அரசு அலுவலகங்களுக்கு அனுப்பவும் புகார் மனு / கோரிக்கை மனு மீது நடவடிக்கை இல்லை எனில் இந்த த.அ.உ.ச மனுவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வைக்கலாம்...
புகார் மனு / கோரிக்கை மனு மாதிரி கடிதம்
அரசு அலுவலகங்களுக்கு
அனுப்பவும் புகார் மனு / கோரிக்கை மனு மீது நடவடிக்கை இல்லை எனில் இந்த த.அ.உ.ச
மனுவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வைக்கலாம்...
மனுதாரர்:
பெயர்
தெரு
....கிராமம், .
... .வட்டம்
..... மாவட்டம்
பெறுநர்:
பொது தகவல் அலுவலர்
அவர்கள்,
------------------
அலுவலகம்,
-----------------
மாவட்டம் .
பார்வை:
1. ஆம் தேதி அனுப்பிய புகார் மனு.
2. ஆம் தேதி மனுவைப் பெற்றுக்
கொண்டதற்கான ஒப்புதல் அட்டையின் நகல்.
மதிப்பிற்குரிய அலுவலர்
அவர்களுக்கு,
தேவைப்படும் விவரங்கள்
/ஆவணங்களின் ஒளி நகல்கள் பின்வருமாறு,
1. பார்வையில் காணும்
-------------மனுவிற்கு மனுதாரருக்கு அனுப்பபட்ட அழைப்பானையின் ஒளி நகல் வழங்க
வேண்டுகிறேன்.
2. மேற்காணும்
---------------மனுவி்ற்காக ------------ அலுவலகத்தில் மனுதாரரை அழைத்து விசாரணை
செய்த விசாரணை ஆலுவலரின் பெயர், அவரது பதவியின் பெயர் தர
வேண்டுகிறேன்.
3. மேற்சொன்ன
---------------மனுவின் மீது எவ்வகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய, “தினசரி முன்னேற்ற
அறிக்கை" விவரங்கள் /ஆவணங்களின் ஒளிநகல்களை வழங்க வேண்டுகிறேன்.
(ஆதாரம் - Petitions - Petitions
presented to Government Officers. Procedures for dealing with grievance Petitions - Instructions Issued. G. 0. Ms. No. 114, Dated, 02.08.2006. Personal and
Administrative Reforms (A) Department. Chief Secretary to Government).
4. மேற்காணும்
---------------மனுவிற்காக மனுதாரரிடம் விசாரணை செய்து, விசாரணை அலுவலர் அவர்கள்
இறுதியில் சமர்ப்பித்த இறுதி அறிக்கையின்
ஒளிநகல்களை தர வேண்டுகிறேன்.
5. மனுதாரரை விசாரணை
செய்து பெறப்பட்ட வாக்கு மூலங்களின் ஒளி நகல்கள் தர வேண்டுகிறேன்.
6. மேற்சொன்ன
-----------------மனு, எந்தெந்த அதிகாரிகள் / அலுவலர்கள் வசம் இருந்தது, அவர்களின் பெயர்கள் & பதவிகள், ஒவ்வொருவரிடமும் எவ்வளவு
காலம் இருந்தது, அதன் மீது ஒவ்வொருவரும் என்ன மேல் நடவடிக்கை
எடுத்துள்ளார்கள் பற்றிய விவரங்கள் /ஆவணங்களின் ஒளிநகல்களை வழங்க
வேண்டுகிறேன். .
(ஆதாரம் - From the Government of
India, Ministry of Personal, Public Grievance and Pensions, New Delhi, D, O.
No. G-13013 / 1 / 2006-PG Dt, 05.05.2006, TN GO Ms. No. 114, Dt. 02.08.2006).
7. மேற்சொன்ன
------------மனுவை பெற்றுக் கொண்ட தங்கள் ------------------- அலுவலகம் /
அலுவலர்கள், ஒவ்வொருவரிடமும் மேற்படி மனு பெறப்பட்டதற்கும், அதன் பின்னர், வேறு பிரிவுகளுக்கு
மாற்றி அனுப்பபட்டதற்கும் உரிய விவரங்கள் /ஆவணங்களின் ஒளிநகல்களை வழங்க
வேண்டுகிறேன்.
(ஆதாரம் - 6. 0. Ms. No. 89, P & AR (A), Dept.
Pt.13.05.1999).
8. மேற்சொன்ன
------------------ மனுவை பெற்றுக் கொண்ட தங்கள் ----------------- அலுவலகம் /
அலுவலர்கள், மேற்சொன்ன ஆதாரங்களின் படி, குறிப்பிட்ட கால
வரையறைக்குள் செயல்பட்டார்களா / இல்லையா என்பது பற்றியும், அவ்வாறு குறிப்பிட்ட கால
வரையறைக்குள் செயல்படவில்லை எனில், அந்த அதிகாரிகள், நடத்தை விதிகளை (Conduct Rules) மீறிய குற்றத்திற்கு
உள்ளாகிறார்களா / இல்லையா என்பது பற்றியும், அதற்கான நடத்தை விதிகள்
(Conduct
Rules) என்னென்ன என்பது பற்றிய விவரங்கள் /ஆவணங்களின் ஒளிநகல்களை வழங்க
வேண்டுகிறேன்.
9.
(ஆதாரம் - Para 167 (1) The Tamil Nadu
Government Business rules and Secretariat Instructions) G. O. Ms. No. 66, P & AR (A) Dept,
Dated 23.02.1993).
குறிப்பு:
கீழ்க்கண்ட
வாதங்கள்/தீர்ப்புகளின் படி, இம்மனுவினை பரிசீலனை செய்ய
வேண்டுகிறேன்.
