வகை: ஆன்மீக குறிப்புகள்
பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள் ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும் இருந்தாலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று பார்த்தாலும் அது பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். பிரம்மஹத்தி தோஷமானது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஏற்படும்.
வகை: பெண்கள்
ஒரு பெண் கோபமாக இருக்கும்போது, அவள் சொல்வதில் பாதிக்கு மேல் அவள் அர்த்தப்படுத்த மாட்டாள். முடிந்தால் அவளை அமைதிப்படுத்த எப்போதும் அவளை அணைத்துக்கொள்ளுங்கள். ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமான நேரம் அவள் உண்மையாக நேசிக்கும் ஆணிலிருந்து விலகி இருக்கும்போது, அவள் கஷ்டப்படலாம். ஒரு பெண் ஒரு ஆணை நம்புவதற்கு நேரம் எடுக்கும், அவள் நம்பிய பின் அவள் மனதை மாற்றுவது கடினம், ஆனால் நீங்கள் குழப்பம் அடைந்தால், நீங்கள் அதை மறந்துவிடலாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்
திருவிழா: ராமநவமியன்று இங்கு விசேஷ பூஜைகள் உண்டு. மாசிமகத்தன்று ராமனும், சீதையும் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குவர். தல சிறப்பு: ராம சகோதரர்கள் நால்வரும் இங்கு அருள்பாலிக்கிறார்கள். மற்ற தலங்களில் கதாயுதத்துடன் காட்சிதரும் அனுமான் இங்கு வீணையுடன் காட்சி தருகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு ராமசாமி திருக்கோயில்,கும்பகோணம்- 612001, தஞ்சாவூர் மாவட்டம். பொது தகவல்: ராமனுக்கு தனிக்கோயில் பல ஊர்களில் இருக்கிறது. பரதனுக்கு தனிக்கோயில் கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ளது. ஆனால், ராம சகோதரர்கள் நால்வரும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் சேர்ந்து காட்சி தருகின்றனர். இதில் கும்பகோணம் ராமசுவாமி கோயிலும் ஒன்று.
அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்). டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மாமேதை.இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
வகை: சித்தா மருத்துவம்
அனைத்து நோய்களும் தோன்ற காரணமாக இருப்பது இரண்டு ஒன்று மலம் மற்றொன்று கபம் இவை இரண்டில் எது காட்டினாலும் ஒரு நோய் தோன்ற இதுவே கரணம் என்று சித்த நூல் குறிப்பிடுகிறது,
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
பசி எடுப்பது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், நன்றாக சாப்பிட்டும் பசி எடுத்தால், இது உடலில் உள்ள பிரச்சனையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். அதற்கான காரணங்கள்.....
வகை: சமையல் குறிப்புகள்
சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்யவேண்டிய ஒரு அருமையான கலை. பல்வேறு நுணுக்கங்கள் அதில் அடங்கியுள்ளன. சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் சமையலை மிகச் சிறப்பாக்கிவிடும். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 பயனுள்ள குறிப்புகளை இங்கு காணலாம்!!!
வகை: அனுபவம் தத்துவம்
வயது 10 முதல் 25 வரை தீய பழக்கங்களை குறைத்துக் கொள் (கழித்தல்) நல்ல பழக்கங்களை கூட்டிக் கொள் (கூட்டல்) திறமையை பெருக்கிக் கொள் (பெருக்கல்) நல்ல வாழ்க்கையை வகுத்துக் கொள் (வகுத்தல்)
வகை: சமையல் குறிப்புகள்
வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நைஸ் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வகை: விநாயகர்: வரலாறு
நாம் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மாலைகளால் மாலை சூட்டி வழிபடுகின்றோம். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது. விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள். பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர்தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே.
வகை: ஆன்மீக குறிப்புகள்
பொதுவாக சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும். குங்குமம் என்பது இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அவற்றை புருவ மத்தி மற்றும் நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அணிவது அல்லது பூசுவது ஆகியவற்றின் பின்னணியில் எளிய அறிவியல் மற்றும் உடற்கூறு இயல் காரணிகள் இருப்பதை ஆன்றோர்கள் அறிந்துள்ளார்கள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நவகிரகங்களை வழிபடும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். இதேபோல ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். மேலும் இப்படி சுற்றுவது சரிதானா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. உண்மையில் நவகிரகங்களை இப்படித்தான் சுற்ற வேண்டுமா... நவகிரக வழிபாடு முறை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்... அப்படி சுற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில் ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அப்படி கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு விதமான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது. குறிப்பாக நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.