திருமணத்திற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன
Category: குடும்ப பொறுப்பு
புதிதாக உங்களையே முழுதாக நம்பி வரும் பெண்ணை காப்பாற்றும் அளவிற்கு போதுமான பணம் உங்களிடம் இருக்கிறதா? பணம் இல்லை என்று தெரிந்தால் நாளையே உங்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் தெளிவாக பேசி விடுங்கள். இது பல பிரச்சனைகளை தவிர்க்கும் முழுக்க முழுக்க அம்மா பேச்சையே நம்பி அவரது முடிவின் படி செயல்படுபவர் என்றால் புதிதாக வரும் பெண்ணுக்கும் உங்களுக்கும் விரைவிலேயே பிரச்சனைகள் தொடங்கலாம் தயாராகுங்கள். உங்கள் நண்பர் வட்டாரம் பெரியதோ சிறியதோ அவர்களிடமிருந்து சற்று விலக ஆரம்பித்து விடுங்கள். வடிவேலு சொல்வது போல் பழக்க வழக்கங்களை பஞ்சாயத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பெண்களைப் பற்றிய உங்களது கருத்து என்னவென்று தெரியவில்லை உங்கள் மனைவி கருப்போ சிவப்போ படித்தவரோ படிக்காதவரோ உயரமோ குட்டையோ அவருக்கு மனது என்று ஒன்று உண்டு அவருக்கும் ஆசாபாசங்கள் உண்டு முடிந்த அளவிற்கு அவருடைய விருப்பங்களை நிறைவேற்ற பாருங்கள். உங்கள் மனைவியைப் பற்றி பிறர் கருத்து கூறும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் உங்களது மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள் உங்கள் ஒருவரை மட்டுமே நம்பி தனது உற்றார் உறவினர் பெற்றோர் சுற்றத்தார் அனைவரையும் விட்டுவிட்டு உங்களை மட்டுமே நம்பி உங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை மனைவி என்பவள் திருமணம் முடிக்கும் வரை அத்தியாவசியத் தேவை, அதன் பின் அவள் ஒரு வாழ்நாள் தொல்லை என்பதைப் போல் தான் நடந்து கொள்வார்கள். அதற்கு ஏற்றால் போல் நகைச்சுவைகளும், வீடியோ க்லிப்களும் மனைவியை கலாய்ப்பது, திருமணத்தின் பின் மனைவி ஒரு தொல்லை போன்று சித்தரித்து வெளிவர, அதனை இவர்கள் நிஜ வாழ்விற்கு உருக்கொடுத்து வாழ முயற்சி செய்கின்றனர். இவர்களுக்கு மனைவி தொல்லையாகிப் போவது எங்கென்றால், திருமணம் முடித்து விட்டோம், எமக்கு என்று ஒரு மரியாதை வேண்டும், எமது மனைவிக்கு என்று மரியாதை இருக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு மரியாதையான தகப்பனாக நான் இருக்க வேண்டும், எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது அதன் மானத்தை காக்க வேண்டும் என்ற எந்த பெறுப்பும் இல்லாமல், 24-25 வயதாகும்போதே 17-18 வயதில் ஒருத்தியை தேடி திருமணம் முடித்துக் கொள்கின்றனர். சில நாட்களின் பின் "இவ்வளவு தானா பொம்புள" என்பது போல் அனைத்தும் தீர்ந்த பின், பொண்டாட்டியிடம் தீர்க்க வேண்டியதை தீர்த்து விட்டு குப்புரப்படுத்துக் கொள்கின்றனர். அல்லது கைத் தொலைபேசியில் மூழ்கி விடுகின்றனர். மனைவியின் வீட்டை, அங்கு செல்வதை கேவலமாக பார்ப்பது, அவளுடன் வெளியில் செல்வதில்லை என்று வீட்டோடு அவளை வைத்து விடுகின்றனர். இப்படி வாழ்ந்தால் தான் கெத்தாம் இல்லாவிட்டால் அவர் பொண்டாட்டி தாசனாம், இதைப் பற்றி எல்லாம் அந்த மனைவி கதைத்தால், இரவு தாமதமாகாமல் வீடு வாங்க என அவள் சண்டைபிடித்தால், தெருத் தெருவாக அலைந்து திரிய வேண்டாம் என அவள் கோபித்தால்,......, அது அடக்கு முறையாம் , வாய் காட்டுவதாம், அறப்படிக்கிறதாம் என்று சண்டை சச்சரவு, அடிதடி என்று வம்பிழுத்து, கடைசியில் தகாத உறவு, அது இது என எத்தனையோ குடும்ப சீரழிவுகள், பல இடங்களில் விவாகரத்து வரை வாழ்க்கை சென்று முடிந்தது என்று சீரழிவுகள் மட்டுமே மிஞ்சிய வாழ்க்கை பலருக்கு அமைந்து விடுகிறது.
: குடும்ப பொறுப்பு - திருமணம் முடிப்பது எதற்கு என்பதை பற்றிய தேடல் [ குடும்ப பொறுப்பு ] | : Family responsibility - A search for why marriage ends? in Tamil [ Family responsibility ]
திருமணம் முடிப்பது எதற்கு என்பதை பற்றிய
தேடல்?
திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல்
தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.
அவர்களைப் பொறுத்தவரை மனைவி என்பவள் திருமணம் முடிக்கும் வரை அத்தியாவசியத்
தேவை, அதன்
பின் அவள் ஒரு வாழ்நாள் தொல்லை என்பதைப் போல்
தான் நடந்து கொள்வார்கள்.
