வாழ்க்கையில் இரண்டே இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம். ஒன்று...வெற்றியைத் தேடி ஓடணும். இரண்டு...தோல்வியை மனதில் இருந்து ஓட்டணும்.
நேர மேலாண்மை...
வாழ்க்கையில் இரண்டே
இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.
ஒன்று...வெற்றியைத் தேடி
ஓடணும். இரண்டு...தோல்வியை மனதில் இருந்து ஓட்டணும்.
எந்த நேரத்தில் எதைச்
செய்ய வேண்டும்,
எவ்வளவு நேரத்தில் அதை
செய்து முடிக்க வேண்டும் என்கிற சூட்சுமம்தான் நேர மேலாண்மை.
செய்கிற பணியிலேயே
முழுமையாக திளைத்திருப்பவர்கள் மூன்று நிமிடங்களில் முடிய வேண்டியதை முக்கால்
நிமிடத்தில் செய்து விடுவார்கள்.
நாய் எப்போதுமே சுற்றிக்
கொண்டு இருப்பதற்கு காரணம், கண்டதிலும் வாய் வைப்பதுதான். முனைப்பு என்பதை வேட்டையாடும்போது
பல்லியிடம் காணலாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக முன் வைத்து, சிறு சலனத்தைக்கூட
ஏற்படுத்தாமல்,
முன்னேறி பூச்சியினை
விழுங்க எந்த பள்ளியிலும் பல்லிக்கு பாடம் கற்றுத் தரப்படவில்லை.
எழுத்தில் தீவிரம், முழுமையாய் கவனம், அதன் மையத்தில் ஆர்வம்
என்கிற கலவையுடன் செயலை மேற்கொள்பவர்கள்,மேன்மை அடைவார்கள்.
சாப்பிடும்போது உணவே
உலகம், படிக்கும்போது புத்தகமே
வேதம், விளையாடும்போது பந்தே
உலக உருண்டை,
குளிக்கும்போது தண்ணீரே
அபிஷேகம் என எந்த நேரத்தில் எது செய்கிறோமோ அந்தச் செயலில் முழுமையாக ஐக்கியமாகிற
மனப்பான்மையே நல்ல நேர மேலாண்மைக்கு இலக்கணம்.
காலையில் எழவேண்டியபோது
எழுந்தால்,
நேரம் போதவில்லை என
புலம்ப வேண்டியதில்லை. பறவைகள் பாடலாலும், தேனீக்கள் ரீங்காரத்தாலும், பட்டாம்பூச்சிகள்
சிறகசைப்பாலும்,
வண்டுகள் இன்னிசையாலும்
விடியலை வரவேற்கும்போது, மனிதன் மட்டுமே படுக்கையில் புரண்டு, பொழுது புலரும்போது புலம்பித்
தீர்க்கிறான்.
படிக்கிற நேரத்தில்
படிப்பு, பல் துலக்கும் பொழுதில்
பல் துலக்குதல்,
விளையாடும்போது
விளையாட்டு என வகைப்படுத்தி கொள்கிறவன். வாழ்வு, முன்னேற்றத்தை நோக்கி ஓடுகிற
வாய்க்காலின் நீராக வளர்கிறது. அவசரத்தில் உண்டால் உணவும் விஷம். ரசித்துக்
குளித்தால் கொப்பரை நீரே குற்றாலமாகும்.
சுற்றுலா போகிற இடத்தில்
பாடத்தை பற்றி சிந்திக்கிறவர்கள், இரண்டையும் தவறவிடும். இருண்ட பிரதேசத்தின் பிரஜைகள். சோம்பலில்
சுகம் காண்கிறவர்களுக்கு ஓராண்டு கூட ஒரு மாதத்தின் அடர்த்தியையே பெற்றிருக்கும்.
சுறுசுறுப்புள்ளவர்களுக்கு ஒரு வாரம், ஒரு மாதத்தின் பலனை தரும்.
இன்று என்ன செய்ய
வேண்டும் என குறித்துக் கொண்டும், ஒரே மாதிரியான பணிகளை தொகுத்துக்கொண்டும்,செய்பவற்றை
திருப்தியுடன் செய்து கொண்டும் நாட்களை திட்டமிடுபவர்களுக்கு அனைத்து நாளும்
திருநாளே அனைத்து நேரமும் நல்லநேரமே.
நொடிகளை வீணடிப்பவர்கள்
நொடிந்து போவார்கள். அவற்றை பயன்படுத்துபவர்கள் கோடீஸ்வரர்களா ஆவார்கள்.
வாழ்க்கையில் சில
மனிதர்களிடம் கேள்வியையும். சில மனிதர்களிடம் பதில்களையும் எதிர்பார்க்காமல்
இருப்பது மிகவும் நல்லது.
சில கனவுகள் நாம் உயரும்
வரை நம்மை உறங்க விடுவதில்லை சில துரோகங்கள் நம்மை நிம்மதியாக வாழ விடுவதில்லை.
வாழ்க்கை என்பது நமக்கு
தினிக்கப்பட்ட பாடம் தான் அதற்காக அதை வெறுத்துவிடாதே விரும்பி படித்து பார்
ஒவ்வொரு பக்கமும் சுவார்ஸ்யம்தான்.
உங்கள் வாழ்க்கை ஒரு
நெடுங்கதைப் புத்தகம். அதை பலர் விரும்பி வாங்கி படித்து பயனுறும் வகையில்
எழுதுங்கள்.
பொறுமையைவிட மேலான
தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த
அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும்.
இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி
எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள்
வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து
புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
உழைத்து வாழ்பவர்களின்
வாழ்க்கை வளர்பிறை போல வளர்ந்து கொண்டே
செல்லும்.
சோம்பேறிகளின்
வாழ்க்கைத் தேய்பிறை போலக் குறைந்து கொண்டே செல்லும்.
உழைப்பே உயர்த்தும், உழைப்பு மட்டுமே உங்களை
உயர்த்தக் கூடிய சக்தி.
எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும்
கொண்டதே, எளிமையான வாழ்க்கை.
சேர்ப்பது மிகக் கடினம், செலவு செய்வது மிக எளிது, பணம் மட்டும் அல்ல, அடுத்தவர் உள்ளத்தில்
நாம் சேர்த்து வைக்கும் நல்லெண்ணம் கூட.
நாம் நினைக்கும்
எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
அந்த நேர்மறை எண்ணங்கள்
நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.
நம் எண்ணம் ஒருநாள்
செயலாகும் போது தான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும்.
நாம் எதுவாக
நினைக்கிறோமோ அதுவாக மாறி விடுவோம். வெற்றி நிச்சயம்.
வாழ்த்துகள்.
வாழ்க வளத்துடன்.✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : நேர மேலாண்மை... - குறிப்புகள் [ ] | Welfare : Time management... - Tips in Tamil [ ]