வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவும் சில வாழ்க்கைத் தந்திரங்கள் என்னென்ன
Category: வாழ்க்கை பயணம்
ஒரு மனிதன் தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறானா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். பொதுவாகவே நாம் நம்மைப்பற்றி நினைப்பதை விட, இரு மடங்கு சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டவர்களாகத் தான் இருக்கிறோம். 1. ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் இருந்தது போல், தற்போது இருக்க மாட்டீர்கள். வாழ்க்கையிலும் மனதளவிலும் பல மாற்றங்களை அடைந்திருப்பீர்கள். 2. வாழ்க்கையில் பல கடினமான சூழல்கள் பலவற்றைக் கடந்து வந்திருப்பீர்கள். அந்தப் பயணம் உங்களை தைரியசாலியாக மாற்றியிருக்கும். 3. பலருக்கு இலக்குகள் என்றால் என்னவென்றே தெரியாதபோது, நீங்கள் உங்களுடைய இலக்குகள் மீது மிகவும் கவனத்தை செலுத்துவீர்கள்.
வாழ்க்கை உணர்த்தும் உண்மைகள் பற்றி அறிவோமா
Category: வாழ்க்கை பயணம்
யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது. வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள். நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை. மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள். தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவன் குணம் இருந்தால் நீங்கள் குப்பை. நடித்தால் நீங்கள் நல்லவன். உண்மை பேசினால் பைத்தியக்காரன். அன்பு காட்டினால் ஏமாளி. எடுத்துச் சொன்னால் கோமாளி. இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து. அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி. பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.
உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி மற்றும் அதன் நன்மைகள்
Category: வாழ்க்கை பயணம்
உணவுக்குப் பின்னரான நடைப்பயிற்சி என்பது ஒரு எளிய மற்றும் நல்ல விளைவுகளை தரும் செயல்முறை ஆகும், குறிப்பாக இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. உணவுக்குப் பின்னர் 15 முதல் 30 நிமிடங்கள் நடக்கும் போது, உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு சீராக உடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா ஓன்பது கட்டளைகள் என்ன
Category: வாழ்க்கை பயணம்
உன் லட்சியத்துக்கு உன் சூழல் ஒத்து வரவில்லை என்றால் சூழலை மாற்று. 2. உழைக்கத் தயங்காதே. சுறு சுறுப்பாக மாறினால் தான் மனிதனாக ஜெயிக்க முடியும். 3. பணத்தை அலட்சியம் செய்யாதே. கவனம் பிசகாமல் வேலை பார்த்தால், தேவையான பணம் எங்கிருந்தாவது வரும். 4. மனிதர்களைச் சேகரி.உலகில் உள்ள அனைவரும் உனக்கு உதவப் பிறந்தவர்கள் என்று தயங்காமல் நம்பு. 5. வாயைத் திறந்து பேசு.என்ன வேண்டும் என்று தயங்காமல் கேள். கேட்டால் தான் கிடைக்கும். 6. எப்போதும் அலர்ட்டாக இரு.அடிக்கடி உன்னை அப்டேட் செய்து கொள்.
உண்மையான நகைச்சுவை...!!
Category: வாழ்க்கை பயணம்
நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஏனென்றால்.... 1. டிரெட்மில்லை ( TreadMill ) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். 2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார்.
வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தும் 12 விஷயங்கள்!
Category: வாழ்க்கை பயணம்
1- சத்தமான குரலில் பேசப்படுவதெல்லாம் உண்மை என்றும், மென்மையான குரலில் சொல்லப்படுவது பொய் என்றும் நினைக்காதீர்கள். வலிமையான உண்மைகள் பலவும் மெல்லிய குரலில்தான் வெளிப்படும்.
தன்னம்பிக்கை...வாழ்க்கையின் மூலதனம்!
