
மனிதன் காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம், மமதை, மோகம், அகந்தை ஆகிய எட்டு குணங்களால் தனது சிறப்பை இழக்கிறான் என்பார்கள் பெரியோர்கள். பிள்ளையார் எட்டு ரூபங்களை எடுத்து அவற்றை அகற்றுகிறார் என்கின்றன புராணங்கள்.
விநாயகர் பெருமைகள் தெரியுமா?
மனிதன் காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம், மமதை, மோகம், அகந்தை ஆகிய எட்டு
குணங்களால் தனது சிறப்பை இழக்கிறான் என்பார்கள் பெரியோர்கள். பிள்ளையார் எட்டு
ரூபங்களை எடுத்து அவற்றை அகற்றுகிறார் என்கின்றன புராணங்கள்.
வக்ரதுண்டர் – காமம்
கஜானனர் – லோபம்
மஹோத்ரதர் – குரோதம்
லம்போதரர் – மதம்
விகடர் – மாத்ஸர்யம்
விக்னராஜர் – மமதை
தூம்ரவர்ணர் – மோகம்
சூர்ப்பகர்ணர் – அகந்தை
சாதாரண நாளாயினும் சரி, சதுர்த்தி திருநாளாக
இருந்தாலும் சரி… பிள்ளையார் வழிபாடு என்றதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவன
மோதகமும் அறுகம்புல்லும்தான்.
நாம் பச்சரிசி மாவினால்
கொழுக்கட்டை செய்கிறோம். அதற்கு வாசனையோ, சுவையோ கிடையாது. ஆனால், அதனுள் வைக்கும் பூரணம் எனும்
இனிப்பே அரிசி மாவும் ருசிக்க வழிவகுக்கும்.
அதுபோன்று வெறுமையான
மனிதன் ‘பூரணம்’ எனும் ஆண்டவனின் துணைபெறும்போதுதான் பரிபூரணன் ஆகிறான். இந்த
உன்னத விஷயத்தை உணர்த்துவதே மோதகப் பிரசாதம்.
அகரம், உகரம், மகரம் இணைந்த ஓங்கார
நாயகன் விநாயகன். முதல் எழுத்தான ‘அ’கரம் உருவானது போல் உலகில் முதலில் தோன்றிய
புல் அறுகம்புல் ஆகும். ‘அகரம் புல்’லே ‘அறுகம்புல்’ ஆனது என்று சிறப்பித்துச்
சொல்வார்கள் ஆன்றோர்கள்.
அனலாசுரனை வதம் செய்த
விநாயகர் அடைந்த வெப்பத்தை, முனிவர்கள் அறுகம்புல்லைக் கொண்டு தணித்தார்களாம்.
வெப்பம் குறைந்து, அருள்பார்வை பார்த்த
விநாயகரைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய வரத்தைத்
தந்தார் விநாயகரும். அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் பிடித்தமானது ஆயிற்று.
அறுகம்புல் குளிர்ச்சி
தருவது. அறுகம்புல்லால் அர்ச்சித்தால் கல்வி, செல்வம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை அளித்தருள்வார் கணபதி.
‘குட்டுப்பட்டாலும்
மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்’ என்றொரு சொல் வழக்கு உண்டு. உடனே `தங்க மோதிரம், வைர மோதிரம் அணிந்த
கையால்…’ என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது. உண்மையான பொருள் அதுவல்ல.
‘மோதகக் கையான் முன் தலையில் குட்டிக்கொள்ள வேண்டும்’ என்பதை வலியுறுத்த வந்த
வாக்கியம் மேற்சொன்னவாறு மருவியது என்பார்கள்.
பிள்ளையாரின் திருமுன்
தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவதற்கும் ஒரு காரணக்கதை உண்டு.
ஒருமுறை மகாவிஷ்ணுவின்
சக்ராயுதத்தை விழுங்கிவிட்டாராம் கணபதி. மகாவிஷ்ணு முதலில் எவ்வளவு முயன்றும்
சக்ராயுதத்தைத் திரும்பப்பெற முடியவில்லையாம். பின்னர், தோப்புக்கரணம் போட்டும்
தலையில் குட்டிக்கொண்டும் பலவிதமான நடன சேஷ்டைகள் செய்தும் விநாயகரை
மகிழ்வித்தாராம். அதைக்கண்டு விநாயகப் பெருமான் வயிறு குலுங்க சிரித்தபோது
சக்ராயுதம் வெளியே வந்தது; மகாவிஷ்ணு அதைப் பெற்றுக் கொண்டாராம்.
