தலைப்புகள் பட்டியல்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்
அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம். ⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. ⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? ⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். ⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே. ⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. ⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அஷ்டகொடி என்பது என்ன பற்றி தெரிந்து கொள்வோமா
அஷ்டகொடி என்பது என்ன பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

பெரிய சிவாலயங்களில் நடைபெறும் விழாக்களில் சிறப்புப் பெற்ற விழா அஷ்டகொடி விழாவாகும். இதில் எட்டுத் திக்கிலும் கொடியேற்றி விழா கொண்டாடு கின்றனர். கொடிகளுக்குச் சிறப்பளிக்கும் விழாவாக இது உள்ளது. கொடிகள் வண்ணத் துணிகளால் அழகாகத் தைக்கப்பட்டு, அதில் இலச்சினை எனப்படும் உருவங்கள் அமைக்கப்படும். திருமாலுக்குக் கருடன் உருவம் பொறித்த கொடியும், சிவபெருமானுக்கு இடபம் பொறித்த கொடியும், விநாயகருக்கு மயில் கொடியும், ஐயனாருக்கு யானைக் கொடியும் அடையாளங்களாக உள்ளன. கொடிகளைக் கொண்டே மக்கள் இன்ன மாதிரியான விழா அங்கே நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்டனர். கொடியேற்றம் என்பது உரிமையை வெளிப்படுத்தும் அடையாளமாக உள்ளது. பெரிய கோயில்களில் கொடியேற்றமும், கொடியிறக்கமும் திருவிழாவின் முக்கியமான அங்கங்களாக உள்ளன. விழாவின் தொடக்கத்தில் கொடியேற்றம் நிகழ்கிறது. சிறப்புடன் நடை பெறும் விழா கொடியிறக்கப்படுவதுடன் இனிதே நிறைவடைகிறது. பெருந்திருவிழா நடைபெறும் அனைத்து ஆலயங்களிலும் நிரந்தரமான கொடி மரம் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாகச் சிறிய கொடிமரங்கள் எட்டுத்திக்கிலும் இருப்பதையும் காண்கிறோம். அட்டதிக் துவஜ விழாவில் இக்கோடி மரங்களில் கொடியேற்றம் நிகழ்கிறது. கொடிகள் தலைவனாக இந்திரன் விளங்குகிறாள். அவனே மக்களின் தலைவன். அவனே அவரவர்க் குரிய உரிமைகளை வகுத்தளிப்பவன். அந்த உரிமைகள் அவர்கள் பெற்றிருப்பதைக் குறிக்கும் வகையில் அவர்களுக்கு உரிய சின்னத்தைப் பொறித்த கொடியை அளித்துள்ளான். கொடிகள் யாவும் இந்திரனுடைய கொடியில் இருந்தே பிறந்ததாகும். கொடியின் சிறப்பு கருதி கொடியை இந்திரத் துவஜம் என்று அழைக்கின்றனர். மார்கழி மாதத்தில் இந்திரன் தேவர்களோடு பூமிக்கு வந்து ஆலயங்களை வழிபடுவதுடன், தாம் வந்து வழிபட்டதன் அடையாளமாக விமானங்களின் உச்சியில் தமது கொடியை ஆலயங்களில் பறக்கவிடுகிறான். அவனைத் தொடர்ந்து சகல தேவர்களும் எண்திசைப் பாலகர்களும் தத்தம் கொடிகளை ஆலயத்தின் விமானத்திலும் பிராகாரத்திலும் பறக்கவிடுகின்றனர்.

