபடுங்கள் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் உறவுகளே
மிகப்பெரிதாக ஆசைபடுங்கள் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் உறவுகளே

வகை: தன்னம்பிக்கை

இமயமலையின் அடிவாரம். நீண்ட பயணத்திற்கப்புறம் பஸ்ஸிலிருந்து அந்த இளைஞன் இறங்கினான். அவனுடைய இரண்டு துணி மூட்டைகளைச் சுமந்துகொண்டு மலையேற, காத்திருந்த கழுதைகளில் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டான். "எங்கே போக வேண்டும் சாஹேப்?”- கழுதையை வழி நடத்துபவன் கேட்டா ன். "ஏதாவதொரு நல்ல சாமியார் ஆசிரமத்திற்குப் போ." "எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள்? "நாட்களா? இனி என் வாழ்க்கையே இங்கேதான். என் மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா, பிஸினஸ் எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்துவிட்டேன். இதோ என் கழுத்தில் இருக்கிறதே தங்கச் சங்கிலி... இதைக்கூட உனக்குக் கொடுத்து விடப் போகிறேன்.' கழுதைக்காரன் வியந்து நின்றான். "இந்தச் சின்ன வயதில் உங்களுக்கு எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று?" இளைஞன் முகத்தில் பெருமிதம் வழிந்தது. "எங்கள் ஊருக்கு வந்திருந்த குரு ஒருவர் சொன்னது என்னை ஆழமாகத் தொட்டுவிட்டது. ஆசைகள் தான் துன்பத்துக்கெல்லாம் காரணமாம். அதுதான் எல்லா ஆசைகளையும் உதறிவிட் டு வந்துவிட்டேன்." "எல்லாவற்றையும் உதறிவிட்டுஇந்த மூட்டைகளில் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள், சாஹேப்?" "இங்கே குளிர் அதிகம் என்று சொன்னார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் கடைகளும் கிடையாதாமே. அதனால், இந்த மூட்டைகளில் எனக்கு வேண்டிய கம்பளிகளை எடுத்து வந்திருக்கிறேன்." கம்பளியைக்கூட உதற முடியாமல் வாழ்க்கையையே உதறியதாகச் சொல்லும் அந்த இளைஞனைப் போல, ஆசையைத் துறந்ததாகப் பலர் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். ஆசை இல்லாமல் இந்தப் பிரபஞ்சம் இல்லை. ஆசை இல்லாமல் இந்த உடல் இருக்காது. உயிர் இருக்காது. ஆசைப்படக்கூடாது என்று இந்தப் பிரபஞ்சம் ஒருநாளும் உங்களுக்குச் சொல்லித்தரவில்லை. ஆசையைத் துறக்கத் தீர்மானித்து விட்டேன் என்று உங்கள் மனம் போலித்தனமாக துறவு பேசும். மனம் தந்திரசாலி. எதையோ சொல்லி உங்களை நம்பவைத்து ஏமாற்றும். அந்த சூட்சுமம் அதற்குத் தெரியும். ஆனால் உடம்பு? காற்றுப் புகமுடியாதபடி உங்கள் வாயையும், மூக்கையும் இறுகப் பொத்திக் கொண்டு வேடிக்கை பாருங்கள். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் வேண் டுமானால் உடம்பு பொறுத்துக்கொள்ளும். அப்புறம், உயிர் வாழவேண்டும் என்று உங்கள் உடம்புக்குள் பீறிட்டு எழும் ஆசை உங்கள் கையைப் பி டுங்கிப்போடும். விட்டுப் போனதற்கும் சேர்த்து அள்ளி அள்ளி ஆக்ஸிஜனைக் குடிக்கும்.

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு உடற்பயிற்சி கூடம் அறிவீர்களா
காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு உடற்பயிற்சி கூடம் அறிவீர்களா

வகை: ஆன்மீக குறிப்புகள்

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார். காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.

