வகை: ஞானம்
குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும். முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும் என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு. காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்து விட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும். அதுபோலத் தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும். அந்த குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும் புண் விரைவில் ஆறிவிடும். இதை குரங்குக்கு சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப் போவதில்லை. ஆனால்,மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே? மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே? மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே மனித மனம் குரங்கு அல்ல என்ற புரிந்து கொள்ளுதல் தான் ”ஞான உதயம்”. இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும்”ஆன்மிகம்” எனப்படுகிறது.
		  
		          வகை: ஆன்மீக குறிப்புகள்
மாதத்திற்கு ஒரு அமாவாசை என்று வந்தாலும், அதில் குறிப்பிடும் படியாக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுவது ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகும். ஆடி அமாவாசையானது மறைந்த நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்படும் நாளாகும். எனவே தான் தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு கண்டிப்பாக எள்ளும்,தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றுவது போல, கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
		  
		          வகை: ஆன்மிக பக்தி கதைகள்
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்! வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல், தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில் கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம். கருப்பசாமியின் மனைவி கருப்பழகி(கருப்பாயி); மகன்- கண்டன்; அண்ணன்-முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை- ராக்காயி. ஐயன் ஐயப்பனும் கருப்பரும்: ஸ்ரீஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத்தாண்டகத் தின் முதல் பாடல் சொல்கிறது. மலையாளத் துரையானை என்னுள்ளத்தில் வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே! என்கிறது அந்தப் பாடல் வரி. கத்தப்பட்டு அருள்மிகு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்.... மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி.. எனப் போற்றுகின்றன! பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த்துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்! பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு எனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது, மொட்டையக்கோனார் என்பவர் எழுதிய... பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு பாடல்! மகா காளன் என்ற கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிறார்.
		  
		          வகை: பெருமாள்
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் அவருடைய கஷ்டம் தீரவே தீராது. மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம விதி பயன் என்பார்கள். கர்ம விதி பயன் கெட்டதை மட்டுமல்ல, நீங்கள் செய்த நல்லதையும் சேர்த்து தான் குறிக்கிறது. எதை விதைக்கிறோமோ! அதை தான் அறுக்கவும் முடியும். நல்லது செய்தால் நல்ல விதி பயனை பெறுவீர்கள். சரி, அப்படி என்றால் நாம் செய்த பாவங்களில் பெரிய பாவம் எது? எந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். 1. பெற்றோர்களை கைவிடுதல்: ‘பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்று கூறுவார்கள். பிள்ளைகளுடைய மனம் பெற்றோர்களை ஏற்காவிட்டாலும், பெற்றோர்களுடைய மனம் பிள்ளைகளை சுற்றி தான் இருக்கும். இது இயற்கையாக நடக்கக் கூடிய ஒரு விஷயம். பெற்றோர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராக பார்க்கப்பட வேண்டியவர்கள். இப்படியான பெற்றோர்களை எந்த ஒரு மனிதன் மதிக்காமல், உதாசீனப் படுத்துகிறானோ? அவன் விமோசனமே இல்லாத பாவத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை வரும். பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்யும் பாவங்களுக்கு எந்த பரிகாரம் செய்தாலும் விமோசனம் என்பது கிடையாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களை இந்த பூமிக்குக் கொண்டு வந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள் தான். அதை மறந்து சுயநலமாக செயல்பட்டால் அதற்கான தண்டனையும் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நீங்கள் 1000 காரணங்கள் கூறினாலும் அதை இறைவன் ஏற்பதில்லை. எனவே தண்டனையை ஏற்க ஆயத்தமாகுங்கள்!
		  
		          வகை: பெருமாள்
மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள். மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். பிருந்தா, பிருந்தாவனி, விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி. துளசியின் கணவன் பெயர் சங்க சூடன். சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. துளசியின் கதை: கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.
		  
