சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி

குறிப்புகள்

[ சமையல் குறிப்புகள் ]

Delicious Chettinad Chicken Gravy - Tips in Tamil

சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி | Delicious Chettinad Chicken Gravy

சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்துக் கொள்ளவும். மிளகை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வைத்திருக்கவும்.

சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி

 

தேவையான பொருட்கள் :

 

சிக்கன் - அரை கிலோ

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

மிளகாய் தூள் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

பட்டை 2

கிராம்பு 2

மிளகு 5

சீரகம் கால் டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

 

செய்முறை :

 

சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

 

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்துக் கொள்ளவும்.

 

மிளகை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

 

மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

 

குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 

அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.

 

வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும்.

 

பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும்.

 

அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வைத்திருக்கவும்.

 

பிறகு குக்கரை மூடி போட்டு 8 நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சமையல் குறிப்புகள் : சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி - குறிப்புகள் [ ] | cooking recipes : Delicious Chettinad Chicken Gravy - Tips in Tamil [ ]