வகை: தன்னம்பிக்கை
🌺 மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை🍂 🌺 உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது🍂
வகை: முருகன்: வரலாறு
வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரை தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தானே பயிற்சி கொடுக்கிறீர்கள் என்று வினவினார். அதற்கு துரோணர், ஆம் மன்னா என்று பதிலளித்தார். தன் சீடர்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி பயிற்சி அளிப்பதே ஒரு நல்ல ஆசானுக்கு அழகு. நீங்கள் ஒரு நல்ல ஆசானாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார் திருதிராஷ்டிரர். திருச்சிராஷ்டிரரின் பேச்சில் ஏதோ ஒளிந்துள்ளது என்பதை அறிந்த துரோணர். கௌரவர்கள் தன்னை பற்றி தன் தந்தையிடம் ஏதோ குறை கூறி இருக்கிறார்கள் என்பதை யூகித்துக்கொண்டார். மன்னா நான் அனைவரையும் சமமாக தான் நடத்துகிறேன் ஆனால் அவரவரின் தனிப்பட்ட முயற்சி மற்றும் ஆர்வத்தை பொறுத்தே ஒவ்வொருவரும் பாடத்தை கற்கின்றனர் என்றார் துரோணர். அதன் பின் மன்னரிடம் விடை பெற்று தன் குடிலிற்கு திரும்பினார்.
வகை: அப்பா
ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் "வயிற்றில்" சுமக்கிறாள் ஒரு ஆண் வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்தை "இதயத்தில்" சுமக்கிறான்.... "தாய் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்வாள்.... தந்தை அதை தான் மனதில் தாங்கிக் கொண்டிருக்கிறான்....
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
400 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் இங்கு அமைந்திருக்கிறது. இக்கோயில் குறித்த தெளிவான வரலாறு ஏதுமில்லாவிடினும், செவி வழிச் செய்திகள் இக்கோயிலின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. கோயிலின் பழமையைப் பறைசாற்றும் வகையில் சில கல்வெட்டுக்கள் தென்படுகின்றன. வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா துடுப்பதி அருகேயுள்ள ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே பசுமை போர்த்திய பின்னணியில் அமைந்திருக்கிறது இக்கோயில். மிகப் பிரம்மாண்டமான வேப்பமரம் கோயிலின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது. மரத்தடியில் எவ்வித சிலைகளும் இல்லை. ஐந்து கற்கள் மட்டுமே அமைந்துள்ளன. இவற்றையே வன வேங்கடப் பெருமாளாகவும், தாயாராகவும் உருவகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீரங்ககவுண்டன்பாளையத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வனவேங்கடப் பெருமாளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
அலங்காரம் முடிந்து முதலில் ஒன்பது திரியிட்ட தீப ஆரத்தி காட்டப்படும். இது ஒன்பது கோள்களையும் வணங்கி பின் அவற்றை சாட்சியாக வைத்து காட்டப்படுவதாக ஐதீகம். அடுத்து, எழு திரியிட்ட தீபம். இது மனித உடலுக்குள் உள்ள ஏழு ஆதாரங்களின் வழியாக பிரபஞ்ச பேராற்றல் உள் நுழைந்து சக்கரங்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அதற்கடுத்து, ஐந்து முக தீபம். இது பஞ்ச பூதங்களை சாட்சியாக வைத்து ஐந்து புலன்களை நிர்வகித்தால் பழக்க பதிவுகளில் இருந்து விடுபட்டு விளக்க பதிவுகளுக்கு வர முடியும் என்பதன் விளக்கத்திற்குத்தான். அடுத்து, மூன்று முக தீப ஆராதனை .
வகை: ஆன்மீக குறிப்புகள்
முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும். பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும்.
வகை: கிருஷ்ணர்
கலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார்? அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு? கலியுகம் பிறக்க போவதை குறித்து கடவுள் கிருஷ்ணர் நம்மிடம் என்ன கூறுகிறார் தெரியுமா? அந்த காரணம் பற்றி தான் விளக்கமாகப் பார்க்கலாம்.
வகை: ஜோதிடம்: அறிமுகம்
ஏழரை சனி ஒருவரின் ஆயுட்காலத்தில் மூன்று முறை பிடிக்கும் முதல் சுற்று சனியை மங்கு சனி என்றும், இரண்டாவது சுற்று சனியை பொங்கு சனி என்றும், மூன்றாவது சுற்றை மாரக சனி என்று கூறுவோம்
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்தால் நன்மை நடக்கும் என்பது எல்லோருடைய கூற்று. அது உண்மையும் கூட!
வகை: இராமாயணம்: குறிப்புகள்
'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில் ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும்.
வகை: இராமாயணம்: குறிப்புகள்
இராமாயண காலத்துக்கு முந்தய கால கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கப் பட்டு தன் நிலையை இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்டு இராமாயண காலத்தில் மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் ஶ்ரீபாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப்பெற்றவள். இதிகாசம் கூறும் பஞ்சபதிவிரதைகளில் முதன்மையானவள்.