மீன்கள்

மீனை சுத்தம் செய்யும்போது, இதை மட்டும் மறக்காதீங்க!!!

வீடு | அனைத்து வகைகள் | வகை: மீன்கள்
மீன்கள் பற்றி தெரிய வேண்டுமா? | Want to know more about fish?

மீன்கள் பற்றி தெரிய வேண்டுமா?

Category: ஆரோக்கியம்: மீன்கள்

நம் நாட்டில் உணவிற்காக மீன் வளர்த்தல் தொழில் நடைபெறுகிறது. பெரும்பாலானவை கடல் மீன்கள், நன்னீர் மீன்கள் மனிதர்களின் உணவிற்காக பிடிக்கப்பட்டு, ஆரோக்யத்திற்காகவே அதனை சமைத்து உண்ணபடுகிறது.

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? | What are the health benefits of eating shrimp?

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

Category: ஆரோக்கியம்: மீன்கள்

உடல் நிலை மேம்படுகிறது, உடல் நரம்புகள் வலுப்படுகின்றன. இறாலில் உள்ள கால்சியம் உடல் எடையை குறைக்கவும் உடல் கொழுப்புகளை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம், உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்..?? | What is the difference in nutrition between river fish and sea fish..??

ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்..??

Category: ஆரோக்கியம்: மீன்கள்

`நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்துவெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா...' - இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும்.

மீன் பிரியரா நீங்கள்.. | Are you a fish lover?

மீன் பிரியரா நீங்கள்..

Category: மீன்கள்

உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கு.. நாளை மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு மீன் வாங்கலாமா நாளை முதல் மீன் மார்க்கெட் போய் விரும்பும் மீன்களை அள்ளி கொண்டு வரலாம்.

மீன்கள் | Fishes

மீன்களை எப்படி கழுவ வேண்டும் என்பதற்கு, யூடியூப்களில் எத்தனையோ வீடியோக்கள் உள்ளன.. இதற்கு காரணம், மீன்களை சமைப்பதைவிட, அதை கழுவுவதில்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதாகும்!!!

: மீன்கள் - மீனை சுத்தம் செய்யும்போது, இதை மட்டும் மறக்காதீங்க!!! [ மீன்கள் ] | : Fishes - When cleaning the fish, don't forget this!!! in Tamil [ Fishes ]

மீன்கள்

மீனை சுத்தம் செய்யும்போது, இதை மட்டும் மறக்காதீங்க!!!

 

மீன்களை எப்படி கழுவ வேண்டும் என்பதற்கு, யூடியூப்களில் எத்தனையோ வீடியோக்கள் உள்ளன.. இதற்கு காரணம், மீன்களை சமைப்பதைவிட, அதை கழுவுவதில்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதாகும்!!!

 

ஒவ்வொருவருக்கும் சமைக்கும் பாணி மாறுபடலாம்.. சமையலின் ருசியும் மாறுபடலாம்.. ஆனால், மீன் கழுவுவதை சில வழிமுறைகளை பின்பற்றிதான் சுத்தம் செய்ய வேண்டி வரும்!!!

 

கழிவுகள்: கடைகளில் வாங்கும்போதே மீனை நல்ல மீனாக பார்த்து, பிரஷ்ஷாக வாங்க வேண்டும்.. அதேபோல, மீன்களில் எது தேவையில்லாத கழிவுகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.. இந்த மீன்களுக்குள் பச்சை நிறத்தில் இருக்கும் பொருளை, முழுமையாக வெளியே எடுக்காவிட்டால், மொத்த குழம்பின் சுவையும் கெட்டுவிடும்.. மீனை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில் கசப்பு தன்மையும் நமக்கு சேர்ந்துவிடும்!!!

 

எந்த மீன் வாங்கினாலும், முதலில் நாலைந்து முறை தண்ணீரில் அலச வேண்டும்.. மீன் செதில்களில் உள்ள அழுக்கு, கிருமிகள் இந்த தண்ணீரிலேயே நீங்கிவிடும்.. அதிலும், மீன்களை ஓடும் நீரில் கழுவி, முன்னிருந்து பின்னுக்கு தேய்க்க வேண்டும்.. அடுத்து, மீன்களிலிருந்து துடுப்புகளை முதலில் வெட்டி எடுத்துவிட வேண்டும். கூர்மையான கத்தியால், மீனின் வயிற்றில் வைத்து, தலையை மட்டும் வெட்டி தனியாக வைக்கவும். பிறகு, வயிற்றுப் பகுதியை V வடிவத்தில் வெட்டவும்!!!

 

சதைப்பகுதி: இப்போது உள்ளிருக்கும், குடல்கள் உட்பட மற்ற பாகங்களை வெளியே எடுத்துவிட வேண்டும்.. அதாவது, சதை மட்டுமே வைத்து, மீனுக்குள் இருக்கும் மொத்தத்தையும் நீக்க வேண்டும். பிறகு, மீன்களின் செதில்களை அகற்ற வேண்டும்.. கத்தியை வைத்தே மீனின் செதில்களை அகற்றலாம்!!!