லட்சுமி தாயார் திருமாலிடம், பெருமாளே! பக்தனுக்குரிய தகுதி என்ன
லட்சுமி தாயார் திருமாலிடம், பெருமாளே! பக்தனுக்குரிய தகுதி என்ன

வகை: பெருமாள்

🌹 🌿 தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். இதை நானும், சிவபெருமானுமே செய்து காட்டியுள்ளோம், என்றார். 🌹 🌿 அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன்,என லட்சுமி தாயார் கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால். 🌹 🌿 தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் பிரம்மாவின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். பிரம்மா, அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. 🌹 🌿 இதையடுத்து, அவன் என்னைக் குறிவைத்தான். என்னை அவனால் வெல்ல முடியவில்லை. அதேநேரம்,அவனைக் கொல்ல என்னாலும் முடியவில்லை. அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப, அவனும் ஒருமுறை கைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். 🌹 🌿 அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். 🌹 🌿 தாராளமாக! தேர்வைத் துவக்கலாம், என்றான். சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். 🌹 🌿 அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான், என்று முடித்தார் பெருமாள். லட்சுமி தொடர்ந்தாள். சக்தி வாய்ந்த அந்த சக்கரம் இப்போது யாரிடம் உள்ளது? என்றாள். 🌹 🌿 இதோ! என் கையில் சுழல்கிறதே! அது தான் அந்த சக்கரம். எதிரிகளின் தலையை இது கொய்து விடும், என்றார் பெருமையாக. ஆமாம்! அசுரனைக் கொன்ற சக்கரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்றாள் லட்சுமி. 🌹 🌿 அன்பே! இந்த சக்கரத்தைப் பெறுவதற்காக நான் ஒரு கண்ணையே இழந்து திரும்பப்பெற்றேன், என்றார் பெருமாள். அப்படியா! அதைப் பற்றி சொல்லுங்களேன், என்றாள் தாயார்.

கிருஷ்ண ஜெயந்தி மாக்கோலம் பற்றி தெரிந்து கொள்வோமா
கிருஷ்ண ஜெயந்தி மாக்கோலம் பற்றி தெரிந்து கொள்வோமா

வகை: கிருஷ்ணர்

வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது. சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர். கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள். மாக்கோலம் வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது. வீட்டின் வாயிற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சு சேவடிக் கமலங்களை மாக்கோலமாக இடுவார்கள். கோகுலத்தில் கண்ணன் தனது தோழர்களுடன் கோபியர் இல்லந்தோறும் சென்று வெண்ணெயைத் திருடித் தின்னும்போது, வீடு முழுவதும் வெண்ணெய் சிதறிக் கிடக்கும். அவனது கமலப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடுகள் முழுவதும் நிறைந்திருக்கும்.

சகல தோஷம் தீர்க்கும் கதலி லட்சுமி நரசிம்மப் பெருமாள்
சகல தோஷம் தீர்க்கும் கதலி லட்சுமி நரசிம்மப் பெருமாள்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல்களை நிறைய கேள்விப்பட்டிருப்போம். அதில் சுயம்புவாகத் தாம் எழுந்தருளியுள்ளதை மக்களுக்கு உணர்த்த, வாழை பழங்களை மழைத்து திருவிளையாடல் புரிந்த திருத்தலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருத்தல செங்கமல வள்ளி தாயார் சமேத உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் கோயிலாகும். ஆயிரம் வருடங்கள் பழைமையான இத்தலம், அக்காலத்தில் மலைவாழ் மக்களின் வியாபார ஸ்தலமாக விளங்கியது. இந்த ஊரில் பக்தர்கள் தங்களின் விளைபொருட்களான காய், கனிகள் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவர்களில் லட்சுமி என்ற பெண்மணி கொண்டு வரும் வாழைப்பழங்கள் தொடர்ந்து காணாமல் போக, அப்பெண் லட்சுமி அந்த ஊர்த் தலைவரிடம் இதை முறையிட்டார். அதைக்கேட்டு தலைவர் அது குறித்து விசாரிக்கிறார். ஆனால், 3 நாட்களாகியும் உண்மையான காரணத்தை அறிய முடியாமல் தொடர்ந்து பழங்களும் காணாமல் போகவே, பெருமாளிடம் முறையிட்டு வேண்டுகிறார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘காணாமல் போன வாழைப்பழத்திற்கு தானே காரணம் என்றும், அவர்கள் தங்குமிடத்தில் கதலி வடிவத்தில் சுயம்பு மூர்த்தியாக தாம் எழுந்தருளி உள்ளதாகக்’ கூறினார். நான்காம் நாள் காலை தலைவர் மக்களோடு பெருமாள் கனவில் கூறிய இடத்தை தேடிப் பார்க்கையில் சுயம்பு வடிவாக ஸ்ரீமன் நாராயணன் அங்கு காட்சி கொடுத்தார். நான்காவது நாள் சுயம்பு மூர்த்தி கிடைத்ததால் தசாவதாரத்தின் நான்காவது அவதாரமான நரசிம்ம மூர்த்தி அம்சமாக அவ்விடத்தில் அந்த சுயம்பு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். பிறகு அதே இடத்தில் தற்போதைய மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் ரூபத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். (கதலி என்றால் வாழைப்பழம் என்று ஒரு பொருள் உண்டு.) துவார பாலகர்களை வணங்கி ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் கருவறைக்கு எதிரே பெருமாளை வணங்கிய கோலத்தில் மேற்கு நோக்கி கருட சன்னிதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் உத்ஸவமூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாளும் அருள்பாலிக்கின்றனர். உள் பிராகாரத்தில் குழந்தை பாக்கியம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர், பிணிகளைப் போக்கும் தன்வந்திரி மற்றும் திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள், யோக நரசிம்மர் உள்ளிட்ட சன்னிதிகளும் அமைந்துள்ளன. ஞானத்துக்கு அதிபதியான ஸ்ரீஹயக்ரீவரும் இங்கு உறைகிறார்.

