உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக..!!! எளிமையான 50 வழிகள்
Category: மஹாலட்சுமி தேவி வழிபாடு
1. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும். 2. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். 3. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை. 4. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும். 5. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம். 6. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். 7. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். 8. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும். 9. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. 10. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும். 11. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.
உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம் இருக்க தாமரைப்பூ வழிபாடு
Category: மஹாலட்சுமி தேவி வழிபாடு
உங்களின் வீட்டின் பூஜையறையில் உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை வெள்ளிக்கிழமை அன்று தாமரைபூவை வைத்து வணங்குங்கள். உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம் இருக்கும். பூக்களுள் சிறந்த பூ: பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல். வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வ தில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. உங்களின் தெய்வத்தை வணங்கினால் போதும் ,அதாவது உங்களின் தெய்வமுமே லட்சுமியாக இருந்து உங்களுக்கு நல்லதை செய்துக்கொடுக்கும்.
வரலட்சுமி பூஜை எப்படி செய்வது வரலட்சுமி பண்டிகையை கொண்டாட சரியான முகூர்த்த நேரம் எது
Category: மஹாலட்சுமி தேவி வழிபாடு
வரலட்சுமி பூஜையானது தென்னிந்திய மக்களால் விரும்பி கொண்டாடப்படும் விரதமாகும். இந்த பூஜை செல்வ வளங்களின் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்காக கொண்டாடப்படுகிறது. இந்த பூஜை பொதுவாக கர்நாடக, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஏராளமான பெண்கள் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வேண்டி வழிபடுகின்றனர். மகாலட்சுமியின் அருளால் சகல செல்வ வளங்களுடன் ஆரோக்கியமான உடல் நலத்துடன் நீடோடி வாழலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் கணவர் நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக சுமங்கலி பூஜையாகவும் இதை வழிபடுகின்றனர். கீழே இந்த வருடம் வரும் வரலட்சுமி பூஜையை சிறப்பாக கொண்டாடுவதற்கான நேரமும் காலமும் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம். வரலட்சுமி பூஜை முகூர்த்தம் இந்த வரலட்சுமி பூஜையானது ஒவ்வொரு வருடமும் ஷ்ரவண மாதத்தில் சுக்லாம் பஷ்ட்சா போது முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை கண்டுபிடிக்க இந்த பூஜை ஒவ்வொரு வருடமும் ரக்ஷா பந்தனுக்கு முன்னாடி வரும் வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி பூஜை செய்வதற்கான பொருட்கள் எல்லா பூஜைக்கும் நாம் நல்ல படியாக பூஜை செய்ய சில பொருட்கள் தேவைப்படுகின்றன. அதே போல் வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னரே அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. கடைசி நேரத்தில் ஒவ்வொரு பொருளாக தேடினால் பூஜையை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் போகிவிடும். மேலும் இந்த முன்னேற்பாடுகள் பூஜையின் போது பதட்டத்தை உண்டாக்காமல் உங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும்.
வரலட்சுமி விரதம் தோன்றிய கதை மற்றும் விரதம் இருக்கும் முறை பற்றி தெரிந்து கொள்வோமா
Category: மஹாலட்சுமி தேவி வழிபாடு
கல வளங்களையும் தரும் வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று பெண்கள், குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலி பாக்கியத்துக்காகவும், குடும்ப சுபிட்சம், மற்றும் சௌபாக்கியம் நிலைக்கவும், இந்த விரதத்தை பக்தியுடன் மேற்கொள்ள வேண்டும். கேட்கும் வரங்களை அள்ளித் தரும் லட்சுமி தேவியை பூஜிப்பதால், வாழ்க்கையில் நிலையான செல்வமும், நீடித்த புகழும் கிடைக்கும். திருமணமான பெண்கள், ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டில் செல்வம் கொழிக்கச் செய்யும் வலம்புரிச் சங்கு மகாலட்சுமி வழிபாடு
Category: மஹாலட்சுமி தேவி வழிபாடு
மகாலட்சுமியின் கடாட்சத்தைப் பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்குக் கிட்டும் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடும்.
ஜாதகத்தில் பணக்கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய திசா புத்திகள் நடப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த முறைகளை கடைபிடித்து வந்தால் ஸ்ரீ மஹாலட்சுமியின் அருள்பெற்று பணக்கஷ்டம் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். 1. விநாயகருக்கு தினம் மூன்று நாட்டு வாழைப்பழங்களை கோவிலில் சமர்ப்பித்து வணங்கி வரவும். தொடர்ந்து 41 நாட்கள் இதை செய்யவும். 2. ஆலமரத்தின் அடியில் சுத்தமான பசும் பால் மற்றம் சர்க்கரை சேர்த்து ஊற்றி ஈரமான மண்ணெடுத்து சிறிது நெற்றியில் இட்டுக்கொள்ளவும். 3. வியாபாரத்திலும் உத்யோகத்திலும் பணம் சம்பந்தமான நஷ்டம் ஏற்படாமல் இருக்க காய்ச்சாத பசும்பால் 4 மடங்கிற்கு 1 மடங்கு பார்லி அரிசி கலந்து ஆற்றுப்பிரவாகத்தில் சேர்க்கவும். 4. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு மாதுளம் பழம் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று கடவுளுக்கு சமர்ப்பிக்கவும். 5. உங்கள் படுக்கையறையில் சுத்தமான இடத்தில் மயிலிறகை வைக்கவும். 6. ஸ்வஸ்திக் சின்னம் பொறித்த செப்பு டாலர் கழுத்தில் தொங்கவிடவும். 7. ஆண்கள் வலது சுண்டு விரலிலும்¸ பெண்கள் இடது சுண்டு விரலிலும் வெள்ளி வளையம் போட்டுக்கொள்ளவும். 8. வெள்ளியில் செய்த சதுர வடிவ நாணயத்தை எப்போதும் பர்சில் அல்லது சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்.
