தியானம்

குறிப்புகள்

வீடு | அனைத்து வகைகள் | வகை: தியானம்
கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க 5 நிமிட தியானம்! | தமிழர் நலம் |  5-Minute Meditation to Reduce Anxiety and Stress! | Tamilarnalam

கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க 5 நிமிட தியானம்! | தமிழர் நலம்

Category: தியானம்

மன அழுத்தமும் கவலையும் உங்களை வாட்டுகிறதா? வெறும் 5 நிமிடங்களில் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, புத்துணர்ச்சி பெற உதவும் எளிய தியான முறைகளை இங்கே படியுங்கள். (English): Feeling stressed or anxious? Learn how a simple 5-minute meditation can calm your mind and recharge your energy instantly on Tamilarnalam.

தியானம் மற்றும் மூளை அலைகள்: உங்கள் மூளையின் கட்டமைப்பை மாற்றும் தியானம்! - தமிழர் நலம் | Meditation and Brain Waves: How Meditation Rewires Your Brain Structure - A Neurological Analysis

தியானம் மற்றும் மூளை அலைகள்: உங்கள் மூளையின் கட்டமைப்பை மாற்றும் தியானம்! - தமிழர் நலம்

Category: தியானம்

தியானம் செய்வது வெறும் மன அமைதிக்காக மட்டுமல்ல, அது உங்கள் மூளையின் இயற்பியல் கட்டமைப்பையே மாற்றுகிறது! தியானத்தின் போது உருவாகும் மூளை அலைகள் மற்றும் நரம்பியல் மாற்றங்கள் குறித்த முழுமையான அலசல் இதோ!

தியானம் மூளையின் கட்டமைப்பை மாற்றுமா? அறிவியல் விளக்கங்கள் - தமிழர்நலம்

Category: தியானம்

தியானம் செய்வதால் மூளையின் சாம்பல் நிறப்பகுதி (Grey Matter) அதிகரிக்கிறதா? தியானம் எப்படி உங்கள் புத்திசாலித்தனத்தையும் அமைதியையும் கூட்டுகிறது? நவீன நரம்பியல் ஆய்வுகள் இதோ.

​மனக் கவலைகள் தீரக் கோவிலின் எந்தப் பகுதியில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்?

Category: தியானம்

கோவில் முழுவதும் சக்தி இருந்தாலும், சில குறிப்பிட்ட புள்ளிகளில் அந்த ஆற்றல் மிக அதிகமாகக் குவிந்திருக்கும். உங்கள் மனக் குழப்பங்களை நீக்க எந்த திசையில் அமர வேண்டும் என்பதைத் தமிழர் நலம் விளக்குகிறது.

படைப்பாளிகள் மற்றும் அறிஞர்களுக்குத் தியானம் எப்படி உதவுகிறது? - சிந்தனைத் திறனை மேம்படுத்தும் கலை!

Category: தியானம்

"அமைதியான குளம் தான் பிம்பத்தைத் தெளிவாகக் காட்டும்." படைப்பாளிகளின் கற்பனைத் திறனையும், அறிஞர்களின் ஆய்வுத் திறனையும் தியானம் எப்படி ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு செல்கிறது என்பதைத் தமிழர் நலம் விளக்குகிறது.

​விபாசனா (Vipassana) தியானம் செய்வது எப்படி? - மனதை மாற்றும் மகா கலை!

Category: ​விபாசனா ​விபாசனா

"விபாசனா" என்றால் உண்மையை உள்ளபடி காண்பது என்று பொருள். உங்கள் ஆழ்மனதில் பதிந்துள்ள எதிர்மறை எண்ணங்களை வேரோடு அறுக்கும் இந்த மகா கலையைத் தமிழர் நலம் விளக்குகிறது.

விபாசனா தியானத்திற்கும் சாதாரண தியானத்திற்கும் உள்ள 3 முக்கிய வித்தியாசங்கள்!

Category: விபாசனா தியானம்

"எல்லா தியானமும் ஒன்றல்ல." விபாசனா தியானம் எப்படி மற்ற தியான முறைகளில் இருந்து மாறுபடுகிறது மற்றும் 10 நாள் முகாமில் ஒரு மனிதன் எப்படி உருமாறுகிறான் என்பதைத் தமிழர் நலம் விளக்குகிறது.