நாமும் விநாயகரின்
திருமுன் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால், நமது சங்கடங்கள் விலகும்.
விநாயகரின் மகிழ்ச்சியால் நமக்கு நலமான வாழ்க்கை அமையும்.
விநாயகரும் விருட்சங்களும்
பிள்ளையார் அமர்ந்து
அருள் தரும் ஐந்து மரங்கள் மிகவும் சிறப்புடையவை. அவை `பஞ்ச பூத மரங்கள்’ எனச்
அழைக்கப்படுகின்றன.
அரச மரம் – ஆகாயம்
வாதநாராயண மரம் – வாயு
வன்னி மரம் – அக்னி
முழுநெல்லி மரம் – நீர்
ஆல மரம் – மண்
இந்த மரங்களின் அடியில்
அருள்பாலிக்கும் பிள்ளையாரை வணங்கி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி
கைகூடும்.
விருட்சத்தடி
விநாயகர்கள் குறித்து வேறு சில தகவல்களும் உண்டு.
வில்வ மரத்தடியில்
தெற்குப் பார்த்து அருளும் விநாயகரை, சதுர்த்தி நாளில் வழிபடுவதுடன், மளிகைச் சாமான்களைப் ஏழை
குடும்பங்களுக்குத் தானமாகக் கொடுத்து வில்வ மரத்தைச் வலம் வந்தால் பிரிந்த கணவன்
மனைவி ஒன்று சேருவார்கள்.
அரச மரத்தடியில்
வீற்றிருக்கும் கணபதியைத் தினமும் வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம்
உண்டாகும்.
ஆல மரத்தடியில் வடக்குப்
பார்த்து விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தால் கடுமையான நோய்கள் அகலும்.
வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும்.
பெண் குழந்தைகள்
சந்தோஷமாக இருக்கவும், பெண் குழந்தை வேண்டும் என்பவர்களும் நெல்லி மரத்தடி விநாயகரை
வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.
மா மரத்தடியில்
இருக்கும் விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டு, மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகளுக்கு உணவும் வஸ்திர
தானமும் கொடுத்தால் வியாபாரம் செழிக்கும்.
நாவல் மரத்தடியில்
இருக்கும் பிள்ளையாரை வழிபட்டு, வெண்ணெய் தானம் செய்தால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். கணவன்
மனைவி அன்பு வற்றாமல் இருக்கும்.
இலுப்ப மரத்தடியில்
விநாயகரை பிரதிஷ்டை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிறுமிகளுக்கு மஞ்சள்
வஸ்திர தானம் செய்தால் சோம்பல் அகலும், விவேகம் அதிகரிக்கும், யோகம் கூடும்.
சந்தன மரத்தடியில் பிள்ளையாரை
பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தால் விளையாட்டு வீரராக உருவாகலாம். வியாபாரப்
பிரமுகர்கள் லாபம் அடைவர். நினைத்த காரியங்கள் தடை ஏதுமின்றி குறித்த காலத்தில்
வெற்றிகரமாக நடந்தேறும்.
வன்னி மரத்தடி
விநாயகருக்கு அவல், பொரி, பொட்டுக்கடலை படைத்து வழிபடுவதுடன் அந்தப் பிரசாதத்தை 108
குழந்தைகளுக்கு வழங்கினால், தொழிலில் லாபம் கிடைக்கும்.
வேடன் ஒருவன் வன்னி
மரத்தடி விநாயகரை வழிபட்டு வரம்பெற்ற திருக்கதையும் உண்டு.
ஏழு பிறவியின் துன்பம்
போக்கும் வன்னி விநாயகர்!
