வாழ்க வளமுடன்

தற்சோதனையின் அவசியம், அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

வீடு | அனைத்து வகைகள் | வகை: வாழ்க வளமுடன்
நீங்கள் அதிகமாக கோபப்படுகிறீர்களா? அப்போ இந்த கதை உங்களுக்குத்தான்! | Do you get angry a lot? Then this story is for you!

நீங்கள் அதிகமாக கோபப்படுகிறீர்களா? அப்போ இந்த கதை உங்களுக்குத்தான்!

Category: வாழ்க வளமுடன்

எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் சிலருக்கு உண்டு. அவர்களால் மற்றவர்கள் செய்யக்கூடிய ஒரு சின்ன தவறைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிக்கவும் முடியாது. கோபம் தலைக்கு ஏறி பட்டாசு போல படபடவென்று வெடித்து தள்ளி விடுவார்கள். பிறகு சற்று நேரம் கழித்து அமைதியான பிறகு, கோபப்பட்டதை நினைத்து வருத்தப்படுவார்கள். இதுபோன்று நீங்களும் இருக்கிறீர்களா? அப்போ இந்த கதையை படியுங்கள்.

வாழ்க்கையில் தைரியம் என்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா | Do you know how important courage is in life

வாழ்க்கையில் தைரியம் என்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா

Category: வாழ்க வளமுடன்

வாழ்க்கையில் சில நேரங்களில் கூச்ச சுபாவத்தினாலோ, தயக்கத்தினாலோ அல்லது பயத்தாலோ நம்முடைய மனதில் தோன்றும் கருத்தை தைரியமாக வெளிப்படுத்தாமல் விட்டுவிடுவோம். மனதில் தோன்றும் கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவது நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணத்தைக்கூட உருவாக்கலாம். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்த கதையை முழுமையாக படியுங்கள்.

வாழ்க வளமுடன் | Live prosperously

தற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும்பாலும் துன்பமே விளைகின்றது, துன்பமோ பொருந்தா உணர்வு.

: வாழ்க வளமுடன் - தற்சோதனையின் அவசியம், அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும் [ வாழ்க வளமுடன் ] | : Live prosperously - The need for self-examination, Questions from loved ones - Answers from the Reverend Father in Tamil [ Live prosperously ]

வாழ்க வளமுடன்

தற்சோதனையின் அவசியம்:

தற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும்பாலும் துன்பமே விளைகின்றது, துன்பமோ பொருந்தா உணர்வு.

அறிவு உயர்ந்து விழிப்பு நிலை பெறும்வரையில் ஆன்மா பழக்கத்தின் வழியே தான் செயல்களை ஆற்ற முடியும். எனவே, துன்பங்கள் மேலும் மேலும் பெருகுகின்றன. இந்த நிலைமையிலிருந்து தன்னையே தான் மீட்டுக் கொள்ள நிச்சயமான ஒரு வழி "தற்சோதனை" தான்.

 

தன்னைப் பற்றி, தன் இருப்பு, இயக்க நிலைகளைப் பற்றி, தன்னிடமிருந்து எழும் எண்ணங்களைப் பற்றி, செயல்களைப் பற்றி சிந்தனை செய்து, நலம் தீது உணர்ந்து, தீமைகளைந்து , நல்லன பெருக்கிப் பயன்     காணும்    ஒரு  உளப்பயிற்சியே தற்சோதனையாகும். இது மனிதன் அறிவை உயர்த்தி வாழ்வை வளப்படுத்தும் ஓர் நற்பயிற்சி.

 

சமுதாயத்திலே நீ ஒரு பொறுப்பை ஏற்றுத் தொழில் புரிவதால் உன்னை வளர்த்து வாழவைத்த சமுதாயத்திற்கு நீ கடனைத் தீர்க்கிறாய். குழந்தைகளை ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறப்படையச் செய்வதும். சமுதாயத்திற்கு ஆற்றும் ஒரு சிறந்த கடமை தான். ஒரு நல்ல குடிமகனை உலகுக்கு அளித்து உதவுகிறாய் என்பது தான் பொருள். உன் வருவாயை விட்டுக் கடமைகளை மறந்து வெளியேறினால் நீ எங்கே போக முடியும்? அடுத்த வேலைக்குப் பசி வந்தால் நீ என்ன செய்யப் போகிறாய்? பிச்சை தானே எடுக்க வேண்டும். அது பிறர்க்கு சுமை அன்றோ?.

