என்ன கற்றுக் கொண்டோம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்
Category: ஒரு குட்டிக்கதை
ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். ரயில் வருகிற நேரம்... ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். பின் பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன். காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.
அதிர்ஷ்டம்
Category: ஒரு குட்டிக்கதை
ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்துக்கொள்ள நேரமாகிவிட்டது... சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது... வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான் கவனித்தான் வங்கியின் கதவு எண் 99 என இருந்தது.. வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்காட்டியது... இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது... இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்... இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்... அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்... அவனுக்கு வந்த டோக்கன் எண் 999 அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...
மனிதனின் உண்மையான இயல்பை அறிவது எப்படி
Category: ஒரு குட்டிக்கதை
மலையடிவாரத்தில் ஒரு ஜென் குரு இருந்தார். அவருக்கு ஏராளமான மாணவர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு குருவே எனக்கு ஒரு குழப்பம் என்று ஆரம்பித்தார் மாணவர். என்ன என்று குரு கேட்க... நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன் கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையும் தருகின்றன. அது அனுபவபூர்வமாக உணருகிறேன். ༺🌷༻ மகிழ்ச்சி மகிழ்ச்சி இதில் என்ன குழப்பம் என்று குரு கேட்க... நான் தியானத்தில் இல்லாத வேலைகளில் முழுமையான நல்லவனாக இருக்கின்றேனா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில மகரயாழ் நாள்களில் நானும் ஒன்று இரண்டு தவறுகளை செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படி செய்வது சரிதானா இதை யோசிக்கும் போது எனது உள்ளம் மிகுந்த சோகமடைகிறது. ༺🌷༻ குருநாதர் சிரித்தார் நீ தியானமும் செய்கிறாய் தவறுகளும் செய்கிறாய் அப்படித்தானே என்று குரு கேட்கிறார். ஆமாம் குருவே அது தவறில்லையா என்று சீடர் கேட்கிறார்.
சாமர்த்தியமான இளைஞன் பற்றிய ஒரு கதை
Category: ஒரு குட்டிக்கதை
இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார். "சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?" இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்". அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்" வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."
கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்... ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்... ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
: ஒரு குட்டிக்கதை - சொர்க்கம் [ ஒரு குட்டிக்கதை ] | : A short story - Heaven in Tamil [ A short story ]
ஒரு குட்டிக்கதை
கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்...
ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.
அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.
திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை.
மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது.
சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து
" ஏன் இவ்வளவு நாள் வரவில்லை?
உனக்கு என்ன பிரச்சனை" என்று கேட்டது.
என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.
கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.
என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.
மறுபடியும் அவன் வரவேயில்லை.
மரம் அவனுக்காக ஏங்கியது.
பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்.
அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான்.
அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம்.
" வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.
அதற்கு அவன்_இல்லை இப்பொது வயதாகி விட்டது_எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,
ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,.....
மரம் உடனே சொன்னது "பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது.
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.
இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது.
வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை.
அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது.
பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது.
அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான்.
"ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது.
" என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை,..."
அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது,
" நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.
அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.
ஆனால் அவன் வரவேயில்லை.
மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.
அப்போது அவன் வந்தான்.
தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்.
அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே" என வருந்தியது.
அவன் சொன்னான்
நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை.
எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது.
அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.
இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது.
இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது,
அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை
இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடு-
கின்றோம் ..
வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம்,
குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம்.
அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்.
நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது,...
நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும்
அதுதான்
வாழ்க்கையில் எதுக்கும் கவலைப்படாதீங்க.
இழந்தது ஏதாவது ஒரு ரூபத்தில் இன்னும் அழகாக உங்களுக்கு திரும்பி வரும்.
சொத்து, பணம், உறவுகள், வசதிகள் இழந்தது எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக திரும்பி வரும் என்று உறுதியோடு நம்புங்கள்.
நிம்மதி கூட திரும்பி வரும். Most precious.
ஏதோ மன ஆறுதலுக்கு சொல்கிறார்
என்று நினைக்காதீர்கள்.
இழந்ததை நினைத்து வருந்தி கொண்டே இருந்தால், சிந்தனைகள் தெளிவாக இருக்காது. இலக்கு புரியாது. மேலும் மேலும் இழப்புதான்.
நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று கூறுவார்களே. அது உண்மையான கூற்று
போனது போச்சு. இனி நடக்கறதை நல்லதா இருக்கட்டும் என்று மனதை திருப்பி விட்டால், நிறைய சந்தர்ப்பங்கள் நமக்கு தென்படும்.
ஆழ்மனதிலே இந்த Knot ஐ நன்றாக
பதிய வையுங்கள்.
எதை இழந்தோமே, அதைவிட பல மடங்கு அழகாக சிறப்பாக திரும்பி நமக்கு வரும்.
இது பலர் அனுபவம். நம் வாழ்க்கையையே திரும்பி பார்த்தால், இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாகஇருக்கும்.விட்டதை விட சிறப்பாக பிடித்து இருப்போம்.
A positive thinking என்றும் சொல்லலாம்.
,திரும்ப திரும்ப எண்ணும் எண்ணங்கள் செயலாக கண்டிப்பாக மலரும்.
வாழ்வில் முக்கிய முடிவுகளை இறை நம்பிக்கையுடன் எடுங்கள்.
அதைச் செயல்படுத்திவிட்டு முடிவை இறைவனிடம் விட்டுவிடுங்கள்.
இறைவனை நம்பி நீங்கள் செய்யும் காரியம் யாவும் இறைவனால் எடுக்கப்படுவது என்பதை மறவாதீர்கள்.
கொடுப்பது இறைவன் என்று உணர்ந்து கொண்டால், கிடைப்பது எதுவும் தாழ்வாக தெரியாது.
Do Things At Your Own Pace. Life is not a Race.
பாச நேசத்துடன் வாழ நல்ல குடும்பம்!
நிம்மதியுடன் வாழ நல்ல உறவு!
நம்பிக்கையுடன் வாழ நல்ல நட்பு!
தைரியமாய் வாழ நல்ல தலைவன்!
நாகரீகமாய் வாழ நல்ல சமூகம்!
பாதுகாப்பாய் வாழ நல்ல சட்டதிட்டங்கள்!
உரிமையுடன் வாழ நல்ல அரசாங்கம்!
ஆரோக்கியமாய் வாழ நல்ல உடல்!
மேன்மையுடன் வாழ நல்ல எண்ணம்!
அனைத்தும் நல்லதாகவே ????
அமைந்தால் அதுவே சொர்க்கம்!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: ஒரு குட்டிக்கதை - சொர்க்கம் [ ஒரு குட்டிக்கதை ] | : A short story - Heaven in Tamil [ A short story ]