ஒருவருடைய கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில் பற்றி தெரியுமா
ஒருவருடைய கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில் பற்றி தெரியுமா

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள காலதேவி அம்மன் சிலை. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்! அதுதான் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் நேரமே உலகம் புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. - காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு. நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும். கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பது தான் இக்கோயிலின் நம்பிக்கை. காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும். மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.  வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா இருக்கே
விளக்கேற்றிய வீடு வீண் போகாது. வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா இருக்கே

வகை: ஆன்மீக குறிப்புகள்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம். நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது. சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது. பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்,தமிழக சிற்பக் கலைத்திறனுக்கும் சிறந்த சான்றாக உள்ளது. என்பதை பற்றி விளக்கும் எளிய கதை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்,தமிழக சிற்பக் கலைத்திறனுக்கும் சிறந்த சான்றாக உள்ளது. என்பதை பற்றி விளக்கும் எளிய கதை

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

🌺 கொங்கு மண்டலத்தின் தொன்மை மிகு,சிவத்தலங்களுள் ஒன்றாக திகழ்வது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில். 🌺 திருஞான சம்பந்தரால் தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப் பெற்ற பெருமைக்குரிய தலமே,தற்போது ‘திருச்செங்கோடு’என்று கூறப்படுகிறது. 🌺 இறைவன் #அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரிலும்,அம்பாள் #பாகம்பிரியாள் என்ற பெயரிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 🌺 செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு இங்கு தனி சன்னதி அமைந்துள்ளது.செங்கோட்டு வேலவர்,அர்த்தநாரீஸ்வரர்,ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னதி அமைந்துள்ளது சிறப்பு. 🌺இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107வது திருப்பதிகத்திலும்,திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். 🌺 இக் கோவிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ்,கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனு பூதியில் பாடியுள்ளார். 🌺 அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர்,சுமார் 6 அடி உயரத்தில்,உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். 🌺 தலையில் ஜடா மகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார்.அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது.

