"பிரபஞ்சம்” நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது..:
: தியானம் - குறிப்புகள் [ தியானம் ] | : Meditation - Tips in Tamil [ Meditation ]
தியானம்
"பிரபஞ்சம்” நாம் எதை கேட்டாலும் அள்ளி தரும் ஆற்றல் கொண்டது..:
இதை எவ்வாறு நடைமுறை படுத்துவது என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை., பிரபஞ்சத்திடம் நான் கேட்டாலும் கிடைக்குமா? பிரபஞ்சத்தால் எவ்வாறு இதையெல்லாம் தர முடியும்? பல கேள்விகள்...
பிரபஞ்சம் என்றால் இந்த இயற்கை, இந்த இயற்கையில் இருக்கும் அனைத்து வல்லமையும், அனைத்து சக்திகளும் இந்த பூவுலகில் வாழும் அனைவருக்கும் உண்டு., அதை நாம் அறிய வேண்டுமென்றால் இந்த இயற்கையுடன் இணைந்து வாழ பழக வேண்டும் நண்பர்களே...
இந்த இயற்கையுடன் நாம் இணைந்து இருக்க தினந்தோறும் சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்...
இந்த இயற்கையுடன் இணைந்து இருப்பதுதான் “தியானம்” என்று நம் சான்றோர்கள் கூறினர் அல்லவா...
"தியானம்" என்றால் அமைதியாக இருப்பது, இயற்கையுடன் இணைந்து இருப்பது, எண்ணமற்ற நிலையில் இருப்பது...
நமக்கு இந்தப் பிரபஞ்சம் நமக்கு வேண்டிய அனைத்தும் கொடுத்துள்ளது, அதற்கு நாம் இந்த பிரபஞ்சத்திற்கு ஒவ்வொரு நிலையிலும் நன்றியைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்..
நமக்கு வேண்டிய அனைத்தும் பிரபஞ்சம் கொடுக்கும், ஆனால், அது இந்த இயற்கைக்கும், மக்களுக்கும் மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை செய்பவனுக்கு இந்த பிரபஞ்சம் வேண்டிய அனைத்தும் கொடுக்கும்...
கேட்டால் கேட்டது மட்டும் கிடைக்கும், கேட்காவிட்டால், நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். இது இயற்கையின் நியதி...
பிரபஞ்சம் என்றால் இந்த இயற்கை, இந்த இயற்கையை படைத்தவன் ஆண்டவன். நம்மை படைத்தவனும் ஆண்டவனே, இந்த பூவுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் படைத்தவனும் ஆண்டவனே என்று உணர்ந்தவன் ஞானி..,
அவனுக்கு தேவையான அனைத்தையும் இந்தப் பிரபஞ்சம் கொடுக்கும், காரணம், அவன் இயற்கைக்கும், மக்களுக்கும் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை புரிகின்றான்..
சிந்திப்பீர், மனிதனுக்கு ஏன் இந்த பிரச்சனைகள், ஏன் இந்தத் துன்பங்கள், ஏன் இந்த உடல் உபாதைகள், மனசஞ்சலதுடன் நிம்மதியற்ற வாழ்க்கை நமக்கு அமைந்திருக்கு என்றால் மாற்றம் நம்மில் தான் அமைய வேண்டும்...
தேவையற்ற விஷயங்களில் இருந்து சிந்தனைகளிலிருந்து வார்த்தைகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம் கடமையாகும் நண்பர்களே...
அதனுடன் நம் உணவிலும் மாற்றம் வேண்டும், சைவ உணவையே உண்ண வேண்டும்...
எண்ணங்களில் மாற்றம் என்றால் அனைவரையும் அரவணைத்து கொண்டு அன்புடன் அரவணைத்து வாழைப்பழகனும் நண்பர்களே..
“நான்” என்ற நிலையில் இல்லாமல் “நாம்” என்ற நிலையை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும் நண்பர்களே...
நம் உணவில் மாற்றம் என்றால் அனைவரும் கண்டிப்பாக தவறாமல் “சைவ உணவையே” உட்கொள்ள வேண்டும்..
