வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒவ்வொருவரும், அவரவர் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில், கஷ்டமான, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வார்கள். இப்போது, குருஜியின் அறிவுரைகள், மற்றும் என் அனுபவத்தின் அடிப்படையில், இந்த கடினமான சூழ்நிலைகளை, எப்படி திறம்பட கையாள்வது எனபதை, பகிர்ந்து கொள்கிறேன்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இந்துக்களிடையே மஞ்சள் நிறம் என்றாலே அது புனிதமான நிறம் என்றே கருத்து ஆழமாக பதிந்துள்ளது. திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள் தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.
வகை: முருகன்: வரலாறு
கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம். உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்...
வகை: ஆன்மீக குறிப்புகள்
லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூறப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூறப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.
வகை: சமையல் குறிப்புகள்
கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இந்த உலகில் மனிதர்கள், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் அதாவது செல்வம் வேண்டும். பணம் அதாவது செல்வங்கள் எத்தனையோ வழிகளில் நமக்கு கிடைக்கிறது. அந்த செல்வங்களில் முக்கியமாக 3 வகையான செல்வங்களை நிலையான செல்வங்கள் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஆலயங்களில் இரவு நேரத்தில் கோவில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை ஆகும். அதாவது சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஓரு சேர அமரவைத்து ஆராதனை செய்து தாலாட்டுப்பாடி பூஜிப்பது ஆகும். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும்போது, சிவபுராணம், பதிகங்கள் பாடி வரவேண்டும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
சிவபெருமானிடமிருந்து 64 வகையான பைரவர்கள் தோன்றியது போல, சிவபெருமானுக்கு இருக்கின்ற 64 சிவ வடிவங்களில் ஒருவராக இருப்பவர் ஞானத்தை அருளும் தெய்வமான தட்சிணாமூர்த்தி. அனைத்து கோயில்களிலும் தென் திசை நோக்கி வீற்றிருக்கும் இவரை குரு பகவான் என பலர் அழைக்கின்றனர்.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
இன்று படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் படித்த பல பட்டதாரிகளும், அவர்களது பெற்றோர்களும் படும் மனவேதனையையும், துன்பங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களும், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுபவர்களும் வழிபடக்கூடிய ஆலயமே அக்னீஸ்வரர் ஆலயம்.
வகை: விநாயகர்: வரலாறு
உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
பெண் சாபம்: பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியை கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும் என்கிறார்கள்.