தன்னைத்தானே ஜாம்பவானாக நினைத்துக் கொண்டு வாழ்கிறீர்களா

ஒரு உண்மைச் செய்தி

[ நீதிக் கதைகள் ]

Do you live your life thinking of yourself as a legend - A true message in Tamil

தன்னைத்தானே ஜாம்பவானாக நினைத்துக் கொண்டு வாழ்கிறீர்களா | Do you live your life thinking of yourself as a legend

Lebanon நாட்டில், பெரும் பணக்காரர்களில் ஒருவர் Emile Bustani. Beirut நகரில், தமக்காகவே அழகழகாக ஒரு கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார்.

தன்னைத்தானே ஜாம்பவானாக நினைத்துக் கொண்டு வாழ்கிறீர்களா?

எச்சரிக்கை…

Lebanon நாட்டில்,
பெரும் பணக்காரர்களில் ஒருவர்
Emile Bustani.

Beirut நகரில்,
தமக்காகவே
அழகழகாக ஒரு கல்லறையை
பார்த்துப் பார்த்துக் கட்டினார்.

சொந்தமாக ஒரு ஜெட் விமானம்.
அதில் அவர் தனியாகவே பயணம் செய்வார்.

ஒருநாள் அந்த விமானம்
கடலில் விழுந்தது.

👉 அவரது உடலைத் தேட
👉 மில்லியன் கணக்கில் டாலர்கள்
செலவிடப்பட்டன.

ஆனால்…
👉 விமானம் மட்டும் கிடைத்தது.
👉 உடல் கிடைக்கவே இல்லை.

அவர் கட்டி வைத்த
அந்த கல்லறையில்
அடக்கம் செய்ய கூட
உடல் இல்லை.


💰 இன்னொரு சம்பவம்…

பிரிட்டனைச் சேர்ந்த
பெரும் பணக்கார யூதர்
Rothschild.

அளவற்ற செல்வம்.
சில நேரங்களில்
பிரிட்டன் அரசுக்கே
கடன் கொடுக்கும் அளவுக்கு.

ரொக்கமாக இருந்த செல்வத்தை
பாதுகாப்பாக வைக்க
👉 அதிநவீன பாதுகாப்புடன்
ஒரு தனி அறை.

ஒருநாள்
அறைக்குள் நுழைந்தவர்,
அறியாமலே கதவை அடைத்துவிட்டார்.

அவ்வளவுதான்…

👉 கதவு திறக்கவே இல்லை.
👉 சத்தம் போட்டார்.
👉 கத்தினார்.
👉 யாருக்கும் கேட்கவில்லை.

ஏன் என்றால்,
அது வீடு அல்ல…
அரண்மனை.

பல நாட்கள்
அங்கிருந்து
உல்லாசப் பயணம்
சென்று விடுவார்.

அன்றும் அப்படித்தான்
சென்றிருப்பார் என்று
குடும்பத்தினர் நினைத்தனர்.

👉 பசியாலும் தாகத்தாலும்,
👉 பணக்கட்டுகளின் மேல் கிடந்தபடியே
👉 உயிர் பிரிந்தார்.

மரணத்திற்கு முன்,
விரலை காயப்படுத்தி
சுவரில் எழுதினார்:

“உலகிலேயே
பெரும் பணக்காரன்
பசியாலும் தாகத்தாலும்
இறக்கிறான்.”

👉 சில வாரங்கள் கழித்தே
👉 அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


🛑 ஒரு உண்மைச் செய்தி…

“பணம் இருந்தால்
எல்லாம் கட்டுப்பாட்டில்”
என்று நினைப்பவர்களுக்கு—

👉 ஒருநாள்
இந்த உலகை பிரிந்தே ஆக வேண்டும்.

ஆனால்…
❓ எங்கே?
❓ எப்போது?
❓ எப்படி?

👉 இதை
யாராலும் கணிக்க முடியாது.

உல்லாசப் பயணத்திற்கு
போனால்
👉 திரும்பி வரலாம்.

ஆனால்…
👉 உலகை பிரிந்தால்
திரும்ப வர முடியுமா?


🌱 ஆகவே…
 • யாரையும் வெறுக்காமல்
 • யாரையும் ஒடுக்காமல்
 • யாரையும் காயப்படுத்தாமல்
 • யாரையும் கேவலப்படுத்தாமல்

👉 “நாங்கள் மட்டுமே
வசதியாக வாழ வேண்டும்”
என்ற அகந்தையை
விடுவோம்.

வருமானம் அதிகரிக்கலாம்.
👉 10 வீடுகள் வாங்கலாம்.
👉 ஆனால் தூங்க
6 அடி கட்டில் போதும்.

அறுசுவை உணவு
ஒவ்வொரு வேளையும்
உண்ணலாம்.

👉 ஆனால் மறுநாள்
அதுவே மலமாகி விடும்.


❤️ உண்மையான மகிழ்ச்சி எதில்?

👉 பிறருக்கு அளிப்பதில்.

நல்ல நண்பர்களுடன்
ஒரு கப் தேநீர்
அருந்தும் போது கிடைக்கும்
ஆனந்தம்—

👉 நாமே தனியாக
👉 ஸ்டார் ஹோட்டலில்
👉 வசதியாக சாப்பிடும்போது
கிடைக்காது.


✨ கடைசி வார்த்தை…
 • சுயநலத்துடன் வாழாதீர்கள்
 • அகந்தையில் தலைக்கனம் கொள்ளாதீர்கள்

**மனிதமாக வளருங்கள்…

அன்பை விதையுங்கள்…
சக மனிதனை
மனிதனாய் மதியுங்கள்.**

இதுவே
👉 உண்மையான செல்வம்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

நீதிக் கதைகள் : தன்னைத்தானே ஜாம்பவானாக நினைத்துக் கொண்டு வாழ்கிறீர்களா - ஒரு உண்மைச் செய்தி [ ] | Justice stories : Do you live your life thinking of yourself as a legend - A true message in Tamil [ ]