அடமானம வைத்த நகையை எத்தனை முறை மீட்டு எடுத்தாலும் அந்த நகை திரும்ப திரும்ப அடமான கடைக்கு செல்கிறதா?  இது தான் காரணம்.
அடமானம வைத்த நகையை எத்தனை முறை மீட்டு எடுத்தாலும் அந்த நகை திரும்ப திரும்ப அடமான கடைக்கு செல்கிறதா? இது தான் காரணம்.

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

சில சமயங்களில் நாம் அடமானத்திற்க்காக வைத்த நகையை, கடைசிவரை மீட்க முடியாமலேயே போய்விடும். சில சமயங்களில் எப்பாடுபட்டாவது, பணத்தை சேர்த்து, அடமானம் வைத்த நகையை மீட்டு விடுவோம். ஆனால், அடமானத்தில் இருந்து மீட்டெடுத்த நகையானது, சீக்கிரமே திரும்பவும் நாம் அடமானம் வைத்த, அந்த கடைக்கே திரும்பிப் போய்விடும். இந்த அனுபவம் நம்மில் பல பேருக்கு உண்டு. இதற்கு என்ன காரணம் என்பது நமக்கு தெரியாது. ஆனால், மீட்டெடுத்த தங்க நகையை ஒருமுறைகூட அணிந்து அழகு பார்த்து இருக்க மாட்டோம். மீண்டும் அந்த நகையானது அடமானம் கடைக்கு போவதற்கு என்ன காரணம்? அப்படி மீண்டும் மீண்டும் அடமான கடைக்கு நம்முடைய நகை செல்லாமல், நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க என்ன பரிகாரம் செய்யலாம்? இந்த இரண்டு கேள்விக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தங்கத்தை அடமானம் வைக்கும் சில அடகு கடைகளாக இருந்தாலும், அல்லது ஏதாவது ஒரு தனி நபரிடம் அடமானம் வைத்தாலும், அல்லது சில நிறுவனங்களில் அடமானம் வைத்தாலும், அந்த நகையை, நகைக்கு சொந்தக்காரர், வட்டியும் முதலும் கட்டி மீட்டாலும், அந்த நகையானது மீண்டும் அடமானத்திற்கே சென்றுவிடும். இதற்கு காரணம், அந்த அடமான கடைகளில் எல்லாம், சில ஆகர்சன வித்தைகளை செய்து வைத்திருப்பார்கள். இப்படி செய்யும் பட்சத்தில் எத்தனை முறை நாம் அந்த நகையை மீட்டாலும், அந்த நகையில் இருக்கும் தோஷமானது விலகவே விலகாது. அந்த நகை கடைசிவரை உங்களுக்கு சொந்தமாகாமல், போய் விடும். இது சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில் பற்றி அறிந்து கொள்வோமா
வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில் பற்றி அறிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

சிவன்’ என்றாலே அதிசயம்தான். சிவனையும், சிவன் கோயில்களையும் சுற்றி அதிசயமும், மர்மமும் எப்போதும் நிறைந்தே இருக்கும். அத்தகைய அதிசயம் நிறைந்த சிவன் கோயில் ஒன்றைக் குறித்து இனி காண்போம். திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் என்னும் திருத்தலத்தில் 500 அடி மலைக்கு மேல் அமைந்துள்ளது பொன்மலைநாதர் திருக்கோயில். இது 1000 வருடங்கள் பழைமையான கோயிலாகும். இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் 15ம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் விரிவுப்படுத்தப்பட்டது இருளன்’ என்னும் ஒருவர் காடுகளைத் தோண்டி வேர்களை பறிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம், அவர் காட்டில் மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது அவருடைய கோடரி பூமிக்குள்ளிருந்த சிவலிங்கம் மீது பட்டதால் மயங்கிப் போனார். பிறகு அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, தான் அந்தக் குழியிலே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதையடுத்து, இருளன் அந்தக் குழியைத் தோண்டி சிவலிங்கத்தை வெளியே எடுத்து மலையிலே வைத்து பூஜிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வழியாகச் சென்ற பல்லவ மன்னன் தான் போரில் வெற்றி பெற்றால், நிச்சயமாக சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். இக்கோயில் கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றில் 2 அடி உயரமுள்ள சுயம்பு லிங்கம் பொன்மலைநாதர் ஆவார்.