Category: வாழ்க்கை பயணம்
வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். தோல்விகளால் துவண்ட ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதற்கான வழிகளை யோசித்தபோது, அதற்கான பல விஷயங்கள் அவருக்கு முன் வந்தன. சற்றே திகைத்தவர், சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது வாழ்வதற்கும்கூட வழிகள் இருக்குமே என நினைத்தார். தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பதில்லை. வெற்றுப் புலம்பல்கள் வெற்றியைத் தருவதில்லை. எல்லாப் பிரச்னைகளுக்கான தீர்வும் நம்மிடமே இருக்கிறது. சில நேரங்களில் உடனடியாக தீர்வுகள் கிடைத்து விடும். பல நேரங்களில் தீர்வுக்கான காலம் தள்ளிச் செல்லலாம். அதுவரை பொறுமை காப்பது அவசியம். எதிலும் எதிர்மறையான எண்ணங்கள் இருக்கவே கூடாது. வென்றவருக்கும், தோற்றவருக்கும் வரலாறு உண்டு.
வெற்றிக்கு என்ன தேவை தெரியுமா?
Category: வாழ்க்கை பயணம்
எல்லாவற்றிலும் வெற்றி பெறுவது எப்படி: பயனுள்ள மற்றும் வேலை செய்யும் வழிகள். தாமஸ் ஹக்ஸ்லி கூறினார்: "அனுபவம் என்பது ஒரு நபருக்கு என்ன நடக்கிறது என்பதல்ல, ஆனால் என்ன நடக்கிறது என்பதை அவர் எவ்வாறு மதிப்பிடுகிறார்."
நம் துன்பத்துக்கு யார் காரணம் தெரியுமா?
Category: வாழ்க்கை பயணம்
நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம். உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..? இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்...
நம்பிக்கையே வாழ்க்கை
Category: வாழ்க்கை பயணம்
பிரேஸில் நாட்டில் மக்களுக்கு ‘யார் அதிக நேரம் கைகளைத் தட்டிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என்று ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டனர்.
எதிலும் சலிப்பு என்ற உணர்வு ஏன் உண்டாகின்றது தெரியுமா?
Category: வாழ்க்கை பயணம்
அதில் அவ்வளவுதான் என்ற எண்ணமே சலிப்பு என்ற உணர்வை தூண்டுகின்றது !! உண்மையில் அப்படியா ?? என்று கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் .. அப்படியில்லை நமக்கு அதில் உள்ள புதுமை புலப்படவில்லை !! புலப்படைவதை உணரும் பக்குவம் இல்லை என்பதே மெய் ஆகும் ..
நாம் நல்லவரா இல்லை நல்லவர் போல் நடிக்கிறோமா?
Category: வாழ்க்கை பயணம்
ஒரு நல்ல மனிதனாக நாம் நம்மை உணர்வது ஒரு சிக்கலான மற்றும் அத்தனை எளிதில் கிடைக்காத அனுபவம். அப்போ நம் குணத்தை நாமே எப்படி புரிந்து கொள்வது? நாம் நல்லவரா? என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒருவரைப் பார்த்த உடன் எடைபோடும் குணம் சரியா?
Category: வாழ்க்கை பயணம்
ஒருவரைப் பார்த்தவுடன் எடைபோடுவது என்பது மனிதர்களின் குணமாகும். ‘இவர் இப்படித்தான்’ என்று ஒருவரை பற்றி எதுவுமே அறியாமல் முடிவெடுப்பது சரிதானா? ஒருவரின் உடை, சூழ்நிலை, தகுதி போன்றவற்றை வைத்தோ அல்லது வெறுமனே கண்ணால் காண்பதை வைத்தோ முடிவெடுப்பது சரியாக இருக்குமா? சரி வாங்க, அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நிம்மதி எங்கே இருக்கிறது... முழுவதும் படியுங்கள் நிம்மதி கண்டிப்பாக கிடைக்கும்.