யார் இந்த தத்துவஞானி பிளேட்டோ உலகிற்கு அவர் கூறியதென்ன
யார் இந்த தத்துவஞானி பிளேட்டோ உலகிற்கு அவர் கூறியதென்ன

வகை: தன்னம்பிக்கை

கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகர உயர் குடியில் பிறந்த பிளேட்டோ தன்னுடைய இருபதாவது வயதில் சாக்ரடீசைக் கண்டு அவரது சீடராக மாறியவர். உலகின் தலை சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவரும், கணிதவியல் வல்லுனரும், அரிஸ்டாட்டிலின் குருவும்தான் பிளேட்டோ (Plato). கிரேக்கத்தில் பல தத்துவஞானிகள் தோன்றியிருந்தாலும் அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராகவும் மிகவும் புகழ்மிக்க அறிஞராகவும் திகழ்கிறார் பிளேட்டோ. இவர் எழுதிய "குடியரசு" எனும் நூல் உலகப்புகழ்பெற்றது. இதை பல அரசியல்வாதிகள், மற்றும் ஆட்சியாளர்கள் பின்பற்றி பலவற்றை சாதித்துள்ளனர். ஒரு நாட்டை ஆள்கிறவருக்கு நல்ல திறமையும், பயிற்சியும் வேண்டும். அதேபோல ஒரு நாட்டை ஆள்வதற்கு ஆட்சியாளர்கள், அவர்களின் உதவியாளர்கள், ராணுவம், தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் இருக்க வேண்டும் என்று முதன்முதலாக கூறியவர் பிளேட்டோதான். அரசின் ஒவ்வொரு பிரிவிலும் தணிக்கை முறை வேண்டும் என்று கூறியவரும் அவர்தான். தத்துவ அறிஞரான பிளேட்டோவின் புகழ் பெற்ற கருத்துகள்... "நமது கண்களால் நாம் பார்க்கும் அனைத்துப் பொருள்களும் நிழல்களைப் போன்ற வெறும் தோற்றங்களே. அவைகள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு அடிப்படையாகக் கருத்து உள்ளது" பிளேட்டோவின் எழுத்துக்கள் அனைத்தும் உரையாடல் வடிவிலானது. அதில் அவர் தனி மனித முன்னேற்றம் மற்றும் மனத்தின் செல்வாக்கு ஆகிய இரண்டிற்கும் முக்கியமான இடங்களைக் கொடுத்துள்ளார். அவற்றின் தொகுப்பில் சில இங்கே… காணப்படும் உலகம் வேறு. அறியப்படும் உலகம் வேறு. கற்காமல் இருப்பதைவிட ஒருவன் பிறக்காமல் இருப்பதே மேல், ஏனெனில் ஒருவனின் அறியாமையேதான் சகலவிதமான துன்பத்திற்கும் அடிப்படையாக உள்ளது. உலகத்தில் நல்லவர்கள் வெகு சிலரே. தீயவர்களும் அப்படியே உலகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இரண்டிற்கும் மத்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள்.

