தலைப்புகள் பட்டியல்

பஞ்சாங்கம் பற்றிய சிறு விளக்கங்கள்
பஞ்சாங்கம் பற்றிய சிறு விளக்கங்கள்

வகை: ஜோதிடம்: அறிமுகம்

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர் பஞ்சாங்கம். திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெறவேண்டுமானால் நாட்களை அடிப்படையாக வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பாவங்கள் அகல வேண்டுமானால் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நோய்கள் தீர வேண்டுமானால் யோகத்தை அடிப்படையாக வைத்து வழிபட்டு வர வேண்டும்.

உங்க வீட்டில் சாம்பிராணி போட்டால் முதல்ல 'இத' படிங்க.. உங்க நல்லதுக்கு தான்!
உங்க வீட்டில் சாம்பிராணி போட்டால் முதல்ல 'இத' படிங்க.. உங்க நல்லதுக்கு தான்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

இந்து மதத்தில் சாம்பிராணிக்கு தனி சிறப்பு உண்டு. அதுபோல, வீட்டில் சாம்பிராணி போடுவது வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை, ஒரு ஹோமம் செய்ததற்கு சமம். மேலும், ஹோமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை சாம்பிராணி போடுவதன் மூலம் நாம் பெறலாம். அதுமட்டுமின்றி, இதன் பின்னால், பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஆனால், அதுகுறித்து பலரும் தெரிவதில்லை. பொதுவாகவே, வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தலைக்கு குளித்த பிறகு சாம்பிராணி போடுவது வழக்கம். இன்றும் பலர் தங்களது வீடுகளில் இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். மேலும், வீட்டில் ஒவ்வொரு சுப காரியம் செய்யும் போதும், கோயிலில் வழிபாட்டின் போதும், சாம்பிராணி போடுவது வழக்கம். வீட்டில் சாம்பிராணி போடுவதால் ஜோதிட நன்மைகள்: வீட்டில் சாம்பிராணி போடுவதின் மூலம் ஏவல், பில்லி சூனியம், செய்வினை, கண் திருஷ்டி, நவகிரக தோஷம் போன்ற அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதுமட்டுமின்றி எதிரிகள் தொல்லை ஒளியும் இறந்தவர்களின் சாபம் நீங்கும். சாம்பிராணியை வீட்டில் மட்டுமல்லாமல் தொழில் செய்யும் இடத்தில் போடுவதன் மூலம் தொழில் முன்னேற்றம் அடையும், லாபம் கிடைக்கும், வியாபாரம் பெருகும். குறிப்பாக, வீட்டில் எதிர்மறை சக்திகள் நீங்கும். வீட்டில் அமைதியின்மை, தூக்கமின்மை, தீராத நோய்கள் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே
உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே

வகை: நலன்

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..! ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..! ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்! உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும் பிடி சாம்பலாகி விடும்..! புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...! ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..! ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக, இருப்பது உன் உடலே...! அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..! உன் அக குடும்பம் சரியில்லை என்றால் சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..! உன் உள் குடும்பம் உன் உடலே! அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும் உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

நேர்மைக்கு கிடைத்த பரிசு
நேர்மைக்கு கிடைத்த பரிசு

வகை: நீதிக் கதைகள்

சாம் ஒரு பேராசை மற்றும் சுயநலவாதிக்காரர். அவர் எப்போதும் நிறைய பணம் சம்பாதிக்க விரும்பினார். அவர் தம் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பலத்தையே அளித்து வந்தார். ஒரு நாள், அவர் தன் வாழ்க்கையை மாற்றிய ஒரு பாடத்தை கற்றுக்கொண்டார். ஒரு நாள் 50 தங்க காசுகளை வைத்திருந்த பையை தொலைத்துவிட்டார். சாமும், அவனது நண்பர்களும் பையை தேட ஆரம்பித்தனர், ஆனாலும் அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது. சில நாட்களுக்குப் பிறகு, சாமிடம் வேலை செய்யும் ஒருவரின் பத்து வயது மகளிடம் அந்த பை சிக்கியது, அவள் அதைப் பற்றி தந்தையிடம் சொல்ல அவரது தந்தை சாமிடம் எடுத்துச் செல்ல முடிவெடுத்து பையை சாமிடம் ஒப்படைத்து 50 காசுகள் சரியாக உள்ளதா? என சரி பார்த்துக் கொள்ள சொன்னார்.