Category: வாழ்க்கை பயணம்
பெரியவர் சொன்ன ரகசியம்... ஒரு மனிதன்.... எந்தக் குறையும் இல்லை அவனுக்கு… ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை... சிரமப்பட்டான்... அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்!" ஆசிரமத்துக்குப் போனான்...பெரியவரைப் பார்த்தான். ஐயா.... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே!" அவர் நிமிர்ந்து பார்த்தார்... தம்பி... உன் நிலைமை எனக்குப் புரியுது... இப்படி வந்து உட்கார்!" பிறகு அவர் சொன்னார்: உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது… தெரிந்தா உன் நிம்மதி போயிடும்! அது எப்படிங்க? சொல்றேன்... அது மட்டுமல்ல... மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்! ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே! புரியவைக்கிறேன்.... அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு. வயிறு நிறையச் சாப்பிட்டான். பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, இதில் படுத்துக்கொள் என்றார். படுத்துக் கொண்டான்... பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்... கதை இது தான்: ரயில் புறப்படப் போகிறது... அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை... ஓர் இடம் பிடித்து உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது...தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கீழே இறக்கி வைக்கவில்லை... எதிரே இருந்தவர் கேட்கிறார்: "ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?இறக்கி வையேன். அவன் சொல்கிறான்: "வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'
மனநிறைவு நீங்கள் மன நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறீர்களா
Category: வாழ்க்கை பயணம்
நீங்கள் மன நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறீர்களா...?' இந்தக் கேள்வியை நீங்கள் எவரிடம் கேட்டாலும் அவர்கள் இல்லை என்று தான் பலரும் பதில் கூறுவார்கள்... பணக்காரர்களும், புகழுடன் வாழ்பவர்களும் கூட மன நிறைவின்றியே வாழ்கின்றனர் என்பதே மெய்... மன நிறைவு ஏன் யாருக்கும் வருவதில்லை...? எல்லோரும், பணமும், புகழும் மன நிறைவைத் தரும் என்று நம்பி அவைகளைத் துரத்துகின்றனர்... அவை கிடைத்த பின் அவர்கள் மனம் அதிக பணத்திற்கும் , அதிக புகழுக்கும் ஆசைப்படுகிறது. .. பணம் படைத்தவர்கள் பணத்தை பாதுகாப்பதற்காகவும், தக்கவைத்துக் கொள்வதற்காகவும்தான் அல்லல் படுகின்றனர்.. அன்பான குடும்பம், ஆரோக்கியமான உடல், நெருங்கிய நண்பர்கள், உளமார்ந்து நேசிக்கும் உறவினர்கள், என இவையாவும் உங்களுக்கு மன நிறைவைத் தரலாம்... உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொடுக்கும் பணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம்... ஆனால், இந்த மகிழ்ச்சி உண்மையும் அல்ல. நிரந்தரமும் அல்ல... சரி!, எது மன நிறைவான வாழ்க்கையை தரும்...? எந்தச் செயல் உங்களுக்கு ஆழ்ந்த, அமைதியான உறக்கத்தையையும், ஆரோக்கியமான உடம்பினேயும் தருகிறதோ அதுவே நிறைவான வாழ்வு... உங்களிடம் எந்த பண்பு மற்றவர்களை மகிழ்வுறச் செய்கிறதோ அதுவே உங்களுக்கு நிறைவான வாழ்வு... நிறைவு ஏன்பது ஒரு மன நிலை. ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும், அறுதி இட்டுக் கூற இயலாது... அவரவர்களே அவர்களுக்கு நிறைவை எந்தப் பண்பு கொடுக்கிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். இருப்பதைவிட்டு இல்லாததை தேடும் வாழ்க்கையாக நீங்கள் இருக்கக் கூடாது, உங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும்...
கஷ்ட காலத்திலும் தைரியமாக இருப்பது எப்படி
Category: வாழ்க்கை பயணம்
பாதை இலகுவா… கஷ்டமா என்று பார்க்காதீர்கள்; நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பாருங்கள்… போகும் இடத்தை அடைந்து விடலாம்..!! எல்லா சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோ வென்று போனவர்களும் உண்டு தகுதியை மீறி ஆசைப்பட கூடாது என்பது உண்மை தான்! ஆனால், உங்கள் தகுதி என்ன என்பதை மற்றவர் தீர்மானிக்க கூடாது! துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்தால், எல்லாம் வெற்றி ஆகும்….! பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டேதான் இருக்கும். பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில். நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை இழிவாக நினைப்பவர்களை குறை மட்டும் காண்பவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடுங்கள். நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை.. மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை.. தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை.. அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை.. அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே..!! எந்த விஷயம் நீ செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு கடை பிடிக்க வேண்டிய தாரக மந்திரம் “என்னால் முடியும்..!.