​விபாசனா முகாமிற்குச் செல்லும் முன் நீங்கள் தயார் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

Category: தியானம்

விபாசனா என்பது ஒரு "ஆன்மீக அறுவை சிகிச்சை". அந்த 10 நாட்களை வெற்றிகரமாகக் கடக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 முன்னேற்பாடுகளைத் தமிழர் நலம் விரிவாக விளக்குகிறது.

இந்த ஒரு தியான முறையால் வாழ்க்கை மாறும்! -

இந்த ஒரு தியான முறையால் வாழ்க்கை மாறும்! - "மனதை ஆளக் கற்றுக் கொண்டால் உலகை ஆளலாம்!" 🧘‍♂️✨🌊

Category: தியானம், மனநலம், ஆன்மீகம், வாழ்வியல்

ஒரு நாளைக்கு வெறும் 10 நிமிடம் நீங்கள் செய்யும் இந்த எளிய தியானம் உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடும். மன அழுத்தம் நீங்கி மகா அமைதி பெற உதவும் ரகசியம்.

இரவு 3 மணிக்கு விழிப்பவரா நீங்கள்? - அந்த 'தேவ' நேரத்தின் மர்மமும், உங்கள் ஆழ்மனதின் அதிபயங்கர ஆற்றலும்! 🌌🧘‍♂️✨ | Do You Wake Up at 3 AM? The Mystery of the 'Divine' Hour and Your Subconscious Power

இரவு 3 மணிக்கு விழிப்பவரா நீங்கள்? - அந்த 'தேவ' நேரத்தின் மர்மமும், உங்கள் ஆழ்மனதின் அதிபயங்கர ஆற்றலும்! 🌌🧘‍♂️✨

Category: ஆன்மீகம், தியானம், ஆழ்மனம், மர்மங்கள்

சரியாக இரவு 3 மணி முதல் 5 மணிக்குள் உங்களுக்கு விழிப்பு வருகிறதா? அது ஒரு சாதாரண விழிப்பு அல்ல, பிரபஞ்சம் உங்களுக்குத் தரும் ஒரு ரகசிய சிக்னல்! அதன் பின்னணியில் உள்ள மர்மங்களை விளக்கும் கட்டுரை.

​வெறும் 10 நிமிட தியானம் - உங்கள் மூளையின் செயல்திறனை 2x அதிகரிப்பது எப்படி?

Category: தியானம்

​"வெறும் 10 நிமிட தியானம் உங்கள் மூளையை எப்படி மாற்றும்? நினைவாற்றல் மற்றும் கவனிப்புத் திறனை (Focus) 2 மடங்கு அதிகரிக்க உதவும் எளிய தியான முறைகள் மற்றும் அதன் அறிவியல் பின்னணியை இந்த கட்டுரையில் விரிவாகப் படியுங்கள்."

​தியானம் செய்ய நேரமில்லையா? வெறும் 2 நிமிடம் மூச்சை கவனித்தால் நடக்கும் அதிசயம்!

Category: தியானம்

தியானம் செய்ய மணிநேரம் செலவிடத் தேவையில்லை! வெறும் 2 நிமிடங்கள் உங்கள் மூச்சைக் கவனிப்பதன் மூலம் உங்கள் உடலில் நடக்கும் வியக்கத்தக்க அறிவியல் மாற்றங்களை இக்கட்டுரையில் படியுங்கள்.

​மனதை ஒருநிலைப்படுத்த 'சுவாதிஷ்டான' சக்கரம்: நீங்கள் அறியாத தமிழர்களின் யோகக் கலை!

Category: தியானம்

மனது அலைபாய்ந்து கொண்டிருக்கிறதா? ஒரு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லையா? சித்தர்கள் காட்டிய 'சுவாதிஷ்டான' சக்கரத்தை எப்படித் தூண்டுவது மற்றும் அதன் மூலம் மனதை எப்படி ஒருநிலைப்படுத்துவது என்பதைப் படியுங்கள்.

2026-ல் மனவலிமை பெற 5 நிமிட 'விஸ்வரூப' தியானம்! உங்கள் ஆழ்மன சக்தியைத் தூண்டும் ரகசியம்!

