தோல்வி

இழப்பே சிறப்பு தெரியுமா ?

வாழ்க்கையை மேலே தூக்கும் Failure Mindset – யாரும் சொல்லாத உண்மை | Failure Mindset that elevates life – The truth no one tells

வாழ்க்கையை மேலே தூக்கும் Failure Mindset – யாரும் சொல்லாத உண்மை

Category: தோல்வி பயம்

தோல்வி = முடிவு அல்ல | Failure Mindset மாற்றும் வாழ்க்கை உண்மை தோல்வி உங்களை உடைக்கிறதா? இல்லை வளர்க்கிறதா? Failure-ஐ feedback-ஆ மாற்றி வாழ்க்கையில் முன்னேற practical + emotional guide.

தோல்வி பயம் எப்படி உருவாகுது? அது உங்கள் முடிவுகளை சத்தமில்லாமல் கெடுக்குது | How does fear of failure develop? It silently ruins your decisions

தோல்வி பயம் எப்படி உருவாகுது? அது உங்கள் முடிவுகளை சத்தமில்லாமல் கெடுக்குது

Category: தோல்வி பயம்

தோல்வி நடக்காமலேயே வாழ்க்கை ஏன் stuck ஆகுது? தோல்வி பயம் எப்படி உங்கள் முடிவுகளை பாதிக்கிறது என்பதை விளக்கும் premium tamilarnalam article.

**தோல்வி பயம் எப்படி உருவாகுது?  அது உங்கள் முடிவுகளை எப்படி மெதுவா கெடுக்குது?** | **How ​​does fear of failure develop?  How does it slowly ruin your decisions?**

**தோல்வி பயம் எப்படி உருவாகுது? அது உங்கள் முடிவுகளை எப்படி மெதுவா கெடுக்குது?**

Category: தோல்வி பயம்

தோல்வி பயம் எங்கிருந்து வருகிறது? அது உங்கள் முடிவுகளை எப்படிச் சிதைக்கிறது? இந்த பயத்தை உடைக்கும் நடைமுறை + ஆன்மீக வழிகள். Human-centric, Google-safe premium article.

ஏன் சிலர் தோல்வியை ரசிக்கிறாங்க? | தோல்விக்குப் பின்னால் இருக்கும் மன ரகசியம் | Why do some people enjoy failure? | The mental secret behind failure

ஏன் சிலர் தோல்வியை ரசிக்கிறாங்க? | தோல்விக்குப் பின்னால் இருக்கும் மன ரகசியம்

Category: தோல்வி

தோல்வி சிலருக்கு சுமையா இருக்குது… சிலருக்கு சக்தியா மாறுது. ஏன் இந்த வித்தியாசம்? Failure psychology, mindset shift, growth secret-ஐ மனதை தொடும் தமிழில் விளக்கும் premium article.

துன்பத்தை மறந்தாலும், வலியை ஏன் மறக்க முடியவில்லை? – மனதின் மறைமுக ரகசியம் | Why Can’t We Forget the Pain Even After the Suffering Is Over?

துன்பத்தை மறந்தாலும், வலியை ஏன் மறக்க முடியவில்லை? – மனதின் மறைமுக ரகசியம்

Category: தோல்வி

துன்பம் தற்காலிகமானது என்றாலும், அதனால் ஏற்பட்ட வலியை ஏன் மறக்க முடியவில்லை? மனதின் உளவியல் ரகசியம், நினைவுகளின் தாக்கம், ஏற்றுக்கொள்வதின் சக்தி ஆகியவற்றை ஆழமாக விளக்கும் விரிவான கட்டுரை.

தோல்விகளைத் தகர்த்து மீண்டும் எழுவது எப்படி? நெகிழ்ச்சித் திறன் (Resilience) வளர்க்க 10 வழிகள்! | Tamilarnalam |  How to Build Resilience: 10 Ways to Bounce Back from Failure | Tamilarnalam.com

தோல்விகளைத் தகர்த்து மீண்டும் எழுவது எப்படி? நெகிழ்ச்சித் திறன் (Resilience) வளர்க்க 10 வழிகள்! | Tamilarnalam

Category: தோல்வி

தோல்விகளால் மனம் உடைந்து போயிருக்கிறீர்களா? இழந்ததை மீட்கவும், மன உறுதியுடன் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பவும் தமிழர் நலம் வழங்கும் 10 ரகசிய வழிகள் இதோ! (English): Feeling defeated by failure? Learn how to build resilience and bounce back stronger than ever with Tamilarnalam’s expert guide on mental toughness.

தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி? சாதிக்க துடிப்பவர்களுக்கான 10 ரகசியங்கள்! | Tamilarnalam | தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி? சாதிக்க துடிப்பவர்களுக்கான 10 ரகசியங்கள்! | Tamilarnalam

தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி? சாதிக்க துடிப்பவர்களுக்கான 10 ரகசியங்கள்! | Tamilarnalam

Category: தோல்வி

தோல்வியால் துவண்டு போயிருக்கிறீர்களா? உங்கள் தோல்வியையே வெற்றியின் ஏணியாக மாற்றுவதற்கான 10 ரகசிய வழிமுறைகளை தமிழர் நலம் இங்கே வழங்குகிறது! ​

டிஸ்னி CEO பாப் ஈகர்: தோல்வியுற்ற தந்தையும் வென்ற மகனும்! Proxy Self-esteem ரகசியம் - தமிழர் நலம்

Category: தோல்வி

ஒரு தோல்வியுற்ற தந்தை, உலகையே ஆளும் ஒரு மகனை எப்படி உருவாக்கினார்? பாப் ஈகரின் தந்தை அவருக்குக் கொடுத்த உந்துதலும், அதன் பின்னால் இருக்கும் 'Proxy Self-esteem' உளவியலும் பற்றிய ஒரு ஆழமான அலசல்!

மீண்டெழும் கலை: தோல்விகளை வெற்றியாக்குவது எப்படி? பாப் ஈகரின் மன உறுதி ரகசியங்கள்!

Category: தோல்வி

விழுவதெல்லாம் எழுவதற்கே! டிஸ்னி சி.இ.ஓ பாப் ஈகரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மன உறுதிப் பாடங்கள் மற்றும் தோல்வியிலிருந்து மீண்டெழும் 'Resilience' கலை பற்றி விரிவாக இங்கே காணலாம்.

வெற்றிக்கான உளவியல்: தோல்வி பயத்தை விரட்டுவது எப்படி? சுல்தான் மெகமதுவின் மன உறுதி பாடங்கள் - தமிழர் நலம் | Psychology of Success: Overcoming Fear of Failure with Sultan Mehmed II's Resilience - Tamilar Nalam

வெற்றிக்கான உளவியல்: தோல்வி பயத்தை விரட்டுவது எப்படி? சுல்தான் மெகமதுவின் மன உறுதி பாடங்கள் - தமிழர் நலம்

Category: தோல்வி பயம்

தோல்வி என்ற சொல்லே உங்களை முடக்குகிறதா? 21 வயதில் கான்ஸ்டான்டிநோபிளை வென்ற இரண்டாம் மெகமதுவின் அசாத்திய மன உறுதியும், தோல்வி பயத்தை வெற்றியாக மாற்றும் 5 உளவியல் ரகசியங்களும் இதோ! (English): Does the fear of failure stop you? Discover the incredible mental toughness of Sultan Mehmed II and 5 psychological secrets to turn failure into success on Tamilar Nalam.

தோல்வி என்பது முடிவு அல்ல.. அது ஒரு புதிய தொடக்கம்! இலக்கை அடைய 5 இரும்பு வழிமுறைகள்! | Failure is Not the End.. It's a New Beginning! 5 Iron Rules to Reach Your Goals!

தோல்வி என்பது முடிவு அல்ல.. அது ஒரு புதிய தொடக்கம்! இலக்கை அடைய 5 இரும்பு வழிமுறைகள்!

Category: தோல்வி

​வீழ்வது தவறல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் உங்கள் இலக்கை நோக்கி ஓட உதவும் 5 உளவியல் மற்றும் நடைமுறை ரகசியங்கள் இதோ. (English): Falling is not a mistake, staying down is. Discover 5 psychological and practical secrets to run towards your goal without fearing failure.

தோல்வி | Failure

நாம எல்லோருமே எதையோ அடைவதற்காக ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படி எதையாவது அடைந்த பின்னும் மனதில் அமைதியில்லை. நமது உடலும் உள்ளமும் அதை கொண்டா இதை கொண்டா என்று நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன.

: தோல்வி - இழப்பே சிறப்பு தெரியுமா ? [ தோல்வி ] | : Failure - Do you know that loss is special? in Tamil [ Failure ]

தோல்வி

இழப்பே சிறப்பு தெரியுமா ?

 

நாம எல்லோருமே எதையோ அடைவதற்காக ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படி எதையாவது அடைந்த பின்னும் மனதில் அமைதியில்லை.

 

  நமது உடலும் உள்ளமும் அதை கொண்டா இதை கொண்டா என்று நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன.

 

  அது இல்லாமல் என்னால் வாழவே முடியாது.இது இல்லாமல் எப்படி வாழ்வது?. என்று நம்மை ஓட ஓடத்  துரத்துகின்றன.

 

  எனது வாழ்க்கையும் இப்படித்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒரு கட்டத் தில் தாங்க முடியவில்லை. என்னடா வாழ்கை இது என்று விரக்தி.

 

"ஏன்டா என்ன இப்படி துன்பப் படுத்துற!. வாடா ...வந்து அடிச்சிட்டு போ ........ நான் கஷ்டப்பட்டா ஒனக்கு அவ்வளவு சந்தோஷமா ....."   என்று இறைவனிடம் புலம்பினேன்.

 

  பின்னர் "நானும் எவ்வளவு நாள் தான் வலிக் காத மாதிரியே நடிக்கிறது! .... ......இதுக்கு ஒரு முடிவே இல்லையா!." என வருத்தப் பட்டு கண்ணீர் சிந்தினேன்.

