வெயிலின் உக்கிரமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காலை வேளையில் எவ்வளவு புத்துணர்ச்சியாக வெளியே சென்றாலும் ஓரிரு மணி நேரத்திலேயே நம் எனர்ஜி அனைத்தும் போய் விடுகிறது.
வெயில் காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
வெயிலின் உக்கிரமானது
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காலை வேளையில் எவ்வளவு
புத்துணர்ச்சியாக வெளியே சென்றாலும் ஓரிரு மணி நேரத்திலேயே நம் எனர்ஜி அனைத்தும்
போய் விடுகிறது.
நாள் முழுக்க
புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் சில முன்னெச்சரிக்கைகளையும்
பழக்கவழக்கங்களையும் கடைபிடித்தே ஆக வேண்டும். கோடை காலத்தில் நாம் செய்ய
வேண்டியவை என்ன?.. செய்யக்கூடாதவை என்ன?
செய்ய வேண்டியவை:
✔ தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் அருந்த
மறக்காதீர்கள். எங்கே செல்வதாக இருந்தாலும் கையோடு வாட்டர் பாட்டில் எடுத்துச்
செல்லுங்கள்.
✔ வெயில் காலங்களில் உணவுப்பொருட்கள் விரைவிலேயே கெட்டுவிடும். அதனால்
உணவுகளை அதிகளவு செய்யாமல் தேவைக்கேற்ப மட்டும் சமைத்து பயன்படுத்துங்கள்.
✔ மதிய வெயிலில் வெளியே செல்ல வேண்டியதாக இருந்தால் தொப்பி குடை
போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
✔ நீர்ச்சத்துடைய பழங்களையும் காய்கறிகளையும் பானங்களையும் அதிகம்
எடுத்துக் கொள்ளுங்கள்.
✔ உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளஇ ஒரு நாளைக்கு இரண்டு முறை அவசியம்
குளித்திடுங்கள்.
✔ வெயில் காலத்தில் முடிந்தவரை வெளிர் நிறங்களில் உள்ள தளர்வான காட்டன்
ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
செய்யக்கூடாதவை:
வீடுகளில் மீதமுள்ள உணவுகளைஇ
மறுநாள் உண்ணும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
வெயிலில் தாகமெடுக்கிறதே
என்று செயற்கை பானங்களை வாங்கி அருந்தாதீர்கள்.
வெயிலின் தாக்கம் அதிகமுள்ள
மதிய நேரங்களில் வெளியே செல்லாதீர்கள்.
அதேபோல சாலையோரங்களில்
சுகாதாரமற்று சமைக்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.
இனிப்பான குளிர்பானங்கள்
தாகத்தை இன்னும் அதிகரிக்க செய்யும். எனவே அவற்றைத் தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக
அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம்.
கடைகளில் அடிக்கடி ஃபாஸ்ட்
ஃபுட் உணவுகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்திடுங்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : வெயில் காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? - குறிப்புகள் [ ] | Welfare : What to do in summer? What not to do? - Tips in Tamil [ ]