முன்னொரு காலத்தில்
விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்த சாம்பன் எனும் அரசனின் கொடுங்கோலான ஆட்சியால் மக்கள்
துயரமடைந்தனர். ‘துர்புத்தி’ என்ற அமைச்சன் மன்னனின் அடாவடித்தனத்துக்குத் துணை
நின்றான். அதனால், மறு பிறவியில் காகமும் ஆந்தையுமாக இருவரும் பிறந்தனர். அடுத்து
பாம்பும் தேளுமாகவும், நான்காம் பிறவியில் நாயும் பூனையுமாகவும், ஐந்தாம் பிறவியில்
குதிரையும் கழுதையாகவும், ஆறாம் பிறவியில் மீனும் முதலையுமாகவும், ஏழாம் பிறவியில்
புலியும் மானுமாகவும் பிறந்தனர். அதற்கடுத்த பிறவியில் வேடனும் ராட்சதனுமாகப்
பிறந்து ஒவ்வொரு பிறவியிலும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டே போகும் வாழ்க்கை அமைப்பு
அமைந்தது.
அப்படி, வேடனை ராட்சதன் துரத்திய
நிலையில், பயத்தில் வேடன் வன்னி
மரத்தில் ஏறி பதுங்கும்போது ஏற்பட்ட சலனத்தால் வன்னி மர இலைகள் உதிர்ந்தன.
உதிர்ந்த வன்னி இலைகள் மரத்தின்கீழ் இருந்த விநாயகர்மீது விழுந்தன. அப்போது
ராட்சதனும் அம்மரத்தில் ஏறி வேடனைப் பிடிக்க முயலுகையில், வன்னி இலைகள் மீண்டும்
உதிர்ந்து விநாயகருக்கு அர்ச்சனையாக விழுந்தன. அந்த நேரம் அந்தி சாய்ந்த நேரம்.
சதுர்த்தி திதியுடன் உள்ள அந்தி நேரத்தில் வன்னி இலைகளால் இருவரும் அர்ச்சனை செய்த
காரணத்தால் ஒருவரை ஒருவர் வீழ்த்தி கைலாயம் சென்றபோது, சொர்க்கம் அவர்களுக்குக்
கிடைத்தது என்று புராணங்கள் கூறுகின்றன.
ஏழு பிறவியில் அவர்கள்
அடைந்த துன்பங்கள் சங்கடஹர சதுர்த்தி வேளையில், வன்னி இலைகளால் அர்ச்சித்ததால் இறைவன் முக்தி
கொடுத்தார். எனவே, எந்த ஜென்மத்தில் என்ன துன்பம் பிறருக்குச் செய்தோமோ தெரியாது
என்பதால் இப்பிறவியில் விசேஷ தினங்களில் வன்னி இலைகளால் விநாயகரை வழிபட்டு
துன்பங்கள் நீங்கி, இன்பகரமான வாழ்க்கையைப் பெறுவோம்.
மதுரை மீனாட்சியம்மன்
கோயிலில் ஆடி வீதி என அழைக்கப்படும் கிழக்கு ராஜகோபுர உள்பிராகாரத்தில், தென்கிழக்கில்
எழுந்தருளி இருக்கும் வன்னிமரத்தடி விநாயகருக்கு யாகம் நடத்தி வழிபட்டால் ஏற்படும்
புண்ணியம் கோடி கிடைக்கும். வன்னி மரத்தடி விநாயகரைச் சுற்றி ஒன்பது மரங்கள்
உள்ளன. இங்கு உள்ள விநாயகர் ‘நவ மர விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். வன்னி, அரசு, வேம்பு, வில்வம், மந்தாரை, அத்தி, நெல்லி, பவள மல்லி, கொன்றை என ஒன்பது
மரங்கள்.
வன்னி இலை யாகத் தீக்கு
இணையானது. பாவம் அகலும். வன்னி மரத்தடியிலேயே உள்ள விநாயகரை வணங்குவதன் மூலம்
வன்னி யாகம் நடத்திய பலன் கிடைக்கும்.
உடுமலைப் பேட்டை பிரசன்ன
விநாயகர் ஆலயப் பிராகாரத்தில் சுமார் நூறு வருடங்களுக்கு முந்தைய வன்னி மரத்தின்
நிழலில் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. இங்கு சென்று வன்னி மரத்தடியில் பிரார்த்தனைகள்
செய்ய அனைத்து யோகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளெருக்கம் செடிக்கு
முறைப்படி பூஜை செய்து, வேர் எடுத்து அதில் விநாயகரை வடிவமைத்து வழிபாடு செய்தால் உஷ்ண
ரோகம் அகலும். மன அழுத்தம் குறையும். பெண்களுக்கு ரத்த சம்பந்தமான குறைகள் அகலும்.
