அன்னாசி பழத்தின் நன்மைகள்.......
Category: பழங்கள் - பலன்கள்
* அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். * அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.
ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா
Category: பழங்கள் - பலன்கள்
உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு #கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம். நாட்டு கொய்யாப்பழம் தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆப்பிளை விட கொய்யாவிற்குதான் முதல் மரியாதை தருவீர்கள். அதன் சத்துக்களையும் , தீர்க்கும் நோய்களையும் பற்றி தெரிந்தால் நிச்சயம் உங்கள் மார்க்கெட் பட்ஜெட்டில் கொய்யாவிற்கும் இடமிருக்கும். சத்துக்கள் : கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் 'சி' சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்டது. வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது :
நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்! பற்றி அறிந்து கொள்வோமா
Category: பழங்கள் - பலன்கள்
மருத்துவகுணம் வாய்ந்ததாக கருதப்படும் உலர் பழங்களில் பேரீச்சம்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பழம் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும் . ஆயுர்வேத , யுனானி , சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது . சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம்பழம் . இந்த பழத்தில் இரும்புச்சத்து , கால்சியம், வைட்டமின் ஏ , பி , பி 2 , பி 5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன . வைட்டமின் ‘ ஏ ‘ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதை குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலை கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும் . இதனால் பார்வைக் கோளாறுகள் நீங்கும் . பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும் , இரும்புச்சத்தும் தேவை . மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன . இதை நிவர்த்தி செய்யவும் , ஒழுங்கற்ற மாத விலக்கை சீராக்கவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது . மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலக்கட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை , கால் மூட்டுகளில் வலி உண்டாகும் . இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும் . ஆண்மையை அதிகரிக்கவும் தேனுடன் கலந்த பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது . பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு , பாலையும் பருகி வந்தால் சளி , இருமல் குணமாகும் .
நீலகிரி பிளம்ஸ் பழம் ஏன் உலக பேமஸ் தெரியுமா அப்படி என்ன ஸ்பெஷல்
Category: பழங்கள் - பலன்கள்
நீலகிரியில் விளையும் பிளம்ஸ் பழங்கள் இயற்கையாகவே அதிகச் சுவை கொண்டதாக இருப்பதால் மக்கள் அதை அதிகம் விரும்பி உண்கின்றனர். பழங்கள் பெரும்பாலும் உடலுக்கு நன்மை அளிப்பதாக இருந்தாலும் சீசனுக்கு மட்டும் கிடைக்கும் பழங்கள் அந்த பருவத்திற்கு ஏற்ற மிகவும் சிறந்த பழங்களாகத் திகழ்கின்றன. கோடைக்காலத்தில் நுங்கு, பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றை அதிகம் காண முடிவது போல பிளம்ஸ் பழங்களையும் கோடைக்கால சீசனில் தான் அதிகம் காண முடியும். சிவப்பு நிறத்தில் சிறிய ஆப்பிள் போன்று தோற்றமளிக்கும் பிளம்ஸ் பல மகத்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டதெனக் கூறப்படுகிறது. இனிப்பு, புளிப்புடன் லேசாக கசப்பு சுவையும் கொண்ட இந்த பழத்தில் விட்டமின் பி1, விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் பி 2, பி 3, பி 6, விட்டமின் E போன்ற பல சத்துக்கள் உள்ளது. பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் உடல் எடையை சீரமைக்க முடியும். இந்த பழம் கொழுப்பைக் குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது. மேலும் இந்த பழத்தில் விட்டமின் சி இருப்பதால் முகப்பொலிவை மேம்படுத்த உதவுகிறது. பிளம்ஸ் மரம் வளர்வதற்குக் குளிர்ச்சியான காலநிலை தேவைப்படுகிறது. நீலகிரியில் கோடைக்காலங்களில் மழைப்பொழிவு மற்றும் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் பிளம்ஸ் பழம் இயற்கையாகவே வளர்கிறது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் ஆங்காங்கே இந்த பிளம்ஸ் பழ மரங்களைக் காண முடிகிறது.
நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . அத்திப்பழத்தை உண்டால் நம்மை மற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள விடாமல் தடுக்கிறது .
: பழங்கள் - அத்திபழத்தின் நன்மைகள் தெரியுமா? [ பழங்கள் - பலன்கள் ] | : Fruits - Do you know the benefits of figs? in Tamil [ Fruits - Benefits ]
பழங்கள்
அத்திபழத்தின் நன்மைகள் தெரியுமா?
1. அத்தி பழம் செரிமானத்திற்கு
நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . அத்திப்பழத்தை உண்டால் நம்மை மற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள விடாமல் தடுக்கிறது .
2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
ட்ரைகிளிசரைடுகள் (triglyceride) இரத்தத்தில் உள்ள ஒரு கொழுப்புத் துகள்கள், அவை இதய நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும் . அத்தி பழம் உங்கள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
3. கொழுப்பை குறைக்க
அத்திப்பழத்தில் பெக்டின் ( pectin )உள்ளது, இது கரையக்கூடிய நார்ச்சத்து, இது கொழுப்பின் அளவைக் குறைக்கும் . உலர் அத்திப்பழங்களில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்த கொழுப்பையும் குறைக்கின்றன,
4. ஆஸ்துமாவை சமாளிக்க
மூச்சுக்குழாய் ஆஸ்துமாவை சமாளிக்க ஒரு திறமையான முறை தூள் வெந்தயம், தேன் மற்றும் அத்தி சாறு ஆகியவற்றின் கலந்து குடிப்பது . ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் அத்தி சாற்றையும் பருகுங்கள் .
5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அத்திப்பழம் உங்கள் உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் roundworms ரவுண்ட் வார்ம்களைக் கொல்கிறது , இவை தான் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது . அத்திப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் சேர்ந்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
6. ஹார்மோன்களை பெருக்கும்...
அத்தி ஒரு சிறந்த பாலியல் துணை என்று கருதப்படுகிறது. அவற்றில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மெக்னிசியம் மற்றும் துத்தநாகத்தை அதிகம் கொண்டுள்ளது இந்த சத்துக்கள் ஆண்ட்ரோஜன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்ற பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது..........
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: பழங்கள் - அத்திபழத்தின் நன்மைகள் தெரியுமா? [ பழங்கள் - பலன்கள் ] | : Fruits - Do you know the benefits of figs? in Tamil [ Fruits - Benefits ]