அதற்கு ஏற்றால் போல் நகைச்சுவைகளும், வீடியோ க்லிப்களும் மனைவியை கலாய்ப்பது, திருமணத்தின் பின் மனைவி ஒரு தொல்லை போன்று சித்தரித்து
வெளிவர, அதனை
இவர்கள் நிஜ வாழ்விற்கு உருக்கொடுத்து வாழ
முயற்சி செய்கின்றனர்.
இவர்களுக்கு மனைவி தொல்லையாகிப் போவது எங்கென்றால், திருமணம் முடித்து விட்டோம், எமக்கு என்று ஒரு மரியாதை வேண்டும், எமது மனைவிக்கு என்று மரியாதை இருக்க வேண்டும்.
என் பிள்ளைகளுக்கு மரியாதையான தகப்பனாக நான் இருக்க வேண்டும், எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது அதன் மானத்தை
காக்க வேண்டும் என்ற எந்த பெறுப்பும் இல்லாமல்,
24-25 வயதாகும்போதே 17-18 வயதில் ஒருத்தியை தேடி திருமணம் முடித்துக்
கொள்கின்றனர். சில நாட்களின் பின் "இவ்வளவு தானா பொம்புள" என்பது போல் அனைத்தும்
தீர்ந்த பின்,
பொண்டாட்டியிடம் தீர்க்க வேண்டியதை தீர்த்து விட்டு குப்புரப்படுத்துக் கொள்கின்றனர். அல்லது கைத்
தொலைபேசியில் மூழ்கி விடுகின்றனர்.
மனைவியின் வீட்டை, அங்கு செல்வதை கேவலமாக பார்ப்பது, அவளுடன் வெளியில் செல்வதில்லை என்று வீட்டோடு
அவளை வைத்து விடுகின்றனர்.
இப்படி வாழ்ந்தால் தான் கெத்தாம் இல்லாவிட்டால் அவர் பொண்டாட்டி தாசனாம், இதைப் பற்றி எல்லாம் அந்த மனைவி கதைத்தால், இரவு தாமதமாகாமல் வீடு வாங்க என அவள் சண்டைபிடித்தால், தெருத் தெருவாக அலைந்து திரிய வேண்டாம் என அவள்
கோபித்தால்,......, அது
அடக்கு முறையாம் , வாய் காட்டுவதாம், அறப்படிக்கிறதாம் என்று சண்டை சச்சரவு, அடிதடி என்று வம்பிழுத்து, கடைசியில் தகாத உறவு, அது இது என எத்தனையோ குடும்ப சீரழிவுகள், பல இடங்களில் விவாகரத்து வரை வாழ்க்கை சென்று
முடிந்தது என்று சீரழிவுகள் மட்டுமே மிஞ்சிய வாழ்க்கை பலருக்கு அமைந்து விடுகிறது.
பொண்டாட்டி என்றால் சமைத்துப் போடவும், கட்டிலை பகிர்ந்து கொள்ளவும் மட்டும் தானோ?
இதையே உமது அப்பா செய்து வந்தால், அவரை எல்லாம் ஒரு மனுஷனா, கெத்தான ஆம்புளயாக அந்த ஊர் மதிக்குமா, குடும்பம் மதிக்குமா இல்லை நீங்க தான் மதித்து
இருப்பீங்களா?
உமது வீடு வீடாக இருந்திருக்குமா? உமது குடும்பம் குடும்பமாக இருந்திருக்குமா? உம்மால் படித்திருக்க முடியுமா? தெருவில் தலை நிமிர்ந்து நடந்திருக்கத் தான் முடியுமா? யோசனை செய்யுங்கள்.
நீங்களும் திருமணம் முடித்து விட்டீர்கள், உமக்கும் குடும்பம் என்ற ஒன்று வந்தாகிவிட்டது
இப்படியே போவதா அல்லது,
சரி இத்தனை நாள் இப்படி இருந்து விட்டேன். இனிமேல்
சரி திருந்தி மரியாதையாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றேனும் கொஞ்சம் மனதில்
எடுத்து,
ஒருத்தியின் கணவன் என்றால் நான் ஒரு குடும்பத் தலைவன், எனக்கு 25 வயது தான் என்றாலும் என்னை நம்பி வந்தவளின்
மரியாதை கூட என் கையில் என்பதை நினைத்து திருந்தி வாழ முயற்சி செய்வோம்.
கணவன் என்றால், தகப்பன் என்றால் அந்த வீட்டில் எமக்குக் கீழ் இருப்பவர்கள் எம்மை
ஆசையாக வேலை விட்டு வரும் வரை வரவேற்கக் காத்திருக்க வேண்டும்.
ஒன்றாக, சாப்பிட்டு சந்தோஷமாக அந்த வீட்டின் நிம்மதியாக, அத்திவாரமாக இருந்திட வேண்டும்.
பிள்ளைகுட்டியாக ஒன்றாக மகிழ்ச்சியாக, அவர்களின் பாதுகவலனாக இருந்திட வேண்டும். இனியாவது திருந்தி வாழ பழகிக்கொள்ளுங்கள்., மனைவி மக்களை காத்து இறை நம்பிக்கை உடன் வாழ்வோம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: குடும்ப பொறுப்பு - திருமணம் முடிப்பது எதற்கு என்பதை பற்றிய தேடல் [ குடும்ப பொறுப்பு ] | : Family responsibility - A search for why marriage ends? in Tamil [ Family responsibility ]