வகை: TNPSC பாட குறிப்புகள்
ஆண்களைப் பற்றிய மருத்துவ படிப்பு - ஆன்ட்ராலஜி பெண்களைப் பற்றிய படிப்பு - கைனகாலஜி குழந்தை மருத்துவம் - பீடியாட்ரிக்ஸ் முதியோர் நலன் - ஜிரியாடிரிக்ஸ்
வகை: TNPSC பாட குறிப்புகள்
1. தமிழகத்தின் முதல் கற்கோவில் என்ற சிறப்பை பெறும் ஆலயம் எது? கூரம் சிவன் கோவில் 2. விமானங்கள் பறக்கும் வளிமண்டல அடுக்கு எது? ஸ்டிரடோஸ்பியர்
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
மிகவும் பழமை வாய்ந்த கோயில் எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப்பட்டதாக தகவல் உள்ளது. இந்தசன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரேமட்டத்தில் இருந்துள்ளன. இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார். அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தினாராம். மேலும் வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையர் கோன் ஆகியோர் பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர்.
வகை: உறவுகள்
திருமணமாகி, 35 ஆண்டுகளில் நினைக்காத மனைவியை, அவள் இறந்த இந்த மூன்று மாதங்களில் அதிகப்படியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்கம். ஆரம்ப காலத்திலிருந்தே ராமலிங்கத்திற்கு, மனைவி லட்சுமி மீது எந்தவித ஈடுபாடும் இருந்ததில்லை. 'மனைவி என்பவள், தன் தேவைகளை நிறைவேற்றி, சேவகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வேலையாள்...' என்ற நினைப்பில் தான், இத்தனை ஆண்டுகளும் வாழ்ந்திருந்தார். ஆனால், மனைவி இறந்த பின், இந்த மூன்று மாதங்களில், அவளைப் பற்றி நினைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அமைந்து, மனைவியின் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்கள் புரிய ஆரம்பித்தன. அதிலும், இன்று அவருடைய மருமகள் நடந்து கொண்ட விதத்தை நினைக்கையில், 'நாம் ஏன் இன்னும் உயிருடன் இருக்க வேண்டும்... நமக்கு சீக்கிரம் சாவு வந்து விடக் கூடாதா...' என்று எண்ணத் துவங்கி விட்டார் ராமலிங்கம். ராமலிங்கத்திற்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால், உணவில் பாதி உப்பு தான் சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார் டாக்டர். அதனால், கடந்த 15 ஆண்டுகளாகவே சமையலில் உப்பின் அளவை குறைத்து, அப்பளம், ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகமான பொருட்களை தவிர்த்து, அவரது ரத்த அழுத்தம் சீராக இருக்கும்படி வைத்திருந்தாள் லட்சுமி. மதியம் மருமகள் சமைத்திருந்த மீன் குழம்பில் உப்பும், காரமும் சற்று தூக்கலாக இருந்தது. அதனால், பிரஷர் கூடிடுமோ என்ற பயத்தால், ''ஏம்மா... குழம்புல உப்பை கொஞ்சம் குறைச்சு போடக் கூடாதா...'' என்றார். ''குழம்பை சாதத்துல பிரட்டி சாப்பிட்டா சரியாத் தான் இருக்கும்; நீங்க ரசம் மாதிரி ஊத்தி சாப்பிட்டா, உப்பு தூக்கலாத் தான் தெரியும்,''என, வெடுக்கென கூறினாள் மருமகள். இதைக் கேட்டவுடன் ராமலிங்கத்திற்கு, மனைவியின் நினைப்பு வந்தது. பார்த்துப் பார்த்து சமைத்தாலும் என்றாவது ஒருநாள் சரியாக சமைக்கவில்லை என்றால், சாப்பாட்டு தட்டை தூக்கி எறிவார். அப்போது கூட எதுவும் பேசாமல், மவுனமாக கண்ணீர் விடுவாள் லட்சுமி.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும். திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவமிருந்தார். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதமிருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டார். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். மேலும், இந்த பிரதோஷ நாளில் சந்திர திசை நடப்பவர்களும், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்களும் கோவிலிற்கு சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில் சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அற்புதமான ஆராதனைகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும். சோமவார பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்தும், நந்திதேவருக்கு செவ்வரளியும், அருகம்புல் மாலையும் வழங்கி வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். எலுமிச்சை சாதமோ, தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்கினால் வாழ்க்கை வளமாகும்.