எந்தந்த கோவிலுக்கு சென்றால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா...‌?
எந்தந்த கோவிலுக்கு சென்றால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா...‌?

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

பொதுவாக கோவிலுக்கு பலரும் எதையாவது வேண்டியே செல்கின்றோம். அவ்வாறு செல்லும், இடத்திலுள்ள கடவுள்கள், தங்களுடைய கடமையை மட்டுமே செய்வர். அதை நாம் தெரிந்து கொள்ளாமல், கோவிலுக்குச் சென்று வேண்டுகின்றோம். பின்னர், கடவுள் நமக்குத் தரவில்லை. அதனால், அவர் கடவுள் இல்லை என்று குறை கூறுகின்றோம்.

கஞ்சனூர் சுக்கிர பகவானை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
கஞ்சனூர் சுக்கிர பகவானை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூர் அருள்மிகு கற்பகாம்பிகை சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிர ஸ்தலாகும். 2. இது மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானது. 3. காவிரியின் வடகரை ஸ்தலங்களில் இது 36வது ஸ்தலமாக விளங்கி வருகிறது. 4. கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சனூருக்கு அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன. 5. பலாசவனம், பராசரபுரம், அக்னிபுரம், கம்சபுரம், முக்திபுரம், பிரம்மபுரி என்னும் பல பெயர்களால் கஞ்சனூர் அழைக்கப்படுகிறது. 6. 1,500 ஆண்டு காலத்திற்கு முன்னதாக, மதுரை ஆதீனத்தை நிறுவியருளிய சீர்காழியில் அவதரித்த சைவசமயக்குரவர் நால்வரில் முதல்வரும், சைவ சமயத்தின் தனிப்பெருந் தலைவருமான திருஞான சம்பந்தப்பெருமான் எழுந்தருளி தரிசித்த தலம் இது. 7. சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகளில் இத்தலம் “விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றார், நாட்டுக் கஞ்சனூர் என்றும், இறைவன் அக்னீஸ்வரம் உடையார் என்றும்” குறிக்கப்பெற்றுள்ளன. 8. இத்தலத்தின் மூர்த்தியின் நாமம் சுக்கிர பகவான் என்று அழைக்கக்கூடிய ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆகும். அக்னீஸ்வரப் பெருமானே, சுக்கிர பகவானாக விளங்கி வருகிறார். 9. ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்து அற்புதங்கள் பல செய்த திருத்தலம் இது. இந்த ஸ்தலத்தில் பராசர முனிவருக்கு ஏற்பட்ட சித்தப்பிரமை நீங்கியது. 10. பிரமதேவருக்கு திருமணக்கோலக் காட்சி கிடைத்தது. அக்னிக்கு பாண்டுரோகம் தீர்ந்தது. கம்சனுக்கு மூத்திர நோய் தீர்ந்தது.

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில்
அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீசக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீசக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை. அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது. இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும் அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது. ஆரஞ்சு கலரில் முகப்பு. ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில். அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று. அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன். 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்றுதான் பகவதி அம்மன் என்பது சிறப்பு. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப்பிரபலமான கோயில்.

சிவ பக்தனின் பாவத்தை போக்க புல் சாப்பிட்ட கல் நந்தி கதை
சிவ பக்தனின் பாவத்தை போக்க புல் சாப்பிட்ட கல் நந்தி கதை

வகை: ஆன்மிக பக்தி கதைகள்

ஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும், தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்த கன்று துடி துடித்து இறந்து போனது. அந்தக் கன்று, ஹரதத்தரருக்கு சொந்தமானது. பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகா பாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவ சர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்த போது, வாசல்படி தலையில் இடித்து 'சிவ, சிவா' என்று கத்தினான். குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர், 'நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் எல்லாம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப்போகிறது' என்று தேவ சர்மாவுக்கு ஆறுதல் கூறினார். ஆனாலும் கூட ஊர் மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரை விட்டு விலக்கியே வைத்திருந்தார்கள். ஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வரு மாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர். அப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, 'நீ சிவ... சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கி விட்டதாக நான் கூறினேன்.