வாழ்க்கை பயணம் அன்பு நிறைந்தது
Category: வாழ்க்கை பயணம்
வாழ்க்கையில் ஒருவரை நேசிக்கிறோம் என்றால் அது பலூனுக்குள் ஊதப்படுகின்ற காற்று போன்றது! எப்போது வேண்டுமென்றாலும் அது அதுவாகவே உடைந்துப் போகலாம். காற்றினை சேமித்து வைத்திருக்கும் வரை தான் பலூனின் வடிவமும் அழகாக இருக்கும். ஒருவர் மேல் அதிகமான அன்பை வெளிப்படுத்தியும் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் நெஞ்சு வெடித்து விடும், அது போலவே ... அளவுக்கு அதிகமான காற்றை உள்ளே செலுத்தும் போது பலூனும் வெடித்து விடும்! குறிப்பிட்ட அளவான காற்றை அதற்குள் செலுத்தி பலூனை நீங்கள் கையோடு வைத்திருக்கலாம்.
அதிர்ஷ்டம் தலையெழுத்து என்பது என்ன
Category: வாழ்க்கை பயணம்
சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது. வாழ்வில் பசியை அனுபவித்தவனுக்கு.. பணிவைச் சொல்லித் தரத் தேவையிருக்காது!! தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு, இல்லையென்றால், இந்த உலகம் உன்னைப் புதைத்து விடும். தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்குத் தகுதியான இடத்திற்குச் சென்று சேர்வதே இல்லை. உங்கள் தகுதியை உயர்த்திக் கொண்டே இருங்கள். உங்களை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் முடிய வேண்டும். தோற்றுப் போய்விட்டோமே என உடைந்துப்போய் நிற்பதை விட, தோல்வி தானே என்று உறுதியுடன் திறம்பட தளராத தன்னம்பிக்கையோடு எழுந்து ஓரடி வையுங்கள். அடுத்த அடி தானாக வைத்து வெற்றிப் பயணத்தை தொடங்கியிருக்கும் மனமும் உடலும். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள். அந்தந்த நேரத்திற்கு மட்டுமே பயனளிக்கும். வாழ்க்கையில் பெரும்பாலானவை எதிர்பாராமல் நடப்பதுதான். அவற்றுக்கு நாம் தரும் பெயர்கள்தான் வெவ்வேறு. நடந்தது நம் மனதுக்கு பிடித்ததாக இருந்தால் அதற்கு நாம் தரும் பெயர் அதிர்ஷ்டம். பிடிக்காத விஷயமாக இருந்துவிட்டால் அதற்கு நாம் தரும் பெயர் தலையெழுத்து.
வாழ்க்கையில்-நாம் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான முடிவுகள்..என்ன
Category: வாழ்க்கை பயணம்
வாழ்க்கை என்பது.. நாம் சரி என்று ஒன்றை நினைத்து, செய்யப் போனால்.. அது உன்னுடைய முதல் தவறு என்றும்,- இப்படித்தான் நீ மாற வேண்டும் என்று நம்மை கட்டாய வழியில் வேறு திசையில் இழுத்துச் செல்வதாகவும் இருக்கும்! காலம் இழுத்துச் செல்லும் திசையிலேயே பயணம் செல்வதுதான்.. மனித வாழ்க்கையின் நடைமுறை என்று பலர் வாழ்க்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கிறது! இது அடித்துச் செல்லும் வேகத்தில்.. மனம் வெகுண்டு, மிரண்டு, போனவர்களும் உண்டு. ஓரளவுக்கு தன்னை ஆசுவாசப்படுத்தி 'வருத்த' கடலில் இருந்து கரை சேர்ந்தவர்களும் உண்டு. உதாரணமாக.. தாம் விரும்பியது போல வாழ்க்கை இணை கிடைத்திருக்க மாட்டார். ஆனாலும் அவருடன் மகிழ்ச்சியாக 80 வயது வரை வாழ்ந்து கொண்டிருப்பார்! வாழ்க்கை என்பது இதுதான் இப்படித்தான்! ஆனாலும்.. நமது விருப்பம் போலவும், வாழ முடியும்! எப்படி? எந்த வாழ்க்கை போராட்டங்களையும், கஷ்ட நஷ்டங்களையும், நாம் துணிச்சலோடு எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல்.. எதிர்கொள்கிற சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக உருவாக்கிக் கொள்ளும் திறமையையும் வளர்த்துக் கொண்டால்… அப்போது முடியும்! அதாவது.. நம்மில் ஒவ்வொருவருக்கும்.. சாதிக்க வேண்டும் என்ற சபதம் வேண்டும் ! வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும். வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு வேண்டும்! அடைவதற்கு ஒரு லட்சியம் என்பது வேண்டும்! வாய்ப்பு? வாய்ப்பு? எங்கே? எங்கே? என்று தேடுகிற தாகம் வேண்டும்!