வகை: வாழ்க்கை பயணம்
யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது. வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள். நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை. மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள். தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவன் குணம் இருந்தால் நீங்கள் குப்பை. நடித்தால் நீங்கள் நல்லவன். உண்மை பேசினால் பைத்தியக்காரன். அன்பு காட்டினால் ஏமாளி. எடுத்துச் சொன்னால் கோமாளி. இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து. அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி. பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்' காதில்லாத நந்தி, பின்னங்கால் இல்லாத நந்தி - சிவாலயங்களில் பரவசப்படுத்தும் நந்தி வடிவங்கள்! 'நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்' என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. அப்படியான நந்திப் பெருமானாரின் வடிவங்களையும் சிறப்புகளையும், திருநாமங்களையும் இங்கு காணலாம். அதிகார நந்தி: சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று, நந்தியம்பெருமாளின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர். மால்விடை நந்தி: சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்திக்கு அடுத்து ஒரு நந்தி காட்சிதரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால், நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்கிறது புராணம். பிராகார நந்தி: கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிரகார நந்தி என்பர். தர்ம நந்தி: சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும். ஒன்பது நந்திகள்: பழைமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை: பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி ஆகியன. இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம். இதுவரையிலும் ஆலயங்களில் அருளும் நந்திதேவர்களின் வகையை அறிந்தோம். இனி, வித்தியாசமான கோலத்தில் நந்திதேவர் அருளும் தலங்களைப் பார்ப்போம். அண்ணாமலை நந்திகள்! சிவபெருமானை நோக்கியபடி அருள்பாலிக்கும் நந்திதேவர், சில தலங்களில், கோயில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.
வகை: இன்றைய சிந்தனை
ணிவுத்தன்மை: பணிவுத்தன்மையானது மக்கள் தங்கள்தவறுகளை உணர்ந்து தங்களை தாங்களே திருத்திக்கொள்ள ஆயத்தப்படுத்துகின்றது. சிந்திக்க வேண்டிய கருத்து: உண்மையான பணிவுத்தன்மை வார்த்தைகளால் வெளிப்படுத்த அவசியமில்லாத சத்தியத்தை பிரதிபலிக்கும். நம்முடைய உள்ளார்ந்த சக்தியின் நிலையானது மற்றவர்கள் அவர் தம் வழியில் தங்கள் தவற்றை உணர வைக்கும்.
வகை: மனம்
வயது என்பது மனதைப் பொறுத்தது. நாம் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல்இருந்தாலே போதும். வயது முதிர்ந்தவர்கள் 23 வயது இளைஞனைப் போல இன்னும் உற்சாகத்துடன் பல சாதனைகளை செய்து கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம்.. நாம் மனம் தளரும் வரை நம்முடைய கனவுகளை யாரலும் நம்மிடம் இருந்து பறித்து விட முடியாது. கனவுகளை அடைவதற்குத் தேவை முயற்சி மட்டுமே. நாம் விரும்பும் வாழ்க்கையையும், வானத்தையும் வசப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தருவது மன உறுதி தான்.. நாம் சராசரியாக வாழும் 60 அல்லது 70 ஆண்டுகளில் இந்த பூமிக்கு வெறும் பாரமாக மட்டும் வாழ்ந்து விட்டு மறைகிறோமா? அல்லது, பாரமாகப் பல சுமைகள் நம் தோள்களில் கனத்தாலும் மற்றவர்கள் நம்மைத் தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச் செல்கிறோமா?என்பதைப் பொறுத்துத் தான் வரலாறு நம் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கிறது.
வகை: சமையல் குறிப்புகள்
1. குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். 2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து மிதமான சூட்டில் வதக்கவும். 3. உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். 4. குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி சிறிது கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான எளிமையான குடைமிளகாய் உருளை மசாலா தயார்.
வகை: வாழ்க்கை பயணம்
ஒரு மனிதன் தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறானா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். பொதுவாகவே நாம் நம்மைப்பற்றி நினைப்பதை விட, இரு மடங்கு சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டவர்களாகத் தான் இருக்கிறோம். 1. ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் இருந்தது போல், தற்போது இருக்க மாட்டீர்கள். வாழ்க்கையிலும் மனதளவிலும் பல மாற்றங்களை அடைந்திருப்பீர்கள். 2. வாழ்க்கையில் பல கடினமான சூழல்கள் பலவற்றைக் கடந்து வந்திருப்பீர்கள். அந்தப் பயணம் உங்களை தைரியசாலியாக மாற்றியிருக்கும். 3. பலருக்கு இலக்குகள் என்றால் என்னவென்றே தெரியாதபோது, நீங்கள் உங்களுடைய இலக்குகள் மீது மிகவும் கவனத்தை செலுத்துவீர்கள்.
வகை: நீதிக் கதைகள்
மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வைக் குறைந்து போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசினால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக மன்னன், அறிவித்த செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது. குருநாதா! வெள்ளை யானை கூட இருக்கிறதா? எனக் கேட்டான், மட்டி. தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன். குருவே! அந்த யானையைப் பிடித்து வர தைரியம் இருக்கிறதா? என்றான், முட்டாள். உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது! கோழையே! என்னால் முடியாத காரியம் எதுவும் இல்லை? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் நான் போக விரும்பவில்லை, என்றார் குருவே! வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானையின் மேல் சுண்ணாம்பினால் வெள்ளை அடித்து விட்டால், கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்றான், மூடன்.