Category: தியானம் & ஆரோக்கியம்

2026-ன் வேகமான உலகில் மன அழுத்தம் வாட்டுகிறதா? வெறும் 5 நிமிடங்களில் உங்கள் மனதை ஒரு விஸ்வரூபப் பிரம்மாண்டமாக மாற்றும் ரகசியத் தியான முறையை இங்கே படியுங்கள். உங்கள் தன்னம்பிக்கை பலமடங்கு உயரும்!

தியானம் | Meditation

"பிரபஞ்சம்” நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது..:

: தியானம் - குறிப்புகள் [ தியானம் ] | : Meditation - Tips in Tamil [ Meditation ]

தியானம்

தியானம் செய்வீர்...

 

"பிரபஞ்சம்” நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது..:

 

இதை எவ்வாறு நடைமுறை படுத்துவது என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.பிரபஞ்சத்திடம் நான் கேட்டாலும் கிடைக்குமாபிரபஞ்சத்தால் எவ்வாறு இதையெல்லாம் தர முடியும்பல கேள்விகள்...

 

பிரபஞ்சம் என்றால் இந்த இயற்கைஇந்த இயற்கையில் இருக்கும் அனைத்து வல்லமையும்அனைத்து சக்திகளும் இந்த பூவுலகில் வாழும் அனைவருக்கும் உண்டு.அதை நாம் அறிய வேண்டுமென்றால் இந்த இயற்கையுடன் இணைந்து வாழ பழக வேண்டும் நண்பர்களே...

 

இந்த இயற்கையுடன் நாம் இணைந்து இருக்க தினந்தோறும் சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்...

 

இந்த இயற்கையுடன் இணைந்து இருப்பதுதான் “தியானம்” என்று நம் சான்றோர்கள் கூறினர் அல்லவா...

 

"தியானம்" என்றால் அமைதியாக இருப்பதுஇயற்கையுடன் இணைந்து இருப்பதுஎண்ணமற்ற நிலையில் இருப்பது...

 

நமக்கு இந்தப் பிரபஞ்சம் நமக்கு வேண்டிய அனைத்தும் கொடுத்துள்ளதுஅதற்கு நாம் இந்த பிரபஞ்சத்திற்கு ஒவ்வொரு நிலையிலும் நன்றியைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்..

 

நமக்கு வேண்டிய அனைத்தும் பிரபஞ்சம் கொடுக்கும்ஆனால்அது இந்த இயற்கைக்கும்மக்களுக்கும் மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை செய்பவனுக்கு இந்த பிரபஞ்சம் வேண்டிய அனைத்தும் கொடுக்கும்...

 

கேட்டால் கேட்டது மட்டும் கிடைக்கும்கேட்காவிட்டால்நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். இது இயற்கையின் நியதி...

 

பிரபஞ்சம் என்றால் இந்த இயற்கைஇந்த இயற்கையை படைத்தவன் ஆண்டவன். நம்மை படைத்தவனும் ஆண்டவனேஇந்த பூவுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் படைத்தவனும் ஆண்டவனே என்று உணர்ந்தவன் ஞானி..,

 

அவனுக்கு தேவையான அனைத்தையும் இந்தப் பிரபஞ்சம் கொடுக்கும்காரணம்அவன் இயற்கைக்கும்மக்களுக்கும் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை புரிகின்றான்..

 

சிந்திப்பீர்மனிதனுக்கு ஏன் இந்த பிரச்சனைகள்ஏன் இந்தத் துன்பங்கள்ஏன் இந்த உடல் உபாதைகள்மனசஞ்சலதுடன் நிம்மதியற்ற வாழ்க்கை நமக்கு அமைந்திருக்கு என்றால் மாற்றம் நம்மில் தான் அமைய வேண்டும்...

 

தேவையற்ற விஷயங்களில்  இருந்து சிந்தனைகளிலிருந்து வார்த்தைகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம் கடமையாகும் நண்பர்களே...

அதனுடன் நம் உணவிலும் மாற்றம் வேண்டும்சைவ உணவையே உண்ண வேண்டும்...

 

எண்ணங்களில் மாற்றம் என்றால் அனைவரையும் அரவணைத்து கொண்டு அன்புடன் அரவணைத்து வாழைப்பழகனும் நண்பர்களே..

 

 “நான்” என்ற நிலையில் இல்லாமல் “நாம்” என்ற நிலையை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும் நண்பர்களே...

 

நம் உணவில் மாற்றம் என்றால் அனைவரும் கண்டிப்பாக தவறாமல் “சைவ உணவையே” உட்கொள்ள வேண்டும்..