சரியான இலக்குகள் சரியான வெற்றியை தரும், என்பதன் கருத்து இது தான்
Category: வாழ்க்கை பயணம்
புதிதாக ஒருவர் வேலைக்கு செல்கிறார். இப்போது அவர் குறித்துக் கொள்ள வேண்டிய இலக்கு? அங்கே சிறந்த சிப்பந்தியாக வரவேண்டும்! அடுத்ததாக சீனியரை போல் வர வேண்டும்!! அடுத்ததாக அந்த கம்பெனி மேற் பார்வையாளராக வரவேண்டும்!! அடுத்ததாக மேனேஜராக வரவேண்டும்!! அடுத்ததாக.. இதேபோன்று தானும் ஒரு கம்பெனி வைத்து அதற்கு முதலாளியாக வரவேண்டும்!! இலக்கு என்பதன் கருத்து இதுதான்!! மதுரையில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒவ்வொரு ஊராக கடந்த பிறகே சென்னையை அடைகிறது!! அதுபோல நம்முடைய லட்சியம், இலக்கு, குறிக்கோள், என்பதை அடைவதற்கு.. நமது முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாக.. நாம் கடக்க வேண்டிய, கடந்து செல்ல வேண்டிய, எல்லை பரப்புகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்!! அதாவது நமக்குள் நாமாகவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்..
சுவாரஸ்யமான வாழ்க்கை என்பது எப்பொழுது தெரியுமா
Category: வாழ்க்கை பயணம்
நம்மில் சிலர் சில சமயங்களில் தெரியாமல் செய்த தவறுகளுக்காக குற்றவுணர்ச்சியில் குமைந்து போவதுண்டு. வெளியில் வர சங்கடப்பட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிக் கொள்வதும் உண்டு. அதை விட்டு வெளியில் வந்தால் சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி கிடைக்காது என்பதோடு, மேலும் மேலும் முன்னேறவும் முடியாது. குற்ற உணர்ச்சியை தகர்த்து எறிந்தால்தான் பல்வேறு சாதனைகளை சரமாரியாக செய்து முடிக்க முடியும்.
உழைப்பு உடலை வலிமையாக்கும் துன்பங்களே மனதை வலிமையாக்கும்
Category: வாழ்க்கை பயணம்
விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும். துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு
பாதைகள் எப்போதும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி தான் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும். நீங்கள் முன்னேறும் நேரம் பார்த்து முட்களைப் பாதையில் வீச பலர் வருவார்கள். அதைக் கண்டு மிரளாது உங்கள் பயணத்தைத் தொடர்ந்தால் இலக்கை அடையலாம். ஒவ்வொரு பிரச்சனையும் ரெட் சிக்னல் போல, சிறிது நேரம் காத்திருந்து அது பச்சை நிறமாக மாறிய பிறகு செல்வதைப் போலத்தான் வாழ்க்கை. வாழ்க்கை பிரச்சினைகள் மட்டுமே கொடுப்பதில்லை. பிரச்சினைகளைக் கடந்து செல்லும் வழியையும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது கவனத்துடன் கையாளுங்கள். வாழுகின்ற வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறதே என்று வேறொன்றைத் தேடாதே அது வேதனையாகத்தான் இருக்கும். நிம்மதி என்பது இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர இல்லாததிலும் இழந்ததிலும் தேடுவதல்ல.
