கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்
Category: நீதிக் கதைகள்
கழுதை ஒன்று புலியிடம் கூறியது: "புல் நீல நிறமானது". புலி பதிலளித்தது: - "இல்லை, புல் பச்சை." விவாதம் சூடுபிடித்தது,
இரண்டு தவளைகள்
Category: நீதிக் கதைகள்
காட்டுக்குள் ஒரு தவளை கூட்டம் உலாவிக் கொண்டிருந்தபோது, அவற்றுள் இரண்டு தவளைகள் தற்செயலாக ஒரு ஆழமான குழியில் விழுந்துவிட்டன.
ஒரு வியாபாரியின் கதை
Category: நீதிக் கதைகள்
அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓட விட்டான்.
காலத்தின் அருமையை அறிவோம்
Category: நீதிக் கதைகள்
விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான். இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது” என்றான். இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார். மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.
முயற்சி வேண்டும் ஏன்?
Category: நீதிக் கதைகள்
ஒரு நாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
உனக்கொரு ஆபத்து வரும் போது உன் குணத்தை காட்டு
Category: நீதிக் கதைகள்
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார். புன்னகை புரிந்தார். “உனக்கு என்ன வேண்டும்?” “சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டது. அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர்,
நீதிக் கதைகள்
Category: நீதிக் கதைகள்
ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக்கல் பதித்த நெக்லசை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்..., மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள். மகன் அந்த நெக்லசை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான். அவனது மாமா அந்த நெக்லசை முற்றிலுமாகப் பார்த்தார். அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று... பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக் கொள் என்றார்.
புறா சொல்லும் பாடம்
Category: நீதிக் கதைகள்
சில புறாக்கள் ஒரு கோயில் மாடத்துல தங்கியிருந்தன. வயது முதிர்ந்த ஒரு புறாதான் தலைவர். தினமும் காலையில் தலைவர் வழி காட்டி அழைச்சிகிட்டு போகுற இடத்துக்கு போய் இரை சாப்பிட்டுட்டு மாலையில தங்களோட இடத்துக்குத் திரும்பிடும்.
உதவியின் சிறப்பு
Category: நீதிக் கதைகள்
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.
நேர்மைக்கு கிடைத்த பரிசு
Category: நீதிக் கதைகள்
சாம் ஒரு பேராசை மற்றும் சுயநலவாதிக்காரர். அவர் எப்போதும் நிறைய பணம் சம்பாதிக்க விரும்பினார். அவர் தம் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பலத்தையே அளித்து வந்தார். ஒரு நாள், அவர் தன் வாழ்க்கையை மாற்றிய ஒரு பாடத்தை கற்றுக்கொண்டார். ஒரு நாள் 50 தங்க காசுகளை வைத்திருந்த பையை தொலைத்துவிட்டார். சாமும், அவனது நண்பர்களும் பையை தேட ஆரம்பித்தனர், ஆனாலும் அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது. சில நாட்களுக்குப் பிறகு, சாமிடம் வேலை செய்யும் ஒருவரின் பத்து வயது மகளிடம் அந்த பை சிக்கியது, அவள் அதைப் பற்றி தந்தையிடம் சொல்ல அவரது தந்தை சாமிடம் எடுத்துச் செல்ல முடிவெடுத்து பையை சாமிடம் ஒப்படைத்து 50 காசுகள் சரியாக உள்ளதா? என சரி பார்த்துக் கொள்ள சொன்னார்.
வெள்ளை யானை பறந்தது
Category: நீதிக் கதைகள்
மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வைக் குறைந்து போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசினால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக மன்னன், அறிவித்த செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது. குருநாதா! வெள்ளை யானை கூட இருக்கிறதா? எனக் கேட்டான், மட்டி. தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன். குருவே! அந்த யானையைப் பிடித்து வர தைரியம் இருக்கிறதா? என்றான், முட்டாள். உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது! கோழையே! என்னால் முடியாத காரியம் எதுவும் இல்லை? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் நான் போக விரும்பவில்லை, என்றார் குருவே! வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானையின் மேல் சுண்ணாம்பினால் வெள்ளை அடித்து விட்டால், கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்றான், மூடன்.