 

  அப்புறம் "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே.இவன் ரொம்ப........நல்லவ.....ன்னு" சொல்லுவான்னு பாத்தா அதுவும் நடக்கல....

 

  நண்பர்களிடம் சொன்னால் "நாங்களும் இப்படித்.......தான்யா வாழ்ந்துகிட்டு இருக்கோம் " என்று அழாக்குறையாக புலம்பினார்கள்.

 

   ஒண்ணுமே புரியலே...ஒலகத்துலே... என்று ஏதும் புரியாது கலங்கி நின்றேன். இப்போது எனது அறுபது வருட வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்.

 

  நல்ல குடும்பம், உன்னதமான மனைவி, சிறந்த மக்கள், உயர்வான உறவுகள், அற்புதமான ஆரோக்கியம் என்று எனது தகுதிக்கு மீறியே அனைத்தும் பெற்றிரு க்கிறேன். குறை சொல்ல ஏதுமில்லை.

 

  இதில் எதுவுமே எனது திறமையாலோஅல்லது  புத்திசாலித் தனத்தினாலோ நடைபெற வில்லை.

 

  அனைத்துமே அதுவாக இயல்பாக நடந்தது. சிந்தித்து பார்த்தால் எந்த நேரத் தில் எனக்கு எது தேவை என்று யாரோ திட்டமிட்டு செயல் செய்திருப்பது புரிகி றது.

 

   எனக்கு எந்த நேரத்தில் எதை படிக்க வேண்டும். யாரை சந்திக்க வேண்டும். அவர்களிடம் இருந்து எனக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று அனைத்துமே முன்னரே திட்டமிட்டு அந்த பிளான் படி நடந்துள்ளது என்பது நன்றாகவே புரிகிறது.

 

  அனைத்தையும் அணுகுவதற்கு வேண்டிய அறிவு எனக்கு தேவையான நேரத்தில் ஒவ்வொரு முறையும் கிடைத்திருக்கிறது.

 

  எனது வாசிப்பு பழக்கத்தின் மூலமே எனது சிந்தனை விரிந்து அதன் மூலம் எந்த நேரத்தில் எந்த செயலை செய்ய வேண்டுமோ அந்த செயலை நான் செய் திருக்கிறேன்.

 

  இது அனைத்தையும் நடத்துவது அந்த இறைசக்தி என்னும் பேராற்றல் தான் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்.

 

வாசிப்பு மற்றும் சிந்திப்பு என்னுள் தினமும் தொடர்கிறது.அதை நானும் மிகவும் நேசிக்கிறேன்.

 

  அதன் மூலம் எனது செயல்களை தீர்மானித்து செயல் படுகிறேன். இதுவே எனது சுதர்மம் என்பதையும்  நன்கு புரிந்து கொண்டேன்.

 

  இத்தனை வருட வாழ்வின் அனுபவத்தில் நான் ஒன்றை நன்கு புரிந்து கொண் டேன்.

 

  அதாவது நமக்கு வழங்கப் பட்ட இந்த வாழ்கை என்பது எதையோ அடைவத ற்கு அல்ல.

 

  நம்மிடம் இருக்கும் அனைத்தையும் விடுவதற்கே இந்த வாழ்கை நமக்கு வழங்கப் பட்டு இருக்கிறது என்பது தான் உண்மை.

 

எதையும் பெறுவதற்குத் தான் நாம் விருப்பப் படுகிறோம். ஆனால் ஒன்றைகூட  இழக்க நாம் எப்போதுமே தயார் இல்லை.இது நாம் வளர்க்கப் பட்ட விதம் நம் மனதில் உருவாக்கும் சிக்கல்.

 

   ஏன் இழக்க வேண்டும் . எதற்கு இழக்க வேண்டும் என்பது இப்போது எழும் கேள்வி.

 

  நாம் சிறு வயதில் இருந்தே இது நல்லது இது கெட்டது என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு , இது வேண்டும் இது வேண்டாம் என்ற எண்ணத்தில் செயல் செய்கிறோம்.

 

  உண்மையில் வேண்டுதல் ஏதும் தேவை யில்லை. அதே போல் வேண்டாமை என்பதும் தேவையில்லை.வேண்டுதல் வேண்டாமை இலானாக இருப்பதே சிறப்பு.

 

   வேண்டுதல்,வேண்டாமை இலானாக நீங்கள் மாறி விட்டால் நீங்களும் இறைவனே. நீங்கள் ஏதுமற்ற பூஜ்யமாகி விடுகிறீர்கள்.

 

   அப்புறம் உங்களுக்கு எந்த துயரும் ஒருபோதும் இல்லை. அனைத்தில் இருந்தும் விடுதலை.


 

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

 

இந்த நாள் இனிய நாளாகட்டும்

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥சிவம்

 

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

: தோல்வி - இழப்பே சிறப்பு தெரியுமா ? [ தோல்வி ] | : Failure - Do you know that loss is special? in Tamil [ Failure ]