: வாழ்க்கை பயணம் - நல்லவர்களைத் தேடாதீர்கள்... [ வாழ்க்கை பயணம் ] | : Life journey - Don't look for good people in Tamil [ Life journey ]
நல்லவர்களைத் தேடாதீர்கள்...
பாதைகள் எப்போதும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி தான் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்.
நீங்கள் முன்னேறும் நேரம் பார்த்து முட்களைப்
பாதையில் வீச பலர் வருவார்கள்.
அதைக் கண்டு மிரளாது உங்கள் பயணத்தைத் தொடர்ந்தால்
இலக்கை அடையலாம்.
ஒவ்வொரு பிரச்சனையும் ரெட் சிக்னல் போல, சிறிது நேரம் காத்திருந்து அது பச்சை நிறமாக மாறிய பிறகு
செல்வதைப் போலத்தான்
வாழ்க்கை.
வாழ்க்கை பிரச்சினைகள் மட்டுமே கொடுப்பதில்லை.
பிரச்சினைகளைக் கடந்து செல்லும் வழியையும் தான்
கொடுத்துக் கொண்டிருக்கிறது கவனத்துடன் கையாளுங்கள்.
வாழுகின்ற வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறதே என்று வேறொன்றைத்
தேடாதே அது வேதனையாகத்தான் இருக்கும்.
நிம்மதி என்பது இருப்பதில் திருப்திபடுவது தானே தவிர
இல்லாததிலும் இழந்ததிலும் தேடுவதல்ல.
சமுதாயத்தில் நல்லவர்களைத் தேடாதீர்கள். மாறாக
நீங்களே நல்லவர்களாக இருங்கள்.
சிறந்ததை தேடுபவர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கிடைத்ததை சிறந்ததாக்குபவர்கள்
சந்தோசமாக வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம் ஏமாற்றத்தில் மூழ்கித் தவிக்க வேண்டாம்
அந்தந்த நேரத்து சிறுசிறு சந்தோசங்களை அனுபவித்து
வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான அன்பு ஆரம்பத்தில் எதிர்பார்க்கப் பட்டு, பின் பிரமிக்கப் பட்டு, கடைசியில் மனசாட்சியே இன்றி புறக்கணிக்கப்படுகிறது.
இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டுப் பேச துணை
இல்லாத போது தான் தெரியும் அன்பின் அருமையும், தனிமையின் கொடுமையும்.
உங்ககிட்ட சொன்னா நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று
பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும், உங்ககிட்ட சொன்னா நீங்கள் சரியாகிடுவீர்கள் என்று
பகிரப்படும் துயரங்களிலும் நிறைந்திருக்கிறது அன்பு.
அன்பைப் பரிமாற இரத்த பந்தம் தேவையில்லை. நல்ல எண்ணம்
இருந்தால் நமக்கு கிடைப்பதெல்லாம் நமக்கான உறவுகள் தான்.
நாம் நம்மை விட வசதி குறைந்தவர்களை கேவலமாக பார்த்தால்.
நம்மை விட வசதியானவர்கள் நம்மை கேவலமாகத்தான்
பார்ப்பார்கள்.
வாழ்க்கை ஒரு வட்டம். முயற்சியும் பயிற்சியும் செய்பவர்க்கே வரலாறு.
பெருமை என்பது உன்னை விடத் திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல..
அவனையும் உனக்காகக் கைதட்ட வைப்பது தான்!
"தயக்கம்” என்ற ஒன்று உன்னிடம் இருக்கும் வரை
தடைகளை உன்னால் உடைக்க முடியாது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: வாழ்க்கை பயணம் - நல்லவர்களைத் தேடாதீர்கள்... [ வாழ்க்கை பயணம் ] | : Life journey - Don't look for good people in Tamil [ Life journey ]