காசிக்கு சென்றுதான் செய்த பாவத்தை நீக்க வேண்டுமா (சற்குரு சுவாமிகள் சொன்ன நீதிக்கதை)
Category: நீதிக் கதைகள்
ஒருவன் தன் அம்மாவை எட்டி உதைத்து அடித்து விட்டான். அவனது குருநாதர் பெற்ற தாயை அடிக்க கூடாது , நீ அடித்துவிட்டாய் அது பெரிய பாவம், அந்த பாவம் போக காசிக்குசென்று ஒன்பது முழுக்கு முழுக்கு போட்டால் தான் பாவம் போகும் என்றார். காசிக்கு போக காசு இல்லையே என்று அவன் கூற, குரு பிச்சை எடுத்தாவது போ என்றார். ஒரு நாள் சாப்பாடு ஏதும் கிடைக்கவில்லை .பசி மிகுதியால் ஒரு வீட்டில் களைப்பாறுகையில் அந்த வீட்டின் மாடத்தில் கொட்டை பாக்கு இருந்தது அதை எடுத்து வாயில் போட்டு மென்றான். கொட்டை பாக்கு மெல்லும் சத்தத்தை கேட்டு அவ் வீட்டு பெண்மணி நான் தீட்டு ஆன நேரத்தில் வீட்டிற்குள் பாக்கை எடுத்து செல்ல கூடாது என்று மாடத்தில் வைத்து விட்டு சென்றேன் அதைபோய் சாப்பிடீர்களே என்றாள். அதை கேட்டு அவன் தலையில் அடித்து கொண்டு ஒரு பாவத்தை போக்க காசிக்கு செல்கையில் இன்னொரு பாவம் வந்து ஒட்டி கொண்டதே என்று கவலைப்பட்டான். இனி எங்கு சென்றாலும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்தான் . மீண்டும் காசிநோக்கி பயணத்தை தொடர்ந்தான். அன்று இரவு ஒரு வீட்டிற்கு சென்று தங்கினான். அவ்வீட்டு பெண்மணி என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க, பசியின் கொடுமையினால் அவன் தனது முடிவை மாற்றிக்கொண்டு எந்த பாலாகஇருந்தாலும்(பசும்பால், எருமைப்பால்) பரவாயில்லை, கொஞ்சம் பால் மட்டும் கொடுங்கள் என்று கேட்டான் . அவளும் பக்கத்துக்கு வீட்டில் கிண்ணம் கடன் வாங்கி கிண்ணத்தில் பாலை ஊற்றி அவனுக்கு கொடுத்தாள். அவனும் குடித்து இன்று எந்த பாவமும் செய்யவில்லை என்று நினைத்து நிம்மதியாக தூங்கினான். மறுநாள் அதிகாலை பக்கத்துக்கு வீட்டுக்காரன் எனது சவரக்கின்னத்தை கொடுங்கள், நான் பக்கத்துக்கு ஊருக்கு சவரம் செய்ய செல்ல வேண்டும் என்று கேட்டான். நான் பால் குடித்த கிண்ணம் சவரக்கின்னம் என்றால் ,நான் குடித்த பால் என்ன பால் என்று கேட்க ? நீங்கள் இருக்கும் வீடு வண்ணான் வீடு, அந்த வீட்டு கழுதை கன்று ஈர்ந்து உள்ளது, தாங்கள் குடித்த பால் கழுதைப்பால், அவர்கள் வீட்டில் பாத்திரம் இல்லாததால் என்னிடம் வந்து கிண்ணத்தை கேட்க நான் சவரம் செய்யும் கிண்ணத்தை கொடுத்தேன் என்று நாவிதன் கூறினான். இதை கேட்டவுடன் தலையில் அடித்துக்கொண்டு ஒரு பாவத்தை போக்கலாம் என்று காசிநோக்கி வந்தால் வரிசையாக பாவங்கள் வருகிறதே என்று காசி நோக்கி அழுது கொண்டே சென்றான் . காசி செல்லும் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு நாவிதனின் தந்தை இறந்து போனார். அந்த நாவிதன்அங்குள்ள பிராமணர்களிடம், நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, எனது தந்தை உயிரோடு வரவேண்டும் என்றான். அங்குள்ள பிராமணர்களும் நாவிதனின் அறியாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்க்காக சவத்தை கொளுத்தி சாம்பலை வைத்து யாகம் செய்தார்கள். பின்னர் இந்த சாம்பலை ஒரு பெரிய பானையில் போட்டு அவன் தலை மேல் வைத்து காசிக்கு சென்று அங்குள்ள ஆற்றில் தொபுகடீர் என்று போட்டு உடைக்க உன் தந்தை உயிரோடு வருவார் என்றனர். நாவிதனும் தலையில் பானையை வைத்துகொண்டு காசிக்கு வந்தான். அம்மாவை எட்டி உதைத்தவன் ஆற்றில் மூக்கை பிடித்து மூழ்கி கொண்டு இருந்தான் . அப்போது நாவிதன் அவன் தலையில் இருந்த பானையை ஆற்றில் போட்டான்.
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார்.
: நீதிக் கதைகள் - குறிப்புகள் [ நீதிக் கதைகள் ] | : Justice stories - Notes in Tamil [ Justice stories ]
நீதிக்கதைகள்:
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம்
பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார்.
ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை
அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில்
புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு
இறந்து போனார்.
பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள்
அனைத்தையும் செய்தார்கள்.
அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட
ஆரம்பித்தார்கள்.
முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு
தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை.
ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ
என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை
இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல்
கிடைக்கவில்லை.
எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின்
நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின்
நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே.
அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி
தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை
விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா?
ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து
விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.
இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று
குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.
நீதி :
எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல்
விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: நீதிக் கதைகள் - குறிப்புகள் [ நீதிக் கதைகள் ] | : Justice stories - Notes in Tamil [ Justice stories ]