" "மனித மனமானது" இறைநிலையின் முடிவான பொருள்.

(other end of the mind is "Almighty" the god).

 

"மனதை அதன் இருப்பு நிலையான இறைநிலையை

நோக்கக் கூடிய ஒர்மைநிலையே "அகத்தவம்"(Meditation) ஆகும்".

 

"நாள்தோறும் பழகிவரும் தியானத்தினால் தவ ஆற்றல் மிக மிக..

எல்லாம் வல்ல இறைநிலையே எவ்வாறு மனிதனிடத்தில்

உயிராகவும், மனமாகவும், அறிவாகவும், இயங்கிக்

கொண்டிருக்கிறது என்கிற உள்ளுணர்வு உண்டாகும்".

 

எண்ணம் சீர்பட தற்சோதனை :

 

"அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்

அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி

அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்

அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள

அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;

ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற

அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை

அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்".

 

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

 

கேள்வி: ஐயா! முற்காலத்தில் தவம் செய்பவர்கள் எல்லாம் எளிதில் சினம் கொள்பவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். தாங்கள் தவத்துடன் தற்சோதனை என்ற பயிற்சியை அளித்து ஆன்மீக சரித்திரத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்துள்ளீர்கள். தங்களுக்கு அது தோன்றக் காரணம் என்ன?

 

பதில்: அதற்குக் காரணம் உள்ளது. நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினேன். அப்போது எனக்கு வயது இருபத்திரண்டு. ஒரு சிறு பையன், எட்டு வயது இருக்கும். அவன் மட்டித்தனமாக இருந்தான். அவன் பாடங்களைச் சரியாகப் படிக்கவில்லை என்று பிரம்பினால் கைபோனபடி அடித்து விட்டேன்.

 

அந்தக் குழந்தை பதைபதைத்து அழுதகாட்சி என் உள்ளத்தை உருக்கிவிட்டது. “சார்! சார்! வலிக்கிறது சார்! தாங்க முடியவில்லை சார்! என்று கெஞ்சிய கூச்சலில், என் மனம் உடனே விழிப்புநிலை பெற்றது. உடனே அவனை அணைத்துக் கொண்டேன். மற்ற குழந்தைகள் எல்லோரும் எங்களையே பார்க்கின்றனர். எனது கண்களில் நீர் பெருகி விட்டது. பிரம்பை வீசி எறிந்து விட்டேன்.

 

இனிமேல் நீ நன்றாகப் படியப்பா, நான் அடிக்க மாட்டேன். நன்றாகக் கற்றுக் கொடுக்கிறேன்” என்று, பாடம் சொல்லத் தொடங்கினேன். இடது கையால் அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டு அவன் கையில் பிடித்திருக்கும் புத்தகத்தில் வலக்கை விரலால் எழுத்துக்களைக் காட்டிப் பாடம் சொன்னேன். எனது கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. குரல் கம்மி விட்டது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டுச் சற்று முன்னதாகவே வீட்டுக்குப் போய்விட்டேன்.

 

அன்று முழுவதும் எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. அந்த அப்பாவிக் குழந்தை, என் கைப்பிரம்பு, இரக்கமற்ற முறையில் நான் கொடுத்த அடி, அந்தக் குழந்தைக்கு நான் அன்று செய்த கொடுமை, திருப்பித் திருப்பி என் மனதை வாட்டின. இந்தக் கொடுமை நான் என்னை மறந்து சினத்தால் ஆற்றியது. அன்று இரவு எனக்கு சீக்கிரம் தூக்கமே வரவில்லை. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டேயிருந்தது. அன்று முதல் குழந்தைகளை நான் அடிப்பதே இல்லை. அது மாத்திரம் இல்லை. எந்தக் குழந்தையைக் கண்டாலும் அன்பு பாராட்டத் தொடங்கினேன்.

 

என் வயது முப்பத்தி ஏழு. அப்போது ஒரு கொடுஞ்செயல் செய்துவிட்டேன். எனது இளைய மனைவி இலட்சுமி நான் குளிக்கும் இடத்திற்கு உடம்பு தேய்க்க வந்தாள். மார்கழி மாதம். குளிர் நடுங்குகிறது. குளிந்த நீரில் குளிக்கும் நான் முதலில் தண்ணீரைத் தொட்டு உடல் முழுக்கத் தேய்த்துச் சிறிது தோலுக்கு உணர்ச்சி மாற்றம் ஏற்படச் செய்து, பிறகே குவளையினால் நீர் எடுத்துத் தலையிலும், உடம்பிலும் ஊற்றுவேன்.