: மஹாலட்சுமி தேவி - குறிப்புகள் [ மஹாலட்சுமி தேவி வழிபாடு ] | : Goddess Mahalakshmi - Notes in Tamil [ Worship of Goddess Mahalakshmi ]
மஹாலட்சுமி அன்னை நிரந்தரமாக நம்முடன் வாசம் செய்ய சில குறிப்புகள் பற்றி அறிந்து கொள்வோமா?
ஜாதகத்தில் பணக்கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய திசா
புத்திகள் நடப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த முறைகளை கடைபிடித்து வந்தால் ஸ்ரீ மஹாலட்சுமியின்
அருள்பெற்று பணக்கஷ்டம் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் அடையலாம்.
1. விநாயகருக்கு தினம் மூன்று நாட்டு வாழைப்பழங்களை
கோவிலில் சமர்ப்பித்து வணங்கி வரவும். தொடர்ந்து 41 நாட்கள் இதை செய்யவும்.
2. ஆலமரத்தின் அடியில் சுத்தமான பசும் பால் மற்றம்
சர்க்கரை சேர்த்து ஊற்றி ஈரமான மண்ணெடுத்து சிறிது நெற்றியில் இட்டுக்கொள்ளவும்.
3. வியாபாரத்திலும் உத்யோகத்திலும் பணம் சம்பந்தமான
நஷ்டம் ஏற்படாமல் இருக்க காய்ச்சாத பசும்பால் 4 மடங்கிற்கு 1 மடங்கு பார்லி அரிசி கலந்து ஆற்றுப்பிரவாகத்தில்
சேர்க்கவும்.
4. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு மாதுளம் பழம் ஏதாவது
ஒரு கோவிலுக்கு சென்று கடவுளுக்கு சமர்ப்பிக்கவும்.
5. உங்கள் படுக்கையறையில் சுத்தமான இடத்தில் மயிலிறகை
வைக்கவும்.
6. ஸ்வஸ்திக் சின்னம் பொறித்த செப்பு டாலர் கழுத்தில் தொங்கவிடவும்.
7. ஆண்கள் வலது சுண்டு விரலிலும்¸ பெண்கள் இடது சுண்டு விரலிலும் வெள்ளி வளையம்
போட்டுக்கொள்ளவும்.
8. வெள்ளியில் செய்த சதுர வடிவ நாணயத்தை எப்போதும்
பர்சில் அல்லது சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்.
9. கடன் உள்ளவர்கள் செப்பு நாணயத்தை வெள்ளை கயிற்றில்
கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள்
10. கடன் இருப்பவர்கள் ஆஞ்சநேயரை வழபடவேண்டும்.
11. இளநீரையும்¸ ஒரு கைப்பிடி பாதாம் பருப்பையும் நதிப்பிரவாகத்தில்
போட்டு வர கடன் தொல்லை குறைந்துவிடும்.
12. கருப்பு நாய்க்கு முடிந்த போதெல்லாம் பிஸ்கட்
கொடுங்கள்.
13. பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் சனிக்கிழமை
அன்று வீடு நிர்மாணம் ஆரம்பிக்க வேண்டாம்.
14. பொருளாதார சிக்கலில் உள்ளவர்கள் பொருளாதாரம் சம்பந்தமாக சந்திக்கவேண்டியவர்களை சூரிய
அஸ்தமனத்திற்குப் பின்னால் சந்திக்க செல்லுங்கள்.
15. தினந்தோறும் சிறிது மஞ்சள்பொடியை குழைத்து நெற்றியில்
இட்டுக்கொள்ளுங்கள்
16. தினமும் இரவில் உணவுக்குப்பின்னர் அரை டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சரஸ்வதி அரிஷ்டத்தை கலந்து
குடிக்கவும்.
17. கழிவு நீர் செல்லும் கால்வாயில் தினமும் ஏதாவது
ஒரு வாசனை மலர்களை போடுங்கள்.
18. மாதம் ஒருமுறை கோவில் பூசாரியிடம் ஒரு கிலோ உருளைக்கிழங்கு
தானமாகக் கொடுங்கள்
19. வீட்டின் சுற்றுப்புறம் மாதுளம்பழ செடிகளை நட்டு
வையுங்கள்
20. ஒரு வெள்ளைத்துணியில் நான்கு சிறிய வெள்ளி குண்டுமணிகளை
சுற்றி எப்போதும் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். பணம் நிலைத்திருக்கும்.
மேற்கண்ட அனைத்தையும் கடைபிடிக்க இயலாமல் போனாலும்
ஒரு சில பரிகாரங்களையாவது கடைபிடித்தால் நிச்சயம் பொருளாதார மாற்றம் நிகழும்.
அன்னை மகாலட்சுமி திருவடிகள் சரணம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: மஹாலட்சுமி தேவி - குறிப்புகள் [ மஹாலட்சுமி தேவி வழிபாடு ] | : Goddess Mahalakshmi - Notes in Tamil [ Worship of Goddess Mahalakshmi ]