தலைப்புகள் பட்டியல்

பொது அறிவு
பொது அறிவு

வகை: TNPSC பாட குறிப்புகள்

1. இந்தியாவில் கனிமவளம் அதிகமுள்ள பீடபூமி : சோட்டாநா கபுரி பீடபூமி 2. இந்தியாவில் அணுசக்திக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு : 1948 3. இந்தியாவில் வரதட்சணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு : 1961

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் பெருகும்
வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் பெருகும்

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

வாழையிலையில் சாப்பிட்டால் ஆயுசு பெருகும் என்பார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? வாழையை பொறுத்தவரை தண்டு முதல் இலை வரை அத்தனையும் மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. கண்கள்: கண்கள் உட்பட உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது இந்த வாழையிலை.. பசும் இலையாக இருந்தாலும் சரி, இலை அறுபட்டபிறகும்கூட, எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கக்கூடியது வாழையிலை. அதாவது வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்குமாம்.. அதனால்தான், வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை சீக்கரத்தில் வாடிப்போகாது.. பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால் கூட, வாழைநாரில் கட்டி, அதை வாழை இலையில்தான் கட்டித்தருவார்கள்.. குளிர்ச்சி: கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வாழை.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது.. வைட்டமின் A, C., K போன்றவை உள்ளதால், குடற்புண்களை ஆற்றும் தன்மை வாழையிலைகளுக்கு உண்டு.

செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி வழிபாடு
செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி வழிபாடு

வகை: அம்மன்: வரலாறு

லட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவள். தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள். லட்சுமி தேவி கேட்டதை அருளும் பெண் தெய்வம். லட்சுமியை அனுதினமும் வழிபட்டால் பல வகையான நன்மைகள் கிடைக்கும்.பல வகையான நன்மைகள் :உடல் அழகு பெற்று ஒளிமயமாகும். பகை அழிந்து அமைதி உண்டாகும்.கல்வி ஞானம் பெருகும்.பலவிதமான ஐஸ்வரியங்கள் செழிக்கும். நிலைத்த செல்வம் அமையும்.வறுமை நிலை மாறும். மகான்களின் ஆசி கிடைக்கும்.தானிய விருத்தி ஏற்படும்.வாக்கு சாதுரியம் உண்டாகும். வம்ச விருத்தி ஏற்படும். உயர் பதவி கிடைக்கும். வாகன வசதிகள் அமையும்.

அதென்ன குபேர கிரிவலம் பற்றி அறிந்துகொள்வோமா
அதென்ன குபேர கிரிவலம் பற்றி அறிந்துகொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் என்பது உண்மை... உண்மை.... உண்மை.... நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படி கஷ்டப்படுகிறோம். நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப் பாவச்சுமையை நாமும் நமது பங்குக்குச் சுமக்கிறோம். சரி. பணக்கஷ்டத்தின் வேதனையை நாம் தினம் தினம் இல்லாவிட்டாலும், அடிக்கடியாவது உணர்கிறோம். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம்.

மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன்
மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