 

மீனை வெட்டும்போது, மீனின் தலையை தூக்கி போட்டுவிடுவார்கள்.. உண்மையை சொன்னால், மீனைவிட, மீன் தலையில்தான் அதிக சத்துக்கள் உள்ளன என்பது பலரும் அறியாத சீக்ரெட்.. எனினும், தலையை நீக்க வேண்டுமானால், மீனை ஒரு கையில் பிடித்து மெதுவாக அதன் வாய் பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, 2 பக்கமும் சிவப்பாக இருக்கும் செதில்களையும் நீக்க வேண்டும்!!!

 

மீன்களை சுத்தம் செய்வதில் அடிப்படை விஷயங்கள் இவைகள்தான் என்றாலும், ஒவ்வொரு மீனையும் ஒவ்வொரு வகையில் பதமாக வெட்டுவார்கள்.. உதாரணமாக, கானாங்கெளுத்தியை சுத்தம் செய்வது எப்படி தெரியுமா? இந்த கானாங்கெளுத்தியில் 3 ஜோடி துடுப்புகள் இருக்கின்றன.. எனவே, முதலில், துடுப்புகள் வெட்டப்பட வேண்டும். பிறகு வாயிலிருந்து செவுள் வரை தலை பகுதியை துண்டிக்க வேண்டும்!!!

 

வயிற்றுப்பகுதி: அடுத்து, வயிற்றை லேசாக கிழித்து, குடல் மற்றும் பிற கருப்பு கழிவுகள் அகற்ற வேண்டும். இதில் வயிற்றுப்பகுதிதான் மிகவும் முக்கியம்!!!

 

அதேபோல, வழு வழுவென தோற்றம் கொண்ட விரால் மீனை, கத்தியால் இருபுறமும் லேசாக சுரண்டி விட்டு, மீனை வெட்டி விடுகிறார்கள். ஆனாலும், விரால் மீனின் வழுவழுப்பு போகாது. அந்த வழுவழுப்பு கொஞ்சம் கசப்பு தன்மை கொண்டது.

அதுமட்டுமல்லாமல், அது மீனின் உடலில் இருக்கும் வரை, மீன் மீது மசாலா போதிய அளவில் ஒட்டாது.. மீன் வெந்துவிடுமே தவிர, அந்த வழுவழுப்பு ஒட்டிக் கொண்டே இருக்கும். ஒருவித துர்நாற்றமும் இருக்கும்!!!

 

விரால் மீன்: அதனால்தான், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் விரால் மீன் வாங்கினால், அதை வாங்குவதை விட, சுத்தம் செய்வதில் தான் அதிக அக்கறை செலுத்துவார்கள்!!!

 

விரால் மீன்களை, சிமெண்ட் தரையில், தோல் தேய தேய்த்து எடுப்பார்கள்.. அதாவது, சாம்பல் போன்ற பொருட்களை வைத்து, பொன்னிறமாக இருக்கும் மீன், வெள்ளை கலராக மாறும் அளவிற்கு தேய்த்து எடுத்து சுத்தம் செய்வார்கள். அந்த வழுவழுப்பு கொஞ்சம்கூட இல்லாமல் பார்த்து கொள்வார்கள். தென்மாவட்டங்களில் மீன் குழம்பு ருசியாக இருக்க இதுவும் ஒரு சீக்ரெட் ஆகும்!!!

 

கல் உப்பு: ஆனால், மீன்களை சுத்தம் செய்ய எக்காரணம் கொண்டும், சோப்பு, சோப்புபவுடர் மாதிரியான கெமிக்கல் போட்டு கழுவக்கூடாது. கொஞ்சம் கல் உப்பு, தயிர் கலந்த நீரில் கழுவலாம். மோர் இருந்தால், அதிலும் கழுவலாம்.. அல்லது உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு கொண்டு கழுவலாம்!!!

 

கல் உப்பு, சிறிது ராகி இவைகளை கலந்து நீரில் கழுவினாலும் மீனின் துர்நாற்றம் போகும்.. ராகி மாவு எதற்கென்றால், மீனின் அனைத்து பகுதிகளிலும் சென்று தேவையில்லாத அழுக்குகளுடன் ஒட்டிக்கொண்டுவிடும்.. பிறகு, குளிர்ந்த நீரில் கழுவும்போது ராகி மாவு மீனிலுள்ள அழுக்கை வெளியேற்றிவிடும்!!!

 

சீக்ரெட்: இன்னொரு சீக்ரெட்டும் உண்டு.. மீன் சமைக்கும்போது, ஈரமான துண்டை கிச்சனில் தொங்க விடுவார்களாம்.. இது, மீனின் கெட்ட வாசனையை ஈர்த்துவிடுமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

: மீன்கள் - மீனை சுத்தம் செய்யும்போது, இதை மட்டும் மறக்காதீங்க!!! [ மீன்கள் ] | : Fishes - When cleaning the fish, don't forget this!!! in Tamil [ Fishes ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: மீன்கள்