கேட்டதை கொடுக்கும் பணக்கஷ்டத்தை நீக்கும் வெற்றிலை தீப வழிபாடு:
கேட்டதை கொடுக்கும் பணக்கஷ்டத்தை நீக்கும் வெற்றிலை தீப வழிபாடு:

வகை: ஆன்மீக குறிப்புகள்

பணக்கஷ்டத்தை எளிமையாக தீர்க்க இதை விட சுலபமான வழிபாட்டை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. மகாலட்சுமியை நினைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால், கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும். குறிப்பாக கடன் பிரச்சனை, பண பிரச்சனை இவைகளில் இருந்து விடுபட, இந்த லட்சுமி தீப வழிபாட்டை செய்யலாம். நகைகளை அடமானத்தில் வைத்திருந்தால் அந்த நகைகளை மீட்டெடுக்கவும் இந்த வழிபாடு கை கொடுக்கும். அடமானத்தில் இருக்கும் சொத்துக்களை மீட்டு எடுக்கவும் இந்த தீப வழிபாடு உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும். இந்த தீபத்தை ஏற்றினால் தீராத பண கஷ்டம் கூட, இந்த விளக்கு எரிந்து முடிவதற்குள் தீர்ந்துவிடும். எளிமையான முறையில் வீட்டில் லட்சுமி தீபம் ஏற்றுவது எப்படி. இந்த வழிபாட்டை மேற்கொள்ள நமக்கு ஒரு வெற்றிலை தேவை. வெற்றிலைக்கு மேலே வைத்து ஏற்றுவதற்கு சின்ன மண் அகல் தீபம் தேவை. அதில் பசு நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். அந்த திரி மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். கொஞ்சமாக மஞ்சள் தூளில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி இந்த திரியை போட்டு பிசைந்து நிழலிலேயே காய வைத்தால் மஞ்சள் திரி தயார். மாலை 6:00 மணிக்கு இந்த விளக்கை வீட்டில் ஏற்ற வேண்டும். நிலை வாசலுக்கு உள்பக்கத்தில் மகாலட்சுமியை நினைத்து ஒரு தட்டின் மேல் வெற்றிலை வைத்து, அந்த வெற்றிலைக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதன் மேலே அகல் விளக்கு வைத்து, நெய் ஊற்றி, இந்த மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அந்த வெற்றிலையின் மேல் மகாலட்சுமிக்கு நிவேதியமாக இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை வைத்து தீபம் ஏற்றி மனமுருகி மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்க வேண்டும். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் ஏற்றக்கூடாது. நிலைவாசலுக்கு உள்பக்கத்தில் கிழக்கு பார்த்தவாறு விளக்கை ஏற்றி வைக்கலாம். இந்த விளக்கின் முன்பாகவே அமர்ந்து மகாலட்சுமியை மனம் உருகி வீட்டிற்குள் அழையுங்கள். ‘ஓம் மகாலட்சுமி தாயே வருக வருக!’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த இரண்டு கற்கண்டுகளை எடுத்து நிலை வாசலுக்கு வெளியில் இரண்டு பக்கத்திலும் ஒவ்வொரு கற்கண்டு போட்டு விடுங்கள். அதை எறும்புகள் வந்து சாப்பிட்டால் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. மேல் சொன்ன வழிபாட்டை செய்து வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கலாம்.

