தலைப்புகள் பட்டியல்

வாழவைக்கும் வாழைமரம் பற்றிய அரிய தகவல்கள்
வாழவைக்கும் வாழைமரம் பற்றிய அரிய தகவல்கள்

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

வாழைமரத்திற்கும்,இந்துக்களின் இறை வழிபாட்டுக்கும் சம்பந்தம் உண்டு. இதற்கு வாழை மரம் தோன்றிய கதையை பற்றி முதலில் பார்ப்போம்

ஒவ்வொரு ராசிக்கேற்ற விநாயகர் வழிபாடு பற்றிய பதிவுகள்
ஒவ்வொரு ராசிக்கேற்ற விநாயகர் வழிபாடு பற்றிய பதிவுகள்

வகை: விநாயகர்: வரலாறு

முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். ஏனெனில், எந்த ஒரு செயலையும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடியும் என்பது நம்பிக்கையாகும். எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் நன்மைகள் உண்டாகும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். ரிஷப ராசிக்காரர்கள் விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட சிறப்பான வாழ்க்கை அமையும்.

திருஷ்டி பரிகாரங்கள் பற்றிய சிறப்பு பதிவு
திருஷ்டி பரிகாரங்கள் பற்றிய சிறப்பு பதிவு

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஆரத்தி, திலகம் : விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. வாழை மரம் : விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான். வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள் : வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.

இன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை

வகை: இன்றைய சிந்தனை

சிலருக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும் மனக் கவலை, மன இறுக்கம், மன உளைச்சலுடன் இருப்பார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கண்டும் திருப்தியடைய மாட்டார்கள்.* ஆனால் மகிழ்ச்சி என்பது தேடித்தேடி சேர்க்கும் பொருட்களில் இல்லை. தேடிய செல்வம் அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் இறுதிக்காலத்தில் உடன் வராது.* வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் முக்கியமான மகிழ்வுகளை இழந்து விடுகிறார்கள்... பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு முடிவுரையாகும். ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது.* ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர்.* இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான்..* தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.* அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்திய அவன் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான்.*

சர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன்
சர்ப்ப தோஷம் போக்கும் நவநீதகிருஷ்ணன்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

‘நவநீதம்’ என்றால் ‘வெண்ணெய்’. தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சிறப்பம்சம்: முன் மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சன்னிதிகள் உள்ளன. இச்சன்னிதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தி இங்கு பாஞ்சராத்ர ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மறுநாள் மாலையில் பகவத் கீதை பாராயணம், பிருந்தாவன தீபக்கேளிக்கை கோலாட்டம் ஆகியவை நடக்கின்றன. மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெய்யுடன், சிரித்த முகத்துடன், குழந்தையாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகில் உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது.

மோதிர விரலால்
மோதிர விரலால் "ஓம்" என்று எழுதுங்கள். குளிக்கும் போது நிகழும் "அதிசயத்தை" பாருங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

குளிக்கும் போது ஒரு சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பது ஐதீகம். குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும். கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும். தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள்.

பூஜை முடிந்ததும் தீபம்  தானாக அணைய விடலாமா
பூஜை முடிந்ததும் தீபம் தானாக அணைய விடலாமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

கருவறையில் அலங்கார தீபம் காட்டியதும் அதை அணைத்து விடுவார்கள். பஞ்சமுக தீபம், கும்ப தீபம் போன்றவற்றையும் வேலை முடிந்ததும் அணைத்துவிடுவார்கள். பூஜை முடிந்ததும் திருவிளக்கை அணைக்கலாம். கோவிலில் பக்தர்கள் வந்துகொண்டிருந்தால், அவர்களுக்காக திருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும். வீட்டு பூஜையின்போது... அந்த பூஜை முடிந்ததும் அணைத்து விடலாம். விளக்கைத் தானாக அணையவிடக்கூடாது. திரி எரிதல் அபசகுனம். அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம் ஏற்காது. விளக்கை இறை வடிவமாகப் பார்க்கும் நாம் உபசாரத்துடன் அணைக்க வேண்டும். அணைப்பதற்கு முன் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை அளித்து அணைக்க வேண்டும்.

மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணி

வகை: சமையல் குறிப்புகள்

மட்டனை நன்கு கழுவி அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர், மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதனுடன் பெரிய வெங்காயம் அரைத்துக் வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

முருகனுக்கும் வேலுக்கும் உள்ள சிறப்பு பற்றிய பதிவு
முருகனுக்கும் வேலுக்கும் உள்ள சிறப்பு பற்றிய பதிவு

வகை: முருகன்: வரலாறு

நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது. வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை" என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு. சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க தேவி பார்வதி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனை கொண்டு சூரனை வதைக்க சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்தி வேல் என்ற பெயரும் உண்டு.

டீ, காபி குடிப்பவர்கள் கவனத்துக்கு -  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை
டீ, காபி குடிப்பவர்கள் கவனத்துக்கு - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை

வகை: பொது தகவல்கள்

உணவுக்கு முன்பும் பின்பும் டீ,காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், மழை என எந்த பருவநிலையாக இருந்தாலும் இந்திய மக்களில் பெரும்பாலானோர் டீ,காபி குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கடும் வெயில் காலத்திலும் கூட இந்தியாவில் டீக்கடைகளை கூட்டம் நிற்பதை பார்க்கமுடியும். நிலைமை இப்படியிருக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதன் கிளை அமைப்பான தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து இந்திய மக்களுக்கான 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் டீ,காபி குடிக்கும் பழக்கம் அளவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீ மற்றும் காபியில் காஃபின் (caffeine) கலந்திருப்பதால், அது மத்திய நரம்பு மண்டலத்தையும் மற்றும் உடலியல் சார்புநிலையைத் தூண்டுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில்:
அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில்:

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில், தொலைவிலிமங்கலம், தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இரட்டை திருப்பதி என்றழைக்கப்படும் திருத்தொலைவில்லிமங்கலம் 108 வைணவத்திருத்தலங்களிள் ஒன்று. இங்கு இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களுக்கும் தனித்தனியே பெயர் சூட்டியுள்ளதால் நவதிருப்பதிகளின் கணக்கில் இத்தலத்தை இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. ஆத்ரேய சுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன.

வெறும் வயிற்றில் முருங்கை நீர் அருந்துவதில் என்னென்ன நன்மைகள் தெரியுமா
வெறும் வயிற்றில் முருங்கை நீர் அருந்துவதில் என்னென்ன நன்மைகள் தெரியுமா

வகை: பொது தகவல்கள்

வெறும் வயிற்றில் முருங்கை நீர் அருந்துவதில் என்னென்ன நன்மைகள் தெரியுமா? பழங்காலத்திலிருந்தே உணவாகவும், மருந்தாகவும் செயல்படக்கூடிய சிறந்த காய்கறிகளில் ஒன்று முருங்கை ஆகும். இது பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.முருங்கையானது பாலை விட கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகவும், கேரட்டை விட வைட்டமின் ஏ சத்துக்களை பத்து மடங்கு அதிகம் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் முருங்கையானது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது, இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல், முடி வளர்ச்சிக்கு, மற்றும் கல்லீரல் நச்சுத்தன்மையாக்க என பல்வேறு நன்மைகளைத் தருகிறது. முருங்கையின் இலைகள், தண்டுகள், பூக்கள் என அனைத்தும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் முருங்கையிலிருந்து தயாரிக்கப்படும் முருங்கை நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. முருங்கை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, காய்ச்சிய நீரை அருந்தலாம். அல்லது இலைகளை சூரிய ஒளியில் உலர வைத்து முருங்கை பொடி செய்யலாம். இவை பல்வேறு நோய்களுக்கும், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் உதவுகிறது. வெறும் வயிற்றில் முருங்கை நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்