மேற்படி அனைத்து ஒளி
நகல்களையும் சட்டப்பிரிவு 4 (1) (b)க்கு உட்பட்டு வழங்க
வேண்டுகிறேன்.
மேற்கண்ட தகவல்கள்
அனைத்தும் பொதுநல நோக்கத்துடன் த. அ. உ ச. 2005 பிரிவு 4 (1)(b) இன்படி கேட்கப்படுவதால், அனைத்து தகவல்களுக்கும்
மறைக்காமல், மறுக்காமல் அனைத்து பக்கங்களிலும் தகவல் அறியும் உரிமை
சட்டம் மூலம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டு அலுவலக முத்திரையுடன் வழங்குமாறு
தங்களை தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்றத்திற்கு
அல்லது மாநிலசட்டமன்றத்திற்கு மறுக்கப் படமுடியாத தகவல்களை ஓர் நபருக்கு
மறுக்கப்பட கூடாது என்பதால் மேலே கோரிய அணைத்துதகவல்களும் சட்டங்களுக்கு
உட்பட்டதே. (பிரிவு 8(1)) மேற்படிதகவல் வழங்க தகவல் சட்டத்தில் வழங்க வழிவகை
இல்லையெனில் அரசாணை நிலை எண் 1365 நாள் 21.11.2016 ன் படி விளக்கம் மற்றும்
தெளிவுரையாக வழங்கவும்.
தகவல்கள் / ஆவணங்கள்
வழங்க இயலாது எனில், அதற்கான காரணங்களை, "த. அ. உ. 2005"-ன்
சட்டப்பிரிவு 4 (1) (b)-ல், அதன் ஆட்சித்துறை, நீதித்தன்மை வாய்ந்த
முடிவுகளால், பாதிக்கப்படும் நபர்களுக்கு அவற்றின் காரணங்களை வழங்க
வேண்டும்" என்று, TNSIC, வழக்கு எண், 19458 | விசாரணை | 2009, 02.12.2009 & இந்திய சாட்சிய சட்டம்
1872"-ன் பிரிவு 106.(மாண்பமை உச்சநீதிமன்றம், Union of India vs
Scientific Workers Assn (Regd), Supreme Court of India, Judgement dated 18.03.1994-ன் படி, “தகவல் தர மறுப்பது, மனித உரிமை
மீறல்").
தகவல் வழங்ககாலக்கெடு
வேண்டும் எனில் எத்தனை நாட்கள் வேண்டும் என்ற இடைக்கால பதில் வழங்கவும்.
பிரிவு 6(3) ன் படி
கேட்கப்பட்ட தகவல் வேறு அலுவலகத்தில் இருக்கின்ற போது உரிய அலுவலகத்துக்கு அனுப்பி
5 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு உரியவிபரத்தை தெரிவிக்கவேண்டும் என்பதினை
உங்களின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகிறேன். நான் மேலே கூறிய தகவல்கள்.
தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்குஎண்:32576/விசாரணை/F/2013 தேதி: 27.03.2014
வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தங்களின் பார்வைக்கு கீழே கொண்டு வருகின்றேன்.
மேலும் எனக்கு
வழங்கப்படும் ஆவணங்கள்பகிர்வு:தமிழ் உலகம் அனைத்தையும் இந்திய அரசமைப்பு கோட்பாடு
1950 பிரிவு 350 மற்றும் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 பிரிவுகளின் கீழ்
தமிழில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மேற்கண்ட
விண்ணப்ப கோரிக்கைகளுக்கு தகவல் அளிக்கும் அலுவலரின் பெயர், பதவி, துறை தொடர்பு எண் என
முழுமையான தகவல்களுடன் விளக்கம் தரவும். பொது தகவல் அலுவலர், மனுதாரர் கோரியதகவல் தானா என்பதனை நன்கு உறுதி செய்தபின்
அதனை மனுதாரருக்கு அனுப்பவேண்டும். தவறுதலான தகவலை அனுப்பினால், பொதுதகவல்அலுவலர் மீது
நடவடிக்கைபகிர்வு:தமிழ் உலகம் எடுக்கலாம். (மத்திய தகவல் ஆணையம் CIC /MP/CI 2014/000138
நாள்:08-04-2015). என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
ஆகவே வழங்கப்படும்
ஆவணங்களில் மேல்கண்டவாறு“தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-இன் வகை முறைகளின்
கீழ் வழங்கப்பட்ட தகவல்கள்”என்று குறிப்பிட்டு பொதுதகவல்அலுவலரின் கையொப்பம்
மற்றும் அலுவலகமுத்திரையுடன் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்பமை
உச்சநீதிமன்றம், Union of India vs Scientific Workers Assn (Regd), Supreme
Court of India, Judgement dated 18.03.1994-ன் படி, “தகவல் தர மறுப்பது, மனித உரிமை மீறல்".
மேற்கண்ட
இனங்களுக்குரிய தகவல்கள் / ஆவணங்கள் வழங்க இயலாது எனில், "த. அ. உ. ச 2005-ன்
சட்டப்பிரிவு 4 (1) (A) | (ஈ)-ன் படி, அதற்கான “காரணங்களை ஆதாரபூர்வமாக
வழங்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு
(மனுதாரர்)
இடம்:
தேதி
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விழிப்புணர்வு: தகவல்கள் : புகார் மனு / கோரிக்கை மனு மாதிரி கடிதம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் மனு. [ ] | Awareness: Information : Grievance Petition / Demand Petition Sample Letter - Petition under Section 6(1) of the Right to Information Act, 2005. in Tamil [ ]