உடல் ஆரோக்கியத்தை பேண தோப்புக்கரணம் மட்டும் போதும் முயற்சித்து பாருங்க
உடல் ஆரோக்கியத்தை பேண தோப்புக்கரணம் மட்டும் போதும் முயற்சித்து பாருங்க

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

🌼 தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. 🌼 தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக் கரணத்தை வைத்திருந்தார்கள். 🌼 உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. 🌼 காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

காளான் கறி
காளான் கறி

வகை: சமையல் குறிப்புகள்

1. காளானை நறுக்கி வைத்து கொள்ளவும். 2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா சேர்க்கவும். 3. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். 4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். 5. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், கஷ்மீரி மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். 6. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

தன்னம்பிக்கை...வாழ்க்கையின் மூலதனம்!
தன்னம்பிக்கை...வாழ்க்கையின் மூலதனம்!

வகை: வாழ்க்கை பயணம்

வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். தோல்விகளால் துவண்ட ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதற்கான வழிகளை யோசித்தபோது, அதற்கான பல விஷயங்கள் அவருக்கு முன் வந்தன. சற்றே திகைத்தவர், சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது வாழ்வதற்கும்கூட வழிகள் இருக்குமே என நினைத்தார். தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பதில்லை. வெற்றுப் புலம்பல்கள் வெற்றியைத் தருவதில்லை. எல்லாப் பிரச்னைகளுக்கான தீர்வும் நம்மிடமே இருக்கிறது. சில நேரங்களில் உடனடியாக தீர்வுகள் கிடைத்து விடும். பல நேரங்களில் தீர்வுக்கான காலம் தள்ளிச் செல்லலாம். அதுவரை பொறுமை காப்பது அவசியம். எதிலும் எதிர்மறையான எண்ணங்கள் இருக்கவே கூடாது. வென்றவருக்கும், தோற்றவருக்கும் வரலாறு உண்டு.

சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி பற்றி தெரிந்து கொள்வோமா
சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: மருத்துவ குறிப்புகள்

கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். தோல் அரிப்பு, சொறி போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும். கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும். கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் குணமாகும்.

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் பற்றி அறிந்து கொள்வோமா
கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் பற்றி அறிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது காரணம் கண்திருஷ்டி. நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நன்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் "கடல் தண்ணீர்". கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.

வெட்டிவேர் மாலையில் பல அற்புத சக்திகள் உள்ளது பற்றி தெரிந்து கொள்வோமா
வெட்டிவேர் மாலையில் பல அற்புத சக்திகள் உள்ளது பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

குடும்பத்தில் எப்பொழுதும் நிம்மதியும், செல்வ செழிப்பும், நல்ல ஆரோக்கியமும் இருந்தாலே போதும். இவற்றை அடைவதற்கு இறைவனை சரண் அடைகிறோம். அதேபோல் எவ்வளவு தான் மற்றவர்களிடம் அன்பாக, நேர்மையாக இருந்தாலும் அதற்கான எவ்வித நற்பெயரும், பலனும் கிடைப்பதில்லை. அதைத் தவிர்த்து தொடர்ந்து மென்மேலும் பல பிரச்சனைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏதாவது புதிய விஷயத்தை துவங்கும் போது மனதில் ஒரு சிறு பயம் இருந்து கொண்டு தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து அதன்பின் முடிவெடுத்து சரியாக நடந்து வருகிறோம். இவ்வாறான பயத்தை போக்கி தொடங்கும் காரியம் அனைத்தும் வெற்றியாக மாற இந்த ஒரு பொருள் மட்டுமே போதும். வெட்டிவேர் : ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வீடாக இருந்தாலும், தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் அங்கு நேர்மறை சக்திகள் நிறைந்து இருக்க வேண்டும். நாமும், நம்மை சுற்றியுள்ளவர்களும் எப்பொழுதும் நல்லவிதமாக பேசிக்கொண்டு, நல்ல விதமான செயல்களை செய்து கொண்டிருந்தால் மட்டுமே இவ்வாறான நேர்மறை அதிர்வுகள் நம்மை சூழ்ந்து இருக்கும். இதற்காக பல பூஜைகளை செய்து வருகின்றோம். பணவரவிற்கு பல குறிப்புகளை பின்பற்றுகின்றோம். இருந்தும் சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிப்பதில்லை.