வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக்கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள். தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
வகை: குடும்ப பொறுப்பு
புதிதாக உங்களையே முழுதாக நம்பி வரும் பெண்ணை காப்பாற்றும் அளவிற்கு போதுமான பணம் உங்களிடம் இருக்கிறதா? பணம் இல்லை என்று தெரிந்தால் நாளையே உங்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் தெளிவாக பேசி விடுங்கள். இது பல பிரச்சனைகளை தவிர்க்கும் முழுக்க முழுக்க அம்மா பேச்சையே நம்பி அவரது முடிவின் படி செயல்படுபவர் என்றால் புதிதாக வரும் பெண்ணுக்கும் உங்களுக்கும் விரைவிலேயே பிரச்சனைகள் தொடங்கலாம் தயாராகுங்கள். உங்கள் நண்பர் வட்டாரம் பெரியதோ சிறியதோ அவர்களிடமிருந்து சற்று விலக ஆரம்பித்து விடுங்கள். வடிவேலு சொல்வது போல் பழக்க வழக்கங்களை பஞ்சாயத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பெண்களைப் பற்றிய உங்களது கருத்து என்னவென்று தெரியவில்லை உங்கள் மனைவி கருப்போ சிவப்போ படித்தவரோ படிக்காதவரோ உயரமோ குட்டையோ அவருக்கு மனது என்று ஒன்று உண்டு அவருக்கும் ஆசாபாசங்கள் உண்டு முடிந்த அளவிற்கு அவருடைய விருப்பங்களை நிறைவேற்ற பாருங்கள். உங்கள் மனைவியைப் பற்றி பிறர் கருத்து கூறும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் உங்களது மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள் உங்கள் ஒருவரை மட்டுமே நம்பி தனது உற்றார் உறவினர் பெற்றோர் சுற்றத்தார் அனைவரையும் விட்டுவிட்டு உங்களை மட்டுமே நம்பி உங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
வகை: வாழ்க்கை பயணம்
1- சத்தமான குரலில் பேசப்படுவதெல்லாம் உண்மை என்றும், மென்மையான குரலில் சொல்லப்படுவது பொய் என்றும் நினைக்காதீர்கள். வலிமையான உண்மைகள் பலவும் மெல்லிய குரலில்தான் வெளிப்படும்.
வகை: பெருமாள்
1. ஆசியாவிலேயே மிகப் பெரிய பள்ளி கொண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ள தலம் திருமயம். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நிலம், நீர், ஒளி, காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது தேங்காய், இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப்படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது
வகை: பெருமாள்
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
வகை: தன்னம்பிக்கை
உயர்வு மனப்பான்மை நம்மைப் பற்றி மிகையாகக் கணிப்பீடு செய்கிறது.. தாழ்வு மனப்பான்மை நம்மை குறைத்து மதிப்பிட்டு போட்டியிலிருந்தே ஒதுங்க வைக்கிறது.. சமநிலை மனப்பான்மை அனைத்தையும் உள்ளது உள்ளப்படி துல்லியமாக கணிக்க உதவுகிறது!
வகை: சமையல் குறிப்புகள்
1. வீட்டில் தயாரிக்கும் பனீர், கடைகளில் விற்பது போல் கட்டியாக இருப்பதில்லையே? ஏன்? பால் திரிந்து பனீரை ஒரு துணியில் வடிகட்டியதும், அதை துணியுடனே குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு துணியுடனே ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மார்பிள் சப்பாத்திக் கல் அல்லது இடிக்கும் சிறிய உரல் வைத்து, ஒரு மணி நேரம் கழித்து துணியை எடுத்து விட்டு துண்டுகள் போடவும். அழகாக சதுர வடிவத் துண்டுகளாக கடைகளில் கிடைப்பது போலவே வரும்.
வகை: அப்பா
பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது.
வகை: வாழ்க்கை பயணம்
நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஏனென்றால்.... 1. டிரெட்மில்லை ( TreadMill ) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். 2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார்.
வகை: TNPSC பாட குறிப்புகள்
சூரியனும், அதனைச் சுற்றிவரும் அமைத்துப் பொருள்களும் சேர்ந்து இருக்கும் அமைப்பு சூரியக்குடும்பம் ஆகும். நமது சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும், நிலவுகளும், சிறு கோள்களும் வால் மீன்களும் உள்ளன. இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ என்பன ஒன்பது கோள்களாகும். சூரியன் மட்டுமே ஒளியை உமிழ்கிறது. நிலவு உள்ளிட்ட மற்ற அனைத்தும் சூரி ஒளியை எதிரொளிக்கின்றன.
வகை: TNPSC பாட குறிப்புகள்
1. அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர் A காளிதாசர் B சமுத்திரகுப்தர் C ஹரிசேனர் D விசாகதத்தர் Answer B