நம் வாழ்வின் துக்கங்கள், வேதனைகளுக்குக் காரணம் நம் கர்மவினையே. எத்தனையோ ஜென்மங்களில் செய்த பாவங்கள், புண்ணியங்களே நிழலாக நம்மைத் தொடர்கிறது. இதிலிருந்து நாம் விடுபட ஒரே வழி அம்பிகையைத் தியானம் செய்வதுதான். அவளையே தியானித்து அவள் நினைவிலேயே அமிழ்ந்து விட்டால் நமக்குத் தேவையானதை எல்லாம் அவளே கவனித்துக் கொள்வாள். அன்னையின் தவக் கோலம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. தவத்தின் மூலம் அவள் உணர்த்துவது நிலைத்த சிந்தனை. அலைபாயாத மனம். மனதைக் குவித்து ஒரே சிந்தனையுடன் நாம் இருந்தால் பிரபஞ்சம் அதை நமக்கு நிறைவேற்றிக் கொடுக்கும். ஒவ்வொரு தலங்களிலும் அம்பிகை தன் தவத்தின் மூலம் அதைத்தான் உணர்த்துகிறாள். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலங்களில் மிக மேன்மையானது சென்னை அருகே உள்ள மாங்காடு திருத்தலம். ஒரு சமயம் கைலாயத்தில் அன்னை பார்வதிதேவி ஈசனின் கண்களை விளையாட்டாகப் பொத்திவிட உலகம் இருண்டு விட்டது. அதன் இயக்கமே நின்று விட்டது. ஈசனுக்கு ஒரு நிமிஷம் என்பது மனிதர்களுக்கு ஒரு யுகம் அல்லவா.? ஈசனின் கண்களே சூரிய சந்திரர்கள். தேவியின் செயலால் கோபமுற்ற ஈசன் அம்பிகையை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்து விடுகிறார். தன் தவறை உணர்ந்து அன்னை இப்பகுதியைத் தேர்ந்தெடுத்து ஐந்துவித அக்னியை வளர்த்து அதன் நடுவில் ஒற்றைக் காலில் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவம் இருந்தாள். உலக மக்கள் மேன்மையுற முப்பத்தி இரண்டு அறங்களையும் பூவுலகில் வளர்க்க அன்னையே உதாரணமாகத் தவம் இருக்கிறாள். நெருப்பின் நடுவே, இடதுகாலின் நுனி நடு அக்னியில் பட, வலதுகாலை இடது தொடைக்கு சற்றுமேலேயும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேலேயும், வலது கரத்தில் ஜப மாலையும், தனது திருக்கண்களை மூடியபடி உக்கிர தவம் செய்கிறாள் அம்பிகை. அதன் பின்னர் ஈசனின் அருள் வாக்குப் படி காஞ்சி சென்று தவம் இருந்து பங்குனி உத்திர நன்னாளில் இறைவனை மணந்து கொண்டாள். முதலில் அம்பிகை தவம் இருந்த இடம் என்பதால் மாங்காடு }ஆதி காமாட்சி தலம்} என்று அழைக்கப்படுகிறது.

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்கப்படுகிறது
இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்கப்படுகிறது

வகை: ஆன்மீக குறிப்புகள்

கண்ணன், குசேலர் இவர்கள் இருவரை பற்றிய கதைதான் இது. கண்ணனும் குசேலரும் சாந்திவனி ஆசிரமத்தில் ஒன்றாக கல்வி பயின்றவர்கள். இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இருவரின் குருகுல வாசம் முடிந்ததும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கண்ணன் துவாரகையின் அரசர் ஆனார். ஆனால் குசேலன் வறுமையில் கஷ்டத்துடன் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். குசேலர் வறுமையில் இருந்து நீங்க என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போது, குசேலரின் மனைவி தன் கணவருக்கு ஒரு யோசனை கூறினாள். என்னவென்றால், “உங்களின் நண்பர் கண்ணன் இப்பொழுது துவாரகையின் அரசனாக தானே இருக்கின்றார். அவரிடம் உதவி கேட்டால் நம் வறுமை நீங்க ஒரு வழியை கூறுவார் அல்லவா?” என்றவாறு குசேலனரின் மனைவி கூறினாள். ஆனால், குசேலருக்கோ வறுமை நிலையில் நண்பனை காண்பதற்கே தயக்கமாக இருந்ததோடு உதவி கேட்கவும் மனம் இல்லை. ஆனால் தன் மனைவியின் கட்டாயத்தினாலும், வறுமையை போக்க வேறு வழி இல்லாத காரணத்தினாலும் குசேலர் கண்ணனைக் காண துவாரகைக்கு புறப்பட்டார். குசேலர் தன் நண்பனை நீண்ட நாட்கள் கழித்து சந்திக்க போவதால், கண்ணனுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றார். குசேலருக்கோ வறுமை, என்ன செய்வது? பின்பு தன்னால் முடிந்த அவலை (அவல்) ஆசையோடு கண்ணனுக்கு வாங்கி சென்றார். குசேலருக்கு வறுமை என்பதால் கிழிந்த துணி உடன் நடைபயணமாக தனது பயணத்தை மேற்கொண்டார். துவாரகைக்கு வந்தடைந்தார். ஆனால் கண்ணனின் அரண்மனைக்கு வெளியில் இருக்கும் காவலர்கள் அவரை உள்ளே விட வில்லை. காரணம் குசேலர் கண்ணனை தன் நண்பன் என்று கூறுகின்றார். இவ்வளவு ஏழ்மையாக உள்ள ஒருவர் எப்படி அரசனான கண்ணனுக்கு நண்பனாக இருக்க முடியும் என்ற சந்தேகம் தான் காவலர்களுக்கு எழுந்தது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு குசேலர் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. குசேலர் வந்திருக்கும் செய்தியும் காவலர்கள் மூலம் கண்ணனுக்கு எட்டியது. கண்ணன் ஓடி வந்து தனது நண்பனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச்சென்று, அமர வைத்து, தன் மனைவி ருக்மணியுடன் சேர்ந்து கண்ணனும், குசேலருக்கு பாதபூஜை செய்து, பின்பு விருந்து அளித்து, உபசரித்தனர். என்ன அற்புதம் அல்லவா இது.