96 வகையான ஷண்ணவதி     ஹோமங்களின் ரகசியம்
96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13 (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம். _8 (4) பழவர்க்கம். _7 (5) கிழங்கு வகையறா _5 (6) உலோகம் _2 (7) வாசனாதிரவியம் _5 (8) அன்னவர்க்கம் _ 4 (9) பக்ஷ்யம். _5 (10) பட்டுவஸ்திரம் _1 (11) தாம்பூலம் _1 மொத்தம்_ (96) இதன் விளக்கம் (1) 13: சமித்து அரசன், ஆல், அத்தி, முருங்கை, கருங்காலி, சந்தனம், மா, மூங்கில், வன்னி, வில்வம், எருக்கன், பலா, பாதிரி சமித்து மேற்கண்ட சமித்தை தவிர வேற எந்த சமித்தும் ஹோமத்தில் போடக்கூடாது... (2) 45: ஹோம திரவியம் அரிசி மாவு, மூங்கில் அரிசி, வெல்லம், பச்சை கற்பூரம், நாட்டுச்சக்கரை, சத்துமாவு, பேரிச்சை, வால்மிளகு, வலம்புரிக்காய், இடம்புரி காய், மாசிக்காய், நாயுருவி, சீந்தில்கொடி, நெல்லி வத்தல், வெள்ளறுகு, சுக்கு , ஜட மஞ்சரி, களிப்பாக்கு, ஓமம், அகில்_குகில், அதிமதுரம், செண்பக மொட்டு, வெட்டி வேர் , ரோஜா மொட்டு, கிராம்பு, கோரோஜனை, அவல், நெல்லு பொரி, கொப்பரை தேங்காய், குங்குமம், விரளிமஞ்சள், வங்காளமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், கோதுமை, காராமணி, துவரை, பயறு, கருப்பு கொண்டை கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, இந்த 45 பொருட்கள் மட்டுமே..... (3) 8: ரஸ வர்க்கம் நெய், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், வெண்ணெய், சந்தனாதிதைலம், (4) 7: பழ வர்க்கம் வில்வம் பழம், பலாபழம், திராட்சைபழம் , அன்னாசிபழம், மலைப்பழம், விளாம்பழம், மாம்பழம்.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்
கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்தது. இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார்.மேலும் இக்கோவில் சிவ பெருமான் வாசி என்ற கோடாரியால் மூங்கிலுக்கு கீழே எடுக்கும் போது அவர் மீது இரத்தம் வந்துவிட்டது. ஆதலால் இக்கோவில் சிவலிங்கை தொடாமல் தான் பூஜை செய்கிறார்கள்.பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவனுக்கு பால் சுரந்து கொடுக்குமாம், அப்போது மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தை பசுவுக்கு காட்டுமாம். இந்த ஊரில் சிறு மன்னன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால அரசன் பெரும் படையெடுத்தான். ஆனால் போரில் வெற்றி பெறுவதற்காக காளி உருவில் வானில் இருந்து அம்புமலை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது, மீண்டும் கரிகாலன் சிவனை வேண்டி போரில் வெற்றி பெற்றான். போரில் வெற்றி பெறுவதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் கட்டிவைத்தார் சிவபெருமான். அந்த காளியின் பெயர் சொர்ண காளி,தனி சந்நதி உள்ளது.

9 படித்துறைகள் 9 நெய்தீபம் 9 வார தரிசனம்
9 படித்துறைகள் 9 நெய்தீபம் 9 வார தரிசனம்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

திருவாரூருக்கு அருகில் உள்ள அற்புதமான திருத்தலம், திருக்கண்ணபுரம். இந்தத் தலத்து நாயகனின் திருநாமம்- ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். மூலவர்- ஸ்ரீநீலமேகப் பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகண்ணபுரநாயகி மற்றும் ஸ்ரீஆண்டாள் என நான்கு தாயார்களுடன் திருமால் அருள் பாலிக்கும் ஒப்பற்ற க்ஷேத்திரம் இது! கோயிலுக்குத் தென்புறம் உள்ள தடாகத் தீர்த்தக் குளத்தை பூதம் ஒன்று காத்து வருவதாகவும், அங்கிருந்தபடி ஸ்ரீசௌரிராஜப் பெருமாளை நினைத்து தவமிருந்து வருவதா கவும் ஐதீகம். இந்தத் தடாகத்தை பூதாவட தீர்த்தக் குளம் என்பார்கள். இந்தக் குளத்தில் நீராடிவிட்டு, பெருமாளை அர்ச்சித்து ஸேவித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்; நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை. மிகப் பிரமாண்டமான, புராதனமான இந்த ஆலயம், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்விய தேசம். ராஜகோபுர நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது, பெருமாள் சந்நிதியை நோக்கி ஒரே வட்டத்தில் ராசி மண்டலம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களும் ஐக்கியமாகி இருக்கிற ராசி மண்டலக் கட்டத்தின் நடுவில், ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் தரிசனம் தருகிறார். வேறெங்கும் காண்பதற்கு அரிதானது இந்த நவக்கிரகக் கட்டங்கள் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்! இந்த நவக்கிரகக் கட்டங்களுக்குக் கீழே நின்றபடி, பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!