 

அனைத்து ஜீவராசிகளையும்கொடி மரங்களையும்இயற்கைக்கும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டால் மற்றும் தினந்தோறும் தவறாமல் தியானம் புரிந்தால் இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும்...

 

இவ்வளவு சக்தி இயற்கைக்கு உள்ளது...

 

தியானம் செய்யுங்கள்.....

அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்.....

அனைத்து உயிரினங்கள் இடமும் அன்பு செலுத்துங்கள்.......

இயற்கைக்கு நன்மை புரியுங்கள்....

 

நமக்கு தேவையானதை அனைத்தையும் இந்தப் பிரபஞ்சம் கொடுப்பது உறுதி.....

         🙏🙏🙏🙏

"தியானம்" என்றால் சுவாசத்தின் மீது கவனம்...

'கெட்ட பழக்கம்'என்பது வேறு; 'கெட்ட குணம்என்பது வேறு..!

சிகரெட் பிடிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கம்அது போலத்தான் டிரிங்கஸ் சாப்பிடுவதோ,  மற்ற  சில விஷயங்களோ..

 

நம்முடைய  'கெட்ட பழக்கம்' , எந்த வகையிலும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஆகாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை..! அதில் கவனம் இருக்கும் பட்சத்தில்கெட்ட பழக்கம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயமே..!

 

ஆனால்,  கெட்ட குணம் அப்படி அல்ல..!   அது அடுத்தவருக்கு தீங்கிழைக்கவே உருவாவது / இருப்பது...!

 

அதீத பொறாமைப்படுவதுதன் தேவைக்காக அடுத்தவர்களை வஞ்சிப்பது,   நன்றி மறத்தல்அடுத்தவர்களை manipulate செய்தல்அதீத  சுயநலம்புறம் பேசுதல்நம்பியவரை ஏமாற்றுவதுஓருவரைத் தமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவருக்கு அதீத  பாதகம் செய்ய முனைவது....  இவை போன்றவை கெட்ட குணங்கள்..!

 

'கெட்ட பழக்கம்உள்ளவர்கள் எல்லாம் 'கெட்ட குணம்கொண்டவர்கள் அல்ல..! கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று அர்த்தமல்ல..!

 

நண்பர்களே..! ஒரு irony என்னவென்றால் -

 

நாம்  நம் குழந்தைகளை "நீ அவன் கூட சேராதே... அவனிடம்,  பொய்,  பொறாமைசுயநலம் போன்ற கெட்ட குணங்கள் இருக்கு..!" என்று யாரைக் காட்டியாவது தடுக்கிறோமா..

 

இல்லை..!

 

சொல்லப்போனால்அது போன்ற குணங்கள் கொண்டவர்களைத்தான் காட்டி,  "பாத்தியா.. அவன்  எவ்ளோ சாமர்த்தியமா இருக்கான்.?

 

நீ அவன்கூட  ஃப்ரெண்டாயி அது எல்லாம் கத்துக்கணூம்..!" என்று  நாமே அனுப்பி வைக்கிறோம்..!

 

ஆனால்பிறர்க்கு உதவும் குணம்இனிய பேச்சுகள்ளமில்லா  நடத்தை போன்ற  'நல்ல குணங்கள்கொண்டிருக்கும் ஒருவனை,  'அவன் சிகரெட் புடிக்கிறான்..என்ற காரணத்தால் "அவனிடம் சேராதே.." என்று நம் பிள்ளைகளைத்   தடுக்கிறோம்..!

 

கெட்ட பழக்கங்கள்கெட்ட குணத்திற்கு வித்திடும் என்று நாம் நினைக்கிறோம். ஒரு முதிர்ச்சி வந்து விட்ட பிறகு,  நம்மால்  கெட்ட பழக்கத்திற்கும்கெட்ட குணத்திற்கும் வித்யாசப்படுத்தி பார்க்க முடியும்..!

 

கெட்ட பழக்கம் இருந்தாலும்ஒருவன் கெட்ட குணமுடையவன் அல்ல என்று தெரிந்து அவர்களிடம் பழகுவதிலோபோற்றுவதிலோ  தவறு இருக்காது..!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

: தியானம் - குறிப்புகள் [ தியானம் ] | : Meditation - Tips in Tamil [ Meditation ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: தியானம்