		          வகை: ஆன்மீக குறிப்புகள்
ஆடிப்பெருக்கு என்பது காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயத்தை செழிக்க செய்யும் அற்புதமான நாளாக ஆகும். இந்த ஆடிப்பெருக்கில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆடிப்பெருக்கில் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது சிறப்பான அம்சமாக இருக்கிறது. இத்தகைய சிறப்பான நாளாக இருக்கக்கூடிய இந்த ஆடிப்பெருக்கில் செய்ய மறக்கக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. கண்டிப்பாக அதை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அவை என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம். தவறாமல் ஆடிப்பெருக்கு அன்று இந்த முக்கியமான சில விஷயங்களை செய்துவிடுங்கள். 1. முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது. எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் பொழுது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு முதல் வழிபாட்டை முடித்துவிட்டு அதன் பிறகு பூஜையை துவங்குவது வெற்றியைத் தரும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு பின்பு அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபடுங்கள். 2. ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் எனவே தாலி சரடு அணிந்து இருந்தாலும், கயிறு அணிந்திருந்தாலும் சரட்டில் சிறு மஞ்சள் கயிறாவது இருப்பது நல்லது. 3. அப்படி கயிறு இருக்கும் பட்சத்தில் அதையும் நீங்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்ளலாம். புதிதாக சரடு அணிபவர்களும் இந்நாளில் சரடு மாற்றிக் கொள்ளலாம். 4. நல்ல நேரத்திற்குள் நீங்கள் தாலி கயிற்றை மாற்றி விட வேண்டும். நல்ல நேரம் பார்க்காமல் கயிறு மாற்றக்கூடாது. 5. ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் 3பேர் அல்லது 5 பேருக்கு மங்கல பொருட்களை தானம் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. தாம்பூலத்தோடு மஞ்சள், குங்குமம், வளையல், பூ வைத்து தானம் கொடுத்தால் மாங்கல்ய பலம் நீடிப்பதோடு மட்டுமல்லாமல், குல விருத்தியும் உண்டாகும் என்பது ஐதீகம்.
		  
		          வகை: ஜோதிடம்: அறிமுகம்
நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர் பஞ்சாங்கம். திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெறவேண்டுமானால் நாட்களை அடிப்படையாக வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பாவங்கள் அகல வேண்டுமானால் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நோய்கள் தீர வேண்டுமானால் யோகத்தை அடிப்படையாக வைத்து வழிபட்டு வர வேண்டும். காரிய வெற்றி ஏற்பட வேண்டுமானால் _கரணங்களையும், நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும்.
		  
		          வகை: ஆன்மீக குறிப்புகள்
சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான். பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார். சங்கு பெற்ற கதை சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்சஜைனம் எனப்பெயர் பெற்றது. காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார். சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார். திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது. திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.
		  
		          வகை: கிருஷ்ணர்
மகாபாரதப் போரில் நிறைய வீரர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். ஆனால், மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காக தனஞ் உயிரையே விட்டவர் யார் தெரியுமா? அது மட்டுமில்லாமல். மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவர் இவர் மட்டுமே. இதைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம். அர்ஜுனனுக்கும், நாக இளவரசியான உலுப்பிக்கும் அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும் பொருந்திய மகனாகப் பிறக்கிறார் அரவான். குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக காளி தெய்வத்திற்கு தன்னையே பலியிடுவதற்கு சம்மதிக்கிறார் அரவான். ஆனால், தான் சாவதற்கு முன்னால் இரண்டு ஆசைகள் இருப்பதாகக் கூறுகிறார் அரவான். முதலாவதாக, தான் திருமணம் செய்துக் கொண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்றும், இரண்டாவதாக மகாபாரதப் போரை தான் முழுமையாகக் காண வேண்டும் என்றும் கேட்கிறார். நாளைக்கு இறக்கப் போகிறவரை திருமணம் செய்துகொள்ள யாருமே சம்மதிக்கவில்லை. இதனால் கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்துக் கொள்கிறார். அரவான் இறந்த பிறகு விதவைக் கோலம்பூண்டு அனைத்து சடங்குகளையும் செய்கிறார். இந்த நிகழ்வுதான் கூத்தாண்டவர் வழிபாட்டின் மையமாக இருக்கிறது. இதனால் மோகினியாக தங்களை உணரும் அரவாணிகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். முதல் நாள் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அடுத்த நாளே கணவன் இறந்ததால், விதவை கோலம் பூண்டு தாலியை அறுத்து அழுது புலம்புகிறார்கள். இவ்வாறே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது.
		  