அனைத்து ஜீவராசிகளையும், கொடி மரங்களையும், இயற்கைக்கும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டால் மற்றும் தினந்தோறும் தவறாமல் தியானம் புரிந்தால் இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும்...
இவ்வளவு சக்தி இயற்கைக்கு உள்ளது...
தியானம் செய்யுங்கள்.....
அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்.....
அனைத்து உயிரினங்கள் இடமும் அன்பு செலுத்துங்கள்.......
இயற்கைக்கு நன்மை புரியுங்கள்....
நமக்கு தேவையானதை அனைத்தையும் இந்தப் பிரபஞ்சம் கொடுப்பது உறுதி.....
🙏🙏🙏🙏
"தியானம்" என்றால் சுவாசத்தின் மீது கவனம்...
'கெட்ட பழக்கம்'என்பது வேறு; 'கெட்ட குணம்' என்பது வேறு..!
சிகரெட் பிடிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கம்; அது போலத்தான் டிரிங்கஸ் சாப்பிடுவதோ, மற்ற சில விஷயங்களோ..
நம்முடைய 'கெட்ட பழக்கம்' , எந்த வகையிலும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஆகாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை..! அதில் கவனம் இருக்கும் பட்சத்தில், கெட்ட பழக்கம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயமே..!
ஆனால், கெட்ட குணம் அப்படி அல்ல..! அது அடுத்தவருக்கு தீங்கிழைக்கவே உருவாவது / இருப்பது...!
அதீத பொறாமைப்படுவது, தன் தேவைக்காக அடுத்தவர்களை வஞ்சிப்பது, நன்றி மறத்தல், அடுத்தவர்களை manipulate செய்தல், அதீத சுயநலம், புறம் பேசுதல், நம்பியவரை ஏமாற்றுவது, ஓருவரைத் தமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவருக்கு அதீத பாதகம் செய்ய முனைவது.... இவை போன்றவை கெட்ட குணங்கள்..!
'கெட்ட பழக்கம்' உள்ளவர்கள் எல்லாம் 'கெட்ட குணம்' கொண்டவர்கள் அல்ல..! கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று அர்த்தமல்ல..!
நண்பர்களே..! ஒரு irony என்னவென்றால் -
நாம் நம் குழந்தைகளை "நீ அவன் கூட சேராதே... அவனிடம், பொய், பொறாமை, சுயநலம் போன்ற கெட்ட குணங்கள் இருக்கு..!" என்று யாரைக் காட்டியாவது தடுக்கிறோமா..?
இல்லை..!
சொல்லப்போனால், அது போன்ற குணங்கள் கொண்டவர்களைத்தான் காட்டி, "பாத்தியா.. அவன் எவ்ளோ சாமர்த்தியமா இருக்கான்.?
நீ அவன்கூட ஃப்ரெண்டாயி அது எல்லாம் கத்துக்கணூம்..!" என்று நாமே அனுப்பி வைக்கிறோம்..!
ஆனால், பிறர்க்கு உதவும் குணம், இனிய பேச்சு, கள்ளமில்லா நடத்தை போன்ற 'நல்ல குணங்கள்' கொண்டிருக்கும் ஒருவனை, 'அவன் சிகரெட் புடிக்கிறான்..' என்ற காரணத்தால் "அவனிடம் சேராதே.." என்று நம் பிள்ளைகளைத் தடுக்கிறோம்..!
கெட்ட பழக்கங்கள், கெட்ட குணத்திற்கு வித்திடும் என்று நாம் நினைக்கிறோம். ஒரு முதிர்ச்சி வந்து விட்ட பிறகு, நம்மால் கெட்ட பழக்கத்திற்கும், கெட்ட குணத்திற்கும் வித்யாசப்படுத்தி பார்க்க முடியும்..!
கெட்ட பழக்கம் இருந்தாலும், ஒருவன் கெட்ட குணமுடையவன் அல்ல என்று தெரிந்து அவர்களிடம் பழகுவதிலோ, போற்றுவதிலோ தவறு இருக்காது..!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: தியானம் - குறிப்புகள் [ தியானம் ] | : Meditation - Tips in Tamil [ Meditation ]