பகலும் இரவும்
சந்திக்கும் சாயந்திர வேளை, சந்தி நேரம் என்றழைக்கப்படும். தேய்பிறை சதுர்த்தியில் இந்தச்
சந்தி நேரத்தில் விநாயகரைச் தரிசித்தால் சங்கடங்கள் அற்றுப்போகும்.
மாலை நேரத்தில் விஷ
ஜந்துக்கள் நடமாடும் அதைக் கட்டுப்படுத்துபவருமான (ராகு – கேது) விநாயகரை அபிஷேக
ஆராதனை செய்து ‘விநாயகர் அகவல்’, ‘விநாயகர் போற்றி’, ‘விநாயகர் காயத்ரி’ சொல்லி வழிபட்டால், அவற்றால் பாதிப்புகள்
ஏற்படாது. ராகு – கேது தோஷம் நீங்கும். அதனால் தடைபட்ட திருமணங்கள் கைகூடும்.
பொதுவாக, சங்கடங்கள்
பணப்பற்றாக்குறையால் ஏற்படுகிறது. எனவே, தாராளமான பொருளாதார வசதிகள் கிடைக்கும். நீர் கிரக
தோஷம் நீங்க,
நீர் மாதமான ஆடியில்
பஞ்சபூத நாயகனான விநாயகரை வழிபடுவதால் ரத்தச்சோகை, மூத்திரத் தாரை நோய்கள், நீரிழிவு நோய், இதயநோய் குறையும். கண்
நோய் அகலும். மூச்சு இரைப்பு நோய் குணமாகும். (ஆஸ்துமா) கடக ராசி, சந்திர திசை, சந்திர புத்தி நடக்கும்
அன்பர்கள் தவறாமல் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
பிள்ளையார் மிகவும்
எளிமையாக இருப்பவர். அவரை நாம் மஞ்சள் அல்லது சாணத்தில் பிடித்து வைத்தாலே, அதில் அமர்ந்து அருள்
தருபவர்.
‘சாமி பொய் என்றால்
சாணத்தைப் பார். சாஸ்திரம் பொய் என்றால் கிரஹணத்தைப் பார்’ என்பார்கள். அந்த
அளவுக்கு இறைவன் சாணத்திலும் எழுந்தருளி வரம் தருகின்றார். மேலும், சாணத்தை விநாயகராகப்
பிடித்து வைத்தால் அந்தச் சாணத்தில் புழு உண்டாகாமல், அப்படியே இருப்பது
இறைவனின் தனிக்கருணை.
மஞ்சள் பிள்ளையார்
பிடித்து வழிபாடு செய்வது நமக்குத் தெரியும். பின்வரும் பொருள்களால் பிள்ளையார்
சதுர்த்தியில் பிடித்து வழிபட்டால், அதன் பலன்களும் சேர்ந்து கிடைக்கும்.
மஞ்சள் பிள்ளையார் –
திருமணத் தடை நீங்கும்
மண் பிள்ளையார் – ராஜ
பதவி கிடைக்கும்
புற்றுமண் பிள்ளையார் –
வியாபாரம் பெருகும், லாபம் கிடைக்கும்
வெல்லப் பிள்ளையார் –
சௌபாக்கியம் உண்டாகும்
உப்புப் பிள்ளையார் –
எதிரிகள் வசியமாவர்
வேப்பமரப் பிள்ளையார் –
ஜெயம் உண்டாகும்
வெள்ளெருக்கம்
பிள்ளையார் – ஞானம் கிடைக்கும்
பசுஞ்சாணப் பிள்ளையார் –
எண்ணிய காரியம் கைகூடும்
பச்சரிசி மாவுப்
பிள்ளையார் – விவசாயம் பெருகும், விளைச்சல் அதிகரிக்கும்
வெண்ணெய் பிள்ளையார் –
வியாதி அகலும்.✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
விநாயகர்: வரலாறு : விநாயகர் பெருமைகள் தெரியுமா? - எட்டு வகை குணங்கள், `மோதக’ தத்துவம், அறுகம்புல் அரசன் [ ] | Ganesha: History : Do you know the glory of Ganesha? - Eight types of Gunas, ``Motaka'' philosophy, King Arukambul in Tamil [ ]