வகை: ஆன்மீக குறிப்புகள்
வாழ்க வளமுடன் என்பது எதைக்குறிக்கிறது...? வாழ்க என்பது வாழ்த்துச்சொல். வளமுடன் என்பது ஒரு நிறைவுத்தன்மையை குறிக்கும். வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத்தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம். ஒருவன் எப்போது நிறைவுத்தன்மை அடையமுடியும்? தேவைகள் பூர்த்தியடையும்போது நிறைவுத்தன்மை ஏற்படும். தேவைகளை எப்படி பட்டியலிடுவது...? மனிதனின் பொதுவான தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.
வகை: ஊக்கம்
நமக்கு எப்போதெல்லாம் குழப்பம், பயம், பதற்றம், கடனை நினைத்து கஷ்டம் இப்படி எது வந்தாலும் அப்போ நீங்கள் பண்ணவேண்டியது ஒண்ணே ஒண்ணுதான் அது அமைதியா இருப்பது தான் அந்த மாதுரி கஷ்டமான நேரத்தில் நீங்கள் அதையே யோசிக்கும்போது இன்னும் உங்களுக்கு குழப்ப நிலைதான் வரும் என்ன கஷ்டம் வந்தாலும் அதை விட்டு கொஞ்சம் தள்ளி போங்க , இல்ல முடியலைன்னா ஒரு நாள் 2 நாள் லீவு போட்டு எங்கேயாவது தனியா போய்ட்டு வாங்க வீட்ல கணவன் மனைவி சண்டை வேற எந்த பிரச்சனையாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் அமைதியா மட்டும் இருங்க , எதை பற்றியும் ஆழ்ந்து யோசிக்கலாம் வேண்டாம் நிச்சயம் அந்த அமைதிக்கு பிறகு ஒரு நல்ல முடிவு நீங்க எடுப்பிங்க அந்த அவசரமான நேரத்தில் மட்டும் நம்ம தெளிவாக இருந்துட்டா போதும் அதன்பின் நம்ம சரியாக தான் இருப்போம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
தினசரி பூஜை செய்ய வேண்டும் எனப் பலருக்கு ஆசையிருக்கும். ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை. மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும். 1. அபிஷேகம். 2. மந்திர புஸ்பம். 3. தூபம். 4. தீபம். 5. நைவேத்தியம். 6. ஆராதனை 1. அபிஷேகம். இரண்டொரு துளி தண்ணீரினை ( பச்சை கற்பூரம், கிராம்பு பொடி கலந்த தூய பன்னீர் சிறப்பானது. ) நாம் பூஜை செய்யப் போகும் தெய்வத்தின் உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். உருவச் சிலை, படம் இல்லாதவரகள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி நீரினை தூய பாத்திரத்தில் சேர்க்கலாம். 2. மந்திர புஸ்பம். அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும். உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம். பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை மீண்டும் மீண்டும் 16 தடவை கூறி பூ சேர்க்கலாம். முடிந்தவர்கள் 108 தடவை பூ சமர்பிக்கவும். இறுதியில் தங்களை வணங்கி பூ சேர்க்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பூ கிடைக்காதவர்கள் மந்திரம் மட்டும் சொல்லி வணங்கலாம். மந்திரம் என்றதும் ஏதோ மிகப் பெரிய விஷயமாக எண்ண வேண்டாம். ஓம் அதனைத் தொடர்ந்து தெய்வத்தின் பெயர் இறுதியில் போற்றி. இது எளிமையான மந்திரமாகும். உதாரணமாக வினாயகருக்கு என்றால் ஓம் வினாயகப் பெருமானே போற்றி போதுமானது. முருகனுக்கு என்றால் ஓம் முருகப் பெருமானே போற்றி ஆகும்.
வகை: அம்மன்
1.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க ஓம் சத்ருசம்ஹாரி சங்கடஹரணி மம மாத்ரே ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய சர்வ சத்ரூம் நாசய நாசய 2.செல்வவளம் பெருக க்லீம் வாராஹமுகி ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா
வகை: பொது தகவல்கள்
மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். #SANDBOA என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம். இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்ந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை.
வகை: சுவாரஸ்யத் தகவல்கள்:
அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்னும் பல அமானுஷ்ய, அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத அதிசயம் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தை பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரே ஒரு ஊரில் உள்ள மக்கள் மட்டும் வானத்தை பார்க்கமாட்டார்கள். மாறாக அங்குள்ள கோவிலிற்கு சென்று அறிவார்கள். ஆம். மழை வருமா? இல்லையா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அதிசய கோவில் உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.... உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்திருக்கிறது பகவான் ஜெகந்நாதர் ஆலயம். சுமார் 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலின் மேற்கூரையில் இருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது.
வகை: சுவாரஸ்யத் தகவல்கள்:
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்கு கூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
வகை: அனுபவம் தத்துவம்
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.. அது உங்களை மட்டும் அல்ல, உங்களை சுற்றி. இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். விழிப்பதற்க்கே உறக்கம். வெல்வதற்க்கே தோல்வி. எழுவதற்க்கே வீழ்ச்சி. உன்னை அன்பு செய்வதற்க்கே என் இதயம் கோடி உறவுகள் இருந்தாலும் யாவரும் இங்கு தனி மனிதனே யாரும் யாருக்காகவும் இல்லை என்பதே மகத்தான உண்மை
வகை: ஆன்மிக பக்தி கதைகள்
ஒரு சமயம், ஆர்வமுள்ள பக்தர் ஒருவர், மகான் ஒருவரிடம், “கடவுள் எப்படி இருப்பார்? எங்கு இருக்கிறார்? அவரை எப்படி உணர முடியும்?” என்று விவேகமுள்ள கேள்விகள் கேட்டார். அதற்கு மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள், நீயும் கடவுள் தான்” என்றார். அதற்கு பக்தர், “அப்படியானால் என்னால் ஏன் கடவுளை உணர முடியவில்லை?” என்று வினவினார். அதற்கு அந்த மகான் மிக அழகாக, “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார், ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார். வெவ்வேறு வழிகளில், மகான் கடவுள் தொடர்பான உண்மையை அந்த பக்தருக்கு புரிய வைக்க முயற்சித்தார். ஆனால் அந்த பக்தர் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார். பிறகு அந்த மகான் அவரிடம், ” ஹரித்வாருக்கு செல்லும்படியும், அங்கு ஓடும் கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது எனவும்” அந்த அபூர்வமான மீனுக்கு மனிதர்கள் போலவே பேசும் குரல் இருப்பதால் அந்த மீன் உன் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் என்றும் சொன்னார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.
வகை: தன்னம்பிக்கை
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் மனசுக்குள் நிறைந்துள்ளன. நீங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை வெளிக் கொண்டு வந்து, முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்... அமைதி கிடைக்கும்.
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
நாம் காலையில் கண் விழிக்கக்கூடிய நாளின் ஆரம்பம் நேர்மறையாக இருந்தால், அந்த நாள் முழுவதும் உங்களுக்கு மிக சுகமாகவும், நேர்மறையான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.