 

அதுபோல் சிறுகச் சிறுகத் தண்ணீர் எடுத்து உடம்பிலும் தேய்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் இலட்சுமி, கையில் ஒரு வாளி எடுத்து நீர் நிறைய மொண்டு "ஏன் இவ்வாறு பயப்படுகிறீர்கள்! ஒரு வாளி ஒரே தடவையாக ஊற்றினால் குளிர் தெளிந்து விடும்” என்று தலையில் ஊற்றி விட்டாள். எனக்குத் தாங்க முடியாத குளிர் உணர்ச்சி ஏற்பட்டது. “குளிர் எப்படி இருக்கிறது என்று நீயே பார்” என்று நான் ஒரு வாளித் தண்ணீரை எடுத்து அவள் தலையில் அப்படியே ஊற்றி விட்டேன்.

 

அவள் ஒன்றுமே பேசவிலை சிலைபோல் நின்று விட்டாள். புடவை நனைந்து விட்டது. தலையில் ஒழுகும் தண்ணீரை வழித்து விட்டுக் கொண்டாள். ஆனால், அவளுக்குக் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது. முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விக்கினாள். அவளுக்குக் குளிர் ஏற்படச் செய்தது, அப்படி ஒன்றும் கொடுமை அல்ல. அவள் தன் கணவன் என்ற உரிமையில் விளையாட்டாக என் மீது குளிர்ந்த நீரை ஊற்றினாள். ஆனால் அவள் மனம் புண்படும் வகையில், நான் சினம் கொண்டு அவளிடம் நடந்து கொண்ட விதம், மிகவும் கொடுமை என உணர்ந்தேன்.

 

உடனே அவள் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறினேன். எனினும் எனக்கு மட்டும் ஆறுதல் கிட்டவில்லை. இத்தகைய முறையில் சினம் எழாமல் காக்க முடிவு செய்தேன், முனைந்தேன். பல வழிகளைப் பின்பற்றினேன். அதன் தொடரில் வந்த சிந்தனைத் தெளிவே, அறுகுணச் சீரமைப்பு என்ற ஒரு பெரிய உலக நலக் கருத்தாக உருவாகியது. தற்சோதனை எனும் உளப் பயிற்சி முறையும் உருவாயிற்று.

ஏழுபிறவிகள்:

 

கேள்வி:

 

மகரிஷி அவர்களேமுன் ஏழு பிறவி, பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன?

 

பதில் : 

 

பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல.  அவை பெருங்கடலாக நீளும்.  செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒரு முறை நம்மிடம் பதிந்துவிட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும்.  

 

அதாவது, ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள்.   ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுள்ளவரை திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கும் வேகம் உண்டு.  அதன் பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்துவிடும். 

 

இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவுக்குப் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுப்பித்துக் கொண்டதாகும்.  அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைக்கு எழுச்சி வேகம் பெறும்.  அதனாலேயே ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலை முறைகளிலும் விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.  

 

தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலை முறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும்அப்பதிவுகள் புதுப்பிக்கப் பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலை முறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும். 

"தவறு செய்தால் இன்றோ, நாளையோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை".

 

"எண்ணம், சொல், செயல் என்ற மூன்று பிரிவுகளுக்குள் மனிதன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் அடங்கிவிடும்".

 

"மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடுபேறு".

 

பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும்,

பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்".

 

நிறைவால் நிறை:

 

"நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறாது

நித்தியமாம் மெய்ப் பொருளால் நிறைந்த உள்ளம்,

ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்

உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி

யார் பெறுவர் யார் தருவர்; அறிவு ஓங்கி

அதுவேதான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றைச்

சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றைச்

செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்."

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம் 

: வாழ்க வளமுடன் - தற்சோதனையின் அவசியம், அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும் [ வாழ்க வளமுடன் ] | : Live prosperously - The need for self-examination, Questions from loved ones - Answers from the Reverend Father in Tamil [ Live prosperously ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: வாழ்க வளமுடன்