முருகனுக்கு விளக்குகள் ஏற்றி வழிபட்டால் அளவற்ற பலன்கள் கிடைக்கும்...... பார்ப்போமா
முருகனுக்கு விளக்குகள் ஏற்றி வழிபட்டால் அளவற்ற பலன்கள் கிடைக்கும்...... பார்ப்போமா

வகை: முருகன்: வரலாறு

சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்’ என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் இது அப்படி அல்ல! ‘சஷ்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்’ என்பது தான் சரியான உச்சரிப்பு ஆகும். அதாவது சஷ்டி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு கருப்பை நிறையும், குழந்தை பேறு உண்டாகும் என்பது நியதி! இப்படி குழந்தை பாக்கியத்தையும், சொந்த வீடு அமையும் யோகத்தையும் கொடுக்கும் முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு செய்யப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆறாக செய்வது, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாகும். கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இந்நாட்களில் முருகனின் மந்திரங்களை உச்சரித்து, முருகனை நினைத்து உண்ணாமல் நோன்பு இருந்து குழந்தைக்காக பெண்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார். குறிப்பாக குழந்தைப் பேறு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை உடையவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய அருள் தேவை. செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், முருகனுடைய படம் நிச்சயம் இருக்கும். அந்த படத்திற்கு தம்பதியராக சேர்ந்து மாலை இட்டு, புதிய 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, முருகன் மந்திரங்களை உச்சரித்து ஒன்றாக பூஜை செய்தால் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மன ஒற்றுமை நிச்சயம் ஏற்படும். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கும். வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு சஷ்டி திதிகளில் முருகனை இவ்வாறு வழிபட்டு வர, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். அது மட்டுமல்லாமல் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கும், எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா ஓன்பது கட்டளைகள் என்ன
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா ஓன்பது கட்டளைகள் என்ன

வகை: வாழ்க்கை பயணம்

உன் லட்சியத்துக்கு உன் சூழல் ஒத்து வரவில்லை என்றால் சூழலை மாற்று. 2. உழைக்கத் தயங்காதே. சுறு சுறுப்பாக மாறினால் தான் மனிதனாக ஜெயிக்க முடியும். 3. பணத்தை அலட்சியம் செய்யாதே. கவனம் பிசகாமல் வேலை பார்த்தால், தேவையான பணம் எங்கிருந்தாவது வரும். 4. மனிதர்களைச் சேகரி.உலகில் உள்ள அனைவரும் உனக்கு உதவப் பிறந்தவர்கள் என்று தயங்காமல் நம்பு. 5. வாயைத் திறந்து பேசு.என்ன வேண்டும் என்று தயங்காமல் கேள். கேட்டால் தான் கிடைக்கும். 6. எப்போதும் அலர்ட்டாக இரு.அடிக்கடி உன்னை அப்டேட் செய்து கொள்.

