நிம்மதியான வாழ்க்கைக்கு "ஜென் தத்துவம்" சொல்லும் 8 வாழ்க்கைப் பாடங்கள்!
Category: வெற்றியாளர்கள்
மனித வாழ்க்கை என்பது ரசித்து, அனுபவித்து வாழக்கூடிய ஒன்று. ஆனால், எப்போதும் இயந்திரம் போல ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு பெரும்பாலும் மனதில் அமைதி இருப்பதில்லை. நிம்மதியான வாழ்க்கைக்கு ஜென் தத்துவம் சொல்லும் எட்டு அழகான வாழ்க்கைப் பாடங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
Introvert-களின் நம்ப முடியாத ஆற்றல்கள்… நீங்க எப்படி?
Category: வெற்றியாளர்கள்
ஆற்றல் மிக்க மனிதர்களைப் பற்றி நாம் பேசும்போது Extrovert-களின் ஞாபகம் நமக்கு நிச்சயம் வரும். அவர்கள் அதிகமாக கஷ்டப்படாமலேயே பிறரது கவனத்தை ஈர்க்கிறார்கள். குறிப்பாக அவர்களது உரையாடல்கள் மூலமாக ஆதிக்கம் செலுத்தி, பலரால் விரும்பப்படுகிறார்கள்.
ஒவ்வொரு முயற்சியும் நமக்கான பயிற்சியே!
Category: வெற்றியாளர்கள்
இளைஞர்களே, உங்களின் நாளைய உலகம், சிறப்பாக அமைய வேண்டும். அது, உங்களால் மட்டுமே சாத்தியம். உங்களது குறிக்கோள் எதுவென்று நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். பயிற்சியின் அத்தியாவசியத்தை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
கராத்தே கலையின் மந்திர ஆற்றலை, மொத்த உலகுக்கும் எடுத்துச் சொன்ன மின்னல் வேக சண்டைக்காரர் ப்ரூஸ் லீ. 30 வயதில் உலகப் புகழ் பெற்று, 32 வயதிலேயே மறைந்த அவர் நுஞ்சாக் உபகரணத்தை வைத்து அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டினார். சீனரான அவர் அமெரிக்கா வந்து வேலை பார்த்துக்கொண்டே படித்தார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கே திணறினார். சுய முன்னேற்றப் புத்தகங்களை வாசிப்பதை பழக்கமாக்கிக் கொண்டிருந்தார் ப்ரூஸ் லீ. அந்த புத்தகங்கள் தந்த வழிகாட்டுதலில், தனது வாழ்க்கை லட்சியத்தை ஒரு கட்டளை வாக்கியமாக உருவாக்கி தனது டைரியில் எழுதினார் ப்ரூஸ் லீ. 1969 ஜனவரியில் அவர் தனக்குத் தானே கைப்பட எழுதிய கட்டளை வாக்கியம் இது. "ப்ரூஸ் லீ ஆகிய நான், அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் ஆசிய சூப்பர் ஸ்டாராக உயர்வேன். 1970 ஆம் ஆண்டு முதல் நான் உலகப் புகழ் பெறுவேன். 1980 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியன் டாலர் சம்பாதிப்பேன்"
: வெற்றியாளர்கள் - வெல்லப்பட முடியாதவர்கள் ப்ரூஸ் லீ [ வெற்றியாளர்கள் ] | : Winners - Invincible Bruce Lee in Tamil [ Winners ]
வெல்லப்பட முடியாதவர்கள்..!! ப்ரூஸ் லீ
கராத்தே கலையின் மந்திர ஆற்றலை, மொத்த உலகுக்கும் எடுத்துச் சொன்ன மின்னல்
வேக சண்டைக்காரர் ப்ரூஸ் லீ.
30 வயதில் உலகப் புகழ் பெற்று, 32 வயதிலேயே
மறைந்த அவர் நுஞ்சாக் உபகரணத்தை வைத்து
அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டினார். சீனரான அவர் அமெரிக்கா வந்து வேலை பார்த்துக்கொண்டே படித்தார்.
சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். அன்றாட
வாழ்க்கைத் தேவைகளுக்கே திணறினார்.
சுய முன்னேற்றப் புத்தகங்களை வாசிப்பதை பழக்கமாக்கிக்
கொண்டிருந்தார் ப்ரூஸ் லீ.
அந்த புத்தகங்கள் தந்த வழிகாட்டுதலில், தனது
வாழ்க்கை லட்சியத்தை ஒரு கட்டளை வாக்கியமாக உருவாக்கி தனது டைரியில் எழுதினார் ப்ரூஸ்
லீ.
1969 ஜனவரியில் அவர் தனக்குத் தானே கைப்பட எழுதிய கட்டளை வாக்கியம் இது.
"ப்ரூஸ் லீ ஆகிய நான், அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் ஆசிய சூப்பர்
ஸ்டாராக உயர்வேன். 1970 ஆம் ஆண்டு முதல் நான் உலகப் புகழ் பெறுவேன். 1980 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியன் டாலர் சம்பாதிப்பேன்"
தனது குறிக்கோள்களை மிகக் குறைந்த காலத்தில் சாதித்தார்
புரூஸ் லீ. தற்காப்புக் கலை தொடர்பான திரைக் கதைகளை எழுதிக்கொண்டு ஹாலிவுட் பட நிறுவனங்களை
அணுகினார்.
"ஆசிய மூஞ்சியை கதாநாயகனாக உலக சினிமா ஏற்காது" என்பது தான் பட அதிபர்களின் பதிலாக இருந்தது. தோல்விகள், அவமானங்களே
அவரது வாழ்க்கையாகிப் போனது.
எனினும், அமெரிக்காவில் அவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள் சீனாவில் வெளியிடப்பட்டு வெற்றி
அடைந்தன.
எனவே சீனா வந்து சீனப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்
ப்ரூஸ் லீ.
1972 ஆம் ஆண்டில் "தி ரிட்டன் ஆப் த டிராகன்" என்ற படத்தை
சொந்தமாக தயாரித்து, இயக்கி
நடித்து, அமெரிக்காவிலும்
வெளியிட்டார் புரூஸ் லீ.
எதிர்பாராத உலக ஹிட் அடித்தது அந்தப் படம். ஹாலிவுட்
தயாரிப்பாளர்கள் இப்போது அவரது கால் ஷீட்டை தேடிவந்து நின்றனர். ஹாலிவுட்டுக்காக
"என்டர் தி டிராகன்" என்ற அதிரடிப் படம் தயாரானது.
படம் திரைக்கு வர மூன்று வாரங்களுக்கு முன் 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி ப்ரூஸ் லீ ஹாங்காங்கில்
இருந்த போது
மர்மமான முறையில் மரணமடைந்தார்.
புரூஸ் லீயின் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட
"என்டர் தி டிராகன்" படம் சூப்பர் டூப்பர் ஹிட். உலகத்தின் கவனத்தையெல்லாம்
தன் பக்கம் திருப்பிவிட்டார் ப்ரூஸ் லீ.
29 வயதில் தனது லட்சியத்தை
கட்டளை வாக்கியமாக எழுதிய ப்ரூஸ் லீ, அடுத்த
3 ஆண்டுகளுக்குள்
சாதித்துக் காட்டினார்.
ப்ரூஸ் லீ கூறும் அனுபவப் பாடம் இதுதான்:-
"சூழ்நிலையைக் குறை கூறும் பழக்கத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.
வாய்ப்புகளைத் தேடுங்கள்
அல்லது நீங்களே வாய்ப்புகளை உருவாக்குங்கள்"
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: வெற்றியாளர்கள் - வெல்லப்பட முடியாதவர்கள் ப்ரூஸ் லீ [ வெற்றியாளர்கள் ] | : Winners - Invincible Bruce Lee in Tamil [ Winners ]