கல்யாண வயதில் பெண்ணோ, பிள்ளையோ இருந்து, விரைவில் கல்யாணம் ஆகனுமா
கல்யாண வயதில் பெண்ணோ, பிள்ளையோ இருந்து, விரைவில் கல்யாணம் ஆகனுமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

கீழ்கண்ட ஸ்லோகத்தை 48 நாட்கள் சிரத்தையுடன், பிரார்த்தனை செய்து தினமும் சொல்லி வர திருமணம் கை கூடும்.. ஆனால், அதற்கு முன், திருவீழிமிழலை (மாயவரம் to பேரளம் செல்லும் சாலையில் சென்று ஒரு பிரிவில் இறங்கி செல்ல வேண்டும் ) என்ற ஒரு ஸ்தலம் செல்ல வேண்டும். இந்த ஸ்தலம், இதற்கான பரிகார ஸ்தலம்.. இங்கு மாலை வாங்கி சாற்றி, பெண்ணோ, பிள்ளையோ அணிந்து, சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சனை செய்து கொண்டு, ஸ்தலத்தில் உள்ள ஒரு ஸ்தம்பத்தை, சுற்றி வந்து வேண்டிக்கொண்டு வந்து விட்டு, இந்த ஸ்லோகம் 48 நாள் சொல்லிவர, திருமணம் கை கூடும். அந்த கோவில் உள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ள ஸ்லோகம் திருமணம் முடிந்து , திருமண மாலையுடன் சென்று, பிரார்த்தனை செலுத்தி, திருமண மாலை மற்றும், 48 நாட்களுக்கு முன் அணிந்து அங்கு இருக்கும் ஸ்தம்பத்தை சுற்றிய மாலை இரண்டையும், கோவில் தெப்பக்குளத்தில் போட வேண்டும் என்பது முறையாம்.. லோகா சமஸ்தா சுகினோ பவந்து.. சர்வேஜனா சுகினோ பவந்து..

தெய்வங்களுக்கும் கர்மா கணக்கு உண்டு தெரியுமா
தெய்வங்களுக்கும் கர்மா கணக்கு உண்டு தெரியுமா

வகை: கர்மா

செய்த தவறுக்கு, தெய்வமாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆம், உப்பு தின்னவன், தண்ணீர் குடித்து தான் ஆகனும். நாம் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. பின், நமக்கு ஏன் இந்த கஷ்டத்தை ஆண்டவன் கொடுக்கிறான் என்ற சந்தேகம், நம்மில் பலருக்கும் ஏற்படும். ஏனெனில், செய்த தவறை நியாயப்படுத்துவது, மனிதனின் பிறவி குணம். ஆனால், இறைவன் அப்படிபட்டவன் அல்ல. செய்த தவறுக்கு, தண்டனை வழங்குவதில் அவன் தான் சரியான நீதிபதி. இதற்கு, மஹாபாரத்திலேயே உதாரணம் இருக்கிறது. குருஷேத்திரம் யுத்தம் முடிந்து விட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி, துரோணரின் மகன், அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. ‘என் தந்தை சத்தியவான்; செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால், அவரை, பாண்டவர்கள், நான் இறந்ததாக பொய் சொல்லி, அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன’ என, மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான்.

வெஜ் புலாவ் செய்வது எப்படி?
வெஜ் புலாவ் செய்வது எப்படி?

வகை: சமையல் குறிப்புகள்

அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு தக்காளி, உப்பு சேர்த்து நன்கு கிளறி தேங்காய்ப்பால், தண்ணீருடன் அரிசியைச் சேருங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்றால் என்ன?

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும்,