தலைமுறைகள் தாண்டியும் மின்னும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் ரகசியம் என்ன
தலைமுறைகள் தாண்டியும் மின்னும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் ரகசியம் என்ன

வகை: சுவாரஸ்யத் தகவல்கள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டுப் புடவையைப் பற்றி தெரியாதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்..... அனைவரது வீட்டில் கண்டிப்பாக குறைந்தபட்சம்ஒரு புடவையாவது வைத்திருப்பார்கள். அதன் அருமையை சற்று சிந்திப்போம். காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு உலகளவில் எப்போதுமே நல்ல மதிப்பு உண்டு. ‘ காஞ்சிபுரம் போனா கால ஆட்டிக்கிட்டே சாப்பிடலாம் ’ என்று பழமொழிகூட சொல்லப்படுவது உண்டு. அதற்கு அர்த்தம் காஞ்சிபுரத்தில் இருப்பவர்கள் எல்லோருமே வேலைக்குச் செல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு சாப்பிடுகின்றனர் என்பது அல்ல. மாறாக கைத்தறி நெசவாளர்களையே இந்தப் பழமொழி குறிப்பிடுகின்றது. அதாவது கைத்தறியில் பட்டுப்புடவை நெய்பவர்கள் தங்கள் கை, கால்களை ஆட்டி ஆட்டித்தான் நெய்யவேண்டும் என்பதால்தான் இந்தப் பழமொழி. வரலாறு: காஞ்சி பட்டுப் புடவைகளுக்கான வரலாறு என்பது சுமார் 400 வருடங்களுக்கும் மேலான வரலாறாகவே அறியப் படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில்தான் பட்டுப்புடவைகள் பணக்காரர்கள் மற்றும் கோயில் தெய்வ சிலைகளுக்கு மட்டும் என நெய்யப்பட்டன. பிறகு நாளடைவில் வளர்ச்சியடைந்து இன்று எந்த சுப காரியம் என்றாலும் மக்கள் வீடுகளில் காஞ்சிபுரம் பட்டுதான் முதல் இடம் பிடிக்கிறது. நெசவு: புடவை நெய்வதற்குப் பயன்படுத்தப்படும் நூலானது முதலில் அரிசி நீரில் ஊறவைக்கப்பட்டு பின்னர் வெய்யிலில் உலர்த்தப்படுகிறது. பின்னர் பட்டு நூலானது வெள்ளி மற்றும் தங்க ஜரிகைகளுடன் கோர்க்கப்பட்டு கைத்தறியில் பூட்டப்படுகின்றன. காஞ்சி பட்டுப் புடவை நெய்யப் பயன்படுத்தப்படும் வார்ப் ஃபிரேமானது, 240 துளைகளைக்கொண்ட வார்ப்பும் 250-3000 நூல்களுடன் வெஃப்டில் 60 துளைகளையும் உள்ளடக்கியது.

விளக்கின் நவகிரஹ தத்துவம்
விளக்கின் நவகிரஹ தத்துவம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

கோயில்களிலும், வீடுகளிலும் நாம் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம்:

பழைய ஜென்மத்து பாவத்தை போக்கும் அதிசய கோவில் எது தெரியுமா?
பழைய ஜென்மத்து பாவத்தை போக்கும் அதிசய கோவில் எது தெரியுமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீயி... நீ பண்ண பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாவே முன் ஜென்மத்துல நம்பிக்கை இருக்கு' என்கிறீர்களா?..

ருத்ராட்ஷ மகிமை !!
ருத்ராட்ஷ மகிமை !!

வகை: மந்திரங்கள்

ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை.