தலைப்புகள் பட்டியல்

எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா
எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா

வகை: நட்பு

ஒருவரிடம் பணம், பதவி, ஏதோ ஒரு விதத்தில் வெற்றி இருந்தால் அவர்களைச் சுற்றி அதிகம் பேர் இருப்பார்கள் நிறைய நண்பர்கள் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் அவர்கள் விரும்புவது உங்களை அல்ல. உங்கள் பணத்தை. உங்கள் பதவியை. உங்கள் வெற்றியை. உங்களால் கிடைக்கும் ஆதாயத்தை. நீங்கள் நேரடியாகக் கூட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லை. உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் சில காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்.

  உடல் உஷ்ணத்தை தணிக்கும் மூச்சுப்பயிற்சி
உடல் உஷ்ணத்தை தணிக்கும் மூச்சுப்பயிற்சி

வகை: மருத்துவம்

இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் அக்னி நட்சத்திரமும் சேர்ந்து தனது பங்குக்கு உக்கிரம் காட்டத்தொடங்கி இருக்கிறது. வெப்ப அலையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் உடல் உஷ்ணத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள். வெப்பத்திடம் இருந்து உடலை தற்காத்து குளிர்ச்சி தன்மை நிலவச்செய்ய ஏ.சி. அறையில் நிறைய பேர் நேரத்தை செலவிடுவார்கள். ஏர்கூலரையும் பயன்படுத்துவார்கள்.

வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது எப்படி
வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது எப்படி

வகை: நலன்

குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள்.

பயனுள்ள ஆன்மீக தகவல்கள்
பயனுள்ள ஆன்மீக தகவல்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

1 சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும். 2 துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும். 3 சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு சீட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

 அக்ஷய திருதியை ஸ்பெஷல்
அக்ஷய திருதியை ஸ்பெஷல்

வகை: ஆன்மீக குறிப்புகள்

1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். 5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. 6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

பாட்டி சொன்ன தகவல்
பாட்டி சொன்ன தகவல்

வகை: ஞானம்

உப்பு விலையேறினால் அரிசி விலையிறங்கும். உப்பு விலையிறங்கினால் அரிசி விலை அதிகரிக்கும் என்பார்.

ஒரு வியாபாரியின் கதை
ஒரு வியாபாரியின் கதை

வகை: நீதிக் கதைகள்

அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓட விட்டான்.

என்றும் செல்வ செழிப்புடன்  இருக்க ரகசியங்கள்:
என்றும் செல்வ செழிப்புடன் இருக்க ரகசியங்கள்:

வகை: ஆன்மீக குறிப்புகள்

வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது. மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது. நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.

முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை வழிபாடு
முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை வழிபாடு

வகை: ஆன்மீக குறிப்புகள்

🌞சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. உடல் ஆரோக்கியம், கம்பீரம், அந்தஸ்து போன்றவற்றை தரும் சூரியபகவான் சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த நாளில் விரதமிருந்து முன்னோர்களையும், சூரிய பகவானையும் வணங்கினால் நற்பலன்களை பெற்றிடலாம்.

மணக்குளவிநாயகர் பற்றிய தகவல்கள்
மணக்குளவிநாயகர் பற்றிய தகவல்கள்

வகை: திருத்தலங்கள்

1. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும் தான் உள்ளது . 2. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார். 3. புதுச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு. புதுச்சேரி நகரின் நம்பர்-ஒன் ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

கற்றதும் பெற்றதும்
கற்றதும் பெற்றதும்

வகை: இன்றைய சிந்தனை

ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை நல்ல குணம் என்பது, தனக்குத் தானே உண்மையாக இருப்பது. அறிவுரை என்பது அனுபவத்தில் கற்றுக் கொள்வது. ஒன்றும் செய்யாமல் வயது மட்டும் கூடினால் அனுபவம் கிடைக்காது.

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்
தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை. கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.