		          வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..? இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!! சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும்.
		  
		          வகை: அம்மன்: வரலாறு
ஈரோடு நகரின் மையப்பகுதியில், மீனாட்சி சுந்தரனார் சாலையில், மாநகராட்சி அலுவலகத்தின் எதிர்புறத்தில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஈரோட்டின் காவல் தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் நாச்சியார் சிலையும், மேற்கு பிரகாரத்தில் பரசுராமரும், பட்டாலம்மனும் எழுந்தருளியுள்ளனர். கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தோடு இருக்கும் அன்னையை கண் குளிர வழிபடலாம். இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ் உள்ள இக்கோயிலில், காலை 6 மணிக்கு காலை சந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. ஆடி மாதம் முழுவதும் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
		  
		          வகை: பெருமாள்
இவ்வுலகைப் படைத்து, வழிநடத்தும் இறைவன், அவரவரது பாவ – புண்ணியங்களுக்கு ஏற்ப உயிர்களை பல வகையாகப் படைக்கின்றார். அதேசமயம், அவ்வுயிர்களின் குறைகளைக் களையவும், பல்வேறு திருத் தலங்களில் எழுந்தருளி, இடர் நீக்குகின்றார். அப்படி இறையருள் நிறைந்த ஓர் அற்புத மலைத்தலம் தான் பெரிய அய்யம்பாளையம் ஊமைக்கு வாய் கொடுத்த ஸ்ரீஉத்தமராய பெருமாள் ஆலயம். ‘‘ஓங்கி உலகளந்த உத்தமன்’’ என்கிற ஆண்டாளின் வரிக்கேற்ப உத்தமனாய் வீற்றிருக்கும் திருமால், இங்கு பேச்சுக் குறைபாடுள்ளவர்களை பேச வைத்த காரணத்தால், பேச வாய்க் கொடுத்த உத்தமராய பெருமாள் என்றழைக்கப்படுகின்றார். முன்பொரு சமயம், அய்யம்பாளையத்திலுள்ள மலைமீது ஆடுகளை மேய்த்து வந்தான் ஒரு வாய் பேச முடியாத சிறுவன். ஆதியிலிருந்தே மலை உச்சியில் ‘‘உத்தமராயர்’’ என்கிற பெயருடன் பெருமாள் சிலை ஒன்று இருந்தது. ஆடுகளை மேய்க்க வந்த சிறுவன், புதிய இடம் நாடி மலை உச்சிக்குச் செல்கின்றான். அப்போது அங்கிருந்த பெருமாளின் கற்சிலையை காண்கிறான். தனது நிலைக்காக கண்ணீர் மல்க வேண்டுகின்றான். உடன் அவன் தன்னையும் அறியாமல், ‘‘உத்தமராயா’’ என்று அலறினான். அவனுக்கு பேசும் திறன் வந்துவிட்டது. ஆனந்தத்தில் துள்ளிக் குதித்த அச்சிறுவன், இச்செய்தியை ஊர் முழுதும் பரப்பினான். அது முதல் மக்களும் இந்த பெருமாளை வழிபடத் தொடங்கினர். அன்று முதல் உத்தமராயப் பெருமாள், ‘‘பேச வாய் கொடுத்த உத்தமராயப் பெருமாள்’’ என்று போற்றலானார். விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட ஊரே அய்யர்பாளையம். அதுவே நாளடைவில் மருவி, இன்று அய்யம்பாளையம் ஆகிவிட்டது.