ஊழியர்கள்

சுவாத்தியமான பிரதேசம்

வீடு | அனைத்து வகைகள் | வகை: ஊழியர்கள்
ஊழியர்கள் | workers

ஊழியர்கள்

Category: ஊழியர்கள்

இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை. ஓர் ஊரில் ராமு மற்றும் சோமு இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.

ஊழியர்கள் | workers

இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை. ஓர் ஊரில் ராமு மற்றும் சோமு இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.

: ஊழியர்கள் - சுவாத்தியமான பிரதேசம் [ ஊழியர்கள் ] | : workers - Comfort zone in Tamil [ workers ]

ஊழியர்கள்

சுவாத்தியமான பிரதேசம் COMFORT ZONE

இது ‘COMFORT ZONE’ எனப்படும் பிரபலமான பொறி பற்றிய கதை.

 

ஓர் ஊரில் ராமு  மற்றும் சோமு  இரண்டு எலிகள் வாழ்ந்துவந்தது.

 

இருவருக்குமே தானியம் நிரப்பப்பட்ட ஜாடி கொடுக்கப்பட்டது. ராமு அதைச் சுற்றி இவ்வளவு உணவைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

 

சில நாட்களில்அது  ஜாடியின் அடிப்பகுதியை அடைந்தது. இப்போது அது  சிக்கிக்கொண்டது.

 

சோமுவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அது தன்னைச் சுற்றி உணவை வேட்டையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது (ரிஸ்க் எடுப்பது ). அதனால் பாதியிலேயே சாப்பிட்டு விட்டுச் செல்கிறது.

 

நமது வாழ்க்கையிலும் இதேதான் நடக்கிறது.

 

சிலர்  நிறுவனங்களில் வேலை கிடைத்ததும்,  சவால் இல்லாத வேலைமிகவும் சொகுசாக உணர்கின்றனர் ஆனால் தனிப்பட்ட வளர்ச்சி இல்லை. காலாவதியான தொழில்நுட்பங்கள் / கருவிகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

 

அவர்கள் வெளியேற விரும்பும் ஒரு புள்ளி இருக்கும்ஆனால் அவர்களும் காலப்போக்கில் காலாவதியானதால் அவர்களால் வேறு வேலைக்கு மாற்றமுடியவில்லை.

 

மறுபுறம்சில இடங்களில் சவாலான சற்று அதிகமான வேலை  உள்ளது. கற்றுக்கொள்ள நிறைய புதிய விஷயங்கள் உள்ளன. நிச்சயமாகவேலை எளிதானது அல்லஆனால் நீண்ட காலத்திற்குஇது வாழ்வதற்கான வழி.

 

படிப்பினை  என்னவென்றால்வேலை மிகவும் சொகுசாக  இருந்தால்தாமதமாவதற்கு முன் வெளியேறவும்.

 

சொகுசான வேலை ஒரு புதைகுழி ,குறிப்பாக IT தொழில் நுட்ப துறையில் உள்ளவர்களுக்கு சவாலான காலம் காத்திருக்கிறது AI , CHAT GPT , மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் !

 

நடந்து முடிந்ததை

அளவுக்கு அதிகமாக

அலசி ஆராய்ந்து கொண்டு

இருக்கக் கூடாது...

அது...

நட்டு வச்ச செடியை

நிமிடத்திற்கு ஒரு தரம்

வேர் பிடித்து விட்டதா..?

என்று கிளறி பார்ப்பது போன்றது.

உங்களைப் பார்த்து... !!!!

 

தோற்றுப் போனவனே...!!!

ஏழையானவனே

ஏமாற்றப் பட்டவனே...!!!

தாழ்ந்து போனவனே - என்று

எது சொன்னாலும் - திரும்பி

திமிராக சொல்லுங்கள்

 

" நான் இன்னும் சாகலேடா "

🌸 யாரோ ஒருவர்,

 

'சொல்எனும் கல்லை

உங்கள் மீது வீசுகிறார்...

 

உங்கள் மனமெனும் குளத்தில்

அது விழுந்த உடனே உங்களுக்குள் சலனங்கள் உருவாகிவிடுகிறது.

 

🌸 கோபம்பதட்டம்கவலைதடுமாற்றம் என உணர்வுகள் மேலெழும்ப தொடங்கிவிடுகிறது.

 

நீங்கள் எதிர்வினை செய்யலாம்.

கண்களை மூடி உங்கள் உள்ளே கவனிக்கலாம்.

 

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

 

எந்தவிதமான கடுமையான சூழ்நிலை வந்தாலும்,

 

"சலனமே இல்லாத நிர்மலமான

ஒரு உள்தன்மையை நீங்கள் பெற வேண்டும்.!"

 

"ஒரு மனக் கருத்துக்கு கூட

ஆதரவு கொடுக்காமல் இருப்பதில்தான்,

பயிற்சியின் சிறப்பே உள்ளது.!!"

மிகவும் சாதித்த அந்த பெரியவரிடம்கேட்டார்கள்.

 

உங்கள் சாதனையின் ரகசியம் என்ன .?

 

மெல்லிய புன்முறுவலோடு சொன்னார் ..!

சாப்பிடுதல்உழைத்தல்நன்றாக தூங்குதல்

அவ்வளவுதான் ..!!

 

“கொல்” என்று சிரித்த சபையோர்கள்சத்தமாக சொன்னார்கள்நாங்களும் அதைத்தான் செய்கிறோம்ஆனால் வெல்ல முடியலியே ..!!

 

அந்த பெரியவர்மீண்டும் புன்முறுவலோடு சொன்னாராம்..!!

 

நான்..!!

சாப்பிடும் போது - சாப்பாட்டை

மட்டும் ருசித்து

சாப்பிடுகிறேன்..!!

 

உழைக்கும் போது..!!

எதிர்காலத்துக்கு - எப்படி

வாழனும்னு

திட்டமிட்டே உழைக்கிறேன்..!!

 

தூங்கும் போது - எல்லா

கஸ்டங்களையும் தூர வைத்துவிட்டு

நாளை பார்த்துக்கலாம்னு

மகிழ்வோடு தூங்குகிறேன்..!!

 

அடுத்த நாள் - மிக

ஆரோக்கியமாக

எழுகிறேன்னு சொன்னாராம்..!!!

 

கடைசியில் ..!!

என்னை நான்

இந்த அறிவுரையோடு

ஒப்பிட்டு பார்த்தா….

 

சாப்பிடும் போது - மனசு

எங்கேயோ ஒரு குப்பையை

கிளறிக்கொண்டு இருக்கிறது..!!

 

பிரச்சினையை  தீர்க்வே

நினைக்கிறேன்..!!

திட்டமாவது வெண்டிக்காயாவதுன்னு

உழைக்கிறேன் ..!!

 

டாய்லெட் உள்ளேதான்

வருவியா மாட்டியான்னு

திட்டமே போடுறேன் ..!!

 

தூங்கும் போதுதான்

எல்லா சிக்கலையும்

ஒன்னா போட்டு

கும்மியடிச்சி தூங்குகிறேன் ..!!

 

அடுத்த நாள் - சோர்வாகவே

எந்திரிச்சு குண்டாஞ்சட்டி

கழுவுறேன் ..!!!

 

அட ஆமால ..!!!

 

ஆமா - நீங்க எப்படி

நண்பர்களே ..???

வாழ்க்கைஇது ஒரு போர்க்களம்

போன்றது.

 

இதில் பலமானவனோ வேகமானவனோ வெற்றிப் பெறப்

போவதில்லை.

 

தன்நம்பிக்கை

மிகுந்துள்ளவன் எவனோ, அவன்

வெற்றிப் பெறுவான்.

அலைகளை சமாளிக்கும் மீன்களுக்குவலைகளை எதிர்கொள்ளத் தெரிவதில்லை.

 

எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை இவ்வுலகில்.

 

நம்பிக்கையோடு இருப்போம். நம் வலியும் வழிகளாக மாறும்.

 

கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்லநாம் கற்றுக் கொண்டப் பாடங்கள்.

 

இழப்பதற்கு ஒன்றுமில்லைஆனால் ஜெயிப்பதற்கு இந்த உலகமே இருக்கிறது.

👏👏👏👏👏👏👏👏

வெற்றி நிச்சயம்.

''வாழ்க்கை என்றால் ஒரு ‘இலட்சியம்'’ இருக்க வேண்டும். லட்சியம் தான் நம்மை இயக்குகின்ற உந்து சக்தி.

 

வாழ்க்கையில் நமக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும்வெறுமனே பிறந்தோம்.இருந்தோம்இறந்தோம் என்று இல்லாமல்,வந்தோம்வென்றோம்,சென்றோம் என்று வாழ வேண்டும்.

 

நமக்கு இயற்கையாக சில திறமைகள் இருக்கும்அந்தத் திறமைகளைப் பயன்படுத்தும் விதத்தில் நமது லட்சியத்தையுமதிட்டத்தையும் அமைத்துக் கொண்டால் நாம் எளிதில் அதை அடைய முடியும்.

 

தந்தை பெரியாருக்கு ஒரு லட்சிய வெறி இருந்ததுஅதுதான் சுயமரியாதையும்பகுத்தறிவு சிந்தனையும்'."

 

அதுபோல் நமக்கும் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்.

 

 லட்சியம் என்கிற நெருப்பை நெஞ்சில் பற்ற ைத்து விட வேண்டும்.

 

 பாதையில்லை என்று பயப்படக் கூடாதுபாதையை உருவாக்கத் தான் நாம் பிறந்திருக்கிறோம் என்று நம்ப வேண்டும்.

 

 நம்மிடம் திறமை உள்ளது என்ற நம்பிக்கையோடு செயல்படும் போதுநாம் செய்யும் எந்தச் செயலும் தனித்தன்மை மிக்கதாக அமைந்துவெற்றி உறுதி செய்யப்படுகின்றது.

 

 ஆகவே வெற்றிக்கும்சாதனைக்கும் லட்சியம் தான் அடிப்படை என்பதைப் புரிந்து கொண்டுநம் லட்சியத்தை நோக்கி பீடு நடை போட வேண்டும்..

 

😎 ஆம்., நண்பர்களே..,

 

🏵 அனைவரும் போற்றத் தக்க நல்ல இலட்சியத்தை அடையும் நோக்கில் தன் வேலையில் கவனமாக இருப்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்..

 

 மாற்றமாக பிறருடைய வீண் வேலைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குபவர் வாழ்வில் தோல்வியே தழுவுவார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

: ஊழியர்கள் - சுவாத்தியமான பிரதேசம் [ ஊழியர்கள் ] | : workers - Comfort zone in Tamil [ workers ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: ஊழியர்கள்