சாம் ஒரு பேராசை மற்றும் சுயநலவாதிக்காரர். அவர் எப்போதும் நிறைய பணம் சம்பாதிக்க விரும்பினார். அவர் தம் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பலத்தையே அளித்து வந்தார். ஒரு நாள், அவர் தன் வாழ்க்கையை மாற்றிய ஒரு பாடத்தை கற்றுக்கொண்டார். ஒரு நாள் 50 தங்க காசுகளை வைத்திருந்த பையை தொலைத்துவிட்டார். சாமும், அவனது நண்பர்களும் பையை தேட ஆரம்பித்தனர், ஆனாலும் அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது. சில நாட்களுக்குப் பிறகு, சாமிடம் வேலை செய்யும் ஒருவரின் பத்து வயது மகளிடம் அந்த பை சிக்கியது, அவள் அதைப் பற்றி தந்தையிடம் சொல்ல அவரது தந்தை சாமிடம் எடுத்துச் செல்ல முடிவெடுத்து பையை சாமிடம் ஒப்படைத்து 50 காசுகள் சரியாக உள்ளதா? என சரி பார்த்துக் கொள்ள சொன்னார்.
நீதிக்கதை
நேர்மைக்கு கிடைத்த பரிசு
சாம் ஒரு பேராசை மற்றும் சுயநலவாதிக்காரர். அவர்
எப்போதும் நிறைய பணம் சம்பாதிக்க விரும்பினார். அவர் தம் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த
சம்பலத்தையே அளித்து வந்தார். ஒரு நாள், அவர் தன் வாழ்க்கையை மாற்றிய ஒரு பாடத்தை கற்றுக்கொண்டார்.
ஒரு நாள் 50 தங்க காசுகளை வைத்திருந்த பையை தொலைத்துவிட்டார். சாமும், அவனது நண்பர்களும் பையை தேட ஆரம்பித்தனர், ஆனாலும் அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது.
சில நாட்களுக்குப் பிறகு, சாமிடம் வேலை செய்யும் ஒருவரின் பத்து வயது மகளிடம்
அந்த பை சிக்கியது, அவள்
அதைப் பற்றி தந்தையிடம் சொல்ல அவரது தந்தை சாமிடம் எடுத்துச் செல்ல முடிவெடுத்து பையை
சாமிடம் ஒப்படைத்து 50 காசுகள் சரியாக உள்ளதா? என சரி பார்த்துக் கொள்ள சொன்னார்.
சாமிக்கு மகிழ்ச்சி இருந்தபோதும், அவர்களிடம் ஒரு தந்திரத்தை விளையாட நினைத்தார்.
பையில் காசுகளை சரிபார்த்து, பணியாளரிடம்
'இந்த பையில் 75 தங்க நாணயங்கள் இருந்தன, ஆனால் நீ 50 எனக்கு கொடுத்தாய்! மற்ற நாணயங்கள் எங்கே? நீ அவற்றை திருடிவிட்டாயா?" என்று கேட்டார்.
இதைக் கேட்க தொழிலாளி அதிர்ச்சியடைந்தார், இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல
முடிவு செய்தார். நீதிபதி இருவரிடமும் விசாரணையை ஆரம்பித்து, அதில்
உள்ள சூழ்ச்சியை புரிந்து கொண்டார்.
நீதிபதி சாமிடம் பெண் கண்டுபிடித்த பை சாமுக்கு
சொந்தமில்லை, ஏனெனில்
சாம் தொலைத்த பையில் 75 காசுகள் இருந்தன ஆனால் இதில் 50 மட்டுமே இருக்கிறது என்வே அந்த பை சாமுக்கு தொந்தமாகாது. அந்த
பை வேறொருவரால் இழக்கப்பட்டிருக்கலாம். யாராவது 75 தங்க நாணயங்களை ஒரு பையில் கண்டுபிடித்தால், அது சாமுடைய பை என்று நான் அறிவிப்பேன். 50 நாணயங்களை இழந்ததைப் பற்றி எந்தவித புகாரும் இல்லை எனில், அந்த 50 நாணயங்களை அந்த பெண்ணின் நேர்மையை மதிக்க ஒரு அடையாளமாக எடுத்துக்
கொள்ளுமாறு உத்தரவிடுகிறேன்!" என்று கூறினார்.
நீதி :
நேர்மைக்கு எப்போதும் பரிசு அளிக்கப்படும், பேராசை தண்டிக்கப்படும்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
நீதிக் கதைகள் : நேர்மைக்கு கிடைத்த பரிசு - குறிப்புகள் [ ] | Justice stories : A gift for honesty - Notes in Tamil [ ]