திருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா?

குறிப்புகள்

[ பெருமாள் ]

Do you know about the secret gold well in Tirupati? - Tips in Tamil

திருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா? | Do you know about the secret gold well in Tirupati?

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் பல லட்சம் மக்கள் வந்து வணங்கும் இந்த கோவில் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

திருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா?

 

🍒 ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் பல லட்சம் மக்கள் வந்து வணங்கும் இந்த கோவில் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. கி.மு.400-100 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் இந்த கோவிலை பற்றிய குறிப்புகளை நம்மால் அறிய முடிகிறது. பல சிறப்புகளோடு மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் #இரண்டுதங்க_கிணறுகள்உள்ளன. அந்த தங்க கிணறு எங்கே உள்ளது. அது எப்படி எப்போது உருவானது என்பது பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

 

🍒ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக விஷ்ணுவின் அவதாரமான பெருமாள் திருவேங்கடத்தில் குடிகொண்டார். அப்போது அனைவருக்கு உணவு தயாரிப்பதற்காக லட்சுமி தேவி ஒரு #தீர்த்தயத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. அந்த தீர்த்தமே #லட்சுமிதீர்த்தும்_என்றும்_ஸ்ரீதீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டது. அதே போல #பூதேவியும்ஒருதீர்த்தத்தை_உருவாக்கினார்_அதுவே_பூதீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இவை இரண்டு மண்ணுக்குள் புதைந்து போனது.

 

🍒பல வருடங்களுக்கு பிறகு, பெருமாளுக்கு பூஜை செய்ய உகந்த பூக்களை கொண்ட ஒரு தோட்டத்தை உருவாக்க முற்பட்டார் ஒரு இளைஞ்சர். அப்போது அவர் குழி தோண்டுகையில் #ஸ்ரீதீர்த்தத்தையும்_பூதீர்த்ததையும் கண்டறிந்தார். ஆனால் அந்த இளைஞ்சரின் காலத்திற்கு பிறகு மீண்டும் அந்த இரண்டு தீர்த்தங்களும் சிதிலம் அடைந்தன. அந்த இளஞ்சரின் புண்ணியத்தால் அவர் அடுத்த பிறவியில் தொண்டைமான் சக்ரவர்த்தியாக பிறந்தார் என்று கூறப்படுகிறது.

 

🍒அதன் பிறகு அவர் திருமலை கோவிலை கட்டமைத்தார். அதோடு முன் ஜென்மத்தில் தான் கண்டறிந்த தீர்த்தத்தை சுற்றி #தங்ககவசம்செய்துள்ளார். அந்த கிணறே தற்போது #தங்ககிணறு என்று அழைக்கப்படுகிறது. உலகில் தங்கத்தால் அலங்கரிக்க பட்ட ஒரே கிணறு இதுமட்டுமே என்று கூறப்படுகிறது.

 

🍒கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணற்றின் நீர் பயன்படுத்துவதற்கு எதுவாக இல்லை என்பதால் இந்த கிணறு அரசால் மூடப்பட்டது. ஆனால் பகவானின் அருளால் கடந்த 2007 ஆண்டு இந்த கிணற்றின் நீரானது பயன்படுத்துவதற்கு எதுவாக மாறியது என்று கூறப்படுகிறது. இந்த தங்க கிணறில் உள்ள நீரை கொண்டு தான் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த கிணறுகள் திருப்பதியில் ஒரு சிறு மேட்டில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : திருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா? - குறிப்புகள் [ ] | Perumal : Do you know about the secret gold well